கிரிமினல் வழக்கு போடுங்கள்! -உதயநிதிக்கு ஆதரவாக பொங்கிய இந்து என்.ராம்!

ss

"சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை' என்று குறிப்பிட்ட பிரபல பத்திரிகையாளர் இந்து என்.ராம், "உதயநிதியின் பேச்சைத் திரித்துப் பதிவிட்ட பா.ஜ.க. ஐ.டி. விங் தலைவர் அமித் மாளவியா மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்' என்றும் கூறியிருக்கிறார்.

இந்து என்.ராம் தனது பேச்சில், "அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்தும் ஜாதிக் கொடுமை குறித்தும் கூறியதில் ஒரு தவறும் இல்லை. உண்மையைத்தான் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ரொம்ப கவனமாகத்தான் பேசியிருக்கிறார். இந்துக்களுக்கு எதிரானதல்ல என்று தெளிவான விளக்கமும் கொடுத்திருக்கிறார். ஜாதிக் கொடு மைக்கு ஆதரவாக, சமத்துவத்துக்கு எதிராக, இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு எதிராக இருக்கக்கூடிய அமைப்புதான் சனாதன தர்மம் என்று சொல்லியிருக்கிறார். சனாதன தர்மத்தை பேசறவங்க ஜாதிக் கொடுமையை ஒத்துக்கறாங்க, அங்கீகரிக்கிறாங்க.

NRaM

அமித் மாளவியான்னு பா.ஜ.க.வின் ஐ.டி. செல்லின் தலைவர் பொய்சொல்லி ஒரு ட்வீட் போட்டிருக்கார். அதாவது, இந்துக்களை இனப்படுகொலை செய்யச் சொன்னதாக பொய்யாக எழுதியிருக்கிறார். அவர்மீது கிரிமினல் வழக்கு போடணும். இந்த மாதிரி ஒரு பொய் சொன்னதற்கு. வெறுமனே பதில் கொடுத் தால் போதாது. சனாதனம

"சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சில் எந்தத் தவறும் இல்லை' என்று குறிப்பிட்ட பிரபல பத்திரிகையாளர் இந்து என்.ராம், "உதயநிதியின் பேச்சைத் திரித்துப் பதிவிட்ட பா.ஜ.க. ஐ.டி. விங் தலைவர் அமித் மாளவியா மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டும்' என்றும் கூறியிருக்கிறார்.

இந்து என்.ராம் தனது பேச்சில், "அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்தும் ஜாதிக் கொடுமை குறித்தும் கூறியதில் ஒரு தவறும் இல்லை. உண்மையைத்தான் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ரொம்ப கவனமாகத்தான் பேசியிருக்கிறார். இந்துக்களுக்கு எதிரானதல்ல என்று தெளிவான விளக்கமும் கொடுத்திருக்கிறார். ஜாதிக் கொடு மைக்கு ஆதரவாக, சமத்துவத்துக்கு எதிராக, இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு எதிராக இருக்கக்கூடிய அமைப்புதான் சனாதன தர்மம் என்று சொல்லியிருக்கிறார். சனாதன தர்மத்தை பேசறவங்க ஜாதிக் கொடுமையை ஒத்துக்கறாங்க, அங்கீகரிக்கிறாங்க.

NRaM

அமித் மாளவியான்னு பா.ஜ.க.வின் ஐ.டி. செல்லின் தலைவர் பொய்சொல்லி ஒரு ட்வீட் போட்டிருக்கார். அதாவது, இந்துக்களை இனப்படுகொலை செய்யச் சொன்னதாக பொய்யாக எழுதியிருக்கிறார். அவர்மீது கிரிமினல் வழக்கு போடணும். இந்த மாதிரி ஒரு பொய் சொன்னதற்கு. வெறுமனே பதில் கொடுத் தால் போதாது. சனாதனம் குறித்து பெரியார் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர்களும், அண்ணாதுரை அவர்களும் தெளிவாகவே பேசி யிருக்காங்க. சனாதன தர்மம் வேற, வர்ணாசிரம தர்மம் வேறன்னு சிலர் சொல்றாங்க. ஆனால், சனாதன தர்மத்துக்கும் வர்ணாசிரம தர்மத்துக்கும் நடைமுறையில் ஒரு வித்தியாசமும் கிடையாது. கவர்னர் சனாதன தர்மத்தை ஆதரித்திருக்கிறார். அதேபோல் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பெரிய எக்ஸ்பர்ட் மாதிரி பேசுகிறார்.

டாக்டர் அம்பேத்கர் என்ன எழுதியிருக் கார்னா, ஜாதியை அடியோடு ஒழிக்கவேண்டும். அதுல சீர்திருத்தமெல்லாம் பண்ணமுடியாது என்று பேசியிருக்கிறார். அன்றைய காலத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்துத்வா பேசுபவர்கள் அம்பேத்கரை மட்டும் ஒத்துக்கறாங்க. அப்படியானால், டாக்டர் அம்பேத்கர் அவங்க பக்கம் இருப்பது மாதிரி பொய் பேசறாங்க. வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெளிவாகவே இதற்கு பதில் கொடுத்திருக்கார். நம்முடைய அரசியலமைப் புச் சட்டத்தை விவாதித்து நிர்ணயம் செய்த அமைப்பில் அம்பேத்கரின் இறுதிப் பேச்சு ரொம்ப முக்கியமானது என்று கருதுகிறேன். 1949ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பேசிய அந்த பேச்சு பலரால் சுட்டிக்காட்டப்படுகிறது. அதில், "இந்திய சமுதாயத்தில் இரண்டு அம்சங்கள் வேதனைப் பட வேண்டியதாக இருக்கிறது. சனாதன தர்மத்தை நடைமுறையில் கொண்டுவந்த இந்த இந்திய சமுதாயத்தில், சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சமத்துவம் கிடையாது. சகோதரத்துவம் கிடையாது. இது நமக்கு மிகப்பெரிய அபாயம். ஒரு மனிதருக்கு ஒரு வாக்குரிமை என்ற மதிப்பீட்டை அரசியலில் கொண்டுவந்துவிட்டார்கள். ஆனால், சமுதாயத் திலும், பொருளாதாரத்திலும் ஒரு மனிதனுக்கு சமத்துவ மதிப்பீடு கிடையாது. இந்த முரண்பாட்டைத் தீர்க்கவில்லையென்றால், அரசியல் ஜனநாயகத்திற்கு பெரிய அபாயம்' என்று பேசியிருக்கிறார் அம்பேத்கர்.

அம்பேத்கரைப் போலவே, ஜாதியை, ஜாதிக் கொடுமையை வேரோடு தூக்கிப் போடாமல் ஒரு முன்னேற்றமும் ஏற்படாது என்பதைத்தான் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். "எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் நம்பிக்கையை மதிக்கிறேன். அதுதான் நம் கலாச்சாரம்' என உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். எனவே இந்துக் களுக்கு எதிராக அவர் பேசவில்லை. சனாதன தர்மத்தை சீர்திருத்திக்கொண்டிருக்க முடியாது. இதை வேரோடு எடுத்துப் போடவேண்டும் என்பதில் எந்தத் தவறும் இல்லை. அதனை தைரியமாக, வெளிப்படையாகச் சொன்னதைப் பாராட்டுகிறேன்.

உதயநிதி சொன்னதை ஏன் தனிப்படுத்தி பெரிதுபடுத்தியிருக்காங்க என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஒரு ஆதரவும் கிடையாது. அண்ணாமலை என்னதான் யாத்திரை சென்றாலும் ஆதரவு கிடையாது. அதனால் ஒன்றிய அரசின் பலத்தை வைத்து என்னென்னவோ செய்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் எதுவும் பலிக்கவில்லை. அதனால்தான் வேண்டுமென்றே விஷமத் தனமாக பொய் சொல்வதில் இறங்கியிருக் காங்க.

இப்போதுள்ள விவகாரத்தில், நானாக இருந்தால் இந்த அமித் மாளவியா மீது ஒரு கேஸ் போடுவேன். கிரிமினல் வழக்கே தொடர்வேன்'' என கூறியுள்ளார்.

-தொகுப்பு தெ.சு.கவுதமன்

________________

பல்லடம் கொலையில் டுவிஸ்ட்!

ff

தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் 4 நபர்கள் கொலையில், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை இனங்காண அழைத்துச் சென்றபோது, முதன்மைக் குற்றவாளி வெங்கடேசன் தப்பிக்க முயல, காலில் சுட்டுப் பிடித்து கெத்து காட்டியுள்ளது திருப்பூர் மாவட்ட காவல்துறை. இச்சம்பவத்தில் வெங்கடேசன் என்பவர் முதன்மைக் குற்றவாளியாகவும், செல்லக்கண்ணு மற்றும் விஷால் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாகவும் இனம் கண்டது பல்லடம் காவல்துறை. இதில் இரண்டாம் குற்றவாளியான செல்லக்கண்ணு காவல்துறையிடம் சிக்கி, விசாரிக்கப்பட்ட நிலையில், கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்த உதவிய வெங்கடேசனின் தந்தை அய்யப்பனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடியது காவல்துறை.

"புதன்கிழமையன்று காலை 7 மணியளவிலேயே திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தானாக வந்து சரண டைந்தனர் முதன்மைக் குற்றவாளியான வெங்கடேசனும், விஷாலும். ஆனால், சரணடைந்தால் தங்களது இமேஜ் குறைந்து விடுமென அவசர, அவசரமாக கைது செய்த தாகக் காண்பித்தது காவல்துறை. தொடர்விசாரணையில், முதன்மைக்குற்றவாளியான வெங்கடேசனின் உண்மைப் பெயர் ராஜ்குமார் எனத் தெரியவந்தது. அவனுக்கும், அவனுடைய தந்தையான அய்யப்பனுக்கும் நெல்லை மாவட்டத்தில் பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. வழக்குகள் தன்னை நெருக்கிய நிலையில் நெல்லை மாவட்டத்திலிருந்து தப்பி பல்லடத்திற்கு வந்து தன்னுடைய பெயர் வெங்கடேசன் எனக் கூறி அதற்கு அடையாளமாக தன்னுடைய அண்ணன் வெங்கடேசனின் வாகன ஓட்டுநர் அடையாள அட்டையைக் காண்பித்தே இங்குள்ள கம்பெனிகளில் வேலை செய்துள்ளான். அடையாளங்களை இனங்காண முதன்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்கின்ற ராஜ்குமாரை தொட்டம்பட்டிக்கு அழைத்து சென்றிருக்கின்றது பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான டீம். அங்கிருந்து வெங்கடேசன் தப்பியோட முயற்சிக்க, முட்டிக்கால் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளார் இன்ஸ்பெக்டர்.

-நாகேந்திரன்

nkn090923
இதையும் படியுங்கள்
Subscribe