Advertisment

காவல் நிலையத்தில் உயிரைவிட்ட விவசாயி! திண்டுக்கல் கொடுமை!

dd

காக்கிகள் தனது புகாரைத் தொடர்ந்து கிடப்பில் போட்டதைக் கண்டு மனம்நொந்துபோன ஒரு விவசாயி காவல் நிலையத்தில் விஷம்குடித்துத் தற்கொலை செய்திருக்கிறார்.

Advertisment

ff

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இருக்கும் குள்ளலகுண்டைச் சேர்ந்த விவசாயி பாண்டி. இவருக்கு கொடைரோடு சிறுமலை அடிவாரம் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியிலுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்று கூறி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அந்த புகார் மீது இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்துவந்தார்.

இதனால் பாண்டி நிலக்கோட்டை நீதிமன்றத்தை நாடி வழக்குப் பதிவு செய்வதற்கான உத்தரவையும் வாங்கிக்கொடுத்தார். இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை இன்ஸ்பெக்டர். மனம் நொந்துபோன விவசாயி பாண்டி, கடந்த 9-ஆம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத் திற்குச் சென்றவர்

காக்கிகள் தனது புகாரைத் தொடர்ந்து கிடப்பில் போட்டதைக் கண்டு மனம்நொந்துபோன ஒரு விவசாயி காவல் நிலையத்தில் விஷம்குடித்துத் தற்கொலை செய்திருக்கிறார்.

Advertisment

ff

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே இருக்கும் குள்ளலகுண்டைச் சேர்ந்த விவசாயி பாண்டி. இவருக்கு கொடைரோடு சிறுமலை அடிவாரம் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியிலுள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்று கூறி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தார். அந்த புகார் மீது இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்துவந்தார்.

இதனால் பாண்டி நிலக்கோட்டை நீதிமன்றத்தை நாடி வழக்குப் பதிவு செய்வதற்கான உத்தரவையும் வாங்கிக்கொடுத்தார். இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை இன்ஸ்பெக்டர். மனம் நொந்துபோன விவசாயி பாண்டி, கடந்த 9-ஆம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத் திற்குச் சென்றவர், காவல் நிலைய வாசல் படிமுன் உட்கார்ந்து விஷம்குடித்தார். அதைக் கண்ட காக்கி கள் உடனே பாண்டி யனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். அதைக் கண்டு உறவினர்கள் போராட்டத்தில் குதித்தபின்பே காக்கிகள் 3 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்தனர்.

d

பாண்டியன் உடன்பிறந்த சகோதரரான முனியாண்டி, "எங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை சுத்தி ஐ.ஜி. பாலசுப்பிரமணியனுக்கு 100 ஏக்கருக்கு மேல் உள்ளது. அதனால எங்க நிலத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேனேஜர் நாச்சியப் பன், சங்கர், சின்னகருப்பு ஆகியோர் தொடர்ந்து மிரட்டிவந்தனர். அதிகார பலத்தால் என் மேலேயும் என் அண்ணன் பாண்டி மேலேயும் பி.சி.ஆர். வழக்கு போடவைத்துவிட்டனர். அதைத் தொடர்ந்து எங்க நிலத்துக்குப் போகும்போதெல் லாம் வீண் வம்பு செய்து நிலத்தை அபகரிக்க முயற்சிசெய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட என் அண்ணன் மகன் சதீஷ்கண்ணனை மிரட்டினார்கள். அதைத் தொடர்ந்துதான் என் அண்ணனும் போலீசில் புகார் செய்தார். ஆனால் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி எதிர்த்தரப்பின ரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு எங்கள் புகார்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைப் பற்றி டி.எஸ்.பி. சுகுமாரிடம் புகார் கொடுத் தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனாலேயே எங்க அண்ணன் மனம் நொந்துபோய் சம்பவத் தன்று புகார் தரப்பு மேல் வழக்குபோடச் சொல்லி வலியுறுத்தினார். இன்ஸ்பெக்டர் கேட்காததால் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விஷத்தைக் குடித்து விட்டு உயிரிழந்துவிட்டார். அதன்பிறகுதான் எப்.ஐ.ஆர். போட்டிருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் இன்ஸ்பெக்டர்தான். அவர் மேல் கடுமை யான நடவடிக்கை எடுக்கவேண்டும்''’என்றார்

இதுசம்பந்தமாக காவல் நிலையத்திலுள்ள சில காக்கிகளிடம் கேட்டபோது..... "இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி ஸ்டேஷனுக்கு பொறுப்பேற்றதி லிருந்தே எல்லோரையும் மரியாதை இல்லாமல் தான் பேசுவார். பலமுறை பாண்டி போலீஸ் ஸ்டே ஷனுக்கு வந்து, என்ன நடவடிக்கை எடுத்திருக் கிறீர்கள் என்று கேட்டாலும் இன்ஸ்பெக்டர் பதில் சொல்வதில்லை. அன்றும், எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேனென்கிறீர்கள். நான் செத்தால்தான் எப்.ஐ.ஆர். போடுவீர்கள், என்று பாண்டி கூறினார். அதற்கு இன்ஸ்பெக்டர் மரியாதை இல்லாமல் வாய்க்கு வந்தபடி அசிங்கமாகப் பேசினார். அதனால்தான் பாண்டி மறைத்துவைத்திருந்த விஷ மருந்தை எடுத்து போலீஸ் ஸ்டேஷன் வாசப்படி முன்னே குடித்துவிட்டு உட்கார்ந்துவிட்டார். இந்த விஷயம் இன்ஸ்பெக்டருக்குத் தெரிந்தும்கூட எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் பாண்டி முன் நின்றபடி போன் பேசிக்கொண்டே இருந்தார். பாண்டி மயங்கி விழுந்தபோதும் இன்ஸ்பெக்டர் கண்டுகொள்ளவில்லை. பிறகு காவல் நிலையத் திற்கு வந்த ஆம்புலன்ஸ்மூலம் பாண்டியை சிகிச்சைக்கு அனுப்பிவைத்தும் பலனில்லாமல் போய்விட்டது.

உயிரின் மதிப்பு தெரியாமல் கல்நெஞ்சக் காரியாக இன்ஸ்பெக்டர் இருந்தது வேதனை. இந்த ஸ்டேஷனுக்கு பொறுப்பேற்ற இரண்டு வருட காலத்தில், பொதுமக்களையும் போலீஸ் காரர்களையும் வாய்க்கு வந்தபடி அசிங்கமாகப் பேசுவதுதான் இந்த அம்மாவுடைய பாணி. ரோல்காலில் போலீஸ்காரர்களை மரியாதை இல்லாமல் பேசுவார். இந்த இன்ஸ்பெக்டரின் செயல்பாடுகள் மூலம் அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்பட்டுவருகிறது'' என்று கூறினார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி விளக்கம் கேட்க இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியை பலமுறை செல்மூலம் தொடர்புகொண்டும் நம்மைத் தவிர்த்துவிட்டார்.

இதுபற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரிடம் கேட்டபோது...... "பாண்டியன் மகன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து கொண்டுதான் இருந் திருக்கிறார். அதில் காலதாமதம் ஏற்பட்டி ருக்கிறது. அதற்காக இப்படி ஒரு முடி வெடுத்தது வருத்த மாக இருக்கிறது. ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே உள்ள டீக் கடையில் விஷம் குடித்துவிட்டுத்தான் அந்த பாண்டி காவல் நிலையத்தில் முன் உட்கார்ந்திருக்கிறார். டி.எஸ்.பி. தலைமையில் விசாரணைக் குழு அமைத்திருக்கிறேன். சம்பந்தப் பட்ட இன்ஸ்பெக்டர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்தபின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக.

-சக்தி

nkn180223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe