குமரி மா.செ.க்களுக்கு எதிராக மல்லுக்கட்டும் அக்கட்சியின் முக்கிய நிர் வாகிகளால் ர.ரக்கள் கலக்க மடைந்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் ஒருங் கிணைப்பாளராக ஓ.பி.எஸ். இருக்கும்போது டி.டி.வி. தினகரனின் ஆதரவாளராக இருந்த தளவாய்சுந்தரத்திடமிருந்து குமரி கிழக்கு மா.செ. பதவியைப் பறித்து அசோகனிடம் கொடுத்தார் ஓ.பி.எஸ். அதன்பிறகு எடப்பாடி, கட்சியின் பொதுச்செயலாளரானதும் தன்னுடைய ஆதரவாளராக மாறிய தளவாய்சுந்தரத்தை கி.மா.செ. ஆக்கினார் எடப்பாடி.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டு குமரி மேற்கு மா.செ.வாக இருந்துவந்த ஜான்தங்கத்திடமிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் பதவியைப் பறித்து, ஜெயசுதர்சனிடம் கொடுத்தார் எடப்பாடி. இந்த நிலையில்தான் அந்த இரண்டு மா.செ.க்களும் ஒ.செ., ந.செ., பேரூர் செ. போன்ற நிர்வாகிகளின் பதவிகள் தொடரவேண்டுமென்றால் லட்சங்கள் தரவேண்டு மென மிரட்டிவருவதாக... அந்த நிர்வாகிகள் குற்றம்சாட்டி எடப்பாடிக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.
இந்த நிலையில் பத்மநாபபுரம் நகரச்செயலாளராக இர

இந்த நிலையில் பத்மநாபபுரம் நகரச்செயலாளராக இருந்த மணிகண்டனின் பதவியைப் பறித்ததால் அவர் கடந்த வாரம் மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று அழுது புலம்பி, "எனக்கு மீண்டும் ந.செ. பதவி தரவில்லை என்றால் அம்மா சமாதி முன்னே குடும்பத்துடன் தற்கொலை செய்வேன். என் மரணத்துக்கு தளவாய்சுந்தரமும், ஜெயசுதர்சனும்தான் காரணம்' எனக்கூறி கதறியழுது வீடியோ வெளியிட்டார்.
இதுகுறித்து மணிகண்டனிடம் பேசியபோது, "அம்மாவால் நியமிக்கப்பட்ட நான் எடப்பாடியின் ஆதரவாளராக இருந்தேன். இப்போது என்னை நீக்க காரணமாக இருந்த தளவாய்சுந்தரம் அப்போது டி.டி.வி.கூட இருந்தார். நான் தொடர்ந்து 6 வருடங்களாக ந.செ.வாக இருந்து கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்து இன்றைக்கு கடனாளியாக இருக்கிறேன். என்னுடைய பதவியைப் பறித்து நேற்றுவரை ஓ.பி.எஸ். அணியின் நகர செ.யாக இருந்த டேனியலிடம் கொடுத் திருக்கிறார் ஜெயசுதர்சன். இவர் ஓ.பி.எஸ். அணியில் இருந்து கொண்டு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கிற போராட்டங்களுக்கும் நிகழ்ச்சி களுக்கும் பல்வேறு இடையூறு களை ஏற்படுத்தியவர். என்கிட்ட பணம் கேட்டாங்க. கொடுக்க ஒன்றுமில்லாததால் தளவாய் சுந்தரம் சொல்லி டேனியலிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவருக்கு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெய சுதர்சன்''’என்றார்.
இந்நிலையில் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர்கள் ஜார்ஜ் (கிள்ளியூர்), மெர்லியன்ட் தாஸ் (தக்கலை), நிமாஸ் (திருவட்டார்), மணி (மேல்புறம்), ந.செ.க்கள் ஆன்றோ மொராலிஸ் (கொல்லங்கோடு), மணிகண்டன் (பத்மநாபபுரம்), மா.து.செ. அல்போன்சாள், மா.இ.செ. மேரி கமலாபாய், மா.பொருளாளர் சில்வெஸ்டர், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபு, ஜெசி மற்றும் பேரூர் செ.க்கள் ஸ்டாலின் (கடையல்), ஆர்தர் வல்சன் (அருமனை), ஐசக் (கீழ்குளம்), சுஜின் விஜயராஜ் (கிள்ளியூர்), ஜார்ஜ் (பாலப் பள்ளம்), ராஜமணி (கோத நல்லூர்), பத்மனாபபிள்ளை (குமாரபுரம்), சுந்தர்சிங் (வேர்க்கிளம்பி) முன்னாள் நிர்வாகிகள் என பலர் தளவாய்சுந்தரம், ஜெயசுதர்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டு களைக் கூறி எடப்பாடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய அந்த நிர்வாகிகள், “"நாங்க எல் லோருமே ஆரம்ப காலத்துல இருந்து அ.தி.மு.க.வில் இருக் கிறோம். நாங்க எல்லோருமே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான். தளவாய்சுந்தரத்தால் மா.செ. ஆக்கப்பட்டதால் அவருடைய சொல்லுக்கு விசுவாசமாக இருக்கிறார் ஜெயசுதர்சன். தன்னுடைய உதவியாளர் மனோவை வைத்து கட்சி நிர்வாகிகளிடம் வசூல் வேட்டையை நடத்துகிறார். பணம் கேட்டு, கொடுக்காத நிர்வாகிகளிடம் ஜெய சுதர்சனே போன்செய்து, "உனது பதவியை விலைக்கு வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள்' என்று பசுமாட்டுக்கு விலை பேசுவதுபோல் பேசுகிறார்.
எங்களுடைய ஒன்றியம், நகரம் எல்லாம் பூத் கமிட்டி போட்டுவிட்டோம் ஆனால் ஜெயசுதர்சன் மா.செ. ஆவதற்கு முன் பதவி வகித்த திருவட்டார் தெற்கு ஒன்றியத்தில் ஒரு இடத்தில்கூட பூத் கமிட்டி போடவில்லை. ஜெயசுதர்சனின் மகளின் கணவர் மந்திரி மனோதங்கராஜின் தீவிர ஆதரவாளர். இதனால் ஜெய சுதர்சன், மனோ தங்கராஜுக்கு எதிராக ஒரு இடத்தில்கூட வாய் திறப்பதே இல்லை. உள்ளாட்சித் தேர்தலின்போது திருவட்டார் யூனியன் சேர்மன் பதவிக்கு தி.மு.க. ஜெகநாதனுக்கு ஆதரவாக அ.தி.மு.க. யூனியன் கவுன்சிலர்களை மிரட்டி ஓட்டுப்போட வைத்தவர். அப்படிப்பட்டவரை எடப் பாடி மா.செ. ஆக்கியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்பதை விட்டுட்டு அ.தி.மு.க.வைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாலே போதும்'' என்கின்றனர் விரக்தி யாக.
இதுகுறித்து மா.செ. ஜெயசுதர்சன் கூறும்போது,
"பூத் கமிட்டி சரியாக போடாததுனாலதான் ஜான்தங்கத்தைத் தூக்கிட்டு என்னை மா.செ. ஆக்கினார் எடப்பாடி. சீனியர்கள் எனக் கூறிக்கொண்டு கட்சிப் பதவியை வாங்கி வைத் துக்கொண்டு சும்மா இருக்கிறார்கள். கட்சியின் பணிகளில் தீவிரம் காட்டாத நிர்வாகிகளை எச்ச ரித்தால் இப்படி தவறான குற்றச்சாட்டுகளைக் கூறு கிறார்கள். பத்மனாபபுரம் ந.செ. மணிகண்டனுக்கு அம்மா பேரவையில் மாவட்ட அளவில் பொறுப்பு கொடுத்தும் அவர் வேண்டாம் என்றிருக் கிறார். இவர்களைத் தூண்டி விடுவதே கட்சிக்குள் இருக்கும் சில கறுப்பு ஆடுகள்தான்'' என்றார்.
மாவட்டத்துக்குள் நடக்கும் பூசலால் உண்மை யான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் கண் களைக் கசக்கிக்கொண்டிருக் கிறார்கள்.