Advertisment

ஆன்லைனுக்கு மாறினாலும் கட்டணம் மாறல!

d

ரண்டு கல்வியாண்டாக ஆன்லைனில்தான் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆன்லைனுக்கு மாறிய கல்வி முறையால், கல்லூரிகளின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை நிறைய செலவுகள் மிச்சமாகின்றன. குறிப்பாக, கல்லூரியில் மின்சாரச்செலவு முழுக்க மிச்சமாகிறது. ஆனால் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தங்களுடைய கட்ட

ரண்டு கல்வியாண்டாக ஆன்லைனில்தான் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆன்லைனுக்கு மாறிய கல்வி முறையால், கல்லூரிகளின் நிர்வாகத்தைப் பொறுத்தவரை நிறைய செலவுகள் மிச்சமாகின்றன. குறிப்பாக, கல்லூரியில் மின்சாரச்செலவு முழுக்க மிச்சமாகிறது. ஆனால் கல்லூரிகளைப் பொறுத்தவரை, தங்களுடைய கட்டணத்தில் மின்சாரக் கட்டணத்தையும் வழக்கம்போல் சேர்த்தே வசூலிக்கிறார்கள். அதேபோல மாணவர்கள் கல்லூரிப் பேருந்தைப் பயன்படுத்தாத நிலையிலும், பேருந்துக் கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள்.

Advertisment

dd

ஆன்லைன் தேர்வுகளைப் பொறுத்தவரை, கல்லூரிகளுக்கு பேப்பர், பேப்பரைக் கட்டும் நூல், கவர் போன்ற ஸ்டேஷனரி செலவு எதுவுமே இல்லை... தேர்வைக் கண்காணிக்கும் சூபர்வைசர்களுக்கான பஆ/உஆ செலவு எதுவுமே இல்லை. மாணவர்களே இணையத்தைப் பயன்படுத்தி, இணையத்துக்கான கட்டணத்தையும், மின் கட்டணத்தையும் பயன்படுத்தி, முழுக்கவே சொந்த செலவில் தேர்வெழுதுகிறார்கள். எனினும் பெரும்பாலான தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லுரிகளில் தேர்வுக்கட்டண வசூலைக் குறைக்கவில்லை. கல்லூரி திறப்பது எப்போதென்று அறிவிக்குமுன்பே, மாணவர்களைக் கல்லூரிக்கட்டணம் கட்டச்சொல்லி கல்லூரி நிர்வாகத்திடமிருந்து வற்புறுத்தல்கள். தங்களுடைய கல்வி பாதிக்கப்படக்கூடாதே என்று, லாக்டௌனால் வேலையிழப்புக்கும், வருமான இழப்புக்கும் ஆளான பெற்றோர்களும்கூட கடனை வாங்கியாவது கட்டியாகவேண்டிய நிலை.

Advertisment

நீதிமன்ற உத்தரவுகள், அரசின் அறிவிப்புகள் எதையும் கண்டுகொள்ளாமல் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கின்றன இத்தகைய கல்லூரி நிறுவனங்கள்.

-தெ.சு.கவுதமன்

nkn030721
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe