அடிதானே விழுந்தது... போவியா? குற்றவாளிக்கு ஆதரவாக துபாய் பெண்ணை வதைக்கும் காக்கிகள்!

bb

"இந்த லேடி, விருதுநகர் எஸ்.பி. ஆபீஸுக்கு அடிக்கடி வருது. எஸ்.பி.யவும் பார்க்குது. வருஷக்கணக்கா தீராத பிரச்சினை போல'’என்று அந்தப் பெண்ணைக் காண்பித்தார், நமது காவல்துறை நண்பர்.

அந்தப் பெண்ணிடம், "உங்க பிரச்சனை என்ன?''’என்று நாம் கேட்டதும்...

"என் பெயர் உமா மகேஸ்வரி. பூர்விகம் சிவகாசி. நான் குடியிருப்பது துபாயில்..''’என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேச ஆரம்பித்தார். மணிக்கணக்கில் தனது குமுறல்களை ‘நான்-ஸ்டாப்’ ஆக அவர் கொட்டியதால், விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவல கத்தில் இருந்து, குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தபடியே இருக்கும் சிவகாசி யிலுள்ள அவரது இருப்பிடம்வரை நாம் செல்ல வேண்டியதாயிற்று.

nn

பக்கத்து வீட்டு உறவினரால் தான் சந்தித்துவரும் கொடுமைகளை, காவல்துறையினர் சிலரது சுயநல நடவடிக்கைகளை விவரித்த அவர், “"தேசத்துக்கு எதி ராக நடப்பது மட்டும்தான் தீவிரவாதமா? திட்டமிட்டு ஒரு பெண்ணுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதும் தீவிரவாதமே! அநியாயத்துக்கு எதிராகப் போராடினால் பைத்தியக்காரி என்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்கு சல்யூட் அடிக்கிறார்களே, சில காவல்துறை அதிகாரிகள்? எதிர்த்து கேள்வி கேட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணான என்னை ‘வெளியே போ..’ என்று விரட்டுகிறார்கள். என்னங்க சார் உங்க சட்டம்?''’என்று கேள்விகளை அடுக்கினார்.

"யார் இந்த உமா மகேஸ்வரி? என்ன விவகாரம்?'

சிவகாசியில் ‘கிளி மார்க்’ என்ற அடையாளத்துடன் உள்ள மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர், உமா மகேஸ்வரி. பின்னாளில் துபாய்க்கு குடிபெயர்ந்து வெளிநாடு வாழ் இந்தியராகிவிட்ட அவர், தந்தை கூடலிங்கம் நடேசன் ராஜாராம் காலத்துக்குப் பிறகு, ‘பவர்’ என்ற பெயரில், ஓரிருவரால் சொத்து மோசடிக்கு ஆளானதை தாமதமாகவே உணர்ந்தார்.

குற்றாலத்தில் உமா குடும்பத்தினருக்குச் சொந்தமான பங்களா ஒன்று இருக்கிறது. ‘"கேர்-டேக்கர்'’என்ற பெயரில், உறவினர் பாஸ்கரன் அந்த பங்களாவை, தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்துவதற்கும், வேறுசில தகாத செயல்களுக்கும் பயன்படுத்தி வந்தார். அதனைத் தடுக்கும் விதத்தில் அந்த பங்களாவுக்கு பூட்டு போடப்பட்டது. ஆனாலும், பூட்டை உடைத்து, அத்துமீறி நண்பர்களுடன் நுழைந்து, கொட்டமட

"இந்த லேடி, விருதுநகர் எஸ்.பி. ஆபீஸுக்கு அடிக்கடி வருது. எஸ்.பி.யவும் பார்க்குது. வருஷக்கணக்கா தீராத பிரச்சினை போல'’என்று அந்தப் பெண்ணைக் காண்பித்தார், நமது காவல்துறை நண்பர்.

அந்தப் பெண்ணிடம், "உங்க பிரச்சனை என்ன?''’என்று நாம் கேட்டதும்...

"என் பெயர் உமா மகேஸ்வரி. பூர்விகம் சிவகாசி. நான் குடியிருப்பது துபாயில்..''’என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேச ஆரம்பித்தார். மணிக்கணக்கில் தனது குமுறல்களை ‘நான்-ஸ்டாப்’ ஆக அவர் கொட்டியதால், விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவல கத்தில் இருந்து, குற்றச் சம்பவங்கள் தொடர்ந்தபடியே இருக்கும் சிவகாசி யிலுள்ள அவரது இருப்பிடம்வரை நாம் செல்ல வேண்டியதாயிற்று.

nn

பக்கத்து வீட்டு உறவினரால் தான் சந்தித்துவரும் கொடுமைகளை, காவல்துறையினர் சிலரது சுயநல நடவடிக்கைகளை விவரித்த அவர், “"தேசத்துக்கு எதி ராக நடப்பது மட்டும்தான் தீவிரவாதமா? திட்டமிட்டு ஒரு பெண்ணுக்கு எதிராக வன்முறையைப் பிரயோகிப்பதும் தீவிரவாதமே! அநியாயத்துக்கு எதிராகப் போராடினால் பைத்தியக்காரி என்கிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளுக்கு சல்யூட் அடிக்கிறார்களே, சில காவல்துறை அதிகாரிகள்? எதிர்த்து கேள்வி கேட்டால், பாதிக்கப்பட்ட பெண்ணான என்னை ‘வெளியே போ..’ என்று விரட்டுகிறார்கள். என்னங்க சார் உங்க சட்டம்?''’என்று கேள்விகளை அடுக்கினார்.

"யார் இந்த உமா மகேஸ்வரி? என்ன விவகாரம்?'

சிவகாசியில் ‘கிளி மார்க்’ என்ற அடையாளத்துடன் உள்ள மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர், உமா மகேஸ்வரி. பின்னாளில் துபாய்க்கு குடிபெயர்ந்து வெளிநாடு வாழ் இந்தியராகிவிட்ட அவர், தந்தை கூடலிங்கம் நடேசன் ராஜாராம் காலத்துக்குப் பிறகு, ‘பவர்’ என்ற பெயரில், ஓரிருவரால் சொத்து மோசடிக்கு ஆளானதை தாமதமாகவே உணர்ந்தார்.

குற்றாலத்தில் உமா குடும்பத்தினருக்குச் சொந்தமான பங்களா ஒன்று இருக்கிறது. ‘"கேர்-டேக்கர்'’என்ற பெயரில், உறவினர் பாஸ்கரன் அந்த பங்களாவை, தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்துவதற்கும், வேறுசில தகாத செயல்களுக்கும் பயன்படுத்தி வந்தார். அதனைத் தடுக்கும் விதத்தில் அந்த பங்களாவுக்கு பூட்டு போடப்பட்டது. ஆனாலும், பூட்டை உடைத்து, அத்துமீறி நண்பர்களுடன் நுழைந்து, கொட்டமடிப்பதைத் தொடர்ந்தார் பாஸ்கரன். இந்தக் காட்சி, பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாக.. காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாஸ்கரனை நிரந்தரமாக அங்கு வரவிடாமல் தடுத்தது.

உமாவுடைய சிவகாசி வீட்டுக்கு அடுத்தாற்போல் இருக்கிறது, பாஸ்கரனின் வீடு. குதூகலம் அளித்துவந்த குற்றாலம் வீடு, கையைவிட்டுப் போன ஆத்திரத்தில், உமாவின் சிவகாசி வீட்டை அபகரித்துவிட வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. அதனால், வீட்டுக்கு வெளியே உமா காரை நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, "ஊரை விட்டு ஓடிப்போ...'’என்று மிரட்டவும் செய்தார். ஒருகட்டத்தில், ரோட்டில் பப்ளிக் வேடிக்கை பார்க்கும் விதத்தில், பெண்ணென்றும் பாராமல் உமாமகேஸ்வரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். கராத்தே கற்ற பாஸ்கரனால், உமா அடிபட்டு அவமானம் அடைந்து கீழே விழுந்ததை, அவர் வீட்டில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி. பதிவு செய்துகொண்டது. ‘"நீ அடிக்கிறதெல்லாம் ரெகார்ட் ஆகுது...''’என்று உமா கதற... "போடி பொட்டச்சி... நீ எங்கே வேணும்னாலும் போடி. இருபது கேமராகூட வச்சுக்கடி. என்னை ஒண்ணும் பண்ண முடியாது''’என்று தெனாவெட்டாகப் பேசி, சுடிதாரை கசக்கி இழுத்து, அநாகரிகமாக நடந்துகொண்டார். பாஸ்கரனின் மனைவி நிகிலா தாக்கியதும், பாஸ்கரனின் டிரைவர் சீனி உடன் இருந்ததும்கூட பதிவானது.

மனதாலும் உடலாலும் நிலைகுலைந்த நிலையில் பதற்றத்தோடு சிவகாசி டவுண் காவல்நிலையம் சென்றார் உமா. அங்கே காவலர்கள் யாரும் மாஸ்க் அணியாத நிலையில், உமாவிடம், "என்னம்மா மாஸ்க் போடாம வந்திருக்க?''’என்று வேகம் காட்டியிருக்கின்றனர். ‘"நானே அடி வாங்கிட்டு வீட்டைக்கூட பூட்டாம வந்திருக்கேன். என்கிட்ட போயி...''’என்று தன் மீதான தாக்குதலை உமா விவரிக்க... ‘"சொந்தக்காரன்தான அடிச்சான். அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது போம்மா''’என்று விரட்டியிருக்கின்றனர்.

சிவகாசி டவுண் காவல்நிலையம் புகாரை ஏற்றுக்கொள்ளாத நிலையில், காது வலி மற்றும் தலைசுற்றலுக்கு சிகிச்சை பெற, சிவகாசி அரசு மருத்துவமனை சென்றார் உமா. அரசு மருத்துவர் தகவல் அளிக்க, வேறு வழியின்றி உமாவிடம் புகார் பெற வந்தார், சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன். மருத்துவரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மேற்கொண்டு சிகிச்சைபெற, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிவகாசி போலீசார் ‘"எப்.ஐ.ஆர். போட முடியாது. நீண்ட நாட்களாக சொந்த பந்தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினை. சமாதானமாகப் போகவேண்டும்''’என்று கட்டப் பஞ்சாயத்து நடத்த முயற்சித்தனர். அதேநேரத்தில், டிரைவர் சீனிவாசனின் ஜாதியைச் சொல்லித் திட்டியதாக உமா மீது பொய்யான புகார் பெறப்பட்டு, "உன்னோட புகாரை வாபஸ் வாங்கலைன்னா... சீனி கொடுத்த கேஸ்ல உன்னைய உள்ள தள்ளிரு வோம்'’என்று பேச்சுவார்த்தை நடத்தச்சொல்லி உமாவை மிரட்டியது போலீஸ்.

விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரை துபாயிலிருந்து தொடர்புகொண்ட உமாவின் கணவர் கணேஷ், "வெகேஷனுக்கு வந்த என் மனைவி, வீட்டுக்கு முன்பாக காரை சார்ஜ் ஏற்றியபோது தாக்கப்பட்டிருக்கிறாள். ஆன்லைன் பெட்டிஷன் அனுப்பினேன். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. என் மனைவிக்கு கைடு பண்ணுங்க''’என்று குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னிடம் பேசிய எஸ்.பி. மனோகரிடம், உமா "தனியொரு பெண்ணாக போராடிக்கொண்டிருக்கும் பாதிக்கப் பட்ட எனக்கு நியாயம் கிடைக்காதவாறு நடந்துகொள்ளும் போலீஸ், அடித்தவர்களை ஆதரிக்கிறது''’ என்று கூற... எஸ்.பி. மனோகர் தந்த அழுத்தத்தில், ஆன்லைன் பெட்டிஷனுக்கு சிவகாசி டவுண் காவல்நிலையத்தில் எப்.ஐ.ஆர். போடப்பட்டது.

bb

"பாஸ்கரனை ‘ரிமாண்ட்’ பண்ணிட் டோம்''’என்று பொய்யான தகவலை உமாவிடம் கூறிய போலீசார், பாஸ்கரனுக்கு பிணை கிடைக்கும்வரை நெருங்கவே இல்லை. கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்த பாஸ்கரன், அதற்கு முன்பே, உமாவிடம் "ஒருமுறை ‘போலீஸ்தான் உன்னைக் கை கழுவிட்டாங்கள்ல...''’என்று கல்லை எடுத்து எறிய, அதுவும் சி.சி.டி.வி.யில் வாய்ஸோடு பதிவாகியுள்ளது. தாக்கப்பட்டபோது பதிவான சி.சி.டி.வி. ஃபுட்டேஜை சி.டி.க்களாகவும், போட்டோக்களுமாக போலீசாரிடம் உமா தந்தபோது, "கோர்ட்டில் சேர்த்துவிடுவோம்' என்று ‘பீலா’ விட்ட போலீஸ், குற்றப்பத்திரிகையில் அதனைச் சேர்க்கவே இல்லை. இதையறிந்து கொதித்துப்போன உமா, இன்ஸ்பெக்டர் சுபக் குமார் மற்றும் சார்பு ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மீது மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தார்.

மேற்கண்ட தகவல்களை நம்மிடம் விவரித்த உமா, "அந்த இன்ஸ்பெக்டரும் சப்-இன்ஸ்பெக்ட ரும் சரியில்ல. குற்றவாளிக்கு சப்போர்ட் பண்ணுனாங்க. இது ஒண்ணும் துபாய் இல்ல. தமிழ்நாட்டுல இப்படித்தான்னு எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன் ஓபனாவே சொன்னாரு. நான்தான் போலீஸ் அதிகாரிங்க மேல புகார் கொடுத்தேன்ல. ஏதாச்சும் ஸ்டெப் எடுக்கலாம்ல. மனு ரசீதுகூட எனக்கு கொடுக்கல. போலீஸ் அதிகாரிங்க என்ன வேற்றுக் கிரகத்துல இருந்தா வந்திருக் காங்க. பப்ளிக்குக்கு ஒரு சட்டம்; போலீசுக்கு ஒரு சட்டமா?'' என்று கேட்டவர், “"ரோட்டுல வச்சு என்னை அடிக்கும்போது பாஸ்கரனைப் பார்த்து குரைச்சுக்கிட்டே இருந்த, என் மேல ரொம்ப பிரியமா இருக்கிற நாயைக் கொன்னுட்டாங்க. அடுத்து, என்னை என்ன பண்ணப்போறாங்களோ?'' என்றார் பரிதாபமாக.

nnஅந்த ஏரியாவாசியான காளிராஜன், "உமாவுக்கு நடந்தது ரொம்ப கொடுமைங்க. அது எங்க வீட்டு நாய்தான். அதோட சாவு ரொம்ப மர்மமா இருக்கு...''’என்று வியப்பை வெளிப் படுத்த... தொழிலதிபர் பாஸ்கரனை தொடர்பு கொண்டோம். “"இதுகுறித்து எதுவும் பேச விரும்பவில்லை'’என்று லைனைத் துண்டித்தார்.

நாம் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகரை சந்தித்தோம். “"சிவகாசி டவுண் காவல்நிலையத்தில் விசாரணை சரியாக நடக்கவில்லை, சி.சி.டி.வி. புட்டேஜ் சி.டி.க்கள் மற்றும் போட்டோக்களைத் தந்தும், சார்ஜ்ஷீட்டில் சேர்க்கவில்லை என்று உமா என்னிடம் புகார் அளித்திருக்கிறார். மறுவிசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் யாரும் தவறு செய்தது நிரூபணமானால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்''’என்று உறுதியளித்தார்.

சொன்னபடி காவல்துறை வேகம் காட்டாத நிலையில் நம்மிடம் உமா, "உன்னை அரிவாளால் வெட்டினார்களா? அல்லது கொலைதான் செய்தார்களா? அடித்ததற்கெல்லாம் இத்தனை ஆர்ப்பாட்டமா?'' என்று போலீஸ் அலட்சியமாக என்னிடம் நடந்துகொண்டது. பொதுவெளியில் ஒரு பெண்ணை அடித்து அவமானப்படுத்தியதை ஆதாரங்களுடன் நிரூபித்தும், கையூட்டு பெற்று, குற்றவாளிக்கு சாதகமாக எப்.ஐ.ஆரிலும் சார்ஜ்ஷீட்டிலும் குளறுபடிகள் செய்துவிட்டனர். "வீட்டில் சி.சி.டி.வி. இருப்பதால்தானே குற்றத்துக்கான ஆதாரங்களைத் திரட்டுகிறாய்? முதலில் சி.சி.டி.வி.யை அகற்று' என்று போலீஸை ஏவி மிரட்டவும் செய்தனர். நீதிமன்றத்தில் கூடுதல் ஆவணங் களைச் சமர்ப்பித்திருக்கிறேன். பெண்களுக்கு எதிரான வன்முறை களை நீதிமன்றம் கடுமையாகப் பார்க்கிறது. எனக்கு நியாயம் கிடைக்குமென்று நம்புகிறேன்''’என்றார் மன உறுதியுடன்.

"அடி வாங்கினாய்; புகார் கொடுத்தாய், அப்படியே துபாய்க்கு கிளம்ப வேண்டியதுதானே! நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டுமென்று ஏன் துடிக்கிறாய்?'’என்ற போலீஸின் நக்கலான கேள்விக்கு செவிகொடுக்காமல், தன் வழியில் தொடர்ந்து போராடுகிறார் உமா.

_____________________

குரைத்த நாயின் உயிரைப் பறித்த கொடூரம்!

nn

உமாமகேஸ்வரி நம்மிடம், "அந்த நாய் என் வீட்டு வாசல்லதான் படுத்திருக்கும். என் காருக்குப் பக்கத்துல அந்தப் படிக்கட்டு இடத்துலதான் இருக்கும். நைட்டு அது யாரு வந்தாலும் குரைக்கும். அந்த நாயை வளர்க்கிற என் வீட்டுக்கு எதிர்வீடு, அப்புறம் ரெண்டு வீடு, அப்புறம் என் வீடு, இந்த மூணு வீட்டுக்கு யாரு வந்தாலும் குரைக்காது. வேற யாரு வந்தாலும், சின்னதா ஒரு டவுட் வந்தாலும், விடாம குரைக்கும். அந்த நாய் இருந்தது, எனக்கு அந்த அளவுக்கு பாதுகாப்பா இருந்துச்சு. அன்னைக்கு நைட் அந்த நாயோட மூவ்மென்ட்ஸ் எங்க வீட்டு சி.சி.டி.வி.ல ரெகார்ட் ஆயிருக்கு. அதுல க்ரீன் ஷர்ட் போட்ட ஒருத்தன், எங்க வீட்டு சைடு வந்தா, கேமராவுல தெரிஞ்சிரும்னு மறைஞ்சிருந்து, நாய்கிட்ட ஏதோ தூக்கி போடறான். என்னைய எதிரியா நினைக்கிறவங்க ஏற்பாட்டுல, இதை பிளான்பண்ணி செஞ்சிருக்காங்க. விடிஞ்சப்ப நாய் செத்துக் கிடந்திருக்கு. நாயை வளர்த்தவங்க மருந்து வச்சி கொன்னுட்டதா சொன்னாங்க. நான்கூட, "என் செலவுல போஸ்ட்மார்ட்டம் பண்ணி, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்கணும்'னு சொன்னேன். அதுக்கு அவங்க, "யாரோ அந்த நாயை குப்பை வண்டில தூக்கிப்போட்டுட்டதா' சொன் னாங்க.

பாஸ்கரன் மேல கொடுத்த புகார்ல, நான் என்னென்ன சப்மிட் பண்ணிருக்கேன்னு எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன்கிட்ட அக்னா லெட்ஜ்மெண்ட் கேட்டேன். அப்ப அவரு, ‘"சும்மா.. சும்மா எதுக்கு போலீஸ் ஸ்டேஷன் வர்ற? நாய் படுத்திருச்சுன்னாலும், அதுக்கும் வருவ போல''ன்னு ஒருமாதிரி பேசினாரு. ஆனா... பாருங்க எஸ்.ஐ. சொன்ன மாதிரியே நாயை ஒரேயடியா படுக்க வச்சிட்டாங்க. எல்லா விஷயத்துலயும் பாஸ்கரனுக்கு போலீஸ் சப்போர்ட் பண்ணுது'' என்றார் ஆதங்கத்துடன்.

nkn221221
இதையும் படியுங்கள்
Subscribe