"ஹலோ தலைவரே, மேயர் -சேர்மன் தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாயிடிச்சி.''”
"வேட்பாளர் செலக்ஷன் வேகம் எடுத்திருக்கே?''”
"வழக்கம்போல தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேகமா இருக்குது. அதிலும் ஆளுங்கட்சியா இருப்பதால தி.மு.க.வில் படு ஸ்பீடு. கமலின் மக்கள் நீதி மய்யமும் வேட்பாளர்களை அறிவிச்சிருக்கு. இருப்பினும் பல வார்டுகளுக்கு போட்டியிட ஆட்கள் கிடைக்கலையாம். இதை அந்தக் கட்சியின் மா.செ.க்கள் வீடியோ கான்ஃபரன்சில் கமலிடம் சொல்லியிருக்காங்க.”
"கமல் என்ன சொன்னாராம்?''”
"50% பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ள நிலையில், ம.நீ.ம.வுக்கு பெண் வேட்பாளர்கள் கிடைப்பதில்தான் பெரும் சிக்கல். "கட்சிக்காக புதிய உறுப்பினர் களைச் சேர்த்தப்ப, பெண்களின் எண்ணிக்கை அதிகமா இருக்குன்னு சொன்னீங்களே, இப்போ போட்டி போட பெண் வேட்பாளர்கள் இல்லைன்னு சொன்னா எப்படி? என்னை எல்லோருமா சேர்ந்து ஏமாற்றுகிறீர்களா?'ன்னு வீடியோ கான்ஃபரன்சில் நிர்வாகிகளிடம் கோபத்தைக் காட்டியிருக்காரு கமல். கடைசியில், பெண்கள் வார்டில் போட்டியிட ஆள் கிடைக்கலைன்னா, கட்சி நிர்வாகிகள் தங்களின் குடும்பத்தில் உள்ள பெண்களை வேட்பாளரா ஆக்குங்கள்னு சொல்லியிருக்கார். மா.செ.க்களோ, செலவுக்குப் பயந்து புலம்புறாங்களாம்.''”
"சென்னை தலித் பெண் மேயர் வேட்பாளர் தேர்வு சம்பந்தமா ஆளுங்கட்சியில் தீவிர ஆலோசனை நடக்குதாமே?''”
"மேயர் தேர்தலில் தங்கள் ஆதரவாளரை நிறுத்தணும்னு சென்னை மாவட்ட அமைச்சர்களும், உதயநிதி, சபரீசன் உள்ளிட்டோரும் முதல்வர் ஸ்டாலினை, அவரவர் பாணியில் அப்ரோச் பண்ணிட்டிருந்தாங்க. கலைஞர் காலத்திலிருந்தே தி.மு.க. ஆட்சியில், மாநில அரசின் திட்டங்கள் சிறப்பா இருந்தாலும், உள்ளாட்சி
"ஹலோ தலைவரே, மேயர் -சேர்மன் தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாயிடிச்சி.''”
"வேட்பாளர் செலக்ஷன் வேகம் எடுத்திருக்கே?''”
"வழக்கம்போல தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேகமா இருக்குது. அதிலும் ஆளுங்கட்சியா இருப்பதால தி.மு.க.வில் படு ஸ்பீடு. கமலின் மக்கள் நீதி மய்யமும் வேட்பாளர்களை அறிவிச்சிருக்கு. இருப்பினும் பல வார்டுகளுக்கு போட்டியிட ஆட்கள் கிடைக்கலையாம். இதை அந்தக் கட்சியின் மா.செ.க்கள் வீடியோ கான்ஃபரன்சில் கமலிடம் சொல்லியிருக்காங்க.”
"கமல் என்ன சொன்னாராம்?''”
"50% பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ள நிலையில், ம.நீ.ம.வுக்கு பெண் வேட்பாளர்கள் கிடைப்பதில்தான் பெரும் சிக்கல். "கட்சிக்காக புதிய உறுப்பினர் களைச் சேர்த்தப்ப, பெண்களின் எண்ணிக்கை அதிகமா இருக்குன்னு சொன்னீங்களே, இப்போ போட்டி போட பெண் வேட்பாளர்கள் இல்லைன்னு சொன்னா எப்படி? என்னை எல்லோருமா சேர்ந்து ஏமாற்றுகிறீர்களா?'ன்னு வீடியோ கான்ஃபரன்சில் நிர்வாகிகளிடம் கோபத்தைக் காட்டியிருக்காரு கமல். கடைசியில், பெண்கள் வார்டில் போட்டியிட ஆள் கிடைக்கலைன்னா, கட்சி நிர்வாகிகள் தங்களின் குடும்பத்தில் உள்ள பெண்களை வேட்பாளரா ஆக்குங்கள்னு சொல்லியிருக்கார். மா.செ.க்களோ, செலவுக்குப் பயந்து புலம்புறாங்களாம்.''”
"சென்னை தலித் பெண் மேயர் வேட்பாளர் தேர்வு சம்பந்தமா ஆளுங்கட்சியில் தீவிர ஆலோசனை நடக்குதாமே?''”
"மேயர் தேர்தலில் தங்கள் ஆதரவாளரை நிறுத்தணும்னு சென்னை மாவட்ட அமைச்சர்களும், உதயநிதி, சபரீசன் உள்ளிட்டோரும் முதல்வர் ஸ்டாலினை, அவரவர் பாணியில் அப்ரோச் பண்ணிட்டிருந்தாங்க. கலைஞர் காலத்திலிருந்தே தி.மு.க. ஆட்சியில், மாநில அரசின் திட்டங்கள் சிறப்பா இருந்தாலும், உள்ளாட்சி நிர்வாகத் தில் இருக்கிற கட்சிக்காரர் களால் பெயர் கெட்டுப் போய், அடுத்த தேர்தலில் ஆட்சியும் பறிபோவது வழக்கமா இருக்குது. இந்த முறை அது நடக்கக்கூடாதுன்னு முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். அதனால, கட்சி -குடும்பம் சிபாரிசு களைத் தவிர்க்கும் வகையிலும், பெண்களுக்கான பொது மேயர் தொகுதியாக்கினாலும் சிபாரிசுக்குரியவரின் குடும்பத்துப் பெண்களைக் களமிறக்குவாங்க என்பதாலும், சென்னை மேயர் பதவி தலித் பெண்களுக்கானதா ஒதுக்கப்பட்டிருக்கு.''’
"அப்படின்னா சென்னை மேயர் வேட்பாளரை மு.க.ஸ்டாலினே நேரடியா செலக்ட் பண்ணுவாரா?''”
"ஆமாங்க தலைவரே.. கட்சியின் மூத்த முன்னோடிகளை மனதில் வைத்து மதிப்பு தருவது அவரோட வழக்கமா இருக்குது. அந்த வகையில், அண்ணா காலத்திலேயே தி.மு.க.வின் தலித் பெண் சிந்தனையாளராகவும், அமைச்சராகவும் இருந்த சத்தியவாணிமுத்து குடும்பத்திலிருந்து ஒருவருக்கு சீட் கிடைக்கலாம்னு பேச்சு அடிபடுது. இளை யவர்கள், சீனியர்கள்னு பலருடைய பெயர்களும் அடிபடுது. அச்சிறுபாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், 2001-ல் மு.க.ஸ்டாலின் இரண்டா வது முறையா மேயர் தேர்தலில் போட்டியிட்டப்ப, தி.மு.க. சார்பில் துணைமேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவருமான சங்கரி நாராயணன் உள்பட பலரது பெயரும் பரிசீலனையில் இருக்குதாம். சீனியர் தலித் பெண் நிர்வாகிகளுக்கு, மேயர் வேட்பாளர் வாய்ப்பு கொடுக்க முடியாவிட் டால், வாரியம் உள்ளிட்ட பதவிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.'' ”
"மாஜி அ.தி.மு.க. மந்திரியான கே.பி.அன்பழ கன் வீட்டில் ரெய்டு நடந்ததில், அவங்க தரப்பே கொண்டாட்டத்தில் இருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், ஏகத்துக்கும் வாரிக் குவிச்சிருக்கார். அதில் கட்சிக்காரர்களிடம் கூட அவர் கருணை காட்டலையாம். கடந்த வாரம் இவர் தொடர்புடைய 58 இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை டீம், ஏறத்தாழ 12 கோடி ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம்னு பலவற்றையும் அள்ளிச் சென்றது. இதைக்கண்டு கொதிக்க வேண்டிய அ.தி.மு.க. பிரமுகர்கள் பலரும், கொஞ்சமாவா சுருட்டினார்னு, மகிழ்ச்சி அடைஞ்சிருக்காங்க. குறிப்பா அவர் ஊர்க்காரரான கே.பி.முனுசாமியே, ரெய்டைக் கண்டிக்காமல் மகிழ்ச்சியில் இருந்தாராம். காரணம், ஜெயலலிதா இருந்தப்பவே கர்நாடகாவில் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கினாராம் அன்பழகன். அதை அபகரிக்க சசிகலா கள மிறங்கியும், அவ ருக்கே பெப்பே காட்டினாராம் அவர். அதோடு அங்குள்ள ஒரு சொத்து தொடர் பாக கே.பி.முனுசாமிக்கும் அவருக்கும் தகராறு இருந்த தாகவும் சொல்கிறார்கள். அதனால்தான் அவர் தரப்பு மகிழ்ச்சியில் திளைக்குதாம்.''”
"சரிப்பா, சசிகலா தரப்பு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கே?''”
"அப்பாயின்ட்மெண்ட் கேட்டது உண்மை தான். அமித்ஷாவை எம்.நடராஜன் சகோதரரும் இளவரசி மகன் விவேக்கும் சந்திக்கணும்னுதான் நேரம் கேட்டாங்களாம். ஆனால் அமித்ஷா தரப்போ, உ.பி. தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்னு சொல்லிவிட்டதாம். எதுக்கு சசி தரப்பு டெல்லியை மூவ் பண்ணுதுன்னு விசாரிச்சப்ப, சசிகலாவை அ.தி.மு.க.வில் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் சேர்த்துக்கணும்னு, அவரை விட்டு இருவருக்கும் ஆர்டர் போடச் சொல்லணும்னு சசிகலா தவிக்கிறாராம். அதுக்காகத்தான் இந்த மூவ் நடந்ததாம். ஆனால் அ.தி.மு.க. தரப்போ சசியின் பரிதவிப்பை மனசுக்குள் ரசிக்குதாம்.''”
"தமிழகத்தை மறுபடியும் எட்டுவழிச் சாலை மிரட்டுதே?''”
"ஆமாங்க தலைவரே, ஒன்றிய அரசின் சென்னை -சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு, தமிழகத்தில் அப்பவே கடும் எதிர்ப்பு கிளம்புச்சு. திட்டத்துக்கு எதிராக தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தீவிரப் போராட்டங்களை நடத்தின. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து மேல் முறை யீடு செய்தது அப் போதைய எடப்பாடி அரசு. அந்த வழக்கில் பா.ம.க.வும் தன்னை இணைத்துக்கொண்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய வழிகாட்டு முறையை வெளியிட்டு, விவசாயிகள் பாதிக்காத வண்ணம் திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டது.''”
"ஆமாம்பா, அதேபோல், பா.ம.க. தரப்பின் வாதங்களை ஏற்று, விவசாய நிலங்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதே?''
"உண்மைதாங்க தலைவரே, இதன்பின் அந்த திட்டம் முடங்கிப் போயிருந்தது. கோமாவில் இருந்த அந்தத் திட்டம், இப்ப மறுபடியும் மெல்ல மெல்லத் தலை தூக்குது. அதாவது, ’"சுற்றுச்சூழல் அனுமதி பெற்று அரசு வழிகாட்டுதல்படி, நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்குது'ன்னு தர்மபுரி டி.ஆர்.ஓ. சமீபத்தில் கூறியிருக்கார். இதனால், 8 வழிச் சாலைத் திட்டம் மீண்டும் வருகிறதோங்கிற அச்சமும், தங்களின் நிலம் பறிக்கப்பட்டு விடுமோங்கிற பயமும் வட தமிழக விவசாய மக்களிடம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கு. "இந்தத் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம்னு முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்'னு பா.ம.க. அன்புமணி கோரிக்கை வச்சிருக்கார்.''”
"குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி களை அனுமதிக்க மறுத்த ஒன்றிய அரசுக்கு, தி.மு.க. அரசு, பதிலடி கொடுக்க நினைக்குதாமே?''”
"தி.மு.க. சில திட்டங்களை வகுக்குது. ஒன்றிய அரசின் ஓராண்டுக் கான பட்ஜெட், பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்பட இருக்குது. முன்னதாக 31-ஆம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க இருக்குது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தி.மு.க. எம்.பி.க்கள், தங்கள் வாயில் கறுப்புக்கொடியைக் கட்டிக்கொண்டு அமைதியாகக் கண்டனம் தெரிவிக்க திட்டமிட்டிருக்காங்களாம். அதாவது நீட் தேர்வு குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் கொடுப்பதற்காக டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு சென்றபோது, அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார் ஜனாதிபதி. அதற்கும் சேர்த்து இப்படி அறவழியில் எதிர்ப்பைக் காட்டப்போகிறார்களாம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுப் பொருட் கள், சில இடங்களில் தரமின்றியும் எடை குறைவாகவும் இருந்ததா பரவலாகப் புகார்கள் போயிருக்கு. இதையறிந்த முதல்வர் ஸ்டாலின், ஒரு கான்பிடன்சியல் கூட்டத்தை ரெண்டு நாளைக்கு முன்பு கூட்டினார். உணவுத்துறை தரப்பிலிருந்து இந்தக் கூட்டம் பற்றிய செய்தியை கசியவிட, அது வெளியே வந்துடுச்சு. அதனால் அதை அபிஷியல் கூட்ட மாக நடத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கு. இந்தக் கூட்டத்தில் கறார் குரலில் பேசிய ஸ்டாலின், "குழறுபடிகளுக்குக் காரணமான நிறுவனங்களை பிளாக் லிஸ்டில் வைக்கணும்னு சொல்லியிருக்கார். முதல்வரின் இந்த நடவடிக்கை, குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வது போல் இருக்குன்னு ஓ.பி.எஸ். இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக் கிறாராம்.''