பேரறிவாளன் பெற்றோர் நம்பிக்கை!
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரறிவாளன் தந்தை குயில் தாசனிடம் கேட்டபோது, ""இப்போது உச்சநீதிமன்றம், "தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது' எனக் கூறியுள்ளது. 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை மனிதாபிமானம் கொண்டு விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. தற்போதைய தமிழக அரசுதான் என் மகனுக்கு பரோல் தந்து வெளியே அனுப்பியது. அதனால் விடுதலை விவகாரத்திலும் நல்ல முடிவு எடு
பேரறிவாளன் பெற்றோர் நம்பிக்கை!
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரறிவாளன் தந்தை குயில் தாசனிடம் கேட்டபோது, ""இப்போது உச்சநீதிமன்றம், "தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது' எனக் கூறியுள்ளது. 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை மனிதாபிமானம் கொண்டு விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. தற்போதைய தமிழக அரசுதான் என் மகனுக்கு பரோல் தந்து வெளியே அனுப்பியது. அதனால் விடுதலை விவகாரத்திலும் நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன்.
7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தி.மு.க. தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர், பா.ஜ.க. எம்.பி. என தமிழகத்தில் அனைவரும் ஆதரவு தெரிவிக் கிறார்கள், அதனால் விடுதலைக்கு எதிர்ப்பு இருக்காது. இருந்தாலும் மனதில் ஒரு பயம் இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் கடந்த காலங்களில் நடந்து, "விடுதலை' என அறிவிக்கப்பட்டு அது முடியாமல் போய் உள்ளது. அதனால் சிறையை விட்டு வெளியே வரும் வரை அந்த பயம் போகாது'' என்றார். தளராமல் போரா டிக் கொண்டி ருக்கிறார் பேரறி வாளனின் தாயார் அற்புதம்மாள்.
-து.ராஜா
ஓ.பி.எஸ். பற்றி வதந்தி!
தமிழகத்தின் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சின் அரசியல் உதவியாளராக இருப்பவர் அவரது உறவினரான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ். ஓ.பி.எஸ்.சுக்கு எதிராக சில பதிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் ரமேஷ் பதிவு செய்திருப்பதாக சமீபத்தில் சில பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பரவி, ஆளுந்தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பொலிட்டிக்கல் பி.ஏ. பதவியிலிருந்து அவரை ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் நீக்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரமேஷோ, "டுவிட்டரில் எனக்கு அக்கவுண்டே கிடையாது. ஓ.பி.எஸ்.சின் புகழைக் கெடுக்க எனது பெயரில் யாரோ கணக்கு உருவாக்கி, பொய்யாகப் பதிவிட்டுள்ளனர்'‘என்கிறார்.
அந்தப் பதிவு குறித்து விசாரித்த உளவுத்துறை, அது ஃபேக் (போலி) அக்கவுண்ட் என அரசுக்கு ரிப்போர்ட் தந்துள்ளது. ஓ.பி.எஸ். அமைச்சர்களின் பி.ஏ.க்கள் கண்காணிக் கப்படுகிறார்கள் என்பதால், பொலிடிக்கல் பி.ஏ.க்களை அமைதி காக்கும்படி அனைத்து அமைச்சர்களும் சொல்லியுள்ளனர். ரமேஷும் இதில் அடக்கம். அத்துடன், உடல்நலக் குறைபாட்டால் ஒரு மாதம் லீவும் எடுத்திருக்கிறார். இந்நிலையில், அவர் பெயரில் டுவிட்டரில் போலி கணக்குத் தொடங்கி, பொய்யான தகவலைப் பதிவிட்டு, அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக செய்தி பரப்பியது எடப்பாடி தரப்புதான் என சந்தேகிக்கிறது ஓ.பி.எஸ். வட்டாரம்.
-இளையர்