Advertisment

நாட்டையே வாங்குவதாக போலி ஆவணம்! அம்பலமான நித்தியானந்தா புரட்டு!

nithy

கேமரூன் நாட்டின் ஒரு பகுதியை நித்தியானந்தா தொடர்பான நபர்கள் 35,00,000 யூரோக்களுக்கு விற்க முயன்றது தான் தற்போது சர்வதேச அளவில் பரபரப்புச் செய்தி. இது தொடர்பாக கேமரூன் நாட்டின் நிதியமைச்சரே சமூக ஊடகங் களில் பரப்பப்படும் போலி ஆவணம் குறித்து அந்நாட்டு மக்களை எச்சரிக்கை செய் திருக்கிறார்.

Advertisment

கேமரூன் விவகாரத்தை விரிவாகப் பார்க்கும் முன், நித்தியானந்தாவின் திருவிளை யாடல்களை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

Advertisment

2019வரை இந்தியாவில் கோலோச்சிய நித்தியானந்தா, தொடர்ந்து பெண்கள் விவகாரத் திலும் வேறு பல குற்றங்களிலும் சிக்கி இந்தியாவைவிட்டே தப்பி ஓடவேண்டிய நிலைக்கு ஆளானார். நித்தியானந்தா மீது இந்தியா ரெட் அலர்ட் விடுக்கு மளவுக்கு அவரது புரட்டுத்தனம் அம்பலமாகியிருந்தது. இருந்த போதும், எச்சரிக்கையாக இந்திய அதிகாரிகளின் கண்ணில் மண் ணைத் தூவி ஈக்வடார் அருகே ஒரு தீவை வாங்கி செட்டிலானார்.

nithy

ஒருகட்டத்தில் இந்தியாவுக் குத் திரும்ப

கேமரூன் நாட்டின் ஒரு பகுதியை நித்தியானந்தா தொடர்பான நபர்கள் 35,00,000 யூரோக்களுக்கு விற்க முயன்றது தான் தற்போது சர்வதேச அளவில் பரபரப்புச் செய்தி. இது தொடர்பாக கேமரூன் நாட்டின் நிதியமைச்சரே சமூக ஊடகங் களில் பரப்பப்படும் போலி ஆவணம் குறித்து அந்நாட்டு மக்களை எச்சரிக்கை செய் திருக்கிறார்.

Advertisment

கேமரூன் விவகாரத்தை விரிவாகப் பார்க்கும் முன், நித்தியானந்தாவின் திருவிளை யாடல்களை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

Advertisment

2019வரை இந்தியாவில் கோலோச்சிய நித்தியானந்தா, தொடர்ந்து பெண்கள் விவகாரத் திலும் வேறு பல குற்றங்களிலும் சிக்கி இந்தியாவைவிட்டே தப்பி ஓடவேண்டிய நிலைக்கு ஆளானார். நித்தியானந்தா மீது இந்தியா ரெட் அலர்ட் விடுக்கு மளவுக்கு அவரது புரட்டுத்தனம் அம்பலமாகியிருந்தது. இருந்த போதும், எச்சரிக்கையாக இந்திய அதிகாரிகளின் கண்ணில் மண் ணைத் தூவி ஈக்வடார் அருகே ஒரு தீவை வாங்கி செட்டிலானார்.

nithy

ஒருகட்டத்தில் இந்தியாவுக் குத் திரும்ப முடியாதென்பதை உணர்ந்துகொண்ட நித்யானந்தா, தனது தீவான கைலாசாவுக்கு அமெரிக்காவைப் போல் "யுனை டெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா' என பெயர் வைத்துக்கொண்டு சர்வதேச அங்கீகாரத்தைத் தேடும் முயற்சியில் இறங்கினார்.

2023-ல் ஐ.நா. பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக நடத்திய மாநாடு அதன் கவனத் துக்கு வர, அதில் பெருந்திரளாக தனது சிஷ்யைகளை அனுப்பி பங்கேற்கச் செய்ததுடன், கூடவே அதன் புகைப்படங்கள், வீடி யோக்களை சமூக வலைத்தளங் களில் பரவலாக்கி ஐ.நா.வே கைலாஸாவை அங்கீகரித்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார்.

சுதாரித்த ஐ.நா., “நித்தியின் சீடர்கள் கலந்துகொண்ட மாநாடு அரசுசாரா அமைப்பு களும், தன்னார்வலர்களும் பங்கேற்க இடமளிக்கும் மாநாடு. சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் கைலாஸா வுக்கு அனுமதியளிக்கப்பட வில்லை'' என வெளிப்படை யாகவே நித்தியின் மூக்கை உடைத்தது.

இருந்தாலும் வேதாளத் திடம் மனம் தளராத விக்கிர மாதித்யனைப் போல் அதைவிட பெரிய பிராடு நடவடிக்கை யொன்றில் இறங்கினார் நித்தியானந்தா. கலாச்சாரக் கூட்டாண்மை என்ற பெயரில் தனது சீடர்களை அமெரிக்காவின் முப்பதுக்கும் அதிகமான நகரங்களுக்கு அனுப்பி "சிஸ்டர் சிட்டி' எனும் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். இந்த ஒப் பந்தத்தின் மூலம் கைலாஸாவின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் அந்நகரங்களில் கணிசமாக நிதி திரட்ட நினைத்திருந்த நிலையில், அமெரிக்க ஊடகங்கள் சுதாரித் துக்கொண்டு நித்தி யார் என்பதையும், அவரது கோல்மால் வேலைகளையும் அம்பலப்படுத்த நித்தியின் திட்டம் பணால் ஆனது. இதில் அமெரிக்க மேயர்கள், எம்.பி.க்கள் பலரின் பெயர்களும் கெட்டுப்போக, அவர்களும் நித்தியின்மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

அமெரிக்காவைத் தாண்டி பிரான்ஸ் வரைக்கும் அவரது சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் நீண்டு, உலக நாடுகளே யார் இந்த 420 பார்ட்டி என நித்தியை குறித்து வைத்துக்கொள்ளும் அளவுக்குப் போனது.

இந்தநிலையில்தான் இப்போது கேமரூன் நாட்டில் தனது கைவரிசையைக் காட்டி யிருக்கிறார் நித்தியானந்தா. கேமரூன் நாட்டின் நிதியமைச்சர் லூயிஸ் பால் மோட்டாஸ் ஏப்ரல் 12-ஆம் தேதி ஒரு பத்திரிகைச் செய்திக் குறிப்பை வெளியிட் டார். அக்குறிப்பு, "சமூக ஊடகங்களில் ஒரு போலி ஆவணம் பரப்பப்படுவதாகவும், அது இருதரப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் கேமரூன் நாட்டின் ஒரு பகுதியை கைலாஸாவுக்கு மூன்றரை மில்லியன் யூரோக் களுக்கு விற்றிருப்பதாகக் கூறுகிறது. அதில் கேமரூன் நிதியமைச்சரின் கையொப்பமும் காணப்படுகிறது. பொதுவாக இத்தகைய ஒப்பந்தங்களை நிதியமைச்சர் போடமுடியாது. நாட்டின் அதிபர் மட்டுமே இத்தகைய ஒப்பந்தங்களில் கையொப்பமிட முடியும். எனவே கேமரூன் மக்கள் இதுகுறித்து கவனமாக இருக்கவும். மேலும் இந்த ஆவணம் எங்கிருந்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது என்ற விசாரணையை மேற் கொள்ள உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

சமீபத்தில் ஜெனீவாவில் பெண்கள் மேம்பாட்டுக்கான மாநாடு நடந்தபோது, கேமரூன் நாட்டு அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தவர் டாக்டர் சோனா காமத். அமெரிக்காவின் மிசௌரி பகுதியைச் சேர்ந்த மருத்துவரான இவர் நித்தியா னந்தாவின் சிஷ்யையும்கூட. இவர்தான் இந்த போலி ஆவணத் தில் கேமரூனின் உயர் அதிகாரி களின் கையெழுத்துடனான ஆவணத்தை உருவாக்கியதன் பின்னணியில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறார்.

இத்தனை நடந்த பின்பும், நித்தியானந்தாவின் சார்பில் இந்த மோசடி வேலை யின் பின்பு தாங்கள் இல்லை என்பது போலும், கேமரூன் நாட் டுக்கே இந்த மோசடி யைக் கவனத்துக்குக் கொண்டுவந்தது கைலாஸாதான் என்பது போலவும், கேமரூன் நாட்டு அதிகாரி களுடன் தாங்கள் ஒத்துழைக்கவிரும்புவது போல் நீண்ட ஒரு ட்வீட்டை வெளியிட் டுள்ளனர்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பது பழமொழி. உள்ளூருக்குள் மட் டும் பொய் சொல்லிக் கொண்டிருந்த நித்யா னந்தா, சர்வதேச அளவில் தொடர்ந்து அம்பலமாகிக்கொண்டே வருகிறார். கேமரூன் அதிகாரிகள் இப்போது, “நீ எங்களுக்கே விபூதி அடிக்கப் பார்த்த இல்லை…’என்பதுபோல் நித்யானந்தாவை முறைக்க ஆரம்பித்துள்ளனர்.

nkn220423
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe