லக அளவில் மக்காச்சோள உற்பத்தி யில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், திண் டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மானாவாரிப் பயிராக மக்காச்சோளத்தை பயிர் செய்கிறார்கள் விவசாயிகள்.

இந்த மக்காச்சோளம் கோழிப் பண்ணைகளுக்கும், மாடுகளுக்கும் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்திய அளவில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த விவசாயத்தை நம்பியிருக்கும் குடும்பங்கள் தற்போது வருவாய் ஆதாரமின்றி தற்கொலை மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

corn

கடலூர் மாவட்ட மேற்குப் பகுதியிலுள்ள மங்களூர், நல்லூர் ஒன்றியங்களிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் ஒன்றிய கிராமங்களிலும் இந்த விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தையே நம்பியுள்ளனர். இந்த ஆண்டு மக்காச்சோளம் வறட்சியினாலும், படைப்புழு தாக்குதலாலும் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisment

ம.புடையூர், கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்ரா, “"எங்களுக்கு சொந்த நிலம் இல்லை. ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் என 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சோளம் விதைத்தோம். உழவு உரம், விதை, களையெடுப்பு என அனைத்துச் செலவுகளும் ஏக்கருக்கு சுமார் 35,000 ரூபாய்க்குமேல் ஆனது. 5 ஏக்கருக்கும் குத்தகை உட்பட சுமார் இரண்டரை லட்சம் செலவு செய்தோம். சமீபத்திய வறட்சி யும் படைப்புழுவும் சோளத்தை முற்றிலும் அழித்துவிட்டது. விவசாய அதிகாரிகளை அழைத்துவந்து காட்டினோம். இனிமேல் இதனால் பயனில்லை மாட்டுத்தீவனத்திற்கு வேண்டுமானால் அறுத்துப் போடுங்கள் என்று கூறிவிட்டனர். கழுத்தில், காதில் கிடந்ததை எல்லாம் அடமானம்வைத்து செய்த விவசாயம். எனவே, அரசு ஏக்கருக்கு 50,000 ரூபாய் அளவில் இழப்பீடு கொடுத்தால் தப்பிப்போம்''’என்கிறார்.

கல்லூர் கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், விவசாயியுமான பெரியசாமி, “"சுமார் 30 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் மக்காச்சோளம் விவசாயம் செய்துவருகிறோம். பெரும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. சமீப ஆண்டுகளாகத்தான் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கி சோளத்தை அழிக்கிறது. இந்தப் புழு மிகவும் வித்தியாசமானது. எப்படி சோளத்தினுள்ளே நுழையுமென்றே தெரியாது. தண்டு வழியாக நுழைந்து சோளம் கதிர் வைக்கும் நேரத்தில் அதை அப்படியே தின்றுவிடும். எந்த மருந்து அடித்தாலும் இதை அழிக்க முடியவில்லை.

அமெரிக்கா வழியாக தென்ஆப்பிரிக்கா வுக்கும், பின் இந்தியாவுக்கும் இந்த படைப்புழு பரவியுள்ளது. ஒரு புழு 250 முட்டைகள் வரை இட்டு இனப்பெருக்கம் செய்யுமாம். இந்தப் படைப்புழு சோளத்தை மட்டுமல்ல, உளுந்து, பருத்தி போன்ற பயிர்களையும் ஊடுருவி அழிக்கும் தன்மையுடையது என்கிறார்கள். தமிழக அரசு இந்த படைப்புழுவை கட்டுப்படுத்த உரிய மருந்தை கண்டுபிடித்தால்தான் வரும் காலங்களில் மக்காச்சோள விவசாயத்தை செய்யமுடியும். நன்றாக விளைச்சல் கிடைத்தால்கூட ஏக்கருக்கு 20 முதல் 25 மூட்டை வரை கிடைக்கும். ஒரு மூட்டை பத்து முதல் 11,000 விலைபோகும். அதிக விளைச்சல் கிடைக்கும்போது வியாபாரிகள் விலையைக் குறைத்துவிடுவார்கள் இதனால் செலவு செய்த பணத்தைத்தான் அதிலிருந்து எடுக்கமுடியும். இப்படி தொட்டுக்க,…தொடைச்சிக்க என்ற நிலையில்தான் எங்கள் மக்காச்சோள விவசாய பிழைப்பு நடக்கிறது''’என்கிறார் பெரியசாமி.

Advertisment

corn

"இந்த ஆண்டு வறட்சி, படைப்புழு தாக்கு தல் எங்களை தற்கொலைக்கு தள்ளிவிடும் போலுள்ளது'' என்கிறார் ஆதனூர் விவசாயி ராமசாமி.

"“மக்காச்சோளம் பயிர் செய்வதற்கு வேளாண் துறையில் அதிகாரிகள் ஹைபிரிட் வகை சோளத் தைத்தான் சிபாரிசு செய்கிறார்கள். தனியார் விதைப் பண்ணையிலும் வேளாண்துறையிலும் இந்த விதை விற்கப்படுகிறது. வேளாண் துறையினர் அறிவுறுத்தல்படி எவ்வளவு முனைப்புடன் மக்காச்சோள விவசாயம் செய்தாலும் அழிவிலிருந்து வெளியே வர முடியவில்லை''’என்கிறார்.

கடலூர் மேற்கு மாவட்டப் பகுதிகளில் புலிவலம், மேலாதனூர், கணக்கம்பாடி, குரக்கை, ஆலம்பாடி, ஆவட்டி, ஆதனூர், ம.புடையூர், மங்களூர், மலையனூர், சிறுபாக்கம், பெரிய நேசலூர், அரியநாச்சி, சேப்பாக்கம், வேப்பூர், கல்லூர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோள விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலறிந்து வேதனையடைந்த திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான சி.வி. கணேசன், விவசாயிகளையும், பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். “

"மக்காச்சோள பாதிப்பு விவசாயி களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகள் குறித்த விவரங்களை தயார் செய்து தமிழக முதல்வர் மற்றும் வேளாண் துறை அமைச்சர், துறைசார்ந்த அதிகாரி களிடம் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிச்சயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பார்''’ என்றார்.

"சரியான முறையில் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அலைக்கழிப்பில்லாமல் முழுமையான அளவில் இழப்பீடு வழங்கவேண்டும்' என்கிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள்.