திருவண்ணாமலை தி.மு.க.வில் குடும்ப மல்லுக்கட்டு! அ.தி.மு.க.வில் அதிகார உள்குத்து!

tmalai

ருள்மிகு அண்ணாமலையார் ஆட்சிபுரியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, செங்கம் (தனி), கலசப்பாக்கம், போளூர், வந்தவாசி (தனி), செய்யார் என 8 தொகுதிகள் இருக்கின்றன. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அந்தக் கட்சிகளின் கூட்டணிக் கட்சிகள் சார்பில் எட்டு தொகுதிகளுக்கு முட்டிமோதும் கட்சிப் புள்ளிகள் யார், யாரென பார்ப்போம்.

evavelu

திருவண்ணாமலை

அ.தி.மு.க.: "கடந்த ஐந்து தேர்தல்களிலும் இரட்டை இலை இங்கே துளிர்க்க முடியவில்லை. அதனால் இந்தமுறை எப்படியாவது துளிர்க்க வைத்துவிட வேண்டும், நான் துளிர்க்க வைக்கிறேன், தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவையும் சமாளிக்கிறேன்' என தயார் நிலையில் இருக்கிறார் மாஜி அமைச்சரான ராமச்சந்திரன். மாஜி மா.செ.வும் இப்போது மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவராகவும் இருக்கும் ராஜனும் "ரெடி' என்கிறார்கள் ர.ர.க்கள். இவர்கள்போக அமைப்புசாரா ஓட்டுனர் அணியின் மா.செ. சுனில்குமார், ஜெ. பேரவை மா.செ. பீரங்கி வெங்கடேசன், மாணவரணி மா.செ. சத்யா சிவக்குமார் ஆகியோரும் லிஸ்ட்டில் இருக்கி றார்கள்.

ஆனால் அ.தி.மு.க.வின் ஹெட்மாஸ்டரான பா.ஜ.க.வின் தொகுதி லிஸ்ட்டில் இத்தொகுதி இருப்பதால், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆசியுடன் களம் இறங்க தயாராக இருக்கிறார் மாநில வர்த்தக அணி துணைத்தலைவரும் சினிமா தயாரிப்பாளருமான தணிகைவேல்.

தி.மு.க.: கட்சி ஆரம்பித்த பின் முதல் எம்.பி.யைத் தந்த தொகுதி, முதல் நகராட்சியை பெற்ற ஊர் என்பதால் தி.மு.க. இங்கே வலுவாகவே இருக்கிறது. அதனால் இந்த முறையும் எ.வ.வேலுவுக்குப் போட்டியாக யாரும் சீட் கேட்க வாய்ப்பில்லை.

செ

செங்கம் (தனி)

அ.தி.மு.க.: மாவட்ட ஊராட்சிக் குழு மாஜி தலைவர் நைனாக்கண்ணு, 2016 தேர்தலில் தோற்ற வக்கீல் தினகரன் மற்றும் பத்மா முனிக்கண்ணு, தொழிலதிபர் சத்யா போன்றோர், மாஜி அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வலம்வருகிறார்கள்.

தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வான மு.பெ.கிரி மீண்டும் சீட் வாங்கிவிட வேண்டும் என எ.வ.வேலுவை கிரிவலம் வருகிறார். இவருக்கு எதிராக புதுப்பாளையம் சேர்மனும் மா.து.செ.வுமான சுந்தரபாண்டியனோ "எனக்கு இல்லேன்னா என்னோட மகனுக்கு' என "வேலுவின் மகன் கம்பன் காப்பாற்றுவார்' என்ற நம்பிக்கையில் உள்ளார். தண்டராம்பட்டு எல்.ஐ.சி. வேலுவோ, "அப்பாவும் மகனும் எனக்கு சப்போர்ட்' என்கிறார்.

tmalaipolitics

கீழ்பெண்ணாத்தூர்

அ.தி.மு.க.: மாஜி எம்.எல்.ஏ.அரங்கநாதன், தொழிலாளர் அணி மாஜி மா.செ. தொப்பளான், தொகுதிச் செயலாளர் தட்சணாமூர்த்தி, வேட்டவலம் செல்வமணி ஆகியோரின் மல்லுக்கட்டு தொடர்கிறது.

கூட்டணிப் பங்காளியான பா.ம.க.வின் கைகளில் இருக்கும் லிஸ்ட்டில் இத்தொகுதிக்கு முக்கியத்துவம் இருப்பதால் "வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் காளிதாஸுக்கு சீட் கன்ஃபார்ம்' என்கிறது பாட்டாளி சொந்தம் ஏரியா. "தே.மு.தி.க.வுக்கு தொகுதி போச்சுனா மாநில தேர்தல் பணிக்குழுச் செயலாளரான மணிகண்டனுக்கு வாய்ப்பு நிச்சயம் என்கிறார்கள்' முரசு பார்ட்டிகள்.

தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாஜி அமைச்சர் பிச்சாண்டிக்கு கட்சியினர் மத்தியில் அமோக வரவேற்பும் ஒத்துழைப்பும் இருப்பதால், "இவருக்கே மீண்டும் சீட் கிடைக்கும்' என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

கலசப்பாக்கம்

அ.தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பன்னீர்செல்வம் தனக்குத்தான் மீண்டும் என்ற நம்பிக்கையில் இப்போதே வேலையை ஆரம்பித்து விட்டார். ஆனால் மீண்டும் லைம்லட்டுக்கு வந்துள்ள மாஜி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியோ, "இந்த தொகுதியில் ரெண்டுவாட்டி ஜெயிச்சிருக்கேன், அதனால் நான்தான் நிற்பேன்'’’என எடப்பாடி ஆசியுடன் மல்லுக்கட்டி வருகிறார். "அக்ரிக்கு சீட் கொடுக்காதீங்க, மீறி கொடுத்தா நான் சுயேட்சையா களம் இறங்குவேன் என பயமுறுத்துகிறார்' பன்னீர்செல்வம். இவர்களின் அக்கப்போரை சமாளிப்பதா அல்லது அரசு வக்கீல் எழில்மாறன், மாவட்ட கலைப்பிரிவுச் செயலாளர் துரை ஆகிய இருவரில் ஒருவருக்கு கொடுப்பதா? என தவிக்கிறார் எடப்பாடி.

தி.மு.க.: கடந்த மூன்று தேர்தல்களாக கூட்டணிக் கட்சிகளே இத்தொகுதியில் போட்டியிடுவதால், இம்முறை தொகுதியில் தனது மகன் கம்பனை களமிறக்கலாம் என வேலையை ஆரம்பித்தார் மா.செ. எ.வ.வேலு. "அப்பாவுக்கு திருவண்ணா மலை, மகனுக்கு இங்கேன்னா நாங்க எங்கே போறது?' என தொகுதி நிர்வாகிகள் மத்தியில் குமுறல் எழுந்ததால், கம்பனை நிறுத்தும் முடிவைத் தள்ளி வைத்துவிட்டார் வேலு. அதனால் மாஜி சேர்மன் ஸ்ரீதரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மனோகரன், ஒ.செ. வக்கீல் சுப்பிரமணி ஆகியோர் மல்லுக்கட்டி வருகின்றனர். மா.து.செ. சாவல்பூண்டி சுந்தரேசன், மாஜி எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங் கடம் மகன் சரவணன் ஆகியோரும் களம் காண ரெடி.

ஒருவேளை கூட்டணியான காங்கிரசுக்குப் போனால் மாவட்டத் தலைவர் குமார் காத்திருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. மா.செ. நேருவும் வெயிட்டிங்கில் இருக்கிறார்.

tmalaipolitics

போளூர்

அ.தி.மு.க.: மாஜி எம்.எல்.ஏ.க்களான ஜெயசுதா, அன்பழகன், மாஜி சேர்மன் ராஜன், மாஜி மகளிரணி இந்திரா பாலமுருகன் ஆகியோர் அமைச்சர் சேவூர் ராமசந்திரனை சேவித்து வருகிறார்கள். கலசப்பாக்கத்தில் பன்னீர் குடைச்சல் அதிகமானால் இங்கே நிற்கலாமா என யோசிக்கிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. கூட்டணியான பா.ஜ.க.விற்குப் போனால், தி.மு.க.விலிருந்து ஜம்பாகி, இப்போது பிற்படுத்தப்பட்டோர் அணியில் மாநில துணைத் தலைவராக உள்ள ஏழுமலைக்கு கிடைக்கலாம். தி.மு.க. கூட் டணியில் காங்கிரசின் வசந்தராஜுக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வான கே.வி.சேகரனுக்கு கட்சியினர் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் மா.செ. வேலு காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் எம்.கே.பாபு, இளைஞரணி அமைப்பாளர் நரேஷ்குமார், சேகரனின் அண்ணன் மகன் சுரேஷ்பாபு, சேத்பட் ஒ.செ. எழில்மாறன், ந.செ. முருகன் என பெரும்படையே காத்திருக்கிறது.

ஆரணி

அ.தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனைத் தவிர வேறு யாரும் சீட்கேட்க விரும்பாத மாதிரி இருந்தது. ஆனால் மாஜி எம்.எல்.ஏ.வான பாபு முருகவேல், பால்கூட்டுறவு சங்கத் தலைவர் பாரிபாபு, ஒ.செ. சங்கர், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் இப்போது வேகம்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தி.மு.க.: மாஜி மா.செ. சிவானந்தத்தின் மகன் பாபு, ந.செ. மணி, ஒ.செ.க்கள் அன்பழகன், தட்சணாமூர்த்தி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் ஆகியோர் ரேசில் உள்ளனர். கூட்டணியான காங்கிரசிலோ மா.த. அண்ணாமலை, து.த. அருணகிரி ஆகியோரும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வின் மாநில து.செ. வேலாயுதமும் கனவில் இருக்கிறர்கள்.

வந்தவாசி (தனி)

அ.தி.மு.க.: மா.து.செ. விமலா மகேந்திரன், மகளிரணி து.செ. அன்னபூரணி, மேகநாதன், ஜெ.பேரவை ஒ.செ.முனுசாமி, சக்கரபாணி, சிவராஜ் ஆகியோர் மா.செ. தூசி மோகனை வட்டமிட்டு வருகிறார்கள்.

தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வும் சினிமா தயாரிப்பாளருமான அம்பேத்குமாருக்குப் போட்டியாக மா.து.செ. லோகநாதன், தொழிலதிபர் சங்கீதாகுமார், சுந்தர் கருணாநிதி, மாவட்ட மருத்துவரணி து.செ. ராஜேந்திரன் ஆகியோர் மல்லுக்கட்டு கிறார்கள். கூட்டணிக் கட்சியான வி.சி.க.வுக்கு அலாட் ஆனால் மா.செ. பாஸ்கருக்கு சீட் கிடைக்கலாம்.

செய்யார்

அ.தி.மு.க.: சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான தூசி மோக னுக்கு மீண்டும் கிடைத்துவிடக் கூடாது என தீவிரம் காட்டுகிறார் மாஜி முக்கூர் சுப் பிரமணி. வெம்பாக்கம் ஒன்றியக் குழு தலைவர் மாமண்டூர் ராஜியும் ரெடியாக இருக்கிறார். பா.ம.க.வில் அன்னை சீனுவாசன், பி.கா.சீனுவாசன், மாஜி எம்.எல்.ஏ. கணேஷ்குமார், தே.மு.தி.க.வில் மாஜி மா.செ. சுப்பு கோபாலன், ம.நீ.ம.வில் மா.செ. சுரேஷ் ஆகியோர் ஜரூர் காட்டுகிறார்கள்.

தி.மு.க.: கடந்த மூன்று தேர்தல்களாக கூட்டணிக் கட்சி யான காங்கிரஸ்தான் இங்கு ஜெயிக்கிறது. 2016 தேர்தலின் போது மா.செ. எ.வ.வேலுவுக்கு எதிராக ஆவேசம் காட்டினார் கள் உ.பி.க்கள். அதனால் தொகுதி இந்தமுறை தி.மு.க.வுக்குத்தான் என்பதால், மாஜி எம்.எல்.ஏ. அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், மருத்துவர் அணி மகேந்திரன், ஒ.செ. ஜோதி ஆகியோர் ரெடி பொஸிசனில் இருக்கிறார்கள்.

படங்கள்: எம்.ஆர்.விவேகானந்தன்

nkn200121
இதையும் படியுங்கள்
Subscribe