dddd

காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில் ஏற்கனவே தலைவராக இருந்தவர் கணேச மூர்த்தி. இவர் தி.மு.க. வேட்பாளராக 17-வது வார்டிலும் இவரது மருமகள் ஆனந்தி 15-வது வார்டிலும் களத்தில் குதித்துள்ளனர். பெரம்பலூர் நக ராட்சியில் தி.மு.க.வைச் சேர்ந்த சுரேஷ், நகரச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர். நகராட்சித் தேர்தலில் கட்சியிலிருந்து வாய்ப்புத் தரவில்லை என்பதால் இவர் 20-வது வார்டிலும் இவரது மனைவி ஷர்மிளா 14-வது வார்டிலும் சுயேட்சையாக போட்டியில் இறங்கியுள்ளனர்.

cad

Advertisment

டலூர் மாநகராட்சி தேர்தலில் நகரச் செயலாளர் ராஜா 20-வது வார்டிலும் இவரது மனைவி சுந்தரி 27-வது வார்டிலும் போட்டி போடுகின்றனர்.

திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் பா.ஜ.க. நிர்வாகிகளே நிற்கமறுத்துள்ளனர். 20-க்கும் மேற்பட்ட வார்டுகளில் நிற்க ஆள் இல்லை. பாஜக. 26-வது வார்டில் பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் ஆனந்தன் நிற்க, 25-வது வார்டில் அவரது மனைவி சுகந்தியை நிற்க வைத்துள்ளனர். இதுபற்றி பா.ஜ.க.வினரிடம் கேட்டபோது, "50 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆளும்கட்சி- எதிர்கட்சியா இருக்கற தி.மு.க., அ.தி.மு.க.வே ஒரே குடும்ப ஆட்களை நிறுத்தியிருக்காங்களே அதுக்கு என்ன சொல்றீங்க'’ என்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சியில் தி.மு.க. ந.செ. சாரதிகுமார் 10-வது வார்டிலும், அவரது அம்மா 1-வது வார்டிலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சியில் தி.மு.க. நகர அவைத்தலைவர், முன்னால் நகரமன்ற துணைத்தலைவர் பொன்.ராஜசேகர் 2-வது வார்டிலும், அவரது மனைவி உஷாராஜசேகர் 15-வது வார்டிலும் போட்டியிடு கிறார்கள். 27-வது வார்டில் அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளர் கீதாசுந்தர் போட்டியிடுகிறார். அவரது கணவர் சுந்தர் 30-வது வார்டிலும், இவர்களது மகன் பிரவீன்குமார் 14-வது வார்டிலும் போட்டியிடுகிறார்கள்.

இராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தியின் ஆதரவாளரான மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஏர்செல் விநோத் 4-வது வார்டிலும், அவரது மனைவி சுஜாதா 15-வது வார்டிலும் வேட்பாளராக்கப்பட்டுள்ளனர்.

புதியதாக உருவான சோளிங்கர் நகராட்சியில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் அசோகன் 14-வது வார்டில் கவுன்சிலருக்கு போட்டியிட, இவரது மனைவி தமிழ்ச்செல்வி 13-வது வார்டில் போட்டியிடுகின்றார். தி.மு.க. நகர நிர்வாகி யான பழனி 1-வது வார்டிலும், அவரது மனைவி வேண்டா 3-வது வார்டிலும் நிற்கின்றனர். வழக்கறிஞர் அணி நிர்வாகி யான அருண்ஆதி 24-வது வார்டுக்கும், இவரது மனைவி தீபஅரசி 25-வது வார்டுக்கும் வேட் பாளர். அ.தி.மு.க.வில் நகர அவைத் தலைவர் வாசு 3-வது வார்டி லும், அவரது மனைவி ப்ரியா 4-வது வார்டிலும் வேட்பாளர்.

திருவண்ணாமலை மாவட் டம் திருவத்திபுரம் நகராட்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மோகனவேல் 18-வது வார்டிலும், 13-வது வார்டில் அவரது மனைவி பேபியும் போட்டியிடுகிறார்கள். செய்யார் நகராட்சியில் பா.ம.க. மாவட்ட நிர்வாகி சீனுவாசன் 12-வது வார்டிலும், அவரது மனைவி பத்மப்ரியா 20-வது வார்டிலும் போட்டியிடுகிறார்கள்.

இப்படி தமிழகம் முழுவதுமே தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமின்றி கட்சி பேதமில்லாமல் கணவன்- மனைவி, அம்மா- மகன், அப்பா- மகள் என களத்தில் இறங்கியுள்ளதை அறியமுடிந்தது. இதனால் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் கொதித்துப் போயுள்ளதோடு, பல இடங்களில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேட்சையாகவும் களமிறங்கியுள்ளனர்.

cad

தடுமாறிய வேட்பாளர்கள்!

டலூர் மாநகரத்தில் 45 வார்டுகள் உள்ளன. இதில் 23 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் இறுதி நாளான கடந்த 4-ஆம் தேதி பெண் வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். மனு தாக்கல் அதிகாரியிடம், மனுத்தாக்கல் செய்பவர்கள் மட்டுமே உள்ளேசெல்வதற்கு அனுமதி என்று காவல்துறையினர் தெரிவித்துவிட்டனர். மனுத்தாக்கல் செய்ய உள்ளே சென்ற பெண் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களுடன் இணைக்கவேண்டிய டாக்குமெண்ட்கள் சரிவர இணைக்காமலும் மனுவை சிலர் முழுமையாக பூர்த்தி செய்யாமலும் இருந்ததை சரிசெய்து தருமாறு அதிகாரிகள் கூற, முதல் முதலாக தேர்தலில் நிற்கப்போகும் பெண் வேட்பாளர்கள் பலர் திணறிப் போனார்கள். அதன்பிறகு அவர்களுக்கு முன்மொழிய, வழிமொழிய வந்தவர்கள் ஓடி வந்து உதவி செய்து ஒருவழியாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

--எஸ்.பி.எஸ்., து.ராஜா

பத்மநாபபுரம் பாச மலர்கள்!

cad

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சி 19-வது வார்டில் 3-ஆவது முறையாக புலியூர்க்குறிச்சியை சேர்ந்த சிவா பா.ஜ.க.வில் போட்டியிடுகிறார். வழக்கமாக சிவாவை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் அவரது தங்கை ஜோதி போட்டியிடுவார். கடந்த இரு முறையும் இருவருமே தோல்வியடைந்ததால் வீட்டுக்குள்ளே ஒருவருக்கொருவர், "தோல்விக்கு நீதான் காரணம்' என மாறி, மாறி குற்றம்சாட்டி வந்தனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் அதே வார்டில் பா.ஜ.க. சார்பில் சிவா வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன் தங்கையிடம், "நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். அதனால் நான் நிற்கிறேன். நீ நிற்பதாக இருந்தால் சொல், நான் விலகிக் கொள்கிறேன், இருவரில் ஒருவர் வெற்றி பெறலாம்''”என்றார்.

இதற்கு சம்மதித்த ஜோதி, அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லி போட்டியிடுவதைத் தவிர்த்தார். இதனால் சிவா வெற்றிபெற இம்முறை அதிக வாய்ப்பு என மக்கள் கூறி வந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசிநாளான பிப்ரவரி 4-ஆம் தேதி திடீரென ஜோதி அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினரும் உறவினர்களும் ஜோதியிடம் மனுவை வாபஸ் வாங்கச் சொல்லி வலியுறுத்தியும் "முடியாது, அண்ணனைத் தோற்கடித்து நான் வெற்றி பெறுவேன்' என நம்பிக்கையோடு களத்தில் நிற்கிறார்.

-மணிகண்டன்