Advertisment

பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்! -அருப்புக்கோட்டை பரபர பின்னணி!

ss

ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த காளிகுமார் எனும் சரக்கு வாகன ஓட்டுநர், செப்டம்பர் 2-ஆம் தேதியன்று சரக்கு வாகனத்தில் சீர்காழி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது திருச்சுழி அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், காளிகுமார் வாகனத்தை வழிமறித்து அவரை அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது.

Advertisment

dsp

இதில் படுகாயமடைந்த காளிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த காளிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் காளிகுமார் உறவினர்கள் குவிந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

அத்துடன் அருப்புகோட்டை- திருச்சுழி சாலையில் உறவினர்கள் சாலைமறியல் போராட் டத்

ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள் தேவன்பட்டியைச் சேர்ந்த காளிகுமார் எனும் சரக்கு வாகன ஓட்டுநர், செப்டம்பர் 2-ஆம் தேதியன்று சரக்கு வாகனத்தில் சீர்காழி நோக்கிச் சென்றுள்ளார். அப்போது திருச்சுழி அருகே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், காளிகுமார் வாகனத்தை வழிமறித்து அவரை அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது.

Advertisment

dsp

இதில் படுகாயமடைந்த காளிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த காளிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் காளிகுமார் உறவினர்கள் குவிந்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

அத்துடன் அருப்புகோட்டை- திருச்சுழி சாலையில் உறவினர்கள் சாலைமறியல் போராட் டத்தில் ஈடுபடமுயன்றனர். இதையறிந்த அருப்புக் கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி, மற்றும் காவல் உயரதிகாரிகள் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் சமாதானம் பேச முயற்சித் தனர்.

Advertisment

அந்தசமயம் போராட்டக்காரர்களுக் கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது டி.எஸ்.பி. காயத்ரியின் தலைமுடியை யாரோ ஒருவர் இழுக்க, அங்கு நடைபெற்ற களேபரம் முழுவதும் வீடியோவாக பதிவாகி இணையத்தில் வைரலானது. பெண் டி.எஸ்.பி. மீதான தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து அருப்புக்கோட்டை எஸ்.பி. கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண் டார். வீடியோவை ஆதாரமாகக் கொண்டு இதுவரை 8 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப் பாளர் கண்ணன் கண்ட்ரோல் ரூமிலிருந்து அனைத்து போலீஸாருக்கும் வாக்கிடாக்கியில், "இனி கையில் லத்தியோடுதான் வரவேண்டும். பெண் காவல் அதிகாரிகள்கூட ரவுண்ட்ஸ் வரும்போது லத்தியோடு செல்லவேண் டும். தேவைப்பட்டால் அதிரடிப்படை எப்போதும் தயாராக இருக்கவேண் டும்''’என உத்தரவு போட்டுள்ளார்.

அருண், லெட்சுமணன் இரு வரும் அருப்புகோட்டையில் டூவீலர் களுக்கு கடன்தரும் நிதிநிறுவனத்தில் வசூலிக்கும் வேலை செய்துவரு கிறார்கள். கொலையான காளிகுமா ரின் நண்பர் அந்நிறுவனத்தில் டூவீலர் லோன் வாங்கியுள்ளார். அந்த லோனை வசூலிக்க வரும்போது அருண், லட்சுமணன் ஆகியோருக் கும் காளிகுமாருக்கும் தகராறாகியுள் ளது. அப்போது காளிகுமார் தலை யிட்டு, “"அவர்தான் தருகிறேன் என் கிறாரே,… கொஞ்சம் அவகாசம் கேட் கிறார். ஏன் நீங்கள் தேவையில்லாத பேச்சு பேசுகிறீர்கள்'’என்று கேட்க, அதற்கு அவர்கள், "நீ வேறு சாதி. உன் நண்பன் வேறு சாதி. நீ ஏன் அவனுக்கு ஆதரவாக வருகிறாய்?'’என்று கேட்டதுடன், ஆத்திரத்தில் தவறான வார்த்தைப்பிரயோகமும் நடை பெற்றுள்ளது.

we

காளிகுமார், "சாதியை ஏன் இழுக்கிறாய். அவன் என் நண்பன். எங்களுக்குள் சாதி கிடையாது'’என்று சொல்லும்போதே அவரை அடிக்க வர, அருகில் இருந்த காளிகுமாரின் நண்பர்கள் 6 பேரும் சேர்ந்து அந்த இருவரையும் அடிக்கப் பாய, அப்போது காளிகுமார் பீர் பாட்டிலை எடுத்து அடிக்க, அதில் அருண், லட்சுமணன் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் போலீஸுக்கு தகவல்கொடுத்து காளிகுமாரையும் அவரது நண்பர்கள் அனைவரையும் கைதுசெய்து ரிமாண்ட் செய்தனர்.

தங்களிடம் லோன் வாங்கிய நபருக்கு சப்போர்ட் செய்து தங்களையும் அடித்த காளிகுமாரை... அருணும், லெட்சுமண னும் செப்டம்பர் 2-ஆம் தேதி வழிமறித்து தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் இவ்வளவு களேபரமும்.

காவல்துறை தரப்பு, “காளிகுமார் கொலை வழக்கில் இதுவரை, திருச்சுழியைச் சேர்ந்த லட்சுமணன், அருண்குமார், மதுரையைச் சேர்ந்த காளீஸ்வரன், பாலமுருகன் ஆகியோரை கைது செய்துள்ளனர். டி.எஸ்.பி.யை தாக்கியது பாலமுருகன் தான் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், நெல்லிக்குளத் தைச் சேர்ந்த பாலமுருகன், பெருமாள்தேவன்பட்டியைச் சேர்ந்த பொன்முருகன், ஜெயராமன், சாய்குமார், பாலாஜி, அம்மன்பட்டி சூர்யா, காளிமுத்து, முத்துபட்டி முருகேசன் ஆகியோர் மீது 9 பிரிவுகளில் அருப்புக்கோட்டை டவுன் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். முத்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசனைத் தேடி வருகின்றனர். மேலும் சாலைமறியல் செய்த, கணேஷ்பாண்டி, முனியசாமி, ராமர், லட்சுமணன், முத்து முனியாண்டி, சரவணன், பெண்கள் உட்பட மொத்தம் 116 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்'' என்கிறது.

dsp

nkn070924
இதையும் படியுங்கள்
Subscribe