Advertisment

பொய் வழக்கு நித்தி சிஷ்யைகளுக்கு துணைபோகும் காவல்துறை

nithy

 

 

ன்னதான் இண்டர்போல் போலீசால் தேடப்படும் குற்றவாளியாக இருந்தாலும்,   தலைமறைவுக் குற்றவாளியான நித்தியானந்தாவின் செல்வாக்கு, தமிழக காவல்துறையில் எந்த அளவுக்கு ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது, கடந்த வாரம் ராஜபாளையத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisment

ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் வி.கணேஷ். ஆன்மிக வாதியான அவருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கும் நிலையில், நித்தியானந்தாவின் தொடக்க காலத்திலேயே அவரின் பேச்சுக்களால் கவரப்பட்டு நித்தியின் சீடராகவே மாறிவிட்டார். அதன் காரணமாக, ராஜபாளையம் அருகில் சேத்தூர் மற் றும் கோதைநாச்சியாள்புரம் ஆகிய ஊர்களிலுள்ள தனக்கு சொந்தமான பல ஏக்கர் சொத்துக்களை நித்தியானந்தா கேட்டதற்கேற்ப ஆன்மீகத் தொண்டு செய்வதற்காக நித்தியின் அறக்கட்ட ளைக்கு ஒப்படைத்திருக்கிறார் டாக்டர் வி.கணேஷ்.

அவ்வப்போது, கர்நாடக மாநிலம் பிடதியி லுள்ள நித்தியின் ஆசிரமத்திற்கு சென்று தங்கிவந்த அவருக்கு, ஒரு கட்டத்தில் நித்தியின் உண்மையான முகமும், அவரது பாலியல் சேட்டைகளும் தெரியவரவே அதிர்ச்சியடைந்தார். நித்தியின் பாலியல் குற்றச்சாட்டுகளை நக்கீரன் ஆதாரத் துடன் அம்பலப்படுத்தியதும் நித்தியிடமிருந்து முழுவதுமாக வெளியேறியவர், கர்நாடக மாநிலம் ராம் நகர் நீதிமன்றத்தில் நித்யானந்தாவிற்கு எதி ரான வழக்கிலும் முக்கிய சாட்சியாக மாறியுள்ளார். அதோடு, அறக்கட்டளைக்கு வழங்கிய தனது நிலங்களை ரத்துசெய்யும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

இந்து சமய அறக் கட்டளைக்கும், நித்திக்குமிடையே நடந்த ஒரு வழக்கில், “நித்யானந்தா அறக்கட்டளை ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவதில்லை” என நித்தி தரப்பு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யவே, அதைப் பயன்படுத்தி ஆன்மிகப் பணிக்காக நித்யா னந்தா அறக்கட்டளைக்கு வழங்கிய தனது சொத் துக்களை நீதிமன்றம் மூலமாகவே மீட்டுவிட்டார் டாக்டர் கணேஷ். ஆனால், அந்த இடங்களை விட்டு காலி செய்ய மறுத்தது நித்தி தரப்பு. 

Advertisment

ஆர்.டி.ஓ. உத்தரவோடு கடந்த சில மாதங் களுக்கு முன்னர் நித்தி சீடர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்திருக்கிறார் டாக்டர். கணேஷ். ஆனால், அதற்கு காவல்துறை ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, ‘தேடப்படும் குற்றவாளி யான நித்யானந்தா உயிரோடுதான் இருக்கிறாரா? அப்படியென்றால், அவர் எங்கு இருக்கிறார்?’ எனச் சரமாரியாக கேள்விகளைக் கேட்டு நித்தி தரப்பை அதிர வைத்தது நீதிமன்றம். 

இந்நிலையில்தான், நித்யானந்தாவின் பெண் சீடர்கள் சிலர், டாக்டர் கணேஷ் தங்களை பாலியல்ரீதியாக துன்புறுத்துவதாக பொய்யான புகார் ஒன்றை ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அளிக்கவே, ஆய்வாளர் ராஜேஷ் மற் றும் உதவி ஆய்வாளர் கௌதம் ஆகியோர், கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று டாக்டர் கணேஷ் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, இரவோடு இரவாக அவரை கைது செய்ய நேரம் குறித்திருக் கின்றனர். 

nithy1


ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் நடந்த இந்த தில்லுமுல்லு எஃப்.ஐ.ஆர். குறித்தும், இந்த விசயத்தில் ஏற்கெனவே இங்கு பணியாற்றிய பெண் டி.எஸ்.பி. ஒருவருக்கும் தொடர்பு இருப்ப தாகவும், உளவுத்துறை மூலமாக காவல்துறையின் மேலிடத்திற்கு தகவல் சென்றிருக்கிறது. 

தேடப்படும் குற்றவாளிக்கு ஆதரவாக, அவர் கள் கொடுத்த பொய்யான புகாரை விசாரிக்காம லேயே சமுதாயத்தின் முக்கிய பொறுப்பிலிருக்கும் வயதான மருத்துவர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட டி.ஜி.பி., இது தொடர்பாக உடனே விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும், தற்போது டி.ஐ.ஜி. விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில், டாக்டர் கணேஷை தொடர்புகொள்ள இயலாததால், அவரது வழக்கறிஞர் பாளையங்கோட்டை அய்யா என்பவரிடம் பேசினோம்.

“நித்தியானந்தாவிற்கு எதிராக கர்நாடக மாநிலம் ராம் நகர் நீதிமன்றத்தில் நடக்கும் பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியாக இருப்பவர் டாக்டர் கணேஷ். அவரை எப்படியாவது, அந்த வழக்கில் சாட்சி  சொல்லாமல் தடுத்திட வேண்டு மென்று கடுமையாக முயற்சி செய்து வருகிறது  நித்யானந்தா தரப்பு. 

சிவகாசி கோட்டாட்சியர் உத்தரவிட்ட பிறகும் டாக்டருக்கு சொந்தமான இடத்தை காலி செய்யாமல் அதை எப்படியாவது அபகரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், நித்தியின் சீடர்கள் சிலர் பொய்யான பாலியல் புகாரைக் கொடுத்திருக்கிறார்கள். அதை விசாரிக்காமலேயே டாக்டர் கணேஷ் மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. 

இந்த விவகாரத்தில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் எஸ்.ஐ. கௌதம் விஜய் ஆகியோர் நித்தி தரப்பிடம் விலைபோய் விட்டர்களோ? என்ற சந்தேகமே எழுகிறது’.’தற்போது டாக்டருக்கு சொந்தமான இடத்தில், ‘கைலாசா -ராஜபாளையம்’ என்ற பெயரை காவி எழுத்துக்களில் எழுதி, அங்கிருந்து வெளியேற மறுக்கும் நித்தியின் பெண் சீடர்களும், ஆண் சீடர்களும் இரவெல்லாம், போதைப் பொருளை பயன்படுத்தி கும்மாளம் போடுவ தாகப் பலரும் கூறுகிறார்கள்''’என்ற அதிர்ச்சித் தகவலை நம்மிடம் தெரிவித்தார்.

இந்த கைலாசாவாசிகளின் ஐலேசா ஆட்டத்தை என் றைக்குத்தான் அடக்குமோ தமி ழக காவல்துறை?

 

nkn050725
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe