தமிழக நில அளவைத் துறை யில் காலியாக இருந்த பணியிடங் களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக சர்வேயர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இருந் தும் திருச்சி உள்ளிட்ட பல பகுதி களில் சர்வேயர் எனக் கூறிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட போலி நில அளவையர்கள் பணியாற்றி வரு கின்றனர்.
சமீபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்டத்தில் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காமல் குறுவட்ட சர்வேயர்கள் பலரும் இரவுபகல் பாராமல் ஸ்ரீரங்கம் வரு வாய் கோட்டாட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் பணி செய்து அரசின் திட்டத்
தமிழக நில அளவைத் துறை யில் காலியாக இருந்த பணியிடங் களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புதிதாக சர்வேயர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இருந் தும் திருச்சி உள்ளிட்ட பல பகுதி களில் சர்வேயர் எனக் கூறிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட போலி நில அளவையர்கள் பணியாற்றி வரு கின்றனர்.
சமீபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்டத்தில் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காமல் குறுவட்ட சர்வேயர்கள் பலரும் இரவுபகல் பாராமல் ஸ்ரீரங்கம் வரு வாய் கோட்டாட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் பணி செய்து அரசின் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தினர். முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை ஆகிய கிராமப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் முகாம்களில் அளித்த பெரும்பாலான மனுக்களுக்கு, போலி சர்வேயர் பார்த்திபன் அளவீடு செய்ததன் அடிப்படையில் முன்னாள் வட்டத்துணை ஆய்வாளர் பிரபு பரிந்துரையின் பேரில் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் வட்டத் துணை ஆய்வாளர் கதிர்வேல், டவுன் சர்வேயர் கார்த்திக் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து முறைகேடான வழியில் பல உட்பிரிவுகளாக பிரித்து தனி நபர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக புகாரெழுந்தது.
இதை ரத்துசெய்து மீண்டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யவேண்டுமென திருச்சி வருவாய் கோட்டாட்சி யருக்கும், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கும் தாயுமான சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் கோரிக்கை விடுத்து 15 மாதங்களாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனி நபர்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டா திரும்பவும் இந்து சமய அறநிலையத்துறை பெயருக்கு மாற்றியமைக்கப் பட்டதாக” அரசுத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வழக்கை முடித்துவைத்தார்.
ஆனால் கடந்த ஜூலை 11 வரை மேற்படி உயர்நீதிமன்ற வழக்கில் தொடர்புடைய சர்வே எண்ணில் தனி நபர்கள் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்ட பட்டாக்கள் திரும்பவும் கோவில் பெயருக்கு மாற்றியமைக்க திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு எதுவும் வழங்கவில்லை.
இதையடுத்து நில அளவைத் துறை இயக்குனர் மதுசூதன ரெட்டி சம்பந்தப்பட்ட திருச்சி மேற்கு வட்ட அலுவலர்களுக்கு தானே நேரடியாக சம்மன் அனுப்பி சென் னைக்கு வரவழைத்து அதிரடி விசாரணை மேற்கொண்டார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற போலி சர்வேயர்கள் அரசுக்குச் சொந்தமான இடங்கள், அரசு புறம்போக்கு, தனிநபருக்கு சொந்தமான இடங்களை அவர்களுக்குத் தெரியாமல் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். கமிஷன் தொகையைப் பெற்றுக்கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஐ.டி. வழியாக பட்டாவிலும் பெயரை மாற்றும் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இத்தகையவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?