ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக, "பேராபத்தை தடுத்திடுங்கள் அப்பா!' என, தமிழக முதல்வருக்கு உருக்கமாகக் கடிதம் அனுப்பி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி -ஹேமலதா தம்பதியரின் ஒரே மகளான 12ஆம் வகுப்பு மாணவி பிரியங்கா காந்தி.
"எப்படி இப்படி மும்மொழிக் கொள்கைக்கு எதிராகக் கடிதம் எழுத நினைச்சீங்க?'' எனக் கேட்டோம். ”
"நான் படிக்கும் நிர்மலா அரசு பள்ளியில் என் தோழி ஒருத்தி ஆசிரியரிடம், "ஏன் டீச்சர் ஏற்கனவே 6 பாடங்கள் படித்து பரிட்சை எழுதுகிறோம். இப்ப என்னடான்னா 7 பரிட்சை எழுதவேண்டும்னு சட்டம் வருகிறதாமே? தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியை வேறு படிக்க வேண்டும் என்கிறார்களே?
இது தேவையில்லாத சுமைதானே டீச்சர்?' என்றதும், அதற்கு ஆமாமென்ற டீச்சர், ஆனால் தமிழக அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்று விளக்கினார். பின்னர் மும் மொழிக்கொள்கை தொடர்பான பல்வேறு விவாதங்களைப் பார்த்தேன். அதில், கரு.பழனியப்பன் சார் பேசியது என்னை ரொம்ப சிந்திக்கவைத்தது. "மொழி என்பது ஒருவருக் கொருவர் தொடர்புகொள்ள மட்டுமே பயன்படும். மொழி யென்பது அறிவு கிடையாது. மெடிக்கல், இஞ்ஜினியரிங், கம்யூட்டர் விஞ்ஞானி ஆவது முக்கியமா? இல்லை, இந்தி மொழியைப் படிப்பது முக்கியமா?
அதற்கு சிறந்த உதாரணமாக, நீதிமன்றத்தில் ஐந்து மொழியில் டைப் அடிக்கும் தட்டசர் அறிவாளியா? தீர்ப்பு சொல்லும் நீதிபதி அறிவாளியா? எது அறிவு?' என்றெல் லாம் அவர் விளக்கியதைக் கேட்டபோதுதான் இந்தி தேவையில்லாத ஆணியென்ப தும், அதை பிடுங்கியெறிய வேண்டு மென்றும் புரிந்தது. தோழி களின் ஆலோசனைப்படி, "மும் மொழிக் கொள்கை எனும் பேராபத்தை தடுத்திருங்கள் அப்பா' என உருக்கத்துடன் ஒரு கடிதத்தை எழுதினேன். அதில் "பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் அப்பாவாகிய நீங்கள் மட்டும் இல்லையென்றால் தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், பகுத்தறிவையும் என்னைப் போன்ற பெண் குழந்தைகளின் கல்வியையும் என்றோ சிதைத்திருப்பார்கள், மும்மொழிக் கொள்கை எனும் பேராபத்தை எப்படியாவது தடுத்து விடுங்கள் அப்பா!
மானம், ரோசம் உள்ள எவனும் இந்த மும்மொழிக் கொள்கைக்கு எதிராகப் போராடாமல் இருக்கமாட்டான். அந்த வகையில், சாகும் வரைகூட உண்ணாவிரதம் இருக்கத் தயாராக இருக்கிறேன் அப்பா!' என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.
எனது கடிதம் நாளிதழ் களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைர லாகி, எனது பள்ளி ஆசிரியர்களும், தோழிகளும் வாழ்த் தினார்கள்'' எனப் பெருமிதத்துடன் கூறியவர், தற்போது, பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்' நூலை வாங்கி யிருப்பதாகவும், இந்நூலில் தொடங்கி, கொஞ்சங் கொஞ்சமாக பெரியாவை வாசிக்கப் போகிறேன் என்றதோடு, "வருங் காலத்தில், உச்சநீதிமன்ற நீதிபதி யாகவோ, மாவட்ட ஆட்சிய ராகவோ வர ஆசைப்படுகிறேன்' என்றார்.