போலி கராத்தே சங்கம்! முதல்வர் போட்டோ மோசடி!

fraud

முதல்வர் ஸ்டா-ன், அமைச்சர் உதயநிதியின் படங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போ- கராத்தே சங்கம் ஒன்றின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

"தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு அசோசியேசன்' எனும் கராத்தே சங்கத்தின் ஒரு பிரிவான ஷோபுகய் எனும் பெயரில் 15#வது ஷோபுகய் ஓப்பன் நேசனல் கராத்தே சேம்பியன்ஷிப் போட்டிகளை ஜூன் 15, 16 ஆகிய 2 நாட்கள் சென்னை மைலாப்பூரில் நடத்துகிறார் சங்கத்தின் ஜெனரல் செக்ரட்டரி அல்தாப் ஆலம். இந்த போட்டிகள் குறித்து தான் தற்போது குற்றச் சாட்டுகள் வெடித்திருக்கிறது.

fraud

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கராத்தே வீரர்களும், அவர்களின் பெற்றோர்களும் நம்மிடம் பேசும்போது, ’""அனைத்து விளையாட்டு சங்கங்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தாங்கள் பங்கேற்கும் போட்டிகள் அங்கீகாரம் பெற்ற விளையாட்டு சங்கங்கள் மூலம் நடத்தப்படுகின்றதா? என்பதை அறிந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று கடந்த 2023#ல் தமிழக அரசு அறிவித்திருக்கிறது (எண் 1914).

மேலும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமல் ஆணையத்தி

மேலும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெறாமல் ஆணையத்தின் பெயர் மற்றும் முத்திரையை பயன்படுத்தி விதிகளுக்கு புறம்பாக ஆணையத்தின் பெயரை குறிப்பிட்டு சான்றிதழ்கள் வழங்கும் விளையாட்டு சங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்திருக்கிறது விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.

அதாவது, போ- விளையாட்டு சங்கங்கள் சான்றிதழ்களை வழங்குவதால் அதை வைத்து உயர்கல்வியைப் பெற ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மாணவ#மாணவிகள் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால், அது செல்லத்தக்கதல்ல என்று அவர்களின் விண்ணப்பங்களை அரசு நிராகரிக்கும் போது பிரச்சனைகள் வெடிக்கிறது.

இதனையடுத்துத்தான், போலிவிளையாட்டுச் சங்கங்களை ஒழிப்பதற்காக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் வழிகாட்டுதல்படி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது.

அந்த வகையில், அல்தாப் நடத்தும் சங்கத்திற்கு தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரமும், மத்திய அரசின் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அங்கீகாரமும் கிடையாது. ஆனால், இந்த சங்கங்களின் மூலம் கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் பல லட்சங்கள் முறைகேடாக வசூ-க்கப்பட்டு சான்றிதழ்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

அரசின் அங்கீகாரம் பெறாத இந்த சங்கம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதும், சான்றிதழ்கள் வழங்குவதும் மோசடித்தனமானது. அதாவது, அடுத்த மாதம் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள தனி நபர் ஒருவருக்கு (கராத்தே வீரர்) 1,200 ரூபாயும், 3 வீரர்கள் ஒரு டீமாக இணைந்து கடா கராத்தே போட்டியில் கலந்துகொள்ள 2,000 ரூபாயும், 3 வீரர்கள் ஒரு டீமாக இணைந்து குமிதே கராத்தே போட்டியில் பங்கேற்க 3,500 ரூபாயும் நுழைவுக் கட்டணமாக நிர்ணயித்திருக்கிறார் அல்தாப்.

தனிநபர் போட்டியில் இதுவரை 1,500 பேர் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ளதால் அதன் மூலம் 18 லட்சமும், டீமாக கலந்துகொள்ளும் போட்டிகளுக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் மூலம் 2 லட்சமும் என சுமார் 20 லட்சம் கட்டணமாகக் கிடைத்திருக்கிறது.

fraud

ஜூன் 10#ந் தேதி வரை போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதால் நுழைவுக் கட்டணத்தின் மூலம் சுமார் 25 லட்ச ரூபாய் வசூ-க்க இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். அதிகபட்ச வீரர்களை இழுப்பதற்காக, இந்த போட்டிகளுக்கு அரசின் அங்கீகாரம் இருக்கிறது என்கிற தோற்றத்தை உருவாக்க முதல்வர் ஸ்டா-ன், அமைச்சர் உதயநிதியின் படத்தை தங்களின் விளம்பர நோட்டீஸ்களில் பயன்படுத்தியிருக்கிறார் அல்தாப் ஆலம்.

இதற்கு மைலாப்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வேலு உடந்தையாக இருந்து வருவதுடன், இந்த போட்டிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் வேலு. இவரும் அல்தாப்பும் நெருங்கிய நண்பர்கள். அமைச்சர் உதயநிதியின் துறையான விளையாட்டுத்துறையின் அங்கீகாரம் இந்த சங்கத்திற்கு கிடையாது என்பதைத் தெரிந்திருந்தும், ஸ்டா-ன் மற்றும் உதயநிதியின் போட்டோக்களைப் பயன்படுத்த அனுமதித்திருக்கிறார் எம்.எல்.ஏ. வேலு.

ஆக, ஸ்டாலின், உதயநிதியின் போட்டோக்களை பயன்படுத்தி சுமார் 25 லட்சம் ரூபாயை மோசடியாக வசூ-க்கத் திட்டமிட்டுள்ளது அரசின் அங்கீகாரம் பெறாத இந்த போலிவிளையாட்டு சங்கம்! கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பலமுறை, பல்வேறு பெயர்களில் இப்படி அங்கீகாரமில்லாமல் கராத்தே போட்டி நடத்தி மோசடியாக பல கோடிகள் வசூ-க் கப்பட்டுள்ளது.

இத்தகைய போலிவிளையாட்டு கராத்தே சங்கத்தை முளையிலேயே தடுக்காது போனால், இவர்கள் தரும் சான்றிதழ்கள் மற்றும் ஷீல்டுகளை வைத்துக் கொண்டு, வரும் கல்வி ஆண்டில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மாணவ மாணவிகள் விண்ணப்பித்தால் அப்போது தி.மு.க. அரசுக்கு அது பெரும் பிரச்சனையாக வெடிக்கக்கூடும்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆக, ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் போட்டோக்களை பயன்படுத்தியும், தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுவின் ஆசியுடனும் இளம் கராத்தே வீரர்களிடமிருந்து மோசடியாக பல லட்சங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது.

இது குறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ்.சிடம் கருத்தறிய நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, ""தமிழகத்தில் எந்த ஒரு கராத்தே சங்கத்திற்கும் தமிழக அரசோ, மத்திய அரசோ அங்கீகாரம் தரவில்லை. அங்கீகாரம் இல்லாத சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என மாணவ, மாணவிகள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும். அந்த சங்கங்கள் தரும் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு அரசுக்கு விண்ணப்பித்தால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். இதை போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் உணரவேண்டும். முதல்வர் மற்றும் அமைச்சரின் ஃபோட்டோக்களைப் பயண்படுத்துவதை ஆணையம் தடுக்க முடியாது. அரசும் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியும்தான் இதில் அக்கறை காட்டவேண்டும். ஆணையம் சார்பில் எந்த உத்தரவையும் போடமுடியாது இல்லையா? ஆனால், அரசின் அங்கீகாரம் இல்லாத சங்கங்கள், முதல்வர், அமைச்சரின் பெயரையோ, போட்டோவையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்'' என்கிறார்.

இதையும் படியுங்கள்
Subscribe