Advertisment

கண்ணாமூச்சி ஆடிய ஃபெஞ்சல்! - தத்தளித்த வட தமிழகம்!

ss

ந்தாண்டு பருவமழை தொடங்கியபோது தென்தமிழ்நாடு அளவுக்கு வடதமிழ்நாட்டில் மழையில்லை. ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி உட்பட வட தமிழ்நாட்டில் பரவலாக பெருமழை வரும் எனச் சொல்லப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக கடற்கரை மாவட்டங்கள், புயல் கடக்கும் என கணிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விட்டது இந்திய வானிலை ஆய்வு மையம்.

Advertisment

tmalai

மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம்காட்டியது. பெரும் சூறாவளிக் காற்று கிடையாது, இடி, மின்னல் கிடையாது. ஆனால் சுமார் 40 மணி நேரத்துக்கும் மேலாக ஒருநிமிடம்கூட விடாமல் பெய்தது ஃபெஞ்சல் புயல் மழை. புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையைக் கடந்த புயல், யாரும் கணிக்காத திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர், ஹாசன் என சென்றது. இதனால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் பெரும்சேதத்துக்கு ஆளாகின. கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது விழுப்புரம் மாவட்டம்.

Advertisment

மயிலத்தில் 500 மி.மீ. மழை, திண்டிவனத்தில் 370 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் 11 வீடுகள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5,500 கால்நடைகள் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல். விழுப்புரம் மாவட்டத்தின் பாதிப்புகளை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட அமைச்சர் பொன்முடியோடு சேர்ந்து நிவாரணப் பணிகளைச் செய்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஆல்பி ஜான்வர்கிஸ், கிரன் குராலா, பொன்னையா, சிவராசு ஆகியோரை அனுப்பிவைத்தார்.

tm

பாண்டிச்சேரிக்கு டிசம்பர் 1-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி, வரும் வ

ந்தாண்டு பருவமழை தொடங்கியபோது தென்தமிழ்நாடு அளவுக்கு வடதமிழ்நாட்டில் மழையில்லை. ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி உட்பட வட தமிழ்நாட்டில் பரவலாக பெருமழை வரும் எனச் சொல்லப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக கடற்கரை மாவட்டங்கள், புயல் கடக்கும் என கணிக்கப்பட்ட மாவட்டங் களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட் விட்டது இந்திய வானிலை ஆய்வு மையம்.

Advertisment

tmalai

மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம்காட்டியது. பெரும் சூறாவளிக் காற்று கிடையாது, இடி, மின்னல் கிடையாது. ஆனால் சுமார் 40 மணி நேரத்துக்கும் மேலாக ஒருநிமிடம்கூட விடாமல் பெய்தது ஃபெஞ்சல் புயல் மழை. புதுச்சேரி - மாமல்லபுரம் இடையே கரையைக் கடந்த புயல், யாரும் கணிக்காத திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர், ஹாசன் என சென்றது. இதனால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் பெரும்சேதத்துக்கு ஆளாகின. கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது விழுப்புரம் மாவட்டம்.

Advertisment

மயிலத்தில் 500 மி.மீ. மழை, திண்டிவனத்தில் 370 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் 11 வீடுகள் சேதமடைந்துள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 5,500 கால்நடைகள் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல். விழுப்புரம் மாவட்டத்தின் பாதிப்புகளை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட அமைச்சர் பொன்முடியோடு சேர்ந்து நிவாரணப் பணிகளைச் செய்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஆல்பி ஜான்வர்கிஸ், கிரன் குராலா, பொன்னையா, சிவராசு ஆகியோரை அனுப்பிவைத்தார்.

tm

பாண்டிச்சேரிக்கு டிசம்பர் 1-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சிக்கு வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி, வரும் வழியில் மழையால் மரக்காணம் உட்பட பல பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளான தைப் பார்த்து உடனே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்தார். மரக்காணம் பகுதிகளில் மீட்கப்பட்ட மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மரக்காணத்தில் அரசுப் பள்ளியில் தங்கவைக்கப் பட்டிருந்த மக்களுக்கு உணவு, கம்பளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைத் தந்து ஆறுதல்கூறினார். பின்பு கடலூர் சென்று மழை பாதித்த இடங்களைப் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.

டிச. 02ஆம் தேதி காலையிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினார்.

மலைச்சரிவும் திருவண்ணாமலையும்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதுமே பெருமழை. வெளுத்துக்கட்டிய மழையால் ஏரிகள் அனைத்தும் நிரம்பின. மாவட்டத்தில் மனித உயிரிழப்பு இல்லை என நினைத்த நிலையில் அந்த கோரத் தகவல் வெளியானது. திருவண்ணாமலை நகரத்தில் எவ்வளவு மழைபெய்தாலும் தண்ணீரே தேங்காத அளவுக்கு நிலவியல் அமைப்பும், வடிகால் அமைப்பும் உள்ளது என பல ஆண்டுகளாக பெருமையாகக் கூறிவந்தது, மனித தவறுகளால் அது பொய்யானது. இடைவிடாமல் 40 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் திருவண்ணாமலை நகரம் கடற்கரை நகரம்போல் மாறியது.

மாநகரத்தில் மழைநீர் வடிகால்கள் ஆக்ரமிக்கப்பட்டும், தூர்க்கப்பட்டும்விட்டன. இந்நகரத்தை ஒட்டினாற்போலுள்ள கிராமங்கள் நகரமயமாவதால் நீர்வழிப்பாதையைத் தூர்த்து விட்டனர். இதனால் மழைநீர் செல்ல வழியில்லை. இந்த மழையின்போது ஏரி நிரம்பி வெளியேறிய தண்ணீர் செல்வதற்கு சரியான கால்வாய் இல்லாததால் தாறுமாறாகச் சென்றது. ஏரியின் எதிர்ப்புறமிருந்த கலெக்டர் பங்களாவின் காம்பவுண்ட் சுவரை கீழேதள்ளி கலெக்டர் பங்களாவுக்குள்ளும் புகுந்தது.

tt

திருவண்ணாமலை மலையடிவாரத்தில் கிழக்கு, வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அடிவாரத்திலிருந்து கால்வாசி மலைவரை மலைமீதிருந்த மரங்களை, பாறைகளை வெட்டிவிட்டு வீடுகள், ஆசிரமங்கள் கட்டத்துவங்கினார்கள். அங்கே வீடுகட்டும்போது ஒவ்வொரு வீட்டினரும் ஆழ்துளைக்குழாய்கள் அமைத்தனர். இந்த ஆக்ரமிப்புகளை வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி எதுவும் கண்டுகொள்ள வில்லை.

டிசம்பர் 1-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி. நகர் 11-வது தெருவிலுள்ள வீடுகளின்மீது மலையின் மேற்குப்பகுதியில் சிறிய பகுதி சரிந்தது. சுமார் 40 டன் அளவிலான பாறை உருண்டுவந்து விழுந்ததில் 2 வீடுகளை முற்றிலும் மூடிவிட்டது. அந்தத் தெரு முழுவதும் 7 அடி உயரத்துக்கு மண்ணைக் கொண்டுவந்து கொட்டிவிட்டது. இரவு 7 மணிக்கு மேலே இந்தத் தகவல் வெளியே தெரிந்தது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டி யனுக்கு தகவல் தெரிவிக்க, உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தவர், அங்கிருந்த வீடுகளில் வசித்த 200-க்கும் அதிகமான பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி தற்காலிக முகாம்களுக்கு அனுப்பிவைத்தார். முகாமில் கணக்கெடுத்தபோது, ராஜ்குமார் அவரது மனைவி மீனா, பிள்ளைகள் கௌதம், இனியா, மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ரம்பா, வினோதினி, மகா ஆகியோர் வரவில்லை எனத் தெரியவந்தது. அவர்கள் வீடுகளின் மீதுதான் பாறை விழுந்தது எனவும் தெரியவந்தது.

அரக்கோணத்திலிருந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தந்தனர். உதவி கமாண்டோ ஸ்ரீதர் தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினர், இரண்டு மோப்ப நாய்களுடன் நள்ளிரவு 1 மணிக்கு களத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபடத்துவங்கினர். இவர்களுக்கும் மீட்புப் பணி பெரும் சவாலாக இருந்தது. இந்தத் தகவல் கன்னியாகுமரியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைப் பணிகள், பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்யச்சென்ற மாவட்ட அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொல்லப்பட்டதும் உடனடியாக அதனை ரத்துசெய்துவிட்டு திருவண்ணாமலை வந்தார்.

அமைச்சர் வழியாக இந்தத் தகவல் முதலமைச்சருக்குச் சொல்லப்பட்டதும், உடனடியாக கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் ஆசிர்வாதத்தை அனுப்பிவைத்தார். டிசம்பர் 2-ஆம் தேதி காலையும் மீட்புப் பணியில் தேசியப் பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்புப் படையினர், போலீஸார் என 120 பேர் ஈடுபட்டனர். அந்த வீடுகளில் இருந்தவர்களின் நிலை என்ன என்பது மீட்புப் பணி முடிந்தபின்பே தெரியவரும்.

புதுவை மாநிலம்

நவம்பர் 29-ஆம் தேதியே ஃபெஞ்சல் புதுச்சேரி -காரைக்கால் பகுதியில் காட்டத்துவங்கியது. பலத்த காற்றால் மரங்கள் முறிந்துவிழுந்தன. இதனால் அப்போதே நிறுத்தப்பட்ட மின்சாரம் டிசம்பர் 2-ஆம் தேதி காலை வரை பெரும்பாலான பகுதிகளுக்கு வரவில்லை. இடைவிடாத மழையால் புதுச்சேரி நகரத்துக்குள் பாயும் உப்பனாறு நிரம்பிவழிந்ததால் கரையருகேயுள்ள கென்னடி நகர், வாணரப்பேட்டை, திடீர் நகர்களின் வீடுகளுக்குள் கழிவுநீரும், மழைநீரும் புகுந்தன. சக்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சந்தைக்குப்பம் பகுதியில் 74 பேர் வீட்டுக்குள் சிக்கினர். கிருஷ்ணா நகர், பாவனா நகர், ஞானப்பிரகாசா நகர் என பெரும்பாலான பகுதிகளில், வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்களை அங்கிருந்து வெளியேற்றி முகாம்களில் தங்கவைத்தனர் அதிகாரிகள். கத்துகேணி, காட்டேரிக்குப்பம், கைக்கிளை, கிரமாம்பாக்கம், ஏம்பலம், பாகூர், காட்டுக்குப்பம், அருணாசலநகர், பிக்கல்கட்டு, குருவிநத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் 5,000 ஏக்கர் நெற்பயிர் நாசமடைந்துள்ளது.

புதுச்சேரியில் 40 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழையின் அளவு 400 மி.மீ. தற்போதுவரை 4 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள் ளன. சுமார் ஒரு லட்சம் மக்கள் அவதிப்படுகின்றனர். அவர்களுக் கான உணவுத் தேவைகளை சமூக ஆர்வலர்கள் மழையிலும் தேடித் தேடிச்சென்று தருகின்றனர். புதுச்சேரியிலுள்ள அனைத்து பள்ளிகளும் முகாம்களாக மாற்றப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியிலிருந்து திண்டிவனம், விழுப்புரம் செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றன. மழை பாதித்த மாநிலத்தை முதலமைச்சர் ரங்கசாமியும், துணை ஆளுநர் கைலாசநாதனும் பார்வை யிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

கடந்த 26-ஆம் தேதி கடலூர் தைகால் தோணித்துறை கிராமத் தைச் சேர்ந்த மீனவர்கள் மணிகண் டன், தமிழ், சாமிதுரை, மணிமாறன், தினேஷ், சற்குணன் ஆகியோர் சென்ற படகு கடல்சீற்றத்தால் கவிழ, சித்திரப்பேட்டையில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான தற்காலிக கப்பல் இறங்குதளத்தில் தஞ்சமடைந்தனர். 28-ஆம் தேதி காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மாவட்ட நிர்வாகத் திற்கு அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. தமிழக முதல்வ ருக்கு தகவலளித்ததன்பேரில் சென்னையிலிருந்து கடற்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் 30-ஆம் தேதி மாலை முதல் அடுத்த நாள் ஞாயிறு வரை அதிகனமழை பெய்தது. இதனால் கடலூர் மாநகரத்திற்குட்பட்ட பாதிரிக்குப் பம், பாடலீஸ்வரர் கோயில், அரசு தலைமை மருத்துவமனை, பெரிய கங்கனாகுப்பம், கே.என்.பேட்டை, தென்பெண்ணையாறு நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தாழ்வான பகுதியில் உள்ளவர்களை மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மக்களுக்கு உதவ நிவாரண நிதிகேட்டு தமிழகமும், புதுவையும் ஒன்றிய அரசை எதிர்நோக்கி யுள்ளன.

என்ன செய்யப்போகிறார் பிரதமர் மோடி?

-து.ராஜா, அ.காளிதாஸ்

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn041224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe