Advertisment

மூடப்படும் தொழிற்சாலைகள், நடுத்தெருவில் தொழிலாளர்கள்? கவனிக்குமா அரசுகள்?

ss

ந்தியாவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பது தமிழ்நாடு. ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை, விஷாரத்தில் சுமார் 500-க்கும் அதிகமான தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் நேரடியாகவே சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுவருவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள் என அதிர்ச்சிச் தகவலை சொல்கின்றன தொழிலாளர் சங்கங்கள்.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படுகின்றன. பிரபல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, தொழிற்சாலைகளை தொடங்கும் நிலையில், மற்றொருபுறம் ஏன் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன என்கிற கேள்விகள் எழுகின்றன.

Advertisment

s

ss

தொழிற்சாலைகளை தொடர்ந்து மூடுவது குறித்தும், தொழிலாளர்கள் வேலையிழப்பது சம்பந்தமாக சி.பி.ஐ. -ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தேவதாஸிடம் பேசியபோது, "மோடி ஆட்சிக்குப் பின்னர்தான் கம்பெனிகள் மூடப்பட்டுவருகிறது. இங்கு மட்டும் சுமார் 40 சதவிகித கம்பெனிகள் மூடப்பட்டுவிட்டன. ஒன்றிய அரசு, ஏற்றுமதியில் தவறான கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்கள். ஏற்றுமதி செய்ய ஒரு வரி, இறக்குமதி செய்யும் நாட்டில் ஒரு வரி என இரண்டு வரிகளை தொழிற்சாலைகள் கட்டுகின்றன. உள்ளூரிலேயே தயாரித்து விற்றாலும் இங்கும் பலமடங்கு வரி கட்டவேண்டியுள்ளது. அதேநேரத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி

ந்தியாவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிப்பது தமிழ்நாடு. ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை, விஷாரத்தில் சுமார் 500-க்கும் அதிகமான தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் நேரடியாகவே சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுவருவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள் என அதிர்ச்சிச் தகவலை சொல்கின்றன தொழிலாளர் சங்கங்கள்.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படுகின்றன. பிரபல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, தொழிற்சாலைகளை தொடங்கும் நிலையில், மற்றொருபுறம் ஏன் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன என்கிற கேள்விகள் எழுகின்றன.

Advertisment

s

ss

தொழிற்சாலைகளை தொடர்ந்து மூடுவது குறித்தும், தொழிலாளர்கள் வேலையிழப்பது சம்பந்தமாக சி.பி.ஐ. -ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தேவதாஸிடம் பேசியபோது, "மோடி ஆட்சிக்குப் பின்னர்தான் கம்பெனிகள் மூடப்பட்டுவருகிறது. இங்கு மட்டும் சுமார் 40 சதவிகித கம்பெனிகள் மூடப்பட்டுவிட்டன. ஒன்றிய அரசு, ஏற்றுமதியில் தவறான கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்கள். ஏற்றுமதி செய்ய ஒரு வரி, இறக்குமதி செய்யும் நாட்டில் ஒரு வரி என இரண்டு வரிகளை தொழிற்சாலைகள் கட்டுகின்றன. உள்ளூரிலேயே தயாரித்து விற்றாலும் இங்கும் பலமடங்கு வரி கட்டவேண்டியுள்ளது. அதேநேரத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைவு மற்றும் சில இறக்குமதிகளுக்கு ரத்தும் செய்துள்ளனர். இதனால் இறக்குமதி பொருட்கள் குறைந்த விலையில் இங்கு விற்கப்படுதால் உள்ளூர் தயாரிப்புகள் பாதிக்கப்படுகின்றன. அதேபோல் இப்போதுவரை ஜி.எஸ்.டி வரி விகிதம் குழப்பமாகவே இருக்கிறது. உப்புத் தோல்களை பதப்படுத்த 28% வரி, அந்த தோல் கலர் பினிஷிங் செய்ய 28% வரி என ஒரே பொருளுக்கு இரண்டு முறை வரி விதிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் சிறிய நிறுவனங்கள், ஜாப் ஒர்க் எடுத்து செய்பவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் மூடுகின்றனர்.

Advertisment

இந்த நிறுவனங்கள் வங்கிகளிடம் வாங்கிய தொழில் கடனை கட்டமுடியவில்லை என தொழிற் சாலைகளை மூடுகின்றனர். தப்பிக் ஷகல் குரூப், டி.ஏ.டபிள்யூ குரூப், கே.ஆர்.குரூப், முதீப் குரூப் என 24 குழுமங்கள் தங்களது தொழிற்சாலைகளை சமீப ஆண்டுகளில் மூடியுள்ளார்கள். இதில் ஒரு கம் பெனிகூட சட்டப்படி மூடவில்லை. அதுமட்டுமல் லாமல் தொழிலாளர்களின் கூலியிலிருந்து பிடிக்கப் பட்ட பி.எஃப். பணத்தைக்கூட பல நிறுவனங்கள் பி.எஃப் நிறுவனத்தில் கட்டவில்லை. அதை முறை யாகச் செலுத்தியிருந்தால் பென்ஷன், பிராவிடன்ட் பண்ட் கிடைத்திருக்கும், அதுவும் கிடைக்கவில்லை.

நட்டத்தால் கம்பெனி மூடுவதாகவும் சொல் கிறார்கள். அது ஒருபுறமென்றால் மற்றொருபுறம் இந்த கம்பெனி லாபத்தை தனியே எடுத்துச்சென்று வேறு தொழிலில் முதலீடு செய்துவிட்டு இது நட்டம் எனக்காட்டி மூடுகிறவர்களும் இருக்கிறார் கள். "தொழிற்சாலையை மூடியாச்சு, தீர்ப்பாயத் துக்கு போய்விட்டோம்' எனப் போராடும் தொழிலாளர் சங்கங்களிடம் சொல்கிறது முதலாளிகள் தரப்பு. தீர்ப்பாயம் ஒரு ரிசீ வரைப் போட்டு அனுப்பிவிடுகிறது. காங் கிரஸ் ஆட்சிக்காலத்தில் நட்டம் எனச் சொல்லி ஒரு நிறுவனத்தின் சொத்துக்கள் விற்கப்பட்டால் முதலில் அங்கு பணியாற் றிய தொழிலாளர்களுக்கு செட்டில் மெண்ட் தரவேண்டும், இரண்டாவ தாகத்தான் கடன் தந்த வங்கிகள் எடுத்துக்கொள்ளவேண்டும் என் கிற விதி இருந்தது, அதன்படியே செயல்பட்டது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அதை அப்ப டியே தலைகீழாக மாற்றிவிட்டது. ஆணையம் நிய மித்த ரிசீவரும், கம்பெனி முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து 50 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை 25 கோடிக்கு விற்பனை செய்ததாகக் கணக்குக் காட்டி வங்கிக் கடன்போக மீதியுள்ள பணத்தை எடுத்து தொழிலாளர்களுக்கு தரும் நிலையே இருக் கிறது. தொழிலாளர்களுக்கு 10% கூட பணப் பயன்கள் கிடைப்பதில்லை. இதனால் தொழி லாளர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ss

வேலையிழந்த உடல்வலிமையுள்ள தொழி லாளர்கள் கர்நாடகாவுக்கு கட்டுமான வேலைக்குச் செல்கிறார்கள். முடியாதவர்கள் இங்கேயே இருந்து வேறு வேலை செய்கிறார்கள். வேலை கிடைக்கா தவர்கள் கடனால் கஷ்டப்படுகிறார்கள், தற் கொலைக்கு முயற்சிக்கிறார்கள், தற்கொலை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குவந்து தொழிற்சாலை தொடங்க மானியம் தரும் அரசு, இங்கு மூடப்படும் நிலையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு மானியம் தந்து செயல்படவைக்க வேண்டும். அப்போது தொழிலாளர் களின் வேலை இழப்பை தடுக்கமுடியும்'' என்றார்.

தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் பொதுச்செய லாளர் ரூபன், “"எங்கள் கணக்குப்படி கொரோ னாவுக்கு முன்பு திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் பேர் வேலைசெய்தார்கள். கடந்த சில ஆண்டுகளில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தொழிற்சாலைகள் மூடப்படுவது ஒருபுறம், மற்றொருபுறம் பெரிய நிறுவனங்கள் கொரோனாவைக் காரணம் காட்டி ஆர்டர்கள் வரவில்லை, புதிய ஆர்டர்கள் வந்தபின் ஆட்களை எடுக்கிறோம் எனச்சொல்லி ஆட்குறைப்பு செய்தார்கள். தொழிற்சாலைகளை மூடும்போதும், ஆட்குறைப்பு செய்யும்போதும் நோட்டீஸ் தருவது, நஷ்டஈடு தருவது என்கிற தொழிலாளர் நலவிதிகளை குறைந்தபட்சம்கூட கடைப்பிடிப்பதில்லை. பழைய தொழிலாளர் தகராறு நலச்சட்டம் தான் இப்போது வரை நடைமுறையில் உள்ளது. அதன்படி அரசு அனுமதிபெறாமல் தொழிற்சாலைகளை மூட முடியாது. அனுமதி பெற்று மூடும்போது, ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு பணிக்கொடை தரவேண்டும், தொழிலாளர்களுக்கு ஒருமாத சம்பளம் முன்கூட்டியே தரவேண்டும் என்பதால் விதிகளை மீறி மூடப்படுகிறது. அதேபோல் அரசிடம் அனுமதி பெற்று மூடியிருந்தால் தொழிலாளர்கள் அடுத்து வேலைக்குச் செல்லும் வரை அதாவது 6 மாதம் வரை இ.எஸ்.ஐ. நிதியிலிருந்து சம்பளம் பெறமுடியும். அப்படிச் செய்யாமல் சட்டவிரோதமாக மூடிவிட்டு தொழிலாளர்களை நடுத்தெருவில் விட்டுவிடுகி றார்கள். அவர்கள் மீது அரசுகள் எந்த நடவடிக்கை யும் எடுப்பதில்லை.

அதற்கு மிகமுக்கிய காரணம், இ.எஸ்.ஐ. நிதி. அறிவிப்பு தராமல் மூடுவதன் மூலம் இ.எஸ்.ஐ நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு சம்பளம் தரத்தேவையில்லை. தொழிலாளர்கள் க்ளைம் செய்யவும் முடியாது, அனாமத்தாக இருக்கும் அந்தப் பணத்தை ஒன்றியரசு அப்படியே எடுத்துக்கொள்ளும். தொழிலாளர்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவே அரசு தொழிற்சாலை மூடப்படுவதை கண்டுகொள்வ தில்லை''’என்றார்.

தொழிலாளர் விடுதலை முன்னணி யின் திருப்பத்தூர் மாவட்ட அமைப் பாளர் நாகப்பன் நம்மிடம், “"இந்தியா முழுவதுமே தோல் காலணி தொழிற் சாலைகளை நடத்துவது இஸ்லாமியத் தொழிலதிபர்கள்தான். அதில் வேலைபார்ப்பவர்கள் பெரும் பான்மையினர் இஸ்லாமியர்கள் என நினைத்துக்கொண்டு அந்த சமூகத் தை ஒடுக்கவேண்டும் என பல வழிகளில் தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி தருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதுவும் தொழிற்சாலைகள் மூடப்பட முக்கிய காரணம். இதனால் அனைத்துத் தரப்பு மக்க ளும் பாதிக்கப்படுகிறார்கள். இதுதான் நிதர்சன மான உண்மை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டபின் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு என புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்படவில்லை. இதனால் வேலையிழந்த தொழிலாளர்கள் இந்த மாவட்டத்தில் வேறெங்கும் வேலைக்குச் செல்லமுடியாத நிலை. விவசாய வேலையும் இவர்களுக்கு தெரியாது. இதனால் வேலையிழந்தவர்கள் தவறான வேலைக்குச் செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதனால் இம்மாவட்டத்தின் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்''’என்றார்.

தொழிற்சாலைகளை மூடுவதால் நேரடி வேலைகளைப் போல் மறைமுக வேலை வாய்ப்பு களும் குறைகின்றன. ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை நகரங்களில் தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் என பல இருக்கும். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் களின் சேமிப்புக் கணக்குகள் வங்கிகளில் இருந்ததால் ஒரு வங்கிக்கு ஒரே நகரில் இரண்டு, மூன்று கிளைகள்கூட இருந்துள்ளன. சிறிய கிராமங்களில்கூட தனியார் வங்கிக் கிளைகள் செயல்பட்டன. சிறிய சிறிய ஹோட்டல்கள், டீக் கடைகள் எனப் பல இருக்கும். தொழிற்சாலைகள் அடுத்தடுத்து மூடப்படுவதால் அதனைச் சார்ந்த மறைமுக வேலைவாய்ப்புகளும் குறைந்துள்ளன. வங்கிகளுக்கு தொழிலாளர்கள் வருவதும் குறைந்துள்ளது''’ என்கிறார்கள்.

இதுகுறித்து கருத்தறிய தொழிற்சாலை உரிமை யாளர்கள் சங்கத்தினரை தொடர்பு கொண்டபோது, பேசத் தயங்கினார் கள். ஒரு லட்சம் தொழிலாளர்களை பாதுகாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி நீண்டகாலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

nkn050325
இதையும் படியுங்கள்
Subscribe