Advertisment

அப்பா-மகன் அரசியல் சடுகுடு! - ரஜினி வழியில் விஜய்!

v

ஜினியின் அரசியல் வருகை இன்றளவிலும் மீடியாக்களின் தலைப்புச் செய்தியாக உள்ளது. ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் அது பரபரப்பாகும். இதே டெக்னிக்கைத்தான் "தலைவா' படத்திலிருந்து "சர்க்கார்', "பிகிலு' படம் வரை விஜய்யும் கையில் எடுத்தார். தனது படங்களின் ஆடியோ ரிலீஸ் விழாவில், அப்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சனைக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். ஆட்சியாளர்கள் கொந்தளிப்பார்கள், படத்தின் தயாரிப்பாளர் பதறுவார், விஜய் ஆஃப்பாகி விடுவார். மாஸ்டர் ஆடியோ கேசட் விழாவும் விதிவிலக்கல்ல.

Advertisment

vvvv

கோடை விடுமுறையில் ரிலீசாகியிருக்க வேண்டிய "மாஸ்டர்' படம், கொரோனாவால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. பொங்கலுக்கு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பின் தமிழக சட்டமன்றத் தேர்தல் களமும் சூடுபிடிக்கும். அதுவரை இருக்கும் மூணு மாதங்களை தனக்கு எல்லா வகையிலும் சாதகமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் விஜய். ரஜினி ரசிகர் மன்றத்

ஜினியின் அரசியல் வருகை இன்றளவிலும் மீடியாக்களின் தலைப்புச் செய்தியாக உள்ளது. ஒவ்வொரு படம் ரிலீசாகும் போதும் அது பரபரப்பாகும். இதே டெக்னிக்கைத்தான் "தலைவா' படத்திலிருந்து "சர்க்கார்', "பிகிலு' படம் வரை விஜய்யும் கையில் எடுத்தார். தனது படங்களின் ஆடியோ ரிலீஸ் விழாவில், அப்போது டிரெண்டிங்கில் இருக்கும் ஏதாவது ஒரு சமூகப் பிரச்சனைக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். ஆட்சியாளர்கள் கொந்தளிப்பார்கள், படத்தின் தயாரிப்பாளர் பதறுவார், விஜய் ஆஃப்பாகி விடுவார். மாஸ்டர் ஆடியோ கேசட் விழாவும் விதிவிலக்கல்ல.

Advertisment

vvvv

கோடை விடுமுறையில் ரிலீசாகியிருக்க வேண்டிய "மாஸ்டர்' படம், கொரோனாவால் தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. பொங்கலுக்கு வரும் என எதிர்பார்ப்பு உள்ளது. அதன் பின் தமிழக சட்டமன்றத் தேர்தல் களமும் சூடுபிடிக்கும். அதுவரை இருக்கும் மூணு மாதங்களை தனக்கு எல்லா வகையிலும் சாதகமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் விஜய். ரஜினி ரசிகர் மன்றத்தில் 35 வருடங்களாக மா.செ.க்களாக இருந்தவர்களை நீக்கிவிட்டு, ரஜினி மக்கள் மன்றத்திற்கு புதிய மா.செ.க்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல் விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே மாவட்டத் தலைவர்களாக இருப்பவர்களை நீக்கிவிட்டு விஜய் மக்கள் இயக்கத்தில் புதியவர்களை மாவட்டத் தலைவர்களாக நியமிக்கும் வேலைகள் நடந்தன. புதியவர்களை நியமிப்பதில் மும்முரம் காட்டினார் வி.ம.இ.வின் மாநிலத் தலைவர் புஸ்ஸி ஆனந்த்.

இதில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை என்பதால், ஆனந்துக்கும் எஸ்.ஏ.சிக்கும் ஆகாமல் போனது. புறக்கணிக்கப்படும் அல்லது நீக்கப்படும் விஜய்யின் பழைய விசுவாசிகளை அடிக்கடி அழைத்துப் பேசினாலும் விஜய்யிடம் உண்மை நிலவரத்தை எஸ்.ஏ.சி.யால் சொல்ல முடியவில்லை.

Advertisment

vvvv

இந்நிலையில், எஸ்.ஏ.சி பா.ஜ.க.வுக்குப் போகிறார் என சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு நியூஸ் கிளம்பியது. மறுநாளே, மீடியாக்களை சந்தித்த எஸ்.ஏ.சி.,’’""நான் ஏன் பா.ஜ.க.வுக்குப் போக வேண்டும்? விஜய் மக்கள் இயக்கம் என்ற மாபெரும் இயக்கத்தில் இருக் கிறேன். வா வா என மக்களே விரும்பி அழைக்கும் போதுதான் விஜய் அரசியலுக்கு வருவார்''’ என விளக்கம் சொன்னார். ஆனால் புஸ்ஸி ஆனந்தோ பழைய மாவட்டத் தலைவர்களை நீக்கி, புது ஆட்களை சேர்ப்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அக்டோபர் 23 வரை திருச்சி ஆர்.கே.ராஜா, மதுரை வடக்கு, தெற்கு இன்பராஜ், மகேஸ்வரன், கன்னியாகுமரி ஜோஸ் பிரபு, விருதுநகர் ஞானம், பெரம்பலூர் சிவகுமார், கோவை மாநகரம் ராஜா, புதுக்கோட்டை ஸ்டாலின் மாஸ்கோ, ராணிப் பேட்டை பாரதிதாசன், திருப்பத்தூர் பிரகாஷ் நெல்லை மாரியப்பன், கிருஷ்ணகிரி அருண், தென் சென்னை சண்முகம் உட்பட 18 மாவட்டத் தலைவர் களை நீக்கிவிட்டு, கல்லூரி மாணவர்களையும் வளர் இளம் பருவத்தினரையும் புதிய மா.தலைவர்களாக நியமித்துள்ளாரம் புஸ்ஸி ஆனந்த்.

நீக்கப்பட்ட அனைவரும் கடந்த வாரம் கன்னியாகுமரியில் ஒன்று கூடி, புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகளை விஜய்யிடம் நேரில் சென்று விளக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். இந்த கூட்ட போட்டோக்களுடன் விஜய்யை சந்தித்த ஆனந்த், இவர்கள் எல்லாம் அப்பாவின் ஆட்கள், நமக்கு எதிராக செயல்பட்டதால் தான் நீக்கிவிட்டு, புதிய வர்களை நியமித்துள்ளேன் என சமாளித்துள்ளார்.

கடந்த 22-ஆம் தேதி நள்ளிரவு புதியவர்களை தொடர்பு கொண்ட ஆனந்த், 23-ஆம் தேதி மாலை தளபதியுடன் சந்திப்பு, அனைவரும் சென்னைக்கு வாருங்கள் என அழைத்துள்ளார். சொன்னபடியே 23-ஆம் தேதி மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை பனையூரில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடந்து, அவர்களுடன் போட்டோவும் எடுத்துள்ளார் விஜய்.

இதைக் கேள்விப்பட்டு, மறுநாள் அதாவது அக்.24-ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள எஸ்.ஏ.சி.யின் வீட்டிற்கு சென்றுள்ளனர் நீக்கப்பட்டவர்கள். நெசப் பாக்கத்தில், ""நான் கடவுள் இல்லை’ ஷூட்டிங்கில் எஸ்.ஏ.சி.இருப்பதாக தகவல் கிடைத்து, அங்கே சென்றுள்ளார்கள். அப்போது அவர்களிடம் “கொஞ்சம் பொறுத்துக்கங்க, சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவு கட்றேன்'' என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தாராம் எஸ்.ஏ.சி.

நம்பிக்கையுடன் ஆயுத பூஜையைக் கொண்டாட கிளம்பியுள்ளார்கள் விஜய்யின் பழைய விசுவாசிகள்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

______________

பதவி கிடைக்காததால் தற்கொலை?

facவிஜய் மக்கள் இயக்கத்தின் தனிக் கொடியை புதுக்கோட்டையில்தான் அறிமுகப்படுத்தினார் விஜய். இப்போது அந்த புதுக்கோட்டையின் மாவட்டத் தலைவரும் நீக்கப்பட்டிருக்கிறார். கேரளாவின் திருவனந்தபுரம் விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பதவிக்காக நிறைய செலவு செய்து ஏமாந்த ரோய் என்ற இளைஞரின் தற்கொலையும் சர்ச்சையானது. ஏழைகள், தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் பசியாற ‘விலையில்லா விருந்தகம்’ எட்டு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் அந்த மாவட்டத் தலைவர்கள் 10 லட்சம் டெபாசிட் செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே அந்த விருந்தகம் தற்போது செயல்படுகிறது.

nkn281020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe