க்களின் துயர நிகழ்வுகளில் பங்கெடுப்பதையும், மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதையும் முற்றாகத் தவிர்த்தே வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு.

ddஅந்தவகையில், பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும், போதை யில்லா தமிழகத்தை உருவாக்கவும்கோரி சென்னை கோட்டையை முற்றுகையிட, நடைபயணம் மேற்கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெண்களை சந்திக் காமல் தவிர்த்திருப்பது சமீபத்திய உதா ரணம். வன்முறையில்லாத் தமிழகம் கேட்டு வந்த அவர்களின்மீதே காவல்துறையை ஏவி, வன்முறையைக் கட்டவிழ்த்தது கொடுமை யிலும் கொடுமை.

கடந்த நவம்பர் 25-ந் தேதி, திரு வண்ணாமலை மற்றும் வடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து, இரண்டு குழுக்களாகப் பிரிந்து 400 கி.மீ. தூரத்திற்கு நடைபயணத் தைத் தொடங்கினார்கள் முன்னூறுக்கும் மேற்பட்ட மாதர் சங்க பெண் தோழர்கள். மிகவும் அமைதியான முறையில், ஊர்வல மாக வந்த பெண்களை வரும் வழியெல்லாம் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். ஆனால், "சென்னைக்குள் உங்களை அனு மதிக்க முடியாது' என முன்கூட்டியே அழுத் தம் கொடுத்திருந்தது காவல்துறை தரப்பு.

டிசம்பர் 03-ந் தேதி தாம்பரம் வந்தி ருந்த பெண்கள், அன்றிரவு அங்கேயே அறை யெடுத்து தங்கினார்கள். மறுநாள் காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி, கோட்டையை நோக்கி முற்றுகையிட கிளம்பியவர்களைத் தடுத்து நிறுத்தியது காவல்துறை.

Advertisment

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தாம்பரம் அம்பேத்கர் சிலை வரை செல்வதற்கான அனுமதியை மட்டுமே வழங்கி, பின்னர் அதையும் திரும்பப்பெற்று அங்கேயே பெண்களை சுற்றி வளைத்தார்கள். இதை ஏற்கமறுத்து அங்கேயே அமர்ந்து முழக்கமிட்டவர்களை, சுமார் இருநூறுக் கும் மேற்பட்ட போலீசார் அப்புறப்படுத்தியபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் நடை பயணத்தில் கலந்துகொண்ட பெண்கள் பலரும் தாக் கப்பட்டனர். இறுதியாக, அவர்களைக் கைதுசெய்த போலீசார், அருகிலிருந்த அம்பேத்கர் திருமண மண்ட பத்தில் அடைத்துவைத்து, மாலை விடுவித்தனர்.

நடைபயணத்தில் கலந்துகொண்டு வடலூர் குழுவிற்கு தலைமைதாங்கிய, மாதர் சங்க மாநிலச் செயலாளர் சுகந்தி, “""பொள்ளாச்சி சம்பவமாகட்டும், நிர்மலாதேவி விவகாரமாகட்டும் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் காட்டும் அக்கறையை, அதற்கெதிராக போராடுபவர்களுக்கு மறுப்பதில் சிறப்பாகவே செயல்படுகிறது எடப்பாடி அரசு. இலக்குவைத்து மதுவிற்பனை செய்யும் இந்த அரசு, போதையில்லாத் தமிழகம் கேட்கும் எங்களை அனுமதித்தால், அது மதுஒழிப்புப் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றே காவல்துறையை ஏவி தடுத்திருக்கிறது. எங்கள் முயற்சிக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பே, மாற்றம் மீதான நம்பிக்கையைத் தந்திருக்கிறது'' என்றார் உறுதியுடன்.

-ச.ப.மதிவாணன்

Advertisment