போலி ஆசிரியர்கள் + கல்வி அதிகாரிகள் = சென்னை பள்ளிகள்!

sc

ந்திய அளவில் தமிழகத்துக்கு கல்வித் தரத்தில் நல்ல பெயர் உண்டு. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக்கழகங்களை வெளிமாநில மாணவர்கள் தேடிவருவது அதற்காகத்தான். ஏற்கெனவே, ஆசிரியர் எண்ணிக்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருவது ஒருபுறமிருக்க, தமிழக பள்ளிக்கூடங்களில் போலி ஆசிரியர்கள் என்னும் தகவல் நம்மை நிலைகுலைய வைக்கிறது.

சென்னை பெருநகர மாநகராட்சி யில் 281 பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 83,800 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் 3200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

sc

2009-10-ல் 1,21,000 மாணவர்கள் படித்த நிலையில் தற்போது 83 ஆயிரம் மாணவர்களே படிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது பத்தாம் வகுப்புகூட படிக்காதவர்கள் ஆசிரியர் கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு மாதம் 75 ஆயிரம் சம்பளம் வாங்குவதுதான்.

26.08.2004 ஆம் ஆண்டிலேயே மாநகராட்சி ஆணையர் எம்.பி. விஜய குமாரிடம் பால்ராஜ் என்பவர் மனுக் கொடுக்க, இந்த போலி ஆசிரியர்கள் விவகாரம் முதன்முதலில் தெரியவந்தது. அதற்கான ஏ.ஓ., டி.ஓ. மீட்டிங் போடப்பட்ட நிலையிலே பெருமாள் உள்ளிட்ட ஆறு போலி ஆசிரியர்கள் தானாகவே சென்றுவிட்டனர். தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள விஜயகுமார் முயலும்போதே அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஒவ்வொர

ந்திய அளவில் தமிழகத்துக்கு கல்வித் தரத்தில் நல்ல பெயர் உண்டு. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக்கழகங்களை வெளிமாநில மாணவர்கள் தேடிவருவது அதற்காகத்தான். ஏற்கெனவே, ஆசிரியர் எண்ணிக்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருவது ஒருபுறமிருக்க, தமிழக பள்ளிக்கூடங்களில் போலி ஆசிரியர்கள் என்னும் தகவல் நம்மை நிலைகுலைய வைக்கிறது.

சென்னை பெருநகர மாநகராட்சி யில் 281 பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 83,800 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் 3200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

sc

2009-10-ல் 1,21,000 மாணவர்கள் படித்த நிலையில் தற்போது 83 ஆயிரம் மாணவர்களே படிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது பத்தாம் வகுப்புகூட படிக்காதவர்கள் ஆசிரியர் கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு மாதம் 75 ஆயிரம் சம்பளம் வாங்குவதுதான்.

26.08.2004 ஆம் ஆண்டிலேயே மாநகராட்சி ஆணையர் எம்.பி. விஜய குமாரிடம் பால்ராஜ் என்பவர் மனுக் கொடுக்க, இந்த போலி ஆசிரியர்கள் விவகாரம் முதன்முதலில் தெரியவந்தது. அதற்கான ஏ.ஓ., டி.ஓ. மீட்டிங் போடப்பட்ட நிலையிலே பெருமாள் உள்ளிட்ட ஆறு போலி ஆசிரியர்கள் தானாகவே சென்றுவிட்டனர். தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள விஜயகுமார் முயலும்போதே அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் மண்டலவாரியாக அரசு உதவிக் கல்வி அலுவலர்கள் கல்விச் சான்றிதழை சரிபார்த்து டி.பி.ஐ.க்கு அனுப்பவேண்டும். அதை இவர்கள் சரியாகச் செய்யாமல் போலி ஆசிரியர்களுடன் கைகோத்துக்கொண்டு கிடப்பில் போட்டுவிட்டனர்.

இதுதொடர்பாக 2012-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு பெட்டிஷன் “"குறிஞ்சிபுரம் யூத் அசோஷியேசன் திருவண்ணா மலை' என்ற பெயரில் அப்போதைய முதல்வரின் வீட்டிற்கு 21-02-12-ஆம் தேதி வந்தது. பின் அதன்மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லி 1-06-12ல் சென்னை மாநகராட்சியை வந்தடைந்தது. அதனடிப்படையில் 58 பேர் மீது வந்த புகாரின் பேரில் அவர்களின் சான்றிதழைப் பெற்று பள்ளிக் கல்வி தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு இடை நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி, ஆசிரியர் பட்டயப்படிப்பு கல்விச் சான்றிதழ் என முழுமையாக தேர் வுத்துறை இயக்குனர் கு.தேவராஜால் சரிபார்க்கப்பட்டது. அதில் 9 பேரின் சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டது.

ss

அந்த 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் சென்னை காவல்துறை ஆணையருக்கு அனுப்பிவைத்தார். அதன்படி சென்னை எழில் நகர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் குப்பன், சென்னை வியாசர்பாடி தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராஜா ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தார் சென்னை ஆணையர். மீதமுள்ள ஏழு பேர் ஜாமீன் பெற்று வெளியில் தலைமறைவாக இருந்தனர்.

அவர்களின்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் போலிச்சான்றிதழ் என்று உறுதியான பிறகும். அவர்களை பணிநீக்கம் செய்யாமல், பணியிடைநீக்கம் செய்து அவர்கள் அரசின் பிழைப்பு ஊதியம் பெறும் வகையில் ஆணை பிறப்பித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

ss

இதன்மூலமாக போலி ஆசிரியர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்டு மேலுமுள்ள போலி ஆசிரியர்களை தனிப்பட்ட முறையில் கண்டறிந்து அவர்களிடம் மாதம் தோறும் கப்பம் வசூல்செய்து வருகிறார்கள். இதற்கு 10 மண்டல உதவிக் கல்வி அலுவலர்களும் உறுதுணையாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் போலி ஆசிரியர்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் 23-01-2020 முதல், புகாரின் அடிப்படையில் போலி ஆசிரி யர்களின் சான்றிதழை சரிபார்த்து வரு கின்றார் தற்போதைய கல்வி அலுவலர் பாரதிதாசன்.

இதில் பேரதிர்ச்சி என்னவென்றால் 58 பேர் மீதான போலி ஆசிரியர் குற்றச்சாட்டு விசாரணையில், 9 பேர் போலி ஆசிரியர்கள் என்று கண்டறியப்பட்ட நிலையில் அதில் எட்டுப் பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. போலி ஆசிரியர் முருகன் மேல்நிலை படிப்புச் சான்றிதழ், பட்டயப் படிப்பு சான்றிதழ் இல்லாதநிலையிலும், அவரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளார். அவர், இன்று வரையிலும் எம்.ஜி.ஆர். நகரில் பத்தாவது மண்டலத்தில் பணிபுரிந்து வருவதை தற்போது விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

ss

ஏழு வருடமாக அரசுப் பணம் 75 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு 9 லட்சமென ஏழு வருடத் திற்கு 63 லட்சம் அரசுப் பணத்தை வீணடித்த தோடு மாணவர்களின் கல்வியையும் பாழாக்கியுள்ளனர்.

இதேபோல போலி ஆசிரியர்களுக்கு தலைமையேற்றுச் செயல்படும் ஏ. ஜஸ்டின் பள்ளித் தேர்வுத் குழு இயக்குனர் அலுவலகத் திலிருந்து அனுப்புவதுபோல் போலிச் சான்றிதழை தயார்செய்து மாநகராட்சி முன்னாள் கல்வி அலுவலர் மூலமாக இன்று வரையிலும் விசாரணை வளையத்திற்குள் சிக்காமல் தப்பித்துவருகிறார்.

இவர் ஆசிரியர் கல்வி, பட்டயப் படிப்பு (க்ற்ங்) 1988 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் 1990 மார்ச்சில் பன்னிரண்டாம் வகுப்பு தோல்வியுற்று, மீண்டும் செப்டம்பரில் தேர்ச்சி பெற்றுள்ளார். முதலில் ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு அதன்பிறகே பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார்போல (?!), இவர் தற்போதும் புளியந்தோப்பு சென்னை அரசு உயர் நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார்.

இதோடு மட்டுமில்லாமல் பத்தாம் வகுப்பு, பன்னிரண் டாம் வகுப்பு ஆசிரியர்கள் போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணிபுரிந்து வருகிறார்கள். அதில் ஒருவர் முனுசாமி. ரெட்டி சமூகத்தை சேர்ந்த இவர் எஸ்.டி என்று சாதிச்சான்றிதழ் கொடுத் துள்ளார். பள்ளிச் சான்றிதழும் போலியானதாகவும் உள்ள நிலையில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்து தொடக் கப்பள்ளி தலைமை ஆசிரியராக எருக்கஞ்சேரி பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்குத்தான் சென்னை மாவட்ட ஆட்சியர் கையால் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

அதேபோல மெகன்சிபுரம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, கொடுங்கையூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரகுபதி என பலபேர் விசயங்களில் பெறுவதைப் பெற்றுக்கொண்டு, கண்டும்காணாமல் இருந்துவருகின்றனர் கல்வி அலுவலர்கள். ரவிச்சந்திரனை விசாரித்தால் பல போலி ஆசிரியர்களின் விவரம் வெளியில்வரும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

இதுகுறித்து பேச தொடர்புகொண்டபோது, ஜஸ்டின் பேச மறுத்துவிட்டார்.

கல்வி அலுவலர் பாரதிதாசனோ, ""தற்போது விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். மாநகராட்சி ஆணையர் பிரகாஷும் பாரதிதாசனின் கருத்தையே உறுதி செய்தார்.

அரசையே ஏமாற்றி போலிச் சான்றிதழ் தந்து பணிபுரிந்ததோடு, அரசுப் பணத்துக்கு இழப்பு ஏற்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ள இவர்களின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

-அ.அருண்பாண்டியன்

nkn190220
இதையும் படியுங்கள்
Subscribe