குரூப்-1 அரசுப் பணியாளர் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற சேத்தியா தோப்பு பூதங்குடி எஸ்.டி.சியோன் பள்ளி முன்னாள் மாணவி கதிர்செல்விக்கு பள்ளியில் நடத்தப்பட்ட பாராட்டு விழா, பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள வாழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வன்- மாலா தம்பதி யின் மகள் கதிர்செல்வி. இவர் எல்.கே.ஜி. முதல் பனிரெண்டாம் வகுப்புவரை சேத்தியாதோப்பு பூதங்குடி எஸ்.டி.சியோன் மேல்நிலைப்பள்
குரூப்-1 அரசுப் பணியாளர் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற சேத்தியா தோப்பு பூதங்குடி எஸ்.டி.சியோன் பள்ளி முன்னாள் மாணவி கதிர்செல்விக்கு பள்ளியில் நடத்தப்பட்ட பாராட்டு விழா, பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள வாழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கலைச்செல்வன்- மாலா தம்பதி யின் மகள் கதிர்செல்வி. இவர் எல்.கே.ஜி. முதல் பனிரெண்டாம் வகுப்புவரை சேத்தியாதோப்பு பூதங்குடி எஸ்.டி.சியோன் மேல்நிலைப்பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர், இளங்கலை வேளாண் மையை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று, குரூப் 2 அரசுப் பணியாளர் தேர்வு எழுதியுள்ளார். அதில் தோல்வியுற்றபோதும், தொடர் முயற்சியால் கடந்த 2023ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்றவர், விடாமுயற்சி யாக குரூப்-1 தேர்வெழுதி, மாநில அளவில் முத லிடத்தைப் பெற்று சாதனை படைத்தார். கதிர் செல்விக்கு அவர் பயின்ற பள்ளியில் நடைபெற்ற பாராட்டுவிழாவுக்கு பள்ளியின் தாளாளர் பேராசிரியர் உழ்.சுஜின் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு சாதனை படைத்த கதிர்செல்விக்கு சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த ஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ -மாணவிகளுக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார். அப்போது பேசியபோது, "இங்குள்ள மாணவ -மாணவிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு கதிர் செல்வி. மாணவர்கள் நம்மால் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை, அடைய முடியாதது இல்லை. அடைய முடியும் என்ற உறுதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று உற்சாகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பள்ளியின் தாளாளர் பேராசிரியர் உழ்.சுஜின், "இந்த பள்ளியில் கல்வி மட்டுமல்ல, மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நற்பண்புகளையும் வளர்த்தெடுத்தோம். கதிர்செல்வி இந்தப் பள்ளி யில் நன்றாகப் படிக்கும் மாணவிகளில் ஒருவர். சாதிக்க வேண்டும் என்ற தொடர் முயற்சியால் மட்டுமே அவர் சாதனை படைத்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்கு இந்த சமுதாயம் கைதூக்கிவிடுகிறது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.
கதிர்செல்வியோ, "நான் இங்கே 2015-ல் படிப்பை முடித்து வெளியே சென்றேன். தற்போது 10 ஆண்டுகள் கடந்து சிறப்பு விருந்தினராக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பள்ளியில் கற்றுக்கொண்ட ஆங்கிலம், தமிழ்ப்புலமை, கையெழுத்து போன்ற பலவும் என் வெற்றிக்குத் தூண்களாக நின்றன. நான் இதற்குமுன் குரூப்-2 தேர்வெழுதி தோல்வியடைந்தேன்... அதனால் சோர்வடையவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து வெற்றிபெற்று உங்கள்முன் நிற்கிறேன்'' என்றார் நெகிழ்ச்சியாக.
இதனையறிந்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர் செல்வம், கதிர்செல்வியை அவரது வீட்டிற்கு அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.