போலி என்.சி.சி. முகாம்! பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட மாணவி! -அதிரவைத்த கிருஷ்ணகிரி சம்பவம்!

ss

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திக்குப்பம் கிங்ஸ்லி கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ளது.

கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மாணவர்களுக்கான என்.சி.சி. பயிற்சி முகாம் இப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த மாணவிகள் அனைவருமே, அதே பள்ளியிலுள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். ஆகஸ்டு 9 -ஆம் தேதி கலையரங்கில் உறங்கிக்கொண்டி ருந்த 12 வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த என்.சி.சி. பயிற்றுநர் எனச் சொல்லிக்கொண்ட காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் அங்கிருந்து அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை முதலில் மாணவிகள் பள்ளி நிர்வாகியிடம் தெரிவித்த நிலையில், சிவராமன் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், இந்த விவகாரம் உங்கள் பெற்றோருக்குத் தெரிவித்தால் வருத்தமடைவர் என சமாதானப்படுத்தி மூடிமறைக்கப் பார்த்திருக்கிறார். இருந்தபோதும், அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திக்குப்பம் கிங்ஸ்லி கார்டன் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் தமிழகத்தை அதிரவைத்துள்ளது.

கடந்த ஆகஸ்டு 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை மாணவர்களுக்கான என்.சி.சி. பயிற்சி முகாம் இப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த மாணவிகள் அனைவருமே, அதே பள்ளியிலுள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். ஆகஸ்டு 9 -ஆம் தேதி கலையரங்கில் உறங்கிக்கொண்டி ருந்த 12 வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த என்.சி.சி. பயிற்றுநர் எனச் சொல்லிக்கொண்ட காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் அங்கிருந்து அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த விவகாரத்தை முதலில் மாணவிகள் பள்ளி நிர்வாகியிடம் தெரிவித்த நிலையில், சிவராமன் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், இந்த விவகாரம் உங்கள் பெற்றோருக்குத் தெரிவித்தால் வருத்தமடைவர் என சமாதானப்படுத்தி மூடிமறைக்கப் பார்த்திருக்கிறார். இருந்தபோதும், அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்தநிலையில் ஆத்திரமடைந்த குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

ncc

பொதுமக்களும் இச்சம்பவத்தை அறிந்து கொந்தளிக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து பர்கூர் மகளிர் போலீசார் சிவராமனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். மேலும் அந்தப் பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, முதல்வர், ஆசிரியை உட்பட 11 பேர் கைதுசெய்யப் பட்டுள்ளனர்.

வழக்கில் சிக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவசரமாக சிவராமன் நீக்கப்பட்டுள்ளார். முக்கிய குற்ற வாளியான சிவராமன் தப்பிக்க உதவிய அவரது நண்பர்கள் முரளி, சீனிவாசன் ஆகிய இருவரும் தற்போது கைதுசெய்யப் பட்டுள்ளனர்.

இந்த சிவராமனைக் குறித்து விசாரித்தபோது, கிருஷ்ணகிரியில் மாயோன் குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தொடங்கி, பிட்காயின் போன்ற நிதி மோசடியில் ஈடுபடுவர்களுக்கு உடந்தை யாக இருந்துவருவதாக தகவல்கள் வருகிறது. குடியாத்தத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளரான சுதாகர் என்பவர், பிட்காயின் விவகாரத்தில் சிவராமனிடம் ஏமாந்திருக்கிறார். அதனால் பணத்தை திரும்பக் கேட்டு, மாயோன் குரூப் ஆப் கம்பெனியில் போய் பணம் தந்தால்தான் கிளம்புவேன் என படுத்தேவிட்டாராம். அவரைச் சமாதானப்படுத்த, சுதாகரை ஓய்வுபெற்ற சி.ஆர்.பி. வீரர் எனச் சொல்லி பள்ளியொன்றுக்கு அழைத்துச்சென்று கௌரவித்திருக் கிறாராம்.

"இது அரசியல்'’ என்ற பெயரில் 8 -முதல் 10ஆம் வகுப்பு படிப்பவர் களுக்கு சிவ ராமன் இலவச பாடப் பயிற்சி அளித்திருக்கிறான். அங்கே எதுவும் சில்மிஷம் நடந்ததா எனவும் காவல்துறை விசாரிக்கவேண்டும். அதுமட்டுமின்றி இரு வாரங்களுக்கு முன் அஞ்சூரில் தனியார் பள்ளியொன்றில் இதேபோல் ஒரு விவகாரம் கிளம்ப, அதிலிருந்து தப்பிக்க மருந்தைக் குடித்து மருத்துவமனையில் அட்மிட்டாகித் தப்பி யிருக்கிறான். முறையாக சிவராமனை விசாரித்தால் ஏகப்பட்ட விவகாரங்கள் வெளிவரலாம்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர் பாகச் சென்னையிலுள்ள என்.சி.சி. தலைமை இயக்குநரகம் அளித்த விளக்கத்தில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. முகாம் எதுவும் நடத்தப்படவில்லை. கைதுசெய்யப்பட்ட சிவராமன் என்ற நபருக்கும் என்.சி.சி.க்கும் எந்த தொடர்பும் இல்லை''’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தபோது, “"பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாகப் புகார் பெற்றவுடன் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலகு மூலம் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை நடத்தி தேவையான ஆலோசனை, உளவியல் உதவிகள் மேற்கொள்ளப் படுகிறது''’என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மேற்குவங்க விவகாரம் தேசிய அளவில் பரபரப்பாக இருப்பதால், இந்த விவகாரம் குறித்து அறிந்தவுடன் முதல்வர் உடனடியாக பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்திட உத்தரவிட்டார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறா மல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு ஒன்றை அமைத்திட ஆணையிட்டுள்ளார். விசாரணையைத் துரிதமாக மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வும், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து, குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தி, கடும் தண்டனையைப் பெற்றுத் தரவும் உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம், தேசிய மகளிர் ஆணையம் தமிழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டது தொடர்பாக குற்றவாளிகள் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிய உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் நேர்மையான விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தரவும் அறிவுறுத்தியுள்ளது.

ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. இதில் போலி என்.சி.சி. முகாம் நடத்திய மேலும் சில பள்ளிகளும் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

nkn240824
இதையும் படியுங்கள்
Subscribe