Advertisment

மாப்பிள்ளையைக் கொன்ற மாமன்! அ.தி.மு.க. ஒ.செ. உடந்தையா!

dd

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரும் அம்பளிக்கை ஊராட்சி மன்ற தலைவருமான நடராஜன் நெய் வியாபாரம் செய்துவருகிறார். அவரிடம் வேலை பார்த்துவந்த அம்பிளிக் கையைச் சேர்ந்த சுரேஷைத்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுடுகாட்டுக்கு கொண்டு வந்து எரித்து சாம்பல்கூட இல்லாமல் ஒரு கும்பல் எடுத்துச்சென்றுவிட்டனர் என்ற தகவல் காக்கிகளின் காதுக்கு எட்டியது.

Advertisment

அதனடிப்படையில் எஸ்.பி. பாஸ்கரன் உத்தர வின் பேரில் இன்ஸ்பெக் டர் ராஜசேகர் தலைமை யில், சப் இன்ஸ்பெக்டர் கள் இளஞ்செழியன், பாலகுமாரசாமி, சரவணக் குமார் கொண்ட தனிப் படை தேடுதல் வேட்டை யில் இறங்கியதில், இரண்டே நாளில் குற்ற வாளிகளான வடிவேல் உள்பட ஆறு பேரை கைதுசெய்தனர். இதில் முதல் குற்றவாளியான வடிவேல், கொலை செய்யப் பட்ட சுரேஷின் தாய்மாமன்.

Advertisment

mm

இதுசம்பந்தமாக அம்பி ளிக்கை இன்ஸ்பெக்டர் ராஜ சேகரிடம் கேட்டபோது, “"அம் பிளிக்கை ஊர் சுடுகாட்டில் சுரேஷ், கொ

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளரும் அம்பளிக்கை ஊராட்சி மன்ற தலைவருமான நடராஜன் நெய் வியாபாரம் செய்துவருகிறார். அவரிடம் வேலை பார்த்துவந்த அம்பிளிக் கையைச் சேர்ந்த சுரேஷைத்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுடுகாட்டுக்கு கொண்டு வந்து எரித்து சாம்பல்கூட இல்லாமல் ஒரு கும்பல் எடுத்துச்சென்றுவிட்டனர் என்ற தகவல் காக்கிகளின் காதுக்கு எட்டியது.

Advertisment

அதனடிப்படையில் எஸ்.பி. பாஸ்கரன் உத்தர வின் பேரில் இன்ஸ்பெக் டர் ராஜசேகர் தலைமை யில், சப் இன்ஸ்பெக்டர் கள் இளஞ்செழியன், பாலகுமாரசாமி, சரவணக் குமார் கொண்ட தனிப் படை தேடுதல் வேட்டை யில் இறங்கியதில், இரண்டே நாளில் குற்ற வாளிகளான வடிவேல் உள்பட ஆறு பேரை கைதுசெய்தனர். இதில் முதல் குற்றவாளியான வடிவேல், கொலை செய்யப் பட்ட சுரேஷின் தாய்மாமன்.

Advertisment

mm

இதுசம்பந்தமாக அம்பி ளிக்கை இன்ஸ்பெக்டர் ராஜ சேகரிடம் கேட்டபோது, “"அம் பிளிக்கை ஊர் சுடுகாட்டில் சுரேஷ், கொலைசெய்யப்பட்டு எரிக்கப் பட்டிருக்கிறார். அதை அவனுடைய தாய்மாமனான வடிவேல் தான் செய்திருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட சுரேஷ் கன்னியாகுமரி, திருப்பூர், கோவை உள்பட சில இடங்களில் உள்ள பைனான்ஸ்களில் வேலைபார்த்து வந்தபோது சில லட்சங்களை கையாடல் செய்திருக்கிறார். அந்தப் பணத்தை எல்லாம் தாய் மாமனான வடிவேல்தான் கொடுத்திருக்கிறார். அதன்பின் அவனை சத்தம்போட்டு தான் வேலைபார்க்கும் நடராஜன் நெய் கம்பெனியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்த்திருக்கிறார். இருந்தும் வசூல் பணம் 6 லட்சத்தை கம்பெனியில் கட்டாமல் ஓடிவிட்டான். இதனால் அதிர்ச்சியடைந்த கம்பெனி மேனேஜர் போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து நடராஜனும் என்னிடம் போனில் பேசி பணத்தை வாங்கிக்கொடுங்கள் என்று கூறினார். தென்காசியில் பதுங்கியிருந்த சுரேஷை வடிவேலும் அவரது நண்பர்களும் அழைத்து வந்தனர். அவனிடமிருந்த மூன்று லட்சத்து 50 ஆயிரத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை வடிவேல் தருவதாகக் கூறினார். இதற்கு புகார் தந்த பார்ட்டியும் ஒப்புக் கொண்டதன்பேரில், சுரேஷ்மீது எந்த ஒரு வழக்கும் பதிவுசெய்யாமல் வெளியே விட்டுவிட்டோம்.

mm

கம்பெனி நிர்வாகமோ மிச்சப் பணத்தைக் கேட்டு வடிவேலுவை டார்ச்சர் செய்திருக்கிறது. இந்த நிலையில் வடிவேலு தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓடைப்பட்டி தோட்டத்திலிருந்த சுரேஷுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை குடிக்கக் கொடுத்திருக்கிறார். நிதானமின்றி இருந்தபோது கழுத்தில் கயிறைப் போட்டு இறுக்கி கொலை செய்து, தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, ஊரிலுள்ள உறவினர்களிடம் காட்டிவிட்டு சுடுகாட்டுக்கு கொண்டுபோய் எரித்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். வடிவேலையும் அதற்கு துணைபோன கூட்டாளிகளையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம்'' என்று கூறினார்.

"இருபது வருடமாக எனது மருமகன் வடிவேல், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் நடராஜன் நெய் கம்பெனியில் டிரைவர் வேலை பார்த்துக்கொண்டு வசூல்செய்து கொடுத்துவரு கிறார். அவரது மச்சான் மூலம் தலைகுனிவு ஏற் பட்டுவிட்டது. சுரேஷ் கையாடல் செய்த பணத்தை தான் தருவதாகக் கூறியிருக்கிறார். ஆனால் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததுடன் போலீசை வைத்து மிரட்டியும் இருக்கிறார். இதனால மனம் நொந்துபோய்தான் இப்படி ஒரு முடிவை எடுத் திருக்கிறான். இதனால் என் மகள் வாழ்க்கையும் போய்விட்டது''’என்று மனவருத்தத்துடன் கூறினார் வடிவேலின் மாமனாரான பரமசிவம்.mm

ஊர்மக்கள் சிலரிடம் பேசியபோது, "நடராஜனின் என்.பி.என். நிறுவனத்தில் சுரேஷ் வேலைபார்த்தது பலருக்கும் தெரியும். இந்த கையாடல் விவகாரத்துக்காக சுரேஷை நடராஜனின் வீட்டுக்குக் கொண்டுவந்து அடித்துத் துன்புறுத்தும் போதுதான் அவனது உயிர் போயிருக்கிறது. இதற்கு முன்பும் கையா டல் பண்ணிய பலரின் சொத்துக்களையும் மிரட்டி எழுதி வாங்கி யவர்தான் நடராஜன். அவன் தற்கொலை செய்துகொண்டதுபோல் செட்டப் செய்தபின் எரிக்க விறகுகூட நட ராஜனின் வாகனத்தில் தான் வந்தது. அநியாய மாக ஒரு இளைஞன் உயிர் போகக் காரணமாக இருந்திருக்கிறார். இத்தனை நடந்தும் நடராஜன் மேல் எந்த வழக்கும் பதியப்படவில்லை. டி.எஸ்.பி.யும். எஸ்.பி.யும் எதிர்க்கட்சி ஒ.செ.வை இந்த வழக்கில் சேர்க்காமல் உடந்தையாக இருக்கிறார்கள். இறந்துபோன சுரேஷின் தாயை, தாங்கள் சொல்லித் தந்ததைத் தவிர வேறெதையும் பேசக்கூடாது எனவும் போலீஸ் மிரட்டியுள்ளது''’எனக் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. ஒன்றியச் செய லாளர் நடராஜனிடம் கேட்டபோது, “"என் கம்பெனியில் சுரேஷ் வேலை பார்க்கவில்லை. பணமும் எடுக்கவில்லை. போலீஸ் ரிப் போர்ட்டில் என்ன இருக்கோ அதைப் போடுங்கள். வேற எதையும் எழுதாதீங்க.… நேரில் வாங்க பேசிக்கொள்ளலாம்''’என்று கூறினார். ஆனால் காக்கிகள் பதிவு செய்த வழக்கி லேயே நடராஜன் கம்பெனியில் (ச.ட.ச. உஹண்ழ்ஹ் எஹழ்ம்) சுரேஷ் வேலை பார்த்தபோது பணம் கையாடல் செய்திருக்கிறார் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

"கட்சிக்காரர் என்பதால் போலீஸ் பம்முகிறதா?' என்ற விமர்சனம் மாவட்ட மெங்கும் எழுந்துள்ளது.

nkn300823
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe