மறைந்தார் போஸ்!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/akbose.jpg)
திருப்பரங்குன்றம் சட்டமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.கே.போஸ் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மக்களின் ஆதரவுடன் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானவர். இதற்குமுன்பு 2006, 2011 தேர்தல்களில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள போஸ், எம்.ஜி.ஆர். காலம் முதலே அ.தி.மு.க. உறுப்பினராக இருந்துவந்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவால் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற சீனிவேல் குறுகிய காலத்திலேயே உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் இடைத்தேர்தலில் மீண்டும் ஏ.கே. போஸுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தலில் ஏ.கே. போஸ் வெற்றிபெற்றிருந்த நிலையில், தி.மு.க.வைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், வேட்பாளரை அங்கீகரிக்கும் படிவத்தில் இடம்பெற்றிருக்கும் ஜெ.வின் கைரேகையில் சந்தேகம் இருப்பதாக வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மாரடைப்பால் போஸ் மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோர் நேரில்சென்று அஞ்சலி செலுத்தினர். வெளிப்படையான பேச்சும் எளிமையான அணுகுமுறையுமே இவரது அரசியல் வெற்றிக்குக் காரணம்.
-சுப்பிரமணி
பிக்பாஸ் அரசியல்!
"பிக்பாஸ் 2' நிகழ்ச்சி பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தாத நிலையில், "சர்வாதிகாரி' என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஐஸ்வர்யா என்பவர் பெண் சர்வாதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களைச் செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்னென்ன பேச வேண்டும், செய்ய வேண்டும் என கமல்ஹாசனும், தனியார் நிறுவனமும் முடிவு செய்கின்றனர். இதில் ரித்விகா என்பவர் பேசும்போது "ஐஸ்வர்யா வட மாநிலப் பெண். அவருக்கு தமிழ்நாட்டில் சர்வாதிகாரி ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாது' என்று சொன்னார்.
""வருகிற சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கும்போது "தமிழகத்தில் சர்வாதிகாரி போல் ஆட்சி நடத்தியவர்கள்' என பேசும் அவர்,அரசியல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிறுவனம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கமிஷனரிடம் புகார் தரப்பட்டுள்ளது. இதுவும் பிக்பாஸ் புரமோஷன்தானோ!
-அரவிந்த்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-08-03/akbose-t.jpg)