ராங்கால் பழிவாங்கப்படும் பெண் அதிகாரிகள்! பரபரக்கும் கோட்டை! கை விரித்த அ.தி.மு.க! கொந்தளிக்கும் பிரேமலதா!

rr

"ஹலோ தலைவரே, நம்ம தமிழ்நாட்டில், பரபரப்பூட்டும் குபீர்ச் செய்திகள் எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் கிளம்புது.''”

"ஆமாம்பா, தமிழக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், தன்னைக் கொல்ல சதின்னு பரபரப்பை ஏற்படுத்தியிருக்காரே?''”

rr

"ஆமாங்க தலைவரே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக்கின் அலுவலகம் கடந்த ஜூலை மாதம் தீப்பிடித்து எரிந்தது. இதைச் சுட்டிக்காட்டி, தன்னைக் கொலை செய்ய சதி நடந்திருப்பதாக, தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு ஒரு புகார் கடிதத்தை எழுதியிருக்கிறார் கல்பனா நாயக். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பற்ற சூழல் இருப் பதைத்தான் கல்பனா நாயக் கின் புகார் உணர்த்துகிறது. அதனால், இதில் உரிய கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்று, தேசிய அளவிலான ஐ.பி.எஸ். அதி காரிகள் சங்கம் கல்பனாவிற்கு ஆதரவாக உள்துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இதனை யடுத்து, கல்பனா நாயக்கின் புகார் கடிதத்தில் சொல்லப் பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக் கிறதாம் ஒன்றிய உள்துறை அமைச்சகம்.''”

"சில பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் இப்படிப் பட்ட சிக்கல் இருப்பதாகத் தெரிகிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இப்படிப்பட்ட செய்திகள் எல்லாம் இங்கே தொடர்கதைதான் என்கிறது கோட்டை வட்டாரம். உதாரணமாக, கடந்த 2021-ல் தமிழக அரசின் நில நிர்வாகத் துறையின் இணைகமிஷன ராக செந்தாமரை ஐ.ஏ.எஸ். இருந்தார். அப்போது இவருக்கு மேலதிகாரியாக கமிஷனர் பதவியில் இருந்தவர் நாகராஜன் ஐ.ஏ.எஸ். அப்போது, சில கோப்புகளை க்ளீயர் செய்ய உத்தரவிட்டாராம் நாகராஜன். ஆனால், விதிகளுக்கும் நியாயத்திற்கும் புறம்பாக இருக்கிறது எனச்சொல்லி, அந்தக் கோப்புகளில் கையெழுத்துப் போடவில்லை செந்தாமரை. இதனால் கோபமடைந்த

"ஹலோ தலைவரே, நம்ம தமிழ்நாட்டில், பரபரப்பூட்டும் குபீர்ச் செய்திகள் எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் கிளம்புது.''”

"ஆமாம்பா, தமிழக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், தன்னைக் கொல்ல சதின்னு பரபரப்பை ஏற்படுத்தியிருக்காரே?''”

rr

"ஆமாங்க தலைவரே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டி.ஜி.பி. கல்பனா நாயக்கின் அலுவலகம் கடந்த ஜூலை மாதம் தீப்பிடித்து எரிந்தது. இதைச் சுட்டிக்காட்டி, தன்னைக் கொலை செய்ய சதி நடந்திருப்பதாக, தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு ஒரு புகார் கடிதத்தை எழுதியிருக்கிறார் கல்பனா நாயக். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பற்ற சூழல் இருப் பதைத்தான் கல்பனா நாயக் கின் புகார் உணர்த்துகிறது. அதனால், இதில் உரிய கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என்று, தேசிய அளவிலான ஐ.பி.எஸ். அதி காரிகள் சங்கம் கல்பனாவிற்கு ஆதரவாக உள்துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறது. இதனை யடுத்து, கல்பனா நாயக்கின் புகார் கடிதத்தில் சொல்லப் பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக் கிறதாம் ஒன்றிய உள்துறை அமைச்சகம்.''”

"சில பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் இப்படிப் பட்ட சிக்கல் இருப்பதாகத் தெரிகிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, இப்படிப்பட்ட செய்திகள் எல்லாம் இங்கே தொடர்கதைதான் என்கிறது கோட்டை வட்டாரம். உதாரணமாக, கடந்த 2021-ல் தமிழக அரசின் நில நிர்வாகத் துறையின் இணைகமிஷன ராக செந்தாமரை ஐ.ஏ.எஸ். இருந்தார். அப்போது இவருக்கு மேலதிகாரியாக கமிஷனர் பதவியில் இருந்தவர் நாகராஜன் ஐ.ஏ.எஸ். அப்போது, சில கோப்புகளை க்ளீயர் செய்ய உத்தரவிட்டாராம் நாகராஜன். ஆனால், விதிகளுக்கும் நியாயத்திற்கும் புறம்பாக இருக்கிறது எனச்சொல்லி, அந்தக் கோப்புகளில் கையெழுத்துப் போடவில்லை செந்தாமரை. இதனால் கோபமடைந்த நாகராஜன், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றுகூடப் பார்க் காமல், ஒருமையில் மிகக்கேவலமாக அவரை அர்ச்சனை செய்திருக்கிறார். அதோடு நில்லாமல் அன்றிலிருந்தே செந்தாமரைக்கு எதிராக, பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினார் நாகராஜன்.'' ”

"என்னப்பா சொல்றே?''”

"ஆமாங்க தலைவரே... செந்தாமரைக்கு, நாகராஜன் எந்தக் கோப்புகளையும் அனுப்பாத தோடு, தேவையான உதவியாளர்கள் அவருக்கு இல்லாமலும் பார்த்துக்கொண்டார். காருக்கு முழுநேர டிரைவர் இல்லாமல் டெம்ப்ரவரி டிரைவரை நியமித்தார். எல்லாவற்றையும் தாண்டி, கோட்டையில் உள்ள முக்கிய உயரதிகாரியைப் பிடித்து, நில நிர்வாகத்துறை இணை கமிஷனர் பதவியிலிருந்து, வருவாய் நிர்வாகத்துறை இணை கமிஷனராக கடந்த 2022-ல் செந்தாமரையை இடமாற்றம் செய்யவைத்தார் நாகராஜன். இதில் ஒரு கொடுமை என்னவெனில், இப்படி ஒரு பதவியே வருவாய் நிர்வாகத் துறையில் இல்லை. இதனால் பல மாதங்கள் அவருக்கு சம்பளமே கிடைக்கவில்லை. இதனால், போஸ்டிங்கே இல் லாமல் இடமாற்றம் செய்யப்பட்ட அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செந்தாமரை சென்றார். அதனால் இப்போதுவரை அவர் பழிவாங்கப்பட்டு வருகிறார். இது அவரை குமுற வைத்திருக்கிறது. இதுபோன்று பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். இதனால் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கும் பெண் அதிகாரிகளின் மனக்குமுறல்களும் விரைவில் வெடிக்கும் என்கிறது கோட்டை வட்டாரம்.''”

"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி, தன் மகன் திருமணப் பத்திரிகையை ரஜினி வீட்டுக்குப் போய் வைத்திருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, தனது மகன் திருமணத்துக்கான அழைப்பிதழ்களை பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர் களுக்கு வைத்துவரும் மாஜி மந்திரி வேலுமணி, தனக்கு ஈடான செல்வாக்கோடு அ.தி.மு.க.வில் எவரும் இல்லை என்பது மாதிரியே நடந்துவருகிறாராம். தற்போது தன் வெயிட்டைக் காட்டும் விதமாய், நடிகர் ரஜினியின் வீட்டிற்குச் சென்று பத்திரிகை வைத்திருக்கிறார். கூடவே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் நேரடித் தொடர்புடைய தனது சகோதரர் அன்பரசனையும், வேலுமணி அங்கே அழைத்துச் சென்றிருக்கிறார். இது எடப்பாடியையும் அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்களையும் எரிச்சலடைய வைத்திருக்கிறதாம். இதற்கிடையே, எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.வில் பெரிய அளவில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கும் செங் கோட்டையன், சென்னையில் மாஜி மந்திரி கோகுலஇந்திரா வின் வீட்டிலிருந்து, அதற்கான வியூகங்களை அவருடன் சேர்ந்துதான் வகுத்தார் என்கிறார்கள்.''”

"எடப்பாடி மீது தே.மு.தி.க. பிரேமலதா கடும் கோபத்தில் இருக்கிறாரே?''”

r

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, தே.மு. தி.க.வுடன் அதிமுக வாய்மொழியாக போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தே.மு. தி.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. கொடுக்கவேண்டுமாம். அந்த வகையில் ஜூன் மாதம் நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலை வைத்து, தன் தம்பியான சுதீஷை ராஜ்யசபா வுக்கு அனுப்பவேண்டும் என்று ஆசைப்படு கிறாராம் பிரேமலதா. இது தொடர்பான பேச்சுவார்த்தையை பிரேமலதா எடப் பாடியிடம் ஆரம்பித்தபோது, ’அப்போது முறைப்படி எல்லாம் நாம் இது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் போட்டுக்கொள்ளவில்லை. வாய் மொழியாகத்தான் பேசிக்கொண்டோம். ஆனால் இப்போது ராஜ்யசபா சீட்டை உங்களுக்கு ஒதுக்கும் நிலையில் எங்கள் கட்சி இல்லை. அதனால் அதையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்’ என்று கைவிரித்து விட்டாராம். இது பிரேமலதா உள்ளிட்ட தே.மு.தி.க. தரப்பைக் கொதிப்படைய வைத்திருக்கிறது.''

"புதுவை மாநில பா.ஜ.க.வின் புதிய தலைவராக ஒரு முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி நியமிக்கப்படுவார் என்கிறார்களே?''”

"புதுச்சேரி பா.ஜ.க. தலைவராக செல்வகணபதி இருந்து வருகிறார். தற்போது தலைவரை மாற்றும் முடிவில் இருக்கிறதாம் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை. அந்த வகையில், புதுச்சேரி பா.ஜ.க.வின் புதிய தலைவராக முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி சத்ய மூர்த்தியை நியமிக்க மேலிடம் முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடுவதற்காக ஐ.எஃப்.எஸ். பதவியிலிருந்து விலகினார் சத்தியமூர்த்தி. ஆனால், கடைசி நேரத்தில் நமச்சிவாயத்துக்கு சீட் ஒதுக்கவேண்டியிருந்ததால், சத்திய மூர்த்திக்கு சீட் ஒதுக்கப்பட வில்லை. இந்தநிலையில், 2026 பொதுத் தேர்தலை முன்னிட்டு புதுவை பா.ஜ.க. தலைவரை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளதாம் பா.ஜ.க.வின் தேசியத் தலைமை. எனவே, புதிய தலைவராக சத்தியமூர்த்தி நியமிக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு புதுவை பா.ஜ.க.வில் நிலவி வருகிறது.''”

"மணல் குவாரிகள் பற்றி இப்ப ஒரு செய்தி உலவுதே?''”

"ஆமாங்க தலைவரே, மணல் குவாரிகளை புதியவர் களிடம் டெண்டர் மூலம் தமிழக அரசு ஒப்படைக்கவிருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில், பழைய மணல் மும்மூர்த்திகளான கரிகாலன், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரிடமே மீண்டும் மணல் குவாரிகளை திங்கட்கிழமை முதல் அரசு கொடுக்கவிருக்கிறதாம். இந்த குவாரிகளை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்கிற ஆசையில் மயிலாடுதுறை ராஜப்பா என்பவர், அமைச்சர் எ.வ.வேலு மூலம் தீவிரமாக முயன்றார். இதற்காக துறை அமைச்சர் துரைமுருக னையும் அவர் வெயிட்டாக கவனித்தார். இருந்தும் ராஜப்பா வின் கனவு நனவாகவில்லையாம். எனவே, ’குவாரிகளில் அடாவடிகளை அரங் கேற்றிவரும் இந்த மணல் மாஃபியாக் களை யாராலும் ஒன்றுமே செய்யமுடி யாதா?’ என்று ஏக்கமாய் கேட்கிறார்கள் மணல் பிஸினஸை நம்பியிருப்பவர்கள்.''”

"கமல் ராஜ்யசபா விவகாரம் என்னாச்சு?''

"தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதியைப் போலவே, ராஜ்யசபா தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் தருவதாக தி.மு.க. உறுதியளித்திருந்தது. அந்த நம்பிக்கை யில் கமலும் ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். தற்போது, அந்த சீட்டை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுக்குமாறு கமலிடம் கேட்டுவருகிறதாம் அறிவாலயம். அதற்கு பதிலாய் வேறு வகையில் ஈடுகட்டுகிறோம் என்றும் கமலிடம் சொல்கிறார்களாம். இதுகுறித்து கமல் யோசித்துவருகிறாராம்.''”

"த.வெ.க. வெளியிட்ட அணி கள் விவரப் பட்டியல் சர்ச்சையாகி யிருக்கேப்பா?''

"ஆமாங்க தலைவரே... த.வெ.கா.வில் திருநர் அணியை பட்டியலில் ஒன்பதாவது இடத் தில் குறிப்பிட்டிருந்தனர். அந்த எண்ணில் தங்கள் அணியை குறிப்பிட்டிருப்பது, காலங்காலமாக தங்களை அந்த எண்ணினைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதன் தொடர்ச்சியாகவே பார்ப்பதாக, திருநர் இயக்க செயற்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா கண்டனம் தெரிவிச்சிருக்காங்க.''

"நானும் என் காதுக்கு வந்த தகவலைப் பகிர்ந்துக்கிறேன். தி.மு.க. தரப்பு தங்களுக்குப் புதிதாக ஒரு தேர்தல் வியூக அமைப்பாளரை நியமித்திருக்கிறதாம். அந்த வியூக அமைப்பாளர் பா.ஜ.க.வுக்கு மிக நெருக்கமானவராம். குறிப்பாக, மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வின் அணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு, அவர்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்தவர் என் கிறார்கள்.''

________________

சீமானுக்கு த.வெ.க. பதிலடி!

நாம் தமிழர் சீமான், தந்தை பெரியாரைப் பற்றி கீழ்த்தரமாக விமர்சித்தபோதும், நடிகர் விஜய்யின் த.வெ.க. சீமானின் விமர்சனத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது. அதற்குக் காரணம், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, நடிகர் விஜய் போட்டுக்கொண்டிருக்கும் கூட்டணிக் கணக்குதானாம். இந்நிலையில், விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பணக்கொழுப்பு என்று சீமான் தெரிவித்த கருத்து, த.வெ.க.வினரை ரொம்பவே கடுப்பேற்றியது. உடனே அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், "திரள்நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு, திறமையாளர்களின் ஆலோசனைகளைப் பெறுவது தவறாகத் தெரிவது ஆச்சரியமில்லை' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

nkn150225
இதையும் படியுங்கள்
Subscribe