போலி போலீஸ் உதவி கமிஷனரை ஒரிஜினல் போலீஸ் கைது செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2-ம் தேதி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக் குண்டு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது, போலீஸ் உதவி கமிஷனர் என்று சொல்லிக்கொண்டு சைரன் வைத்த ஜீப்பில் சந்தேகத்துக்கு இடமான ஒரு நபர் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அவ்வழியாக சைரன் வைத்தபடி வந்த போலீஸ் வாகனத்தை இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான காக்கிகள் மடக்கிப்பிடித்தனர்.

fraud police

அப்போது அந்த போலீஸ் ஜீப்பிலிருந்து இறங்கிய டிப்டாப் ஆசாமி, அசிஸ்டென்ட் கமிஷனர் என்று தன்னை மடக்கிய போலீசாரிடம் கூறி மிரட்டியிருக்கிறார். அவர்மீது சந்தேகப்பட்ட போலீசார், பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச்சென்று உரிய முறையில் விசாரித்த போது, அந்த நபர் ஒரு போலியென்பது வெட்ட வெளிச்சமானது. உடனே, போலி நபர் பயன்படுத்திய ஜீப். வாக்கிடாக்கி. இரண்டு பொம்மை துப்பாக்கிகள், போலி அடையாள அட்டை என அனைத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணையை விரிவுபடுத்தினர்.

இந்த போலி போலீஸ் அதிகாரி, சென்னை கொளத்தூரைச் சேர்ந்த விஜயன் என்று தெரியவந்தது. மேலும் விசாரணையின்போது, "இதே பொய்யைச் சொல்லித்தான் கொளத்தூரில் பிளே ஸ்கூல் நடத்திவரும் பெண்ணைத் திருமணம் செய்தேன். எனக்கு வேலை இல்லை எனத் தெரிந்ததால் என் மனைவியும், உறவினர்களும் என்னை மோசமாகப் பேசினார்கள். பின்னர், சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலைபார்த்தபடி டி.என். பி.எஸ்.சி. தேர்வு எழுதினேன். அத்தேர்வில் தோல்வி யடைந்ததால், அதனை மனைவியிடம் சொல்லாமல் மறைத்துவிட்டு, எனக்கு காவல்துறையில் உளவுத் துறை பிரிவில் வேலை கிடைத்துள்ளதாக அனை வரையும் நம்பவைத்தேன். வீட்டிலிருப்பவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சைரன் வைத்த வாகனத்தை கோவையில் போலி முகவரி கொடுத்து வாங்கினேன். அதற்காக ஒரு பெண் இரண்டு லட்சம் கொடுத்தார். பின்னர் அதன் நம்பரை மட்டும் மாற்றிவிட்டு பொது இடங்களுக்குச் செல்வேன். சாலையில் கூட்டமாக இருந்தால், அவற்றை ஒழுங்குபடுத்துவது போல் மக்களிடம் அன்பாகப் பேசுவேன். இதனால் பலரும் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனைப் பெருமையாக முகநூலில் பதிவிடுவேன். தொடர்ந்து ஒரே இடத்திலிருந்தால் சந்தேகம் வரும் என்பதால் அடிக்கடி வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று ஆய்வு நாடகம் நடத்துவேன். அப்படியான சூழலில்தான் உங்களிடம் பிடிபட்டுவிட்டேன்'' என்று கூறினார்.

Advertisment

f

அந்த போலிஅதிகாரியின் செல்போனை ஆய்வுசெய்ததில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார். கேரளா முதல்வர் பினராய் விஜயன், கர்நாடகா சிறைத்துறை அதிகாரியான ரூபா மற்றும் கிரண்பேடி உள்ளிட்ட பலருடன் இணைந்து நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங் கள் கிடைத்தன. இப்படி சட்டத்துக்குப் புறம்பாக தென்னிந்திய அளவில் மோசடியில் ஈடுபட அவர் முயன்றிருப்பது தெரியவந்தது. இவர்மேல் கடுமையான நடவடிக்கையெடுக்காமல், அப்போ திருந்த எஸ்.பி. ரவளி பிரியா உத்தரவின்பேரில் சாதாரணமானதொரு வழக்குப்பதிவு செய்து விஜயனை சிறையிலடைத்தனர்.

இதுகுறித்து போலி போலீஸ் அதிகாரியின் பேஸ்புக் நண்பர்களிடம் கேட்டபோது, "கடந்த 4 வருடமாக அந்த டூப்ளிகேட் போலீஸ் அதிகாரி யுடன் பேஸ்புக் நண்பர்களாக இருந்துவந்தோம். எங்களைப்போல் பெண்களும் நட்பில் உள்ளனர். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் பெயர்ப்பலகையின் முன்பாக துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து, இங்கு ஆய்வு செய்ய வந்திருப்ப தாகக் குறிப்பிடுவார். இதுபோல் ஒருமுறை சின்னமனூர் மேகமலையில் தீவிரவாதிகளைத் தேடி வந்திருக்கிறேன் என்று எழுதியவர், இங்கு இயற்கை அழகு இருக்கிறது, ஆனால் ரசிக்க யாருமின்றித் தனியாகத்தான் வந்திருக்கிறேன் என்று பதிவிட்ட தால், முன்பே சொல்லியிருந்தால் நாங்களும் வந்திருப் போம், ஜாலியாக இருக்குமேயெனச் சில பெண்களும் பதிவிட்டனர். இப் படி போலீஸ் அதிகாரியென்ற இமேஜின்மூலம் பெண்களைக் கவர்ந்து வலையில் வீழ்த்தி அவர்களிட மிருந்து லட்சங்களாக வாங்கியிருக்கிறார். இதற்காகவே ஒவ்வொரு ஊருக்கும் ரெய்டு வந்திருப்பதாக டுபாக்கூர் தகவல்களாகப் போட்டு வலைவிரிப்பார். சிக்கும் பெண்களின் வீட்டுக்குச் செல்வார் அல்லது லாட்ஜுக்கு வரவழைத்து செக்ஸ் லீலைகளைச் செய்வார்.

Advertisment

இப்படியான லீலைகள் மூலமாக, தேனியில் பள்ளி நடத்திவரும் ஒரு பெண், சோப்பு கம்பெனி உரிமையாளரின் மனைவி, மதுரை துணிக்கடை உரிமையாளர் மனைவி மற்றும், கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், விதவைகளென அவரது வலை யில் வீழ்ந்தவர்கள் ஏராளம். இப்படியாக ஒருமுறை இலங்கைக்கே சென்று வந்திருக்கிறார். ஆனால் தனது போலீஸ் வாகனத்துக்கு ஓட்டுநரை வைத்துக்கொள்ளாமல் தானே ஓட்டுவது குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேட்டபோது, "நான் மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரியாக இருப்பதால் எங்களுக்கென தனியாக போலீஸ் டிரைவர் வைத்துக்கொள்வது கிடையாது என்று ரொம்பவும் சாதுர்யமான பதிலைச் சொல்லி தப்பிக்கப் பார்த்தார். ஆனால் அந்த பதில் சந்தேகத்தை வரவழைத்ததால், அதற்குப் பிறகு போலி விஜயனிடம் நாங்கள் அதிகம் பேசிக்கொள்வதில்லை. நாங்கள் சந்தேகப்படுவது புரிந்ததால் அவரும் எங்களோடு பேசுவதில்லை.

ff

இந்த நிலையில், கேரளா கட்டப்பனைக்குச் சென்று அங்குள்ள வனத்துறை அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் போலி போலீஸ் அதிகாரியான விஜயனின் அடையாள அட்டையை வாங்கி ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது அவர் போலி என்பது அம்பலமானதால் கேரள வனத்துறையினர், தமிழகக் காவல்துறை அதி காரிகளுக்குத் தகவலைத் தெரிவித்தனர். விஜயனைப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதற்குள் அவர் கம்பம் மெட்டு வழியாக தமிழக எல்லைக்குள் நுழைந்ததைக் கண்டு, தேனி எஸ்.பி. அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் பிடிக்கமுடியாமல் போனது. ஆனால் அதைத்தாண்டி வத்தலக்குண்டு அருகே சென்றபோது அவர் ஒரிஜினல் போலீசிடம் மாட்டிக் கொண்டார். ஆனால் போலீஸ் விசாரணையில், பல பெண்களுடனான தொடர்பு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளையும், பண வசூல் செய்திகளையும் முழுமையாக வெளிப்படுத்தாமல் விசாரணையில் மூடி மறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கை சாதாரண போலீசார் விசாரிக்காமல், சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் வசம் ஒப்படைக்கும் போது தான், போலி காவல்துறை அதிகாரி வேஷத்தின்மூலம் அவர் செய்த தில்லுமுல்லு அனைத்தும் வெளிவரக்கூடும்'' என்றார்.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறை ஆய்வாளர் சங்கரேஸ்வரனிடம் கேட்ட போது, "எங்க புது எஸ்.பி. (சீனிவாசன்) உத்தரவின்பேரில்தான் அந்த விஜயனை கஸ்டடியில் எடுத்து விசாரித்தோம். அப்போது, கேரள முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் கள், போலீஸ் அதிகாரிகளோடு இருக்கும் படங்கள் எல்லாம் தனியார் தொலைக்காட்சி யில் வேலை பார்த்தபோதும், அதன் பிறகும் எடுத்துக்கொண்ட படம் என்று கூறினான். அதுபோல் போலீஸ் அதிகாரி என்ற போர்வை யில் ஒரு கான்ட்ராக்டரை மிரட்டி 8 லட்சம் ரூபாய்வரை ஏமாற்றி வாங்கியிருக்கிறான். மேலும் பல பெண்களிடம் லட்சக்கணக்கில் ஏமாற்றி வாங்கியிருப்பதும், காவல்துறை அதி காரி என்று கூறி லாட்ஜ்களில் இலவசமாகத் தங்கியிருந்ததும், பல பெண்களை மயக்கி வர வழைத்து உல்லாசமாக நெருங்கிய தொடர்பிலும் அவன் இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அவனோடு தொடர்பிலிருந்த பெண்களை யும், அவனிடம் லட்சக்கணக்கில் ஏமாந்த பெண் களையும் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளோம். ஆனால் தற் போது இவனை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு ஒரு நாள் அனுமதியை மட்டுமே கோர்ட் வழங்கியுள்ளது. இதனால் இவனிடம் முழுமையான விசாரணையை மேற் கொள்ள முடியவில்லை. எனவே மேலும் சில நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசா ரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். தொடர்ச்சியான விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கும்'' என்று கூறினார்.

காவல்துறை உங்கள் நண்பன் என்பார்கள். அதற்கேற்ப ஒரு போலி நபர், தன்னை காவல் துறை உயர் அதிகாரி என்று சொல்லிக்கொண்ட தோடு, நண்பனைப் போலவும் பழகி, பல நாட்களாகப் பலரையும் ஏமாற்றி பல லட்சங்களைச் சுருட்டியிருக்கிறான். அதோடு, பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, அங்குள்ள அர சியல்வாதிகள் முதல் அதிகாரிகள்வரை பல ரையும் ஏமாற்றி. தன்னை முகநூலில் நம்பிய பெண்களையும் ஏமாற்றி சீரழித்திருக்கிறான். போலி அதிகாரிமீது கடுமையான நடவடிக் கையை ஒரிஜினல் காவல்துறை அதிகாரிகள் எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.