மிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்த அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்குள் போட்டா போட்டி நடக்கிறது. அரசு நிர்ணய தொகையைவிட பல மடங்கு அதிகமாக கொடுத்து பார்களை டெண்டர் எடுத்து, அந்த தொகையை ஈடுகட்ட, டாஸ்மாக் கடை நேரத்துக்குப்பின் போலி மது பானங்களை தாராளமாக அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

tt

போலி மது தயாரிப்புக் கும்பலும், டாஸ்மாக் கடையில் வாங்கி பாரில் வைத்து விற்கும்போது பாட்டி லுக்கு ரூ.50 தான் லாபம் கிடைக்கும். ஆனால் எங்க சரக்கை விற்றால் ஒரு பாட்டிலுக்கே ரூ.100 வரை லாபம் கிடைக்கு மெனக்கூறி, தாங்களே எசன்ஸ் ஊற்றி உருவாக் கிய போலி மதுவை குவாட்டர், ஆஃப் பாட்டில்களில் அடைத்து, அந்தந்த நிறுவனப் பெய ருள்ள லேபிளை ஒட்டி, புது மூடி போட்டு, ஒரிஜினல் சரக்கு போலவே மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.

இதனால் டாஸ்மாக் விற்பனை குறைந்து, போலி மது விற்பனை அமோகமாக உள்ளது. அரசு அனுமதிபெற்ற பார்களில் ஆய்வு செய்ய வேண் டாமென்ற உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுகளால் கலால், தனிப்பிரிவு போலீசார் கூட கண்டுகொள்வதில்லை. அதனால் போலி மது விற்பனை தமிழ்நாடு முழுவதும் படுவேக மாகவே உள்ளது. இந்நிலையில்தான் சிவகங்கை மாவட்டத்தில் போலி மது உற்பத்தி செய்து புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, ராமநாத புரம் மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் பார் களில் விற்பனை செய்யும் கும்பல் பற்றி சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைக்க, போலீசார் அங்கே செல்லும் முன்பாகவே அந்த கும்பல் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்திற்கு ஷிப்டானதாக தகவல் கிடைத்தது.

Advertisment

சென்னை (மதுரை) மண்டல நுண்ணறிவுப் பிரிவு டி.எஸ்.பி. காசிவிஸ்வநாதன், திருச்சி மத்திய மண்டல நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் பல நாட்களாக நடத்திய ரகசிய விசாரணையில் தஞ்சை மாவட்டம் பேரா வூரணி அருகே யுள்ள பெருமக ளூர் கிராமத் தில் அந்த கும்பல் விற்பனை செய்வதறிந்து அங்கே சென்றபோது, பைரவர் என்ற பெயருடைய வேனில், பாலமுருகன் என்ற ஓட்டுநர், ஒரு பெட்டிக்கடையில் சோடா பாட்டில்கள் ஏற்றி வருவதுபோல மதுப்பாட்டில்களை கொண்டு வந்திறக்கியபோது, தனிப்படையினர் சுற்றிவளைத்து அங்கிருந்த 625 மதுப்பாட்டில்களையும், 3250 காலிபாட்டில்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராஜ்குமார், சங்கர், மச்சுவாடி மாரிமுத்து என மூவரையும், உடன் வேன் டிரைவரையும் கைது செய்தனர்.

மேலும், போலி மது தயாரிக்கும் மூலப் பொருட்களான எசன்ஸ், லேபிள், ஸ்டிக்கர், மூடிகள், மூடிகளை லாக் செய்யும் மெசின், ஸ்பிரிட் ஆகியவற்றை புதுக்கோட்டை மாவட்டம், எல்.என்.புரம் ஊராட்சியின் அணவயல் பகுதி யிலுள்ள பாரதி என்ற விவசாயியின் தோட்டத்தில் பதுக்கி வைத்துள்ளதாகத் தெரியவந்ததையடுத்து, அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், 4 பேரல்களில் 850 லிட்டர் ஸ்பிரிட், 6000 ஸ்டிக்கர்கள், லேபிள்கள், எசன்ஸ் டப்பாக்கள், ஆயிரக்கணக்கான மூடிகள் உள்ளிட்டவற்றை நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைப்பற்றி, பட்டுக்கோட்டை மதுவிலக்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், "இந்த போலி மது தயாரிப்புக்கு மூளையே மச்சுவாடி மாரிமுத்து தான். எத்தனை லிட்டர் ஸ்பிரிட்டில் எவ்வளவு எசன்ஸ் கலக்க வேண்டும், என்னென்ன எசன்ஸ் கலக்க வேண்டுமென்பது அவருக்கு மட்டுமே தெரியும். ஒவ்வொரு பாருக்கும் தேவையான ஆர்டரை எடுத்துக் கொடுத்துவிட்டால், அதற்கேற்ப மாரிமுத்து தயாரித்துவிடுவார். அதை பாட்டிலில் அடைத்து, லேபிள் ஒட்டி பார்களுக்கு கொடுத்துவிடுவோம். இதற்கான ஸ்டிக்கர், லேபிளை மாரிமுத்துவே சில அச்சகங்களில் கொடுத்து அடித்துவாங்குவார். இந்த மதுவை 48 மணி நேரத்துக்குள் குடிக்காவிட்டால் விஷமாகிவிடும். புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற நகரங்களில் அதிக சேல்ஸ் ஆகும். அதேபோல கிராமங்களிலுள்ள கடைகளில் காலை நேரக் குடிகாரர்களுக்கு விற்பாங்க. ஒரு பாட்டிலுக்கு 100 ரூபாய் வரை பார் ஓனர்களுக்கு லாபம் கிடைக்கும். எங்களைப்போல தமிழ்நாடு, ஆந்திரா முழுவதும் ஒவ் வொரு மாவட்டத் திலும் பலர் தயாரித்துக் கொடுக்கிறார்கள். போலீசார் பார்களில் சோதனை செய்வதில்லை என்பதாலும், கேமராக்கள் போலியாக வைத்திருப்பதாலும் எங்கள் சரக்கு விற்பனை அமோகமாக இருக்கும். மாரிமுத்து மீது மட்டும் பத்து வழக்குகள் உள்ளன'' என்பதைக் கேட்டு அதிகாரிகள் மிரண்டுபோனார்கள். டாஸ்மாக் பார்களில் முறையாக ஆய்வு செய்யா விட்டால் போலி மதுவால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமுள்ளது.

Advertisment

tt