ராங்கால் :: அதிவேகமாக பரவும் ஊழல் வைரஸ்! -டெல்லி கையில் தமிழக ரிப்போர்ட்!

tr

""ஹலோ தலைவரே... லாக் டவுன் தொடர்பா, பிரதமர் மோடி சொல்றதை எல்லாம் மக்கள் கேட்கறாங்க. ஆனால் மக்கள் எதிர்பார்க்கிறதைத்தான் மோடி அறிவிக்கிறதேயில்லை.''

""ஆமாப்பா... வசந்த காலத்தின் தொடக்க நாளான ஏப்ரல் 14-ந் தேதி, தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, மக்கள் எதிர்பார்க்கும் எதையுமே அறிவிக்காமல், இரண்டாவது முறையா மே 3-வரை ஊரடங்கை நீட்டிச்சிருக்காரே...''

mm

""உண்மைதாங்க தலைவரே.. ஏற்கனவே 21 நாள் ஊரடங்கின்போது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்ததாசும் அறிவித்தவை எதையும் வங்கிகள் சரியா நடைமுறைப்படுத்தலை. உதவித்தொகையும் அக்கவுண்ட்டுக்கு ஒழுங்கா வரலை.''

""மக்களை பயமுறுத்தும் மின்கட்டணம், செல்போன் மற்றும் இணையதளக் கட்டணங்கள்னு எதையும் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலையே...''

""ஏழைகள் மட்டுமின்றி நடுத்தரக் குடும் பத்தினரின் கையிருப்பும் குறைஞ்சிக்கிட்டிருக்கிற நிலையில், 18 நாள் லாக் டவுனைப் பிரதமர் அறிவிச்சிருக்காரு. நிதி நெருக்கடி சூழ்ந் திருக்கும் இந்த நேரத்தில் தனியார் நிறு வனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு எப் படி சம்பளத்தைக் கொடுக்க முன்வரும்? அரசின் உதவிகள் எந்த அளவுக்குக் கிடைக்கும்னு தெரியலை. ஊரடங்கு நீடிப்பு அறிவிப்பு வரும்ங்கிறதை எதிர்பார்த்திருந்த மக்கள், மோடியின் உரையில் நிவாரண அறிவிப்பு வரும்னு காத்திருந்தாங்க. இந்த முறையும் ஏமாற்றம்தான்.''

""அவர்தான் முதியோ ரைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள், மாஸ்க்கை மாட்டிக் கொள்ளுங்கள், சமூக விலகலைக் கடை பிடியுங்கள்ன்னு 7 அம்சத் திட்டத்தை மட்டும் அறிவிச்சிட்டு, ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட் டாரே...''

""ஆமாங்க தலைவரே.. மக்கள் எதிர்பார்த்த எந்த நிவாரண உதவியும் அரசுத் தரப்பில் இருந்து கிடைக்க மாட்டேங்குது. அதனால் அரசைத் தவிர மத்தவங்க செய்யும் உதவிகளுக்கு இப்ப பலரும் காத்திருக்காங்க. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டிய ஆளும்கட்சிப் பிரமுகர்களில் பலரும், கொரோனா பயத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டாங்க. அதே சமயம், எதிர்க்கட்சியான தி.மு.க.வோ வருமானம் இல்லாமல் தவிச்சிக்கிட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள்ன்னு விநியோகிச்

""ஹலோ தலைவரே... லாக் டவுன் தொடர்பா, பிரதமர் மோடி சொல்றதை எல்லாம் மக்கள் கேட்கறாங்க. ஆனால் மக்கள் எதிர்பார்க்கிறதைத்தான் மோடி அறிவிக்கிறதேயில்லை.''

""ஆமாப்பா... வசந்த காலத்தின் தொடக்க நாளான ஏப்ரல் 14-ந் தேதி, தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, மக்கள் எதிர்பார்க்கும் எதையுமே அறிவிக்காமல், இரண்டாவது முறையா மே 3-வரை ஊரடங்கை நீட்டிச்சிருக்காரே...''

mm

""உண்மைதாங்க தலைவரே.. ஏற்கனவே 21 நாள் ஊரடங்கின்போது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமனும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்ததாசும் அறிவித்தவை எதையும் வங்கிகள் சரியா நடைமுறைப்படுத்தலை. உதவித்தொகையும் அக்கவுண்ட்டுக்கு ஒழுங்கா வரலை.''

""மக்களை பயமுறுத்தும் மின்கட்டணம், செல்போன் மற்றும் இணையதளக் கட்டணங்கள்னு எதையும் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலையே...''

""ஏழைகள் மட்டுமின்றி நடுத்தரக் குடும் பத்தினரின் கையிருப்பும் குறைஞ்சிக்கிட்டிருக்கிற நிலையில், 18 நாள் லாக் டவுனைப் பிரதமர் அறிவிச்சிருக்காரு. நிதி நெருக்கடி சூழ்ந் திருக்கும் இந்த நேரத்தில் தனியார் நிறு வனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு எப் படி சம்பளத்தைக் கொடுக்க முன்வரும்? அரசின் உதவிகள் எந்த அளவுக்குக் கிடைக்கும்னு தெரியலை. ஊரடங்கு நீடிப்பு அறிவிப்பு வரும்ங்கிறதை எதிர்பார்த்திருந்த மக்கள், மோடியின் உரையில் நிவாரண அறிவிப்பு வரும்னு காத்திருந்தாங்க. இந்த முறையும் ஏமாற்றம்தான்.''

""அவர்தான் முதியோ ரைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள், மாஸ்க்கை மாட்டிக் கொள்ளுங்கள், சமூக விலகலைக் கடை பிடியுங்கள்ன்னு 7 அம்சத் திட்டத்தை மட்டும் அறிவிச்சிட்டு, ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு போயிட் டாரே...''

""ஆமாங்க தலைவரே.. மக்கள் எதிர்பார்த்த எந்த நிவாரண உதவியும் அரசுத் தரப்பில் இருந்து கிடைக்க மாட்டேங்குது. அதனால் அரசைத் தவிர மத்தவங்க செய்யும் உதவிகளுக்கு இப்ப பலரும் காத்திருக்காங்க. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டிய ஆளும்கட்சிப் பிரமுகர்களில் பலரும், கொரோனா பயத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிட்டாங்க. அதே சமயம், எதிர்க்கட்சியான தி.மு.க.வோ வருமானம் இல்லாமல் தவிச்சிக்கிட்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள்ன்னு விநியோகிச்சி நிவாரணப் பணிகளில் மும்முரம் காட்டுது.''

""உண்மைதான்!''

""அதுமட்டுமல்லாம, தி.மு.க. வி.வி.ஐ.பி.க்களும் பிரமுகர்களும் நிவாரண உதவியில் காட்டும் வேகம் மக்க ளுக்கு பயனுள்ளதா இருக்கு. மு.க.ஸ்டாலின், தன் கொளத் தூர் தொகுதியில் தானே வரிஞ்சிகட்டி இறங்கி, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதோட, கட்சியினரையும் முடுக்கிவிட் டார். இளைஞரணி செயலாளரான உதயநிதி, பாதிக்கப் பட்ட மக்களுக்காக ஹெல்ப் லைன் நம்பரை அறிவிச்சாரு. அதில் தொடர்புகொள்வோருக்கு மருத்துவ-உணவுத் தேவைகளுக்கு உதவுவதற்காக 70 அமைப்பாளர்களைத் தமிழகம் முழுக்கக் களம் இறக்கிவிட்டிருக்கார். மாஜி மந்திரி கே.என்.நேரு, திருச்சி பகுதியில் இருக்கும் தனது ரைஸ் மில் லில் இருந்த அரிசியை ஏழை மக்களுக்கு விநியோகிச்சாரு.''

""ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்தும் வீடு தேடி உதவிகள் வருவதா சொல்லப்படுதே?''

""முதலில் பிராமணர்களுக்கு மட்டும்ங்கிற அறிவிப் போடு ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து உதவிக்கரம் நீட்டப்பட்டது. அப்புறம், சென்னை மாநகராட்சியோடு இணைந்து பணி செய்வதா செய்தி வந்தது. தென்மாவட்ட கிராமப்புறங்களில் ஏழைகளுக்கு உதவி செய்யும் நேரத்தில், கொரோனவுக்கு முஸ்லிம்கள்தான் காரணம்னு பிரச்சாரம் செய்வதா இப்ப குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கு.''

rr

""மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியான பா.ஜ.க.வின் தமிழக டீம் என்ன செய்யுது?''

""தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் கடந்த 12-ந் தேதி வீடியோ காலில் ஆலோ சித்த பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், நூறு நாள் திட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் மத்திய அரசு அறிவித்த நிதி உதவி, போய்ச் சேர்ந்ததான்னு விசாரிச்சதோட, அதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை கொடுக்கும்படி, மாநிலத் தலைவர் முருகனிடமும், எக்ஸ் எம்.பி. நரசிம்மனிடமும் கேட்டுக் கொண்டார். அப்ப, மோடி உத்தரவுப்படி, தமிழக அரசை எதிர்பார்க்காமல் முடிந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் நாங்கள் மும்முரமாக இறங்கி இருக்கோம்ன்னு தமிழக பா.ஜ.க. பிரமுகர் கள் முரளிதர ராவிடம் தெரிவிச்சதோட, தமி ழகம் முழுக்க பல இடங் களிலும் குழு அமைத்து செயல்பட்டாங்க.''

""கட்சிகளோ தன்னார் வலர்களோ நிவாரணப் பொருட்கள் வழங்கக் கூடாதுன்னு தமிழக அரசு அறிவித்ததே?''’’

""தங்களைத் தாண்டி எதிர்க்கட்சியான தி.மு.க.வும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்றவையும் களப்பணியில் இறங்கியதை ஜீரணிக்க முடியாமத் தான் எடப்பாடி அரசு அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டது. 21 நாள் லாக் டவுன் நேரத்தில், தி.மு.க.வினர் 80 சதவீதமும், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., மற்ற கட்சியினர் 20 சதவீதமும் ஸ்கோர் செய்திருக்காங்க. இதனால், பயனடைந்தவர்களிடம் மத்தியில், இந்தக் கட்சிகளுக்கு மதிப்பு உயர்ந்திருப்பதை மாநில உளவுத்துறையினரும் சில அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடியிடம் கவனத்துக்குக் கொண்டுபோனாங்க. அதோடு இன்னொரு மேட்டரும் இருக்கு.''

""என்ன சங்கதி?''

""கோவைப் பகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரரான அன்பரசனுக்கும் தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கும் இடையே நிவாரண யுத்தம் தீவிரமா நடந்துச்சு. அன்பரசன், அரசு நிதியிலும் ரேசன் அரிசியிலும் கைவச்சி, நிவாரண உதவிகள்ன்னு விளையாட ஆரம்பிக்க, உண்மையாகவே நிவாரண உதவிகளில் ஈடுபட்ட சிங்காநல்லூர் தி.முக. எம்.எல்.ஏ. கார்த்திக், அவரின் நிவாரண முறைகேடுகளை வெளிப்படுத்த ஆரம்பிச்சார். அதனால் எரிச்ச்சலான அமைச்சர் வேலுமணி தரப்பு, தி.மு.க.வின் நிவாரண உதவி களை முடக்கனும்ன்னு ஒத்தைக்காலில் நின்னதால, தனியாக யாரும் நிவாரண உதவிகள் செய்ய தடை விதிக்கப்படுகிறதுன்னு எடப்பாடி அரசு அறிவித்தது.''

""மறுநாளே பல்டி அறிக்கை வெளியானதே?''

""எடப்பாடி அரசை கண்டித்து தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் அறிக்கை விட்டதோடு, தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் கோர்ட்டுக்குப் போனாங்க. பா.ஜ.க. தரப்பும், ஆர்.எஸ்.எஸ். தாப்பும், எடப்பாடியின் இந்த நிவாரண அரசியல் பற்றி, மோடியின் கவனத்துக்குக் கொண்டு போச்சு. அதோடு, கொரோனா நேரத்தில் டென்டர், ஆர்டர், பர்சேஸிங்னு எல்லா மட்டத்திலும் தமிழக அரசில் ஊழல் வைரஸ் அதிவேகமா புகுந்து விளை யாடுதுன்னு உளவுத்துறையும் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கு. இதைத் தொடர்ந்து, எடப்பாடியைத் தொடர்புகொண்ட பிரதமர் அலுவலகம், நிவாரண உதவிகளில் அரசியலைப் புகுத்தாதீர்கள்னு கடுமையாக குரலில் அட்வைஸ் செய்தது. கோர்ட்டிலும் கண்டனம் வெளிப்படலாம்ங்கிறதால, நிவாரணத்தை தடுக்கலை. முறையா அனுமதி வாங்கி செய்யச் சொல்றோம்னு பல்டி அடிச்சிடிச்சி அரசு.''

""தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, அ.திமு.க. ஊழல் பற்றிய விசாரணையில் களமிறங்கிட்டா ராமே?''

ff

""தூத்துக்குடி தொகுதி யிலேயே தங்கியிருந்து உதவிவரும் கனிமொழியை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் தொடர்புகொண்டு, கொரோனா தொற்றைத் தடுக்கும் கவச உடைகள் நூறு, எங்களுக்குத் தேவைன்னு வேண்டுகோள் வச்சிருக்காங்க. உடனடியாக சென்னை, கோவைப் பகுதிகளில் விசாரித்து, மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்குமான 174 செட் கவச உடைகளை வாங்கி, சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவச்சார் கனிமொழி. இதையெல்லாம் அரசுத்தரப்பில் உங்களுக்குத் தரலையான்னும் விசாரிச்சிருக்காரு- சுகாதாரத் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட கவச உடைகள் தரமானதா இல்லைன்னு அவங்க ஆதங்கப் பட்டிருக்காங்க. அதிர்ச்சியடைஞ்ச கனிமொழி, சுகாதார துறையில், குறிப்பா அமைச்சர் விஜயபாஸ்கர் மார்ச் முதல் வாரத்திலிருந்து தமிழக சுகாதாரத்துறைக்கு கொள்முதல் செய்த மருத்துவ உபகரணங்கள் பற்றியும் அதன் தரம் பற்றியும் டீலிங்குகள் பற்றியும் தோண்டித் துருவிக்கிட்டு இருக்காராம்.''

""ஊழல் முறைகேடுகளை சந்தித்துவரும் டி.என்.பி.எஸ்.சி.க்கு புது சேர்மனை எடப்பாடி அரசு நியமிச் சிருக்கே?''

""டி.என்.பி.எஸ்.சி.யில் ஹைடெக் ரேஞ்சில் நடத்தப்பட்டிருக்கும் தேர்வுத்தாள் முறைகேடுகளால், அந்த ஆணையமே கலகலத்துப் போயிருக்கு. இந்த நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை முதன்மைச் செயலாளரா இருந்த பாலசந்திரன் ஐ.ஏ.எஸ்.சை சேர்மனாக நியமிச்சிருக்கு எடப்பாடி அரசு. இந்த பாலசந்திரன் மீது முறைகேடுகள் தொடர்பாக ஏகப்பட்ட புகார்களும் வழக்குகளும் நிலுவையில் இருக்கு. அப்படிப் பட்டவரை இந்தப் பதவிக்கு நியமிக்க லாமாங்கிற சர்ச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பிலேயே இருக்கு. இவர் சசிகலாவின் உறவினராம். முதல்வர் எடப்பாடியின் பி.ஏ.க்களில் ஒருவரான கார்த்திக் என்பவரை ’வெயிட்டாக’ கவனித்துதான் இந்தப் பதவியைப் பெற்றிருக்கிறார்னு சொல்றாங்க.''

""அங்கங்கே டாஸ்மாக் சரக்குகள், பெட்டி பெட்டியா கொள்ளை போகுறதா சொல்றாங்களே..''

""ஆமாங்க தலைவரே, திருடு போனதாக் கணக்குக் காட்டப்படும் டாஸ்மாக் சரக்குகள்தான், டாஸ்மாக் ஆட்கள் மூலமே கள்ளத்தனமா விற்கப்படுதாம். இது தொடர்பான புகார்கள் பதிவானாலும் யாருக்கும் பிரச்சினை இல்லாமல், அதெல்லாம் விரைவில் பைசல் ஆகிவிடும்னு சொல்றாங்க. அண்மையில் கோவை, வேலூர் பகுதியில் ஏகப்பட்ட டாஸ்மாக் சரக்குகள் திருட்டுப் போனதா புகார் ஆச்சு. இப்ப அங்கிருக்கும் டாஸ்மாக் அதிகாரிகள், லாக் டவுன் முடிஞ்சதும், காணாமல் போன சரக்குகளுக்கான தொகையை, சரக்கு விற்ற காசில் இருந்து கட்டி, கணக்கை நேர் செய்துடுங்கன்னு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லியிருக்காங்களாம். இது எப்படி இருக்கு?''

""அரசாங்கம் இப்படித்தான் இருக்கு.. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை பிரதமரே நடத்தியும், முதல்வர் நடத்தவேயில்லை. அதனால, கொரோனா குறித்து விவாதிக்க தோழமைக் கட்சிகளின் கூட்டத்தை 15-ந் தேதி அறிவாலயத்தில் நடத்த முடிவெடுத்தார் மு.க.ஸ்டாலின். இதில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளியில் நாற்காலிகள் போடப்பட்டு கூட்டத்தை நடத்தவும்- நேரில் பங்கேற்க முடியாதவர்களுக்காக வீடியோகான்ஃபரன்சும் ப்ளான் செய்தபோது, ஊரடங்கு நேரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கலாமான்னு சென்னை மாநகராட்சி தரப்பிலும் மாநகர காவல்துறை தரப்பிலும் ஏப்ரல் 14ந் தேதி சீரியஸô ஆலோசிக்கப்பட்டது.’’அன்றிரவு தேனாம்பேட்டை போலீசார் தி.மு.க.வுக்கு அனுப்பிய நோட்டீசில் வீடியோ கான்ஃபரன்ஸில் மட்டுமே கூட்டம் நடத்தவேண்டும் என்று தெரிவித்தனர்.''

____________

இறுதிச்சுற்று!

தண்ணீர்கூட தரவில்லை!

கொரோனாவுக்கு எதிராக உயிரைக்கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள். அவர்களுக்கு, முகக்கவசங்கள் உட்பட பி.பி.இ. எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கிப் பாதுகாக்கவேண்டும் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சி.ஆர்.ஆர்.ஐ. (பயிற்சி மருத்துவர்கள்) டீனுக்கு எழுதியக் கடிதம் தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது. "உணவு, தண்ணீராவது வழங்குங்கள்' என்பதுதான் அந்தக்கடிதத்தில், குறிப்பிடப் பட்டிருக்கிறது. மக்க ளுக்குத் தொற்று பரவாதபடி தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் பயிற்சி மருத்துவர் களுக்கு உணவு, தண்ணீரே இல்லாத நிலையில்,, பாதுகாப்பு கருவிகள் கிடைத் ததா? பரிசோதனை செய்யப்பட்டதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பு கிறார்கள் மருத்துவத் துறையினர்.

-மனோ

nkn150420
இதையும் படியுங்கள்
Subscribe