""ஊரடங்கு வந்ததில் இருந்து ஒருநாளைக்கு ஐந்துவேளை சமைக்கிறேன். எப்பத்தான் இது முடியும். இவங்களுக்கு சமைத்துப் போட்டே என் ஜீவன் தீர்ந்திடும் போலிருக்கு'' -நாடெங்கிலும் இருக்கும் குடும்பப் பெண்களின் மனக்குமுறல் இதுவாகவே இருக்கிறது. இதுபோக, பொருளாதார சிக்கலும் சேர்ந்தே வாட்டியெடுக்க, பல வீடுகளில் குடும்ப வன்முறை சர்வ சாதாரணமாக வெடிக்கிறது. இதுபற்றி புகாரளிக்க கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு, தமிழகத்தில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இன்னும் வெளிவராத புகார்கள் எத்தனை எத்தனையோ. உலகம் சுருங்கி குடும்பமாகி இருக்கும் சூழலில், அதிகரிக்கும் குடும்ப வன்முறைகளுக்கான தீர்வு குறித்து மனநல மருத்துவர் ஷாலினியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

vv

மக்கள் பாதுகாப்புக்கான ஊரடங்கு, குடும்ப வன்முறையை ஊக்குவிக்கும் களமாக மாறியிருக்கிறதே?

கொரோனா ஊரடங்கு சமயத்தில் மக்களின் மனநலக் குறைபாடு பூதாகரமாக மாறும் என்பது முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதான். பிழைக்க வழியின்றி, வருமானம் இல்லாத குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவரையொருவர் முகத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏற்கனவே இருவருக்கும் இடையில் மனவருத்தம் இருந்திருந்தால், அது கைகலப்பாக மாறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. இதுமாதிரி சூழலில் பாதிக்கப்படுபவர்களைத் தற்காத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனமே அறிவித்திருக்கிறது. நம்மூரில் போலீûஸ அழைக்கச் சொல்கிறார்கள். போலீûஸ அழைத்தவளோடு வாழமாட்டேன் என்று சொல்லும் கணவன்களும் இருக்கும் சூழலில், இது கொஞ்சம் சிக்கலான பிரச்சனைதான்.

Advertisment

இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, வருமானத்திற்கான வழி இல்லாமல் போகும்போது பொருளாதாரச் சூழல் குடும்பத்தை அதிகமாக இறுக்கத் தொடங்கும். இந்தமாதிரி சமயத்தில் கையறு நிலையை உணரும் ஆண்கள், மிக மோசமாக நடந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஏற்கனவே அப்படியொரு சூழலுக்கு வந்து விட்டோம். இதை சரிசெய்யாவிட்டால் அல்லது நீட்டிக்கப்பட்டால் மேலும் பிரச்சனைகள் அதிகமாவதை நாம் பார்க்கவேண்டி வரும்.

ss

Advertisment

பொருளாதாரச் சிக்கல் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு சுமைகள் அதிகமாவதால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறதே?

குடும்பத்தின் மொத்த உறவுகளும் வீட்டில் இருக்கும்போது, அங்கு பெண்களுக்குத்தான் அதிக சுமை. தங்கள் தேவைகள் முடிந்த தும் ஆளுக்கொரு மூலையில் படுத்துக்கொண்டு செல்போனை நோண்டிக் கொண்டிருக்கும்போது, முன்பைவிட அதிகமாக உழைக்கும் பெண்களுக்கு, நாம் இப்படி மாட்டிக்கொண்டோமே என்ற மனஇறுக்கம் ஏற்படுகிறது. யாரோ ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தால், அவர்களின் சுமையில் பங்குகொள் ளும் மனப் பக்குவம் சொந்த வீட்டில் வராதது, பெண்களின் மனஇறுக் கத்தை அதிகமாக்குகிறது. இங்கு பெண்மையை, தாய்மையை போற்றி அவர்களை அடிமையாகவே வைத்து, செத்த பிறகு சிலை வைக் கும் பழக்கம்தான் இருக்கிறது. வாழும்போது அவர்களின் சுமை யைப் பங்கிட்டுக் கொள்வதுதான் முக்கியம்.

ஆண்களுக்கு வருமானம் இல்லாத சூழல், பெண்களின் மீதான சுமையை அதிகப்படுத்துமா?

vvபெரும்பான்மையான வீடுகளில் ஆண்கள் வேலைக்குச் செல்லவில்லை. பெண்களைப் பொறுத்தவரை ஆண்கள் சம்பாதித்துக் கொடுத் தால் நன்றாக கவனித்துக்கொள்வார்கள். அப்படி இல்லாத சூழலில், பெண்கள் தங்களை மதிப்ப தில்லை என்பதை ஆண்கள் உணர்கிறார்கள். அதுவே பிரச்சனைக்கும் காரணமாகிறது. இது போன்ற நேரங்களில், ‘இந்த நெருக்கடி தற்காலிகமானதுதான். சீக்கிரமே மீண்டுவிடுவோம்’ என்று பெண்கள் அரவணைத்துப் போகவேண்டியது அவசியம். அப்படிச் செய்தால், ஆண்களும் அளவுக்கதிகமாகக் கோபப்பட மாட்டார்கள்.

ஆண்களுக்கு இப்படி அடைந்து கிடப்பது கடினமான காரியம். தன்னால் முன்புபோல் இயல் பாக ஊர்சுற்ற முடியாததை எண்ணி, ஆண்கள் எரிச்சலில் இருப்பார்கள். அதைப் புரிந்துகொண்டு, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றாமல், ஆற்றுப்படுத்த வேண்டிய பொறுப்பு பெண்களுக் கானது. ஆனால், ஏற்கனவே குடும்பச் சுமையைத் தூக்கித் திணறும் பெண்களால், இதைக் கையாள முடியுமா? அந்தளவுக்கு அவர்களை இந்த சமூகம் உளவியல் ரீதியில் நவீனப்படுத்தி வைத்திருக்கிறதா? என்றால் அதுவும் கிடையாது. ஆகவே, ஒருவருக் கொருவர் நெருக்கடியையும், சுமையையும் புரிந்து நடக்க வேண்டும்.

இதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கும் இருக்கிறதுதானே?

தங்களுக்கான அடிப் படை சுதந்திரம் இல்லாத, மன நெருக்கத்தில் மக்கள் இருக் கிறார்கள். அதிலிருந்து வெளி வர, சில உத்தரவாதங்களை அவர்களுக்குத் தரவேண்டும். முதலில், இந்தத் தலையாய பிரச்சனையை நாங்கள் திறமையாகக் கையாள்கிறோம் என்ற நம்பிக்கையை அரசு ஏற்படுத்த வேண்டும். இது போக, மக்களுக்குத் தேவை யான அத்தியாவசியங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப் படும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதைச் செய்தால், மக்களும் நிலைமையைப் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு தருவார்கள். இதுதான் தலைமைப் பண்புக்குக் கிடைக்கும் வெகுமதி. அதை விட்டுவிட்டு கைத்தட்டுங்கள், விளக்கேற்றுங்கள், பெரியவர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள், தனிமையில் இருங்கள் என்று சொல்லிக் கொண்டி ருக்கிறது அரசு. மன உளைச்சலில் மக்களைத் தள்ளிவிடாமல் மக்களைக் காப்பதுதான் தலை வனின் பொறுப்பு. இது அரசுக்கும் பொருந்தும்.

சந்திப்பு : பெலிக்ஸ்

தொகுப்பு : ச.ப.மதிவாணன்