Advertisment

மன்மத தீட்சைதரும் போலி யோகி!- பின்னணியில் அ.தி.மு.க. மாஜி!

ss

மிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலை களுக்கும் பஞ்சமே ஏற்படுவதில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன. கொடுமை என்னவென்றால், இப்படிப்பட்ட போலிச் சாமியார்களின் பின்னணியில் அரசியல் பெரும்புள்ளிகள் இருப்பதுதான்!

நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள், "போலிச்சாமியார் அமல்ராஜ் என்கிற ஆத்ம நண்பன் ரஞ்சித்குமார், இல்லாத ஏடாகூடமெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கார். தன்னை ஒரு சாமியாரின் மறுபிறவி என்றும், தியானத்தால் இறைவன் அருள்பெற்று தான் முக்தியடைந்துள்ளதாகவும், எனவே தன்னை யோகி, குருசாமி என்று அழைக்கும்படி பலரையும் நம்ப வச்சிருக்கார். தீட்சை தர்றதாச் சொல்லி குடும்பப் பெண்களிடம் பாலியல்ரீதியாகத் தகாதமுறையில் நடந்துக் கிட்டும் இருக்கார். அவர் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வச்சாகணும்'' என நம்மை அழைத்தனர்.

Advertisment

ss

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து இந்த அழைப்பு வந்ததால், நாம் உடனடியாக கோவை துடியலூரில் ஆஜரானோம். அந்த அமல்ராஜ், யோகிக் இன்சைட்ஸ் என்ற அறக்கட்டளையையும் அங்கே நடத்திவருவது தெரியவந்தது.

நமக்கு அழைப்பு விடுத்தவர்கள் சொன்ன தகவல்கள் பகீர் ரகத்தைச் சேர்ந்தவை. "அந்த அமல்ராஜ், பக்கா கில்லாடிங்க. ஆன்லைன் கூட்டங்களை நடத்துவதோடு, யூட்யூப்பிலும் இந்த ஆள் ஆன்மீக உரை செய்துவருகிறார். அதோடு, தியான வகுப்புகள் என்ற போர்வை யிலும் சீன் போட்டு ஏமாற்றுகிறார். இப் படியெல்லாம் பிரபலமாகி, இவர், அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா, இலங்கைன்னு பல்வேறு நாடுகளுக்கும் போய், ஆன்மீக சொற்பொழிவு களைச் செய்கிறார். இவரது சமூக ஊடக விளம்பரங்களையும், யூட்யூப் பேச்சுக்களையும் பார்த்து, அவரைத் தேடி வருகிறவர்களை பேசிப்பேசியே வசியம் பண்ணி ஏகத்துக்கும் வசூல் பண்றார். அதோட, தியானத்தின் மூலமாகவே தீட்சை தந்து, ஜீவ சமாதி என்னும் முக்தி நிலையையும் அடைய வைக்கிறேன்னு சொல்லி புருடா விடுவார்.

Advertisment

ssss

குழந்தைகளோடு வரும் பெண்களிடம், உங்கள் குழந்தைகள் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள். அவர்களைச் சரிசெய்கிறேன்னு சொல்லி, சில பாடல்களைப் போட்டு அவர்களை ஆடவைப்பார். அப்படி குழந்தை களிடம் அன்பாக இருப்பதுபோல் நடித்து, பெண்களிடம் நம்பிக

மிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலை களுக்கும் பஞ்சமே ஏற்படுவதில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன. கொடுமை என்னவென்றால், இப்படிப்பட்ட போலிச் சாமியார்களின் பின்னணியில் அரசியல் பெரும்புள்ளிகள் இருப்பதுதான்!

நம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள், "போலிச்சாமியார் அமல்ராஜ் என்கிற ஆத்ம நண்பன் ரஞ்சித்குமார், இல்லாத ஏடாகூடமெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கார். தன்னை ஒரு சாமியாரின் மறுபிறவி என்றும், தியானத்தால் இறைவன் அருள்பெற்று தான் முக்தியடைந்துள்ளதாகவும், எனவே தன்னை யோகி, குருசாமி என்று அழைக்கும்படி பலரையும் நம்ப வச்சிருக்கார். தீட்சை தர்றதாச் சொல்லி குடும்பப் பெண்களிடம் பாலியல்ரீதியாகத் தகாதமுறையில் நடந்துக் கிட்டும் இருக்கார். அவர் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வச்சாகணும்'' என நம்மை அழைத்தனர்.

Advertisment

ss

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து இந்த அழைப்பு வந்ததால், நாம் உடனடியாக கோவை துடியலூரில் ஆஜரானோம். அந்த அமல்ராஜ், யோகிக் இன்சைட்ஸ் என்ற அறக்கட்டளையையும் அங்கே நடத்திவருவது தெரியவந்தது.

நமக்கு அழைப்பு விடுத்தவர்கள் சொன்ன தகவல்கள் பகீர் ரகத்தைச் சேர்ந்தவை. "அந்த அமல்ராஜ், பக்கா கில்லாடிங்க. ஆன்லைன் கூட்டங்களை நடத்துவதோடு, யூட்யூப்பிலும் இந்த ஆள் ஆன்மீக உரை செய்துவருகிறார். அதோடு, தியான வகுப்புகள் என்ற போர்வை யிலும் சீன் போட்டு ஏமாற்றுகிறார். இப் படியெல்லாம் பிரபலமாகி, இவர், அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா, இலங்கைன்னு பல்வேறு நாடுகளுக்கும் போய், ஆன்மீக சொற்பொழிவு களைச் செய்கிறார். இவரது சமூக ஊடக விளம்பரங்களையும், யூட்யூப் பேச்சுக்களையும் பார்த்து, அவரைத் தேடி வருகிறவர்களை பேசிப்பேசியே வசியம் பண்ணி ஏகத்துக்கும் வசூல் பண்றார். அதோட, தியானத்தின் மூலமாகவே தீட்சை தந்து, ஜீவ சமாதி என்னும் முக்தி நிலையையும் அடைய வைக்கிறேன்னு சொல்லி புருடா விடுவார்.

Advertisment

ssss

குழந்தைகளோடு வரும் பெண்களிடம், உங்கள் குழந்தைகள் மன அழுத்தத்தோடு இருக்கிறார்கள். அவர்களைச் சரிசெய்கிறேன்னு சொல்லி, சில பாடல்களைப் போட்டு அவர்களை ஆடவைப்பார். அப்படி குழந்தை களிடம் அன்பாக இருப்பதுபோல் நடித்து, பெண்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவார். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகப் பேசியே அவர்களுக்கு தீட்சை ஆசையை ஏற்படுத்தி, அந்த சமயத்தில் அவர்களைத் தன் இச்சைக்குப் பயன்படுத்தி வருகிறார். சிலரை அவர் மிரட்டியே பணிய வைப்பதாகவும் தெரிகிறது. இப்படியாகப் பெண்களை வீழ்த்துவதே அவரது முழுநேர வேலையாக இருக்கிறது. இனியும் பெண்கள் அவர் வலையில் சிக்காதபடி நக்கீரன் தான் காப்பாற்றவேண்டும்'' என்றார்கள் கவலை யாய்.

அவர்களில் ஒரு பெரியவரோ "அந்த ஆள் ஒரு பெண்ணை தனது சீடராக ஆக்கிக்கிறேன்னு சொல்லி, அவரைத் தன் ஆசைப்பதுமையாக ஆக்கிக்கிட்டார். தான் செல்லும் வெளியூர்களுக்கும், வெளிநாடு களுக்கும் அழைத்துச்சென்றவர், அவரை ரகசியமாகத் திருமணமும் செய்துக்கிட்டதாச் சொல்றாங்க. இதையறிந்ததும் அந்த அமல்ராஜின் மனைவி தமிழ்ச்செல்வி, அவர்மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அவரையும் அமல்ராஜ் மிரட்டி அனுப்பிவிட்டாராம். இதேபோல சோனியா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணையும் தன் இச்சைக்கு பயன்படுத்திய இந்த போலிச் சாமியார், அந்தப் பெண் சுய உணர்வோட தனக்கு நீதி கேட்டப்ப, அவரோடு வைத்திருந்த அந்த முறையற்ற தொடர்பை அவர் குடும்பத்திற்கே போட்டுக் கொடுத்துட் டார் அமல்ராஜ். அதனால் அந்தப் பெண் ணின் குடும்பமே இப்ப சின்னாபின்னமா ஆயிடுச்சி. இப்படி சாமியார், யோகிங்கிற போர்வையில் நிறைய பேரை அந்த ஆள் ஏமாற்றி வருகிறார். இப்படிப்பட்ட அயோக்கியனுக்கு பெரிய மனுசங்களின் ஆதரவும் இருப்பதுதான் வெட்கக்கேடு'' என்றார் எரிச்சலாக.

இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரை நாம் சந்தித்தபோது, குடும்ப நலன் கருதித் தங்கள் பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோடு பேச ஆரம்பித்தனர்...

ss

"இந்த ஆள், தீட்சை தர்றேன்னு சொல்லி, தனி அறைக்குள் அழைச்சிட்டுப் போய், தகாத இடங்களைத் தொடுவான். அதில் அதிர்ச்சியாகி, யோகியான நீங்களே இப்படிப் பண்ணலாமான்னு கேட்டா, இது ஆன்மிகத்தில் ஒரு டெக்னிக்குன்னு சொல்வான். அவன் நோக்கம் தெரிஞ்சி, உதறிக்கிட்டு நாங்க ஓடிவந்துட்டோம். ஆனால் பயந்துபோய் தவிக்கும் பெண்கள் பலரையும் அவன், தன் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கான். சில பெண்களை, தீட்சைங்கிற பேரில் அவன், உடம்பின் சில இடங்களில் தொட்ட வீடியோவைக் காட்டி, நான் சொல்றதைக் கேட்காட்டி, இந்த வீடியோவை உங்க குடும்பத்தினரிடம் காட்டுவேன்னு மிரட்டியே, பணிய வச்சிருக்கான். பெண்களை மட்டுமல்ல, சிறுமிகளிடமும் அவன் இப்படி அசிங்கமா நடந்திருக்கான். அதேபோல் பல பெண்களை சென்னை, கோவை, திருச்சி, பெங்களூர்னு தான் போகும் ஊர்களுக்கெல்லாம் அழைச்சிக்கிட்டுப் போய், அங்கு அவர்களை வேட்டையாடிட்டு இருக்கான். இந்த லட்சணத்தில் இந்த மோசடி சாமியார், கோயில் ஒன்றைக் கட்டறான். சில அரசியல்வாதிகள் ஆதரவோட, ஆடம்பரமா விழா நடத்தி, அந்தக் கோயிலை அவன் திறக்கப் போறானாம். இவனால் இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்படப் போறாங்களோ தெரியலை. ஆன்மிகத்தின் பேரில் இப்படி அசிங்கமா நடக்குற இவனைப் போன்ற வில்லன்களை வெளியே நடமாடவே விடக்கூடாது. மக்கள் மத்தியில் வச்சே செமத்தியா உதை கொடுத்து, அவனைத் தண்டிக்கணும். அவனுக்கு ஆதரவா இருக்கும் பெரிய மனுசனுங்களையும் விடக்கூடாது'' என்றார்கள் ஆவேசமாக.

இந்த அமலராஜ் எந்த தைரியத்தில் இப்படி ஆன்மிகத்தின் பேரால் ஆபாசக் கூத்தடிக்கிறார்? அவர் பின்னணியில் இருக்கும் அரசியல்வாதிகள் யார்? என்றெல்லாம் நாம் அந்த போலி யோகி அமல்ராஜின் பின்னணி பற்றி விசாரித்தபோது, நமக்கு கிடைத்த அதிரவைக்கும் தகவல்கள் இவை.

கிறிஸ்தவரான அமல்ராஜுக்கு சொந்த ஊர் பொள்ளாச்சி. இவருக்கு 2007ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வி என்பவரோடு திருமணம் நடந்திருக்கிறது. கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இருவருமே பேராசிரியராக இருந்திருக்கிறார்கள். அதன்பிறகு அவருடைய மனைவிக்கு மின்சார வாரியத்தில் வேலை கிடைத்தவுடன் கல்லூரிப் பணியிலிருந்து விலகி, அந்த பணியில் சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில், பேராசிரியரான அமல்ராஜின் சில தவறான நடவடிக்கைகளால், அவர்மீது, கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு, தான் தங்கியிருந்த அரசுக் குடியிருப்புப் பகுதியில் கோயில் கட்டப்போவதாகச் சொல்லி வசூலில் இறங்கியிருக்கிறார். மக்களை நம்பவைக்க, கேரள மாநிலம் பாலக்கோட்டிலிருந்து தபோவன சித்தர் என்ற சாமியாரை அழைத்து வந்திருக்கிறார். அந்த தபோவன சித்தர் 2008-ல் மரணமடைய, அவர் ஜீவ சமாதி அடைந்ததாக அறிவித்திருக்கிறார்கள்.

ssஉடனே தபோவன சித்தரின் சீடராகத் தன் னை அறிவித்துக்கொண்ட அமல்ராஜ், ஆன்மிக நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார். கொரானா காலகட்டத் தில் வெளியில் செல்லமுடி யாத நிலை ஏற்பட்ட தால், வீட்டிலிருந்தபடியே தலைமுடியையும் தாடி யையும் வளர்த்துக்கொண் டவர், அமல்ராஜ் என்ற தனது பெயரை "ஆத்ம நண்பன் ரஞ்சித்' என மாற்றிக் கொண்டு தியானத்தில் இறங்கியிருக்கிறார். அதன்பின், தான் இறையருளால் முக்தி பெற்றதாகக் கூறிக்கொண்டு, ஆன்லைனில் பேசி வீடியோக்களை வெளியிட ஆரம் பித்திருக்கிறார். பின்னர், சாமியார் என்ற போர்வையில் தனி வீட்டிலிருந்தபடி தன் னுடைய லீலைகள் அனைத்தையும் அரங் கேற்ற ஆரம்பித்திருக்கிறார் அமல்ராஜ்.

இந்த போலிச் சாமியாருக்கு பக்கபலமாக இருப்பவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், அவரது பினாமியான அவர் சம்பந்தி சந்திரமோகனும் தானாம். தி.மு.க. முன்னாள் அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமியும், வேலுமணிக்கு நெருங்கிய நட்பில் உள்ளவர். அந்த வகையில் பொங்கலூர் பழனிச்சாமி, சம்பத் என்பவரை, நம்பிக்கையான ஆள் என்று வேலுமணிக்கு அறிமுகம் செய்துவைத்தாராம். அந்த சம்பத்தையும் பினாமியாக வைத்து உணவகங்களை வேலுமணி லண்டனில் நடத்திவருகிறார் என்கிறார்கள். இப்படி பினாமிகள் பலர் மூலமாக ஆஸ்திரேலியா, மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர் எனப் பல நாடுகளிலும் தனது கருப்புப்பணத்தைப் பெருமளவில் முதலீடு செய்திருக்கும் வேலுமணி, அவற்றை ஒயிட்டாக மாற்ற, ஈஷா போன்ற அறக்கட்டளைகள் வழியாக தமிழகத்திற்கு கொண்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறாராம். இந்தத் தகவல்கள் எல்லாம் வருமான வரித்துறைக்குச் சென்ற தால்தான் சில மாதங்களுக்கு முன் வேலுமணியைக் குறிவைத்து அதிரடி ரெய்டுகள் நடந்ததாம்.

தற்போது ஈஷா மையமும் பல்வேறு சிக்கல் களில் சிக்கியிருப்ப தால், வேலுமணி தரப்பு தங்கள் ரூட்டை மாற்றிக் கொண்டு, சிறுகுறு தொழில்களில் முதலீடு களைப் போட்டுவருகிறது என்கிறார்கள். மேலும், சின்ன அளவிலான இந்து அறக் கட்டளைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, அவர்கள் மூலமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியினைக் கைமாற்றி வருகிறார்களாம். இப்படி வேலுமணியின் முதலீடுகளை மாற்றுகிற அறக்கட்டளைகளில் ஒன்றாகவே, போலிச் சாமியாரின் ’யோகிக் இன்சைட்ஸ் அறக் கட்டளை’ செயல்பட்டு வருகிறது என்கிறார்கள். இந்த அறக்கட்டளைக்கான அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததிலிருந்து, சகலத்தையும் கவனித்துக்கொள்வது மாஜி வேலுமணியின் சம்பந்தி சந்திரமோகன் தானாம்.

இந்த அறக்கட்டளைக்கு இந்தியாவிற்குள் நிதிபெறும் அனுமதிச் சான்றிதழ் 80ஜியை, இரண்டே நாளில் பெற்றுக் கொடுத்தவரும் இந்த சந்திரமோகன்தான் என்கிறார்கள்.

இந்த போலி யோகியின் இன்சைட்ஸ் அறக்கட்டளைக்கு, வெளிநாடுகளிலிருந்து நிதி கைமாறுவதற்கான 12ஏ ஆவணத்தையும் பெற்றுத்தருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதன் மூலம், திருச்சிற்றம் பல சுவாமிகள் தபோவன மகா கோயில் என்ற பெயரில், தான் கட்டி வரும் கோயிலுக்கு, கும்பாபிஷேகப் பெருவிழா நடத்தவுள்ளார்களாம்.

அண்மையில் சென்னை அசோக் நகர் பள்ளியில் மைக் பிடித்து, "ஊனமாக பிறந்தவர்கள் அனைவருமே, முன்ஜென்மத்தில் பாவம் செய்தவர்களே' என ஏடாகூடமாகப் பேசி, அதிரடியாகக் கைதுசெய்யப்பட்ட மகாவிஷ்ணு, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ள இருக்கிறாராம் இந்த மகாவிஷ்ணு நடத்திவரும் அறக்கட்டளை மூலமாகவும், வேலுமணி தரப்பு நிதிப்பரிமாற்றம் செய்யலாம் என்கிற தகவலும் உலவுகிறது.

இதற்கு வலுச்சேர்ப்பது போல், நம் கவனத்துக்கு ஒரு ஆடியோ வந்தது. அதில், அமல்ராஜ், தன்னிடம் பணிபுரியும் ரங்கநாதனிடம் பேசியிருக்கிறார். அதில், "ரகு என்பவர் பல அமைச்சர்களிடம் நெருக்கமாக இருப்பவர். அவர் சோலார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவர் எனக்கு தம்பி மாதிரி. அவருக்கு நம்முடைய அறக்கட்டளை மூலமாக ஒரு பிரதிநிதி வேண்டும் என கேட்டார்கள். அதற்காக உங்களை அர்ஜூன் சம்பத் அண்ணன் அவரிடம் கூட்டிட்டு போவாங்க'’ என்று சொல்லியிருக்கிறார் அமல்ராஜ். ஆக அறக்கட்டளை நபர்கள் மூலமாகவும் வெளிநபர்களின் நிதிப் பரிமாற்றங்கள் நடப்பது உறுதியாகிறது.

போலிச்சாமியார்களின் மன்மத ஏடாகூடங்கள் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம், போலி ஆன்மிக அறக்கட்டளை நபர்கள் மூலம் வெளி நபர்களுக்கு நிதி தொடர்பான கரசேவையும் சீக்ரெட்டாக நடந்து வருகிறது. இதை அமலாக்கத்துறை துருவினால், அரசியல் பண முதலைகளைக்கொண்ட ஒரு பெரிய நெட்வொர்க்கே சிக்கும் என்கிறார்கள்.

மாஜி வேலுமணியின் செல்வாக் கோடும், நிதி பலத்தோடும் உலா வரும் போலி யோகி அமல்ராஜ், தீட்சை என்ற பெயரில் குடும்பப் பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்து வருவது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. காவல்துறை என்ன செய்யப்போகிறது?

-சே

nkn041224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe