Advertisment

பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்த தந்தை! -திருச்சியைப் பதறவைத்த கௌரவக் கொலை!?

ss

திருச்சி மாவட் டம் முக்கொம்பு அருகே உள்ள ராமவாத்தலை வாய்க்கால் கரையில், கடந்த 5 ஆம் தேதி இரவு, சிசு ஒன்றின் அழுகைக் குரல் இருட் டில் கேட்டது. இதனால் அதிர்ந்து போன அப் பகுதிவாசிகள், ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில், பிறந்து 2 நாளே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று தரையில் வீசப்பட்டிருக்க, அதை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

Advertisment

அதே சமயத்தில், ஜீயபுரம் அருகில் உள்ள எலமனூர் பகு

திருச்சி மாவட் டம் முக்கொம்பு அருகே உள்ள ராமவாத்தலை வாய்க்கால் கரையில், கடந்த 5 ஆம் தேதி இரவு, சிசு ஒன்றின் அழுகைக் குரல் இருட் டில் கேட்டது. இதனால் அதிர்ந்து போன அப் பகுதிவாசிகள், ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில், பிறந்து 2 நாளே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று தரையில் வீசப்பட்டிருக்க, அதை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

Advertisment

அதே சமயத்தில், ஜீயபுரம் அருகில் உள்ள எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி என்பவ ரின் 19 வயது மகள் கலைவாணி என்கிற கல்லூரி மாணவி, திடீரென விஷம் குடித்த நிலையில், அதே திருச்சி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டி ருந்தார்.

trichy

விசாரணையில், வாய்க்கால் கரையில் கண்டெடுக்கப்பட்டது இந்த கலைவாணியின் குழந்தை எனத் தெரியவந்தது. மேலும் இந்த விவ காரத்தைத் துருவியபோது, கிடைத்த தகவல்கள் பகீர் ரகம். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலைவாணி கடந்த 10 ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.

உயிர்பிரியும் முன்பாக மாஜிஸ்திரேட், கலைவாணி யிடம் மரண வாக்குமூலம் கேட்டபோது, பேச முடியாத நிலையிலும் அருகில் நின்று கொண்டிருந்த தன்னுடைய தந்தையையும் அத்தையையும் சைகையால் காட்டிவிட்டு, ”என் இறப்பிற்கு இவர்கள்தான் கார ணம்’ என்று, அந்த இருவரின் பெய ரையும் எழுதிக் கொடுத்தாராம்.

கைதான மாணவி கலைவாணி யின் அப்பா செல்வமணி கொடுத்த வாக்குமூலத்தில் “"என்னுடைய மகள் கலைவாணி திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றது எங்களுக்கு அவ மானமாக இருந்தது. அதனால் வயலுக்கு செல்லும்போது, குருணை மருந்தை எடுத்துவந்து என் மகள் கலைவாணியின் கையில் நான்தான் கொடுத்தேன். நான் வயலில் இருந்து திரும்பி வருவதற்குள், அதைக் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டும். நான் திரும்பி வரும் போது, விஷத்தைக் குடிக்காமல் நீ உயிருடன் இருந்தால், அந்த விஷத்தை நான் குடித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினேன். இப்படிச் சொல்லிவிட்டு நான் வயலுக்குச் சென்ற பிறகு, என் சகோதரி மல்லிகா, மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொள் என்று என் மகள் கலைவாணியை நிர்பந்தப்படுத்தி இருக்கிறார். அதனால் என் மகள் விஷத்தைக் குடித்துவிட்டாள்...'' -என்ற ரீதியில் வாக்குமூலம் கொடுத்து, விசாரணை செய்த காவலர்களையே அதிரவைத்திருக்கிறார்.

மாணவி கலைவாணி, தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத்தான் காதலித்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பாகவே அவர் குழந்தை பெற்றதால், மாணவியின் தந்தையே, தான் பெற்ற மகளை தற்கொலைக்குத் தூண்டி யிருக்கிறார். இதுவும் ஒரு வகையில் கௌரவக் கொலைதான்.

nkn241222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe