ரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் அதே கட்டணத்தைக் கட்டினால் போதுமென முதல்வர் அரசாணை வெளியிட்டும், ராஜமுத்தையா மருத்துவக் கல்லூரி பழைய கட்டணத்தையே வசூலிப்பதால் மீண்டும் போராட்டக் களத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள் மாணவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் செயல்படும் அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் தனியார் மருத்துவக் கல்லூரியைவிட மூன்று மடங்கு கூடுதலான கட்ட ணத்தை வசூலித்துவந்தனர். இதற்கெதிராக மாணவர்கள் கடந்த 2013-ல் இருந்து எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.

dd

கடந்த டிசம்பரிலிருந்து தொடர்ந்து 58 நாட்கள் கல்லூரி வளாகத்தில் போராடியதன் விளைவாக, மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணமே ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டார் முதல்வர். இந்த நிலையில் தற்போது மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் அரசு கட்டணத்தை வாங்கமுடியாது. மீண்டும் பழைய கட்டணத்தையே கட்ட வேண்டுமென தினந்தோறும் மிரட்டிவருகிறது.

Advertisment

இதுகுறித்து பல்கலைக்கழக முதுநிலை மருத்துவ மாணவர் பிரவீன் கூறுகையில், “""தமிழக அரசு அரசாணையில் இந்த ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், வரும்காலத்தில் பயிலவிருக்கும் மாணவர்களுக்கும் அரசு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இதுவரை பணம் கட்டியவர்களுக்குத் திருப்பித் தரமுடியாது எனவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தற்போது பல்கலைக்கழகத்தில் பழைய கட்டணத்தையே கட்டவேண்டுமென மாணவர்கள் மத்தியில் மிரட்டல் விடுக்கின்றனர். பணம் கட்டவில்லையென்றால் தேர்வு எழுத விடமாட்டோம் என்று தேர்வு நேரத்தில் மனஉளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்.

medical college

அரசாணை வெளியிட்டது குறித்து கேள்வி கேட்டால், அதைப்பற்றி தெரியாது பணம் கட்டினால் மட்டுமே தேர்வு எழுத முடியுமென மிரட்டுகிறார்கள். "போராடித் தானே அரசாணை வாங்கினீர்கள், அங் கேயே கேளுங்க' என்கின்றனர். முதல்வர் வெளியிட்ட அரசாணையில் தெளிவாக இருந்தும் அரசாணை செல்லாது என்பதுபோல் நட வடிக்கை உள்ளது. இனி அரசு வெளியிடும் அரசா ணையை எப்படி நம்புவது? மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். அதே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் யாரிடம் முறையிடுவது என்ற வேதனையில் உள்ளோம்''’என்கிறார்.

Advertisment

பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவனோ, “""அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வந்தவுடன் கல்விக் கட்டணம் கட்டிக்கொள்ளலாம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களி டம் தெரிவித்தேன். அவர்களும் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பழைய கல்விக் கட்டணமே கட்டவேண்டும் என்று கூறியதால், மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதைப்பற்றி தெரியாது விசாரித்துக் கூறுகிறேன்''’என்று போனை கட் செய்தார்.