கோட்டைகளில் விழுந்த ஓட்டைகள்! -தி.மு.க. வெற்றி ரகசியம்!

99

ந்தமுறை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு தொகுதிகளையும் அதிரடியாக தி.மு.க தன்வசப்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க. வசம் இருந்த கரூர் தொகுதி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க வசம் வந்துள்ளது. தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரான செந்தில் பாலாஜி, இரவு பகல் பாராமல் அதிகாலை 3 மணிவரை, கட்சித் தொண்டர்களை அழைத்துப் பேசி, வெற்றிக்கான வியூகங் களை வகுத்தபடியே இருந்தார். அதிகாலை மூன்று மணிக்குப் படுத்தாலும், மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத

ந்தமுறை கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு தொகுதிகளையும் அதிரடியாக தி.மு.க தன்வசப்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க. வசம் இருந்த கரூர் தொகுதி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க வசம் வந்துள்ளது. தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரான செந்தில் பாலாஜி, இரவு பகல் பாராமல் அதிகாலை 3 மணிவரை, கட்சித் தொண்டர்களை அழைத்துப் பேசி, வெற்றிக்கான வியூகங் களை வகுத்தபடியே இருந்தார். அதிகாலை மூன்று மணிக்குப் படுத்தாலும், மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இப்படி 25 நாட்கள் முழுமையாக தன்னுடைய உழைப்பை அவர் தேர்தல் களத்தில் கொட்டியதன் விளைவு தான், இப்படியொரு வெற்றியை, தி.மு.க.வுக்கு அங்கே தேடித் தந்திருக்கிறது.

g

அதேபோல் அ.தி.மு.க. கோட்டையாகவே இருந்து வந்த கிருஷ்ண ராயபுரம் (தனி) தி.மு.க. வசம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பெண்களுக்கான சலுகை அறிவிப்புகள், பெண் வாக்காளர்களைக் கவர, தி.மு.க சார்பில் போட்டியிட்ட சிவகாம சுந்தரி, அ.தி.மு.க. வேட்பாளர் தானேஷ் முத்துக்குமாரை விட 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார்

"தி.மு.க.வுக்கு நம்பிக்கை இல்லாததாலும், உள்ளடிகளாலும் மணப்பாறை தொகுதி ம.ம.க. வுக்கு ஒதுக்கப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அப்துல் சமத் பெற்றுள்ள வெற்றி தி.மு.க கூட்டணிக்கே இன்ப அதிர்ச்சிதான். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சந்திரசேகர் தன்னுடைய சமுதாயமான ஊராளிக் கவுண்டர் சமுதாயத்திற்கு கொடுக்கவேண்டிய பணத்தை, முறையாகக் கொடுக்காமல் அதனை வைக்கோல் போருக்குள் மறைத்து வைத்திருந்தது, ரெய்டில் அம்பலப்பட்டது. அ.தி.முக. வேட்பாளர் தங்களை ஏமாற்றிவிட்டதாக கோபம்கொண்ட அந்த சமுதாயத்தினரின் வாக்குகள் திசைமாறியுள்ளன. இதுதான் தொகுதியின் முடிவுகள் மாற அடிப்படையான காரணம்' என்கிறார்கள்.

இதேபோல் ஜெ.வின் ஃபேவரைட் தொகுதியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாஜி கு.ப.கிருஷ்ணன் பலகட்ட போராட்டங்களுக்குப் பின்னரும் தோல்வியடைந் திருக்கிறார்.

அமைச்சராக இருந்தபோது, இவர் வாரிக் குவித்திருந்த பணத்தில் இருந்து, தன் சமூகத்தினருக்கும் இவர் 1 ரூபாயைக் கூட கொடுக்காமல், ரெய்டுக்கு பயந்து வைக்கோல் போரில் மறைத்து வைத்தும், மூட்டை மூட்டையாகக் கட்டி ஆற்றில் தூக்கி வீசியும், வித்தை காட்டினார். இந்த பழைய நிகழ்ச்சியை 30 வருடங்கள் கடந்தும் மக்கள் மறக்காமல் மனதில் வைத்திருந்து, அவருக்குப் பாடம் கற்பித்துவிட்டனர். இதனால் தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி, பக்தி மணம் கமழும் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜனநாயகப் பிரசாதமாக வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

nkn080521
இதையும் படியுங்கள்
Subscribe