சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் உட்கட்சி உரசல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிருப்தி கோஷ்டிகளை சமாளிக்க முடியாமல் அமைச்சர்கள் திணறி வருகின்றனர். 

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் தி.மு.க., தேர்தல் வேலைகளில் இப்போதே ஜரூர் காட்டி வருகிறது. சேலம் மாவட்ட மண்டல பொறுப் பாளரான அமைச்சர் எ.வ.வேலு, ஜூன் 22ம் தேதி, வீரபாண்டி, கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி களிலுள்ள அதிருப்தி கோஷ்டிகளை அழைத் துப் பேசினார். இதுபற்றி சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. மூத்த நிர்வாகி களிடம் கேட்டபோது, ''கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தம்மம் பட்டி சிறப்புநிலை பேரூராட்சி மன்றத் தலைவரான கவிதாவின் கணவர் வி.பி. ராஜா, 4வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இந்த வி.பி.ராஜாதான் தம்மம்பட்டி பேரூராட்சித் தலைவர் போர்வையில் அதகளப்படுத்துகிறார். 

வீட்டு மனைப் பட்டா வழங்க தலா 30 ஆயிரம், ரேஷன் சேல்ஸ்மேன் வேலைக்கு பல லட்சங்கள் வசூல் என கல்லா கட்டினார். இதுகுறித்து, 2023, அக். 07-10 நாளிட்ட "நக்கீரன்' இதழில் செய்தி வந்தது. அதன்பேரில், ராஜாவை, செயலாளர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, சண்முகம் என்பவரை புதிய செயலாளராக நியமித்தது மேலிடம். கடந்த பிப்ரவரி மாத பேரூராட்சி கூட்டத்தில், தி.மு.க. கவுன்சிலர் கலியவரதராஜனை சாதிரீதியாக ராஜா விமர்சனம் செய்ததால், குடிநீர் பாட்டிலை வீசிக்கொள்ளும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கவிதாவும், வி.பி.ராஜா வும் பழிவாங்கும் நோக்கோடு, ஆளுங்கட்சி கவுன்சிலர்களான நடராஜன், வரதராஜன், கலிய வரதராஜன், காங்கிரஸ் கவுன்சிலர் திருச்செல்வன் ஆகிய நால்வரையும் தன்னிச்சையாக சஸ்பெண்ட் செய்தனர். இதை எதிர்த்து அவர்கள் உயர்நீதிமன் றம் செல்ல, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது. 

Advertisment

பேரூராட்சியில் கணவனும், மனைவியும் இரண்டு காண்ட்ராக்டர்களை பினாமிகளாக வைத்துக் கொண்டு, 1.50 கோடி ரூபாய் பணிகளை எடுத்துச் செய்து வருகின்றனர். பூங்கா கட்டுமானப் பணிகளை 3 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர். தம்மம்பட்டி பஸ் நிலைய சீரமைப்புப் பணிகளும் தொய்வடைந்துள்ளன. தம்மம்பட்டி பேரூராட்சியில் 9 தி.மு.க. கவுன்சிலர்கள் வி.பி.ராஜா வுக்கு எதிரணியில் உள்ளனர். இவர்களின் வார்டு களுக்கு வி.பி.ராஜாவும், கவிதாவும் எந்த நலத்திட் டப் பணிக்கும் நிதி ஒதுக்குவதில்லை. இதையெல் லாம் அமைச்சர்கள் எ.வ.வேலு, ராஜேந்திரன், சேலம் கிழக்கு மா.செ. சிவலிங்கம் ஆகியோரின் கவ னத்திற்கு கொண்டுசென்று, இரண்டு சிட்டிங் சம ரசப்பேச்சு நடத்தியும் சுமூகத்தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் வி.பி.ராஜா, தலைவர் பதவியி லிருந்து தனது மனைவியை ராஜினாமா செய்ய வைப்பதாகவும், தனக்கு மீண்டும் பேரூர் செய லாளர் பதவி வேண்டுமென்றும் அடம்பிடித்தார். இதெல்லாம் கட்சித்தலைவர் முடிவுசெய்ய வேண்டியதென்று சொல்லிவிட்டார் எ.வ.வேலு. இந்த கோஷ்டிச் சண்டை சட்டமன்றத் தேர்த லிலும் நிச்சயமாக எதி ரொலிக்கும்'' என்கிறார் கள் கழகத்தின் மூத்த நிர்வாகிகள். 

salemdmk1

Advertisment

இது ஒருபுறமிருக்க, பனமரத்துப்பட்டி மற்றும் வீரபாண்டி ஒன்றியங் களில் நடக்கும் உள்ளடி அரசியல் வேறுவிதமாக இருப்பதாகக் கூறுகிறார்கள் உ.பி.க்கள். இதுபற்றி விசா ரிக்கையில், ""பனமரத்துப்பட்டி ஒன்றியத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. மேற்கு பகுதிக்கு சிட்டிங் ஒ.செ. வான உமாசங்க ரையும், கிழக்கு ஒன்றியத்தில் 25 ஆண்டுகளாக மல்லூர் பேரூர் கழக செயலாள ராக இருந்த சுரேந்திரனையும் பொறுப்பாளராக்க பேச்சு அடிபடுகிறது. 

சேலம் கிழக்கு மா.து.செ.வான பாரப்பட்டி சுரேஷ்குமார், சுரேந்திரனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த அமைப்புத் தேர் தலின்போது சுரேந் திரன், பாரப்பட்டி சுரேஷ்குமாரை எதிர்த் துப் போட்டியிட்டார். அதிலிருந்துதான் இரு வருக்கும் முட்டிக் கொண்டது. 

பாரப்பட்டி சுரேஷ் குமார், வீரபாண்டி தொகுதியில் கட்சி வேலை களை சுணக்கமின்றி செய்துவருகிறார். சமீபத்தில் சேலத்திற்கு முதல்வர் வந்தபோதுகூட, வீரபாண்டி தொகுதியில் 800க்கும் மேற்பட்டோருக்கு பட்டா பெற்றுக்கொடுத்தார். இதனால், தன்னுடைய சொந்த ஒன்றியமான பனமரத்துப்பட்டியில் ஆதிக் கம் செலுத்த விரும்புகிறார். சுரேந்திரனுக்கு எதிராக, தனது ஆதரவாளரும், கவுண்டர் சமுகத்தைச் சேர்ந் தவருமான பிரபுகண்ணனை களத்தில் இறக்கிவிட் டுள்ளார். கிழக்கு மா.செ. எஸ்.ஆர்.சிவலிங்கத்தின் சப்போர்ட்டும் பிரபு கண்ணனுக்கு இருக்கிறது. 

அதேபோல் மல்லூர் பேரூர் செயலாளராக, வேங்கை அய்யனாரை கொண்டுவர பாரப்பட்டி சுரேஷ்குமார் முயற்சிக்கிறார். இரு தரப்பையும் அமைச்சர் எ.வ.வேலு அழைத்துப் பேசியும் பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை. வீரபாண்டி ஒன்றியத்தை வடக்கு, தெற்காக பிரித்து, வடக்கு ஒன்றியத்திற்கு சதீஷ்குமாரை பொறுப்பாளராக நியமித்துள்ளது கட்சித்தலைமை. ஒருங்கிணைந்த வீரபாண்டி ஒன்றியத்தின் ஒ.செ.வாக பல ஆண்டாக இருந்துவந்த வெண்ணிலா, தனது அதிகாரம் குறைக்கப்பட்டதால் ரொம்பவே அப்செட். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஆத்துக்காடு சேகர், புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சதீஷூக்கு எதிராகத் தனது சமூகத்தினரை கொம்பு சீவி விட்டுள்ளார்.'' என்கிறார்கள் தி.மு.க. நிர்வாகிகள். இந்த விவகாரங்கள் தொடர்பாக தி.மு.க. முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ""கட்சியிலிருக் கும் சின்னச் சின்ன உரசல்கள் சரி செய்யப்பட்டு, நிர்வாகிகள் உற்சாகமாகக் களத்தில் இறங்கி விடுவார்கள்'' என்றார் நம்பிக்கையுடன்.