புதுச்சேரி தொடங்கி ஆக்ரா வரை நீண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய போலி மருந்து தயாரிப்பு மோசடியில்  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், புதுச்சேரி அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாக பரவிவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

 உத்திரபிரதேசத்தின் பல இடங்களில் போலி மாத்திரைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள்  பரவலாகக் கிடைக்கிறதென்ற குற்றச்சாட்டை யடுத்து, மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆக்ராவைச் சேர்ந்த ஹிமான்சு அகர்வாலுக்குச் சொந்த மான ‘ஹேய் மா மெடிக்கோ ஏஜென்சி’ நிறுவனத்தில்  கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள போலி மருந்துகள், 1 கோடி ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டன. 

Advertisment

இந்த விவகாரத்தில் ஹிமான்சு அகர்வால் உட்பட 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான் புகழ்பெற்ற  சன் ஃபார்மா, சனோபி, கிளன்மார்க், டாக்டர் ரெட்டிஸ்,  சைடஸ் உட்பட பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பெயரில் போலியாக மருந்து தயாரித்து அவற்றை புழக்கத்தில்விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதன் தொடர்ச்சியாக, சன் ஃபார்மா நிறுவனம் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகாரளிக்கவே, அவர்கள் தமிழகத்தின் எல்லையை ஒட்டிய திருப்புவனைபாளையம், மேட்டுப்பாளை யம் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டையில் ஆய்வுநடத்தினர். அதில், ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ், லார்வன் ஃபார்மா என்ற இரண்டு மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகளும் உரிய அனுமதி பெறாமல் போலியாக மருந்துகளை தயாரித்துவந்தது தெரியவந்தது.  அந்த தொழிற்சாலைகளுக்கு சொந்தமான சில ரகசிய அறைகளை கடந்த 03.12.2025 அன்று அதிகாரிகள் சோதனை செய்த போது, அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி உயிர் காக்கும் மருந்துகளும் அவற்றை தயாரிக்கும் இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு 500 கோடிக்கும் அதிகம் இருக்குமெனக் கூறப்படுகிறது. 

Advertisment

பிறகு, புதுச்சேரி - கடலூர் சாலையிலுள்ள பூர்ணாங்குப்பம் பகுதியில் செயல்பட்டுவந்த ஒரு போலி தொழிற்சாலையையும், அந்த தொழிற்சாலைக்குச் சொந்தமான இடையர்பாளையத்திலுள்ள குடோன் ஒன்றையும் ஆய்வுசெய்த போது, அங்கும் பெட்டி பெட்டியாக போலி மருந்துகள் சிக்கின. அங்கிருந்து தயாரான சுமார் ரூ.1,000 கோடிக்கு அதிகமான போலி மருந்துகள் நாடுமுழுவதும் சப்ளை செய்யப்பட்டுள்ள விவரமறிந்து அதிர்ச்சியடைந்தனர் அதிகாரிகள். 

அந்த போலி தொழிற்சாலைகளின் மூளை யாகச் செயல்பட்டு, அவற்றை நடத்திவந்த புதுச் சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ராஜா, அவரது உதவியாளர்களான விவேக், சீர்காழியைச் சேர்ந்த ராணா, புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார், இமானுவேல், சிவராந்தகம் விவேக், அந்தோணிராஜ், கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், கடலூர் விக்னேஷ்குமார், காட்டுமன்னார்கோயில் விக்னேஷ், செல்லஞ்சேரி அருள், மவுனிராஜ் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், போலி மருந்து மாஃபியா ராஜாவின் பித்தலாட்டங்களும், போலி மருந்து தொழிற்சாலையை தங்குதடை யின்றி நடத்த உதவிபுரிந்த அதிகாரிகளின் வண்டவாளங்களும் வெளிச்சத்திற்கு வந்து, புதுச்சேரி அரசியல்வாதிகளின் ஊழல் முகமூடிகளை கிழித்தெறிந்துள்ளன.

யார் இந்த ராஜா?

ராஜாவின் சொந்த ஊர் சிவகங்கை மாவட் டம், கல்லல் அருகிலுள்ள கருங்குளம் எனப்படு கிறது. இயற்பெயர் வள்ளியப்பன். 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த வள்ளியப்பன், 2000ஆம் வாக்கில் புதுச்சேரிக்கு வந்து ஒரு மருந்துக்கடையில் எடுபிடியாக வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர், சில மருந்துகளின் ஏஜன்சியை கடலூரில் எடுத்து நடத்தத் தொடங்கியிருக்கிறார். அப்போது, கடலூர் தங்கராஜ் நகரில் தங்கி மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவாக பணியாற்றிக்கொண்டிருந்த முருகேசனின் அறிமுகம் கிடைத்துள்ளது. இவரின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்துள்ள கழனிவாசல். அந்த நெருக்கத்தால் முருகேசன் ஒரு திட்டம் போட்டுக் கொடுக்க அதை செயல்படுத்த துவங்கியிருக்கிறார் வள்ளியப்பன். அதன்படி, சென்னை பல்லாவரம், சங்கர் நகர் பகுதியில் தயாராகும் ‘அல்டெக்ஸ்’ என்ற விலைகுறைந்த இருமல் மருந்தை வாங்கி, அதை புதுச்சேரி நெட்டப்பாக்கத்திலுள்ள ஒரு குடோனில் வைத்து பிரபல நிறுவனத்தின்  ‘பெனட்ரில்’ சிரப் என போலி லேபிளை ஒட்டி அவற்றை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்துவந்தார். 

கடந்த 2010ஆம் ஆண்டு இந்த போலி சிரப்  விவகாரத்தில் சிறைசென்ற வள்ளியப்பன், ஜாமீனில் வெளிவந்தபின்னர் ராஜா என தனது பெயரை மாற்றிக்கொண்டு, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் யாசித் பார்மசி என்ற பெயரில் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்தார். அதில் கொள்ளை லாபம் கிடைக்கவே, புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் நியூஜெர்சி என்ற பெயரில் வேறொரு மருந்துக் கம்பெனி துவங்கி, அதிலும் போலி மருந்துகளை தயாரித்து ஆந்திராவிற்கு அனுப்பி விற்பனை செய்திருக்கிறார்.  

 கடந்த 2023ஆம் ஆண்டு அதனைக் கண்டுபிடித்த ஆந்திர போலீசார் அந்த நிறுவனத் திற்கு 'சீல்' வைக்கவே, அதனைத் தொடர்ந்து  கடந்த ஆண்டுதான் புதுச்சேரி- தமிழ்நாடு எல்லையில் திருப்புவனைபாளையத்தில் பூட்டிக் கிடந்த லார்வன் என்ற நிறுவனத்தை ரூ.450 கோடிக்கு விலைக்கு வாங்கி பிரபல நிறுவனங்களின், அதிக விற்பனையாகும் விலையுயர்ந்த மருந்துகளை போலியாக தயாரித்து, அதனை புதுச்சேரி செட்டி தெருவிலுள்ள தனது ஸ்ரீசன் ஃபார்மா, ஸ்ரீ அம்மன் ஃபார்மா, மீனாட்சி ஃபார்மா ஆகிய நிறுவனங் களின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, உ.பி., டெல்லி, ஹரியானா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட 14 வட மாநிலங்களுக்கு விற்பனை செய்து குறுகிய காலத்திலேயே சில ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சிக்கிய கோடிகள்

புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக் களை ராஜா என்ற வள்ளியப்பன் வாங்கியிருப்ப தாகவும், ஒரே நேரத்தில் 16 வால்வோ சொகுசுப் பேருந்துகளை வாங்கி தமிழ்நாடு முழுவதும் ட்ராவல்ஸ் நடத்திவருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதுதொடர் பாக புதுச்சேரி செட்டிதெருவிலுள்ள ராஜாவின் தலைமை அலுவலகம், வீடு உள்ளிட்ட 7 இடங் களில் சோதனை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், அவற்றை தயாரிக்கப் பயன்படுத்திய மூலப்பொருட்கள், ரூ.140 கோடி மதிப்புள்ள நவீன இயந்தி ரங்கள், வீட்டிலிருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள், 18 லட்சம் ரொக்கம், ரூ.450 கோடி மதிப்புள்ள தொழிற் சாலையின் ஆவணங்கள், பல கோடி சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளைக் கைப்பற்றினர். அப்போதுதான், 10-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களும், புதுச் சேரியைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிலருக்கு கோடிகளில் வாரிவழங்கிய லஞ்சப் பட்டியலும் சிக்கியிருப்பதாக தகவல்களை கசியவிடுகின்றனர் விசாரணை அதிகாரிகள்.

   இந்த போலி மருந்து தயாரிப்பு, விற்பனை விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ராஜாவின் மனைவி ஞானப்பிரியா, குடோன் உரிமையாளர்கள், ராஜாவிற்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்தவர்கள், மருந்துகளை தயாரித்த வல்லுநர்கள், அவற்றை விற்பனை செய்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீசித் தேடிவரும் நிலையில், நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்களை வைத்து மிகப்பெரிய அளவில் தொழிற்சாலை துவங்க அனுமதியளித்த சில முக்கிய அதிகாரிகள் மற்றும் அவரால் லாபமடைந்த புதுச்சேரி அரசியல்வாதிகளின் பெயர்கள், மருந்து மாஃபியா ராஜாவின் டிஜிட்டல் டைரியில் சிக்கியும்கூட அவர்களை விசாரணைக்குக்கூட அழைக்கவில்லை என சி.பி.சி.ஐ.டி. வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 உயிர்காக்கும் மருந்துத் தொழிற்சாலை நிறுவுவதற்கு அதிகமான கட்டுப்பாடுகள் 

உள்ளன. ஆனால், புதுச்சேரியைப் பொறுத்தவரை பணம் கொடுத்தால் போதும், அனுமதியெல்லாம் ‘தண்ணி’ பட்ட பாடுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

 இதுகுறித்து தங்களது பெயர், அடை யாளத்தை மறைத்து நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர், "தற்போது இந்த மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைமை அதிகாரியாகவும், லைசன்ஸ் வழங்கும் அதிகாரம் படைத்தவ ராகவும், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் இருப்பவர் டாக்டர். அனந்தகிரோசனானே. வெறும் பார்மசி படித்துவிட்டு மருந்து ஆய்வாளராக 2017ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், டெல்லி மேலிட தொடர்பு மூலம்       இந்த மருந்துக் கட்டுப் பாட்டுத்துறைக்கே தலைமை அதிகாரியாக பொறுப்பேற்று விட்டார். அவரது பெயரும், சௌத்ரி முகமது யாசீன்    என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஜவஹர் ஐ.ஏ.எஸ்., ஆன்ரோ ஷெரிங், ஜெனிஃபர், பிரியா, திவ்யா, அனிதா பெயர்களும் மருந்து மாஃபியாவின் டைரியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர்களில் யாரையுமே விசாரணைக்கு அழைக்கவில்லை'' என்றனர்.

தப்பிக்கும் அரசியல்வாதிகள்

தவிர, புதுச்சேரி அரசியல்வாதிகளுக்கும் ராஜாவுக்கும் பாலமாக விளங்கிய சில நபர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பிறகும்கூட அவர்கள் வாயிலிருந்து கக்கிய புதுச்சேரி பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் சிலரின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ள தாகத் தெரிகிறது.