சங்க காலத்தில் ‘"முந்நீர் விழவு'’என்ற பெயரில் நீருக்கு விழா எடுத்துக் கொண்டாடினார்கள். அகழி, ஓடை, ஏரி, கண்மாய், கால்வாய், ஊரணி, கிணறு, கேணி, குளம், குட்டை, தடாகம், பொய்கை எனச் சூழலுக்கேற்பப் பெயரிட்டனர். இன்றோ, அந்த நிலை மாறிவிட்டது. நீர்நிலைகளை மாசுபடுத்துவது, எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் சர்வசாதாரணமாக நடக்கிறது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அரசுத்துறை அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத சிவகாசி கடம்பன்குளம் கண்மாய் பிரச்சனைக்கு தீர்வு காண, ஆண்களும் பெண்களும் வாகனங்களில் சென்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அவர்கள் நம்மிடம் “"நாங்க நேரு காலனில குடியிருக்கோம். நாங்க மட்டுமில்ல.. விவேகானந்தர் காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி மக்களும் பாதிக்கப்பட்டிருக்காங்க. இங்க வசிக்கிற மக்கள், ஃபயர் ஆபீசு, தீப்பெட்டி ஆபீசு, அச்சாபீஸ்ல கூலி வேலை பார்க்கிறவங்க. இந்த கண்மாய்தான் எங்களுக்கு சாமி. எல்லையில கோயில் கட்டிருக்கோம். ஆனா, எங்க சாமிய ஆளாளுக்கு கொன்னுட்டாங்க. எங்கிருந்தெல்லாமோ சாக்கடைக் கழிவ கண்மாய்க்குள்ள விடறாங்க. கோழிக் கழிவைக் கொட்டுறாங்க. அதனால, கண்மாய் முழுக்க நாறிக்கிடக்கு. மழை நேரத்துல கண்மாய் நிரம்பி, நாத்தம் பிடிச்ச தண்ணி வீட்டுக்குள்ள வந்திருது. சுகாதாரம் கெட்டுப் போனதுனால, குழந்தைங்க சாகுது. அடிக்கடி உடம்பு சரியில்லாம, பொம்பளைங்க கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போறதே பொழப்பாப் போச்சு. சிவகாசி -விருதுநகர் ரோடு ஓரமா கண்மாய்க்கு மழை நீர் வர்ற வாய்க்கால, தனியார் நிறுவனங்கள் அவங்கவங்க
சங்க காலத்தில் ‘"முந்நீர் விழவு'’என்ற பெயரில் நீருக்கு விழா எடுத்துக் கொண்டாடினார்கள். அகழி, ஓடை, ஏரி, கண்மாய், கால்வாய், ஊரணி, கிணறு, கேணி, குளம், குட்டை, தடாகம், பொய்கை எனச் சூழலுக்கேற்பப் பெயரிட்டனர். இன்றோ, அந்த நிலை மாறிவிட்டது. நீர்நிலைகளை மாசுபடுத்துவது, எந்தவிதக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் சர்வசாதாரணமாக நடக்கிறது. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அரசுத்துறை அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத சிவகாசி கடம்பன்குளம் கண்மாய் பிரச்சனைக்கு தீர்வு காண, ஆண்களும் பெண்களும் வாகனங்களில் சென்று, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அவர்கள் நம்மிடம் “"நாங்க நேரு காலனில குடியிருக்கோம். நாங்க மட்டுமில்ல.. விவேகானந்தர் காலனி, முத்துராமலிங்கபுரம் காலனி மக்களும் பாதிக்கப்பட்டிருக்காங்க. இங்க வசிக்கிற மக்கள், ஃபயர் ஆபீசு, தீப்பெட்டி ஆபீசு, அச்சாபீஸ்ல கூலி வேலை பார்க்கிறவங்க. இந்த கண்மாய்தான் எங்களுக்கு சாமி. எல்லையில கோயில் கட்டிருக்கோம். ஆனா, எங்க சாமிய ஆளாளுக்கு கொன்னுட்டாங்க. எங்கிருந்தெல்லாமோ சாக்கடைக் கழிவ கண்மாய்க்குள்ள விடறாங்க. கோழிக் கழிவைக் கொட்டுறாங்க. அதனால, கண்மாய் முழுக்க நாறிக்கிடக்கு. மழை நேரத்துல கண்மாய் நிரம்பி, நாத்தம் பிடிச்ச தண்ணி வீட்டுக்குள்ள வந்திருது. சுகாதாரம் கெட்டுப் போனதுனால, குழந்தைங்க சாகுது. அடிக்கடி உடம்பு சரியில்லாம, பொம்பளைங்க கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு போறதே பொழப்பாப் போச்சு. சிவகாசி -விருதுநகர் ரோடு ஓரமா கண்மாய்க்கு மழை நீர் வர்ற வாய்க்கால, தனியார் நிறுவனங்கள் அவங்கவங்க இஷ்டத்துக்கு மண்ணப் போட்டு மூடிட்டாங்க. மனுஷங்க வாழத் தகுதியில்லாத இடத்துல வாழ வேண்டிய நெலம வந்திருச்சு. சுடுகாடு முங்கிப்போச்சு. யாரும் செத்துறக் கூடாதுன்னு உசிரக் கையில பிடிச்சிக்கிட்டு இருக்கோம்.
கவர்மென்டுன்னு ஒண்ணு இருக்கா? மக்கள பத்தி சிந்திக்கிற அதிகாரிங்க இருக்காங்களா? உள்ளாட்சி நிர்வாகம் எங்கே செயல்படுது? ஆய்வுங்கிற பேர்ல அசோகன் எம்.எல்.ஏ. வந்தாரு... பிரசிடென்ட் வந்தாரு... சப்- கலெக்டர் வந்தாரு... எல்லாருமே சம்பிரதாயமா வந்து பார்த்துட் டுப் போனாங்க. வாய்க்கால் ஆக்கிரமிப்புகள அகற்றணும்னா மொத்த சிவகாசி மாநகராட்சிய வும் ஒரு புரட்டு புரட்டணும். அதப் பண்ணுவாங்களா? யாருக்கும் ஓட்டு போடறதே வேஸ்ட்டுங்கிற மாதிரி ஒரு எண்ணம் வந்திருச்சு. அதுக் காக.. சும்மா இருக்க முடி யுமா? அதான்.. கலெக் டர் ஆபீசுல மனு கொடுத்திருக் கோம்''’ என்றனர் வேதனையோடு.
வி.சி.க. மாவட்ட அமைப்பாளர் கதிரவன் நம்மிடம், "கடம்பன்குளம் கண்மாய்க்கு கிழக்கு பக்கம் ஒரு சாதிக்காரங்க. வடக்கு பக்கம் ஒரு சாதிக்காரங்க. முன்ன மாதிரி இப்ப சாதிச்சண்டை இல்ல. ஆனா பாருங்க, இந்த கண்மாய் விவகாரத்துல, ஒரு பிரிவைச் சேர்ந்த பள்ளபட்டி பஞ்சாயத்து பிரசிடென்ட் உசிலை செல்வம், இன்னொரு பிரிவைச் சேர்ந்த கவுன்சிலர் அசோக்குமாரை என்னமோ பேசிட் டாருன்னு வன்கொடுமைச் சட்டத்துல வழக்கு போடச் சொல்லுறாங்க. தமிழக அரசு, கடம்பன்குளம் கண்மாய் விவகாரத்த சீரியஸா கவனிக்கணும். சிவகாசில இருக்கிற வருவாய்த்துறை அதிகாரிங்க மாதிரி மோசமான அதிகாரிகள எங்கயும் பார்க்கமுடியாது. சாதிக்கு ஒரு தெப்பத்தை, 'இந்தா நீ வச்சுக்க.. நீ வச்சுக்க'ன்னு தூக்கிக் கொடுத்துட்டாங்க. இப்ப அந்த தெப்பங்கள் இருந்த அடையாளமே இல்லாமப் போச்சு. இவங்க எப்படி நீர்நிலைகளக் காப்பாத்துவாங்க? சொத்துவரி, வீட்டு வரி, தொழில் வரின்னு வசூலிக் கிறாங்க. கழிவு நீர் வெளியேற ஏற்பாடு பண்ணலியே? நீர்நிலைல கழிவுநீர் கலக்குறத அனுமதிக்கலாமா? டவுன் பிளானிங்னு ஒண்ணு இருக்கா? உள்ளாட்சி நிர்வாகம் எங்கே செயல்படுது?''’என கேட்டார்.
திருத்தங்கல்லைச் சேர்ந்த முனியசாமி, "கடம்பன்குளம் கண்மாய் நிரம்புச்சுன்னா மழைத்தண்ணி பாப்பான்குளம் போகும். அங்க இருந்து புதுக்கண்மாய் போகும். இந்த வழில எல்லாம் பிளாட் போட்டு பில்டிங் கட்டிட்டாங்க. அதிகாரிங்க அனுமதி கொடுக்காமலா பில்டிங் கட்ட முடியும்? ரெண்டு மடைகளும் தூர்ந்துபோச்சு. இப்ப பாருங்க.. கண்மாய்த் தண்ணிய மோட்டார் போட்டு வெளியேத்துறாங்க. இதுக்கெல்லாம் யார் மேல நடவடிக்கை எடுக்கிறது?'' என்றார் ஆதங்கத்துடன். கடம்பன்குளம் கண்மாய் குறித்த முழு விபரங்களை யும் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் முன் வைத்தோம். "ஆக்கிரமிப்பு பண்ணக் கூடாதுங்கிற எண்ணம் எல்லாருக் குமே வரணும். அந்த தனிமனித ஒழுக்கம் கண்டிப்பா இருக் கணும். ஏதோ ஒரு கால கட்டத்துல பண்ணிட் டாங்க. இனிமேல், நீர் வழிப்பாதைகள்ல ஆக்கிர மிப்பு இருக்கக்கூடாது. கண்மாய் இருக்கிற இடம் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டுல இருக்கு. தண்ணி வெளிய வர்ற கால்வாய்கள், சிவகாசி மாநகராட்சி கட்டுப்பாட் டுல இருக்கு. கால்வாய் வசதி சரியா இல்லாத துனால, கண்மாய்ல தண்ணி தேங்கி வெளிய போறதுக்கு இடம் இல் லாம, அது குடியிருப்பு களுக்கு உள்ள போயிட் டதா கம்ப்ளைன்ட். அவசர நடவடிக்கையா, தேங்கியிருக்கிற தண்ணிய வெளியேத்துறதுக்கு ஊரக வளர்ச்சித் துறையும், சிவகாசி மாநகராட்சியும் சேர்ந்து நடவடிக்கை எடுத்திருக்காங்க. மோட் டார் போட்டு பள்ள பட்டிய நோக்கி தண்ணி போய்க்கிட்டிருக்கு. நிரந்தரத் தீர்வுன்னா.. மாநகராட்சி கட்டுப்பாட்டுல இருக்கிற கால் வாய்கள சரி பண்ணுறதுக்கு ப்ரபோ சல் அனுப்பிட்டாங்க. அது கவ ர்மென்ட் சைடுல நிலுவைல இருக்கு. கால்வாய் வரும் பட்சத்தில், தண்ணி வேற பகுதிக்குப் போகாம, அந்தப் பகுதியிலேயே கால் வாய் வழியா போயிரும்னு மாநகராட்சி தரப்புல சொல்லுறாங்க. மாநக ராட்சிதான் ஆக்கிரமிப்பு பண்ணுனவங்ககிட்ட பேசி உரிய நடவடிக்கை எடுக்க ணும். நிதி ஒதுக்கீடு கிடைக் கும் பட்சத்தில், ஒவ்வொரு திட்டத்துக்கும் அதுக்கான வேலைகள் நடக்கும். அப்பு றம்.. இந்த கம்யூனல் விஷ யம். நான் புதுசா வந்தி ருக்கேன். என் கவனத்துக்கு வரும்போது, ஒவ்வொண்ணா பார்த்திருவேன்''.” என்றார் உறுதியுடன்.
பள்ளபட்டி பஞ்சா யத்து 1-வது வார்டு உறுப் பினர் லோகேஸ்வரி நம்மி டம், "கண்மாய் பிரச் சனைல எங்க மக்கள் ரொம்பவும் நொந்துபோய் இருக்காங்க. 70 ஏக்கர் கண்மாய். 25 வருஷத்துக்கு முன்னால 75 ஏக்கர் பாசன வசதி பயன்பாட்டுல இருந்துச்சு. அப்புறம் விவசாயம் இல்லாமப் போச்சு. பல ஆயிரக்கணக்கான மக்கள் குளிக்கிறதுக்கும், துவைக்கிறதுக்கும் ரொம்பவே பயன்படுத்தி னாங்க. அரசாங்கம் தூர்வாராமப் போட்டதுனால கண்மாய் முழுக்க கருவேலங்காடா ஆயிருச்சு. கழிவுநீர் கண்மாயா ஆனது னால மக்கள் பயன்படுத்த முடியாம போயிருச்சு. நிலத்தடி நீரும் மாசுபட்ருச்சு. அந்த பழைய கண்மாய் காணாமலே போயிருச்சு. மக்கள் உயிருக்குயிரா நேசித்த மாசில்லாத கண்மாய் திரும்பவும் வேணும். இப்பவும் திட்ட அறிக்கை அனுப்புனதா சொல்லுறாங்க. அரசாங்கம் எப்ப நிதி ஒதுக்கி, எப்ப செயல்பாட்டுக்கு வரும்னு தெரியல. அதனால, கடம் பன்குளம் கண்மாய் மீட்புக்குழு அமைச்சு சென்னை உயர் நீதிமன்றத்துல பொதுநல வழக்கு போடப் போறோம். அப்ப வாச்சும் நீதி கிடைக்கும்கிற நம்பிக்கைல இருக்கோம்''’என்றார்.
சிவகாசியில் மட்டுமல்ல... தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால் கண்மாய்கள் பலவும் மாசுபட்டு, சுகாதாரச் சீர்கேட்டைப் பரப்பி வருகின்றன. அரசாங்கம் அதிரடியான நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கான நிரந்தரத் தீர்வாகும்.
____________
கழிவு நீரை வெளியேற்றாத வாட்டர் மேனேஜ்மென்ட்!
கழிவு நீரை கண்மாய்க்குள் வெளி யேற்றி மாசுபடுத்தும் வேலையைச் செய்து வரும் பாலசங்கா டி.வி.எஸ்., எவரெஸ்ட் லித்தோ போன்ற நிறுவனங்களின் பட்டியலில் எஸ்.எஃப். ஆர். மகளிர் கல்லூரி யும் உள்ளது. அக் கல்லூரி முதல்வர் பழனீஸ்வரியைத் தொடர்பு கொண்டோம். “"ஜீரோ வேஸ்ட் மேனேஜ்மெண்ட் கொண்டு வரலாம்னு இருக்கோம். அதேமாதிரி, வெளியே போற கழிவு நீரை எங்கேயும் போகவிடாம ரீசைக்கிள் பண்ணி, காலேஜ் தோட்டத்துலயே பயன்படுத்துற மாதிரி, வாட்டர் மேனேஜ்மென்ட் பண்ணுற திட்டமும் இருக்கு. மக்கள் பாதிக்கப்படற விஷயத்த மேனேஜ்மென்ட்கிட்ட கொண்டு போவோம். நக்கீரன் எங்ககிட்ட சொன்ன தகவல், நாங்க அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கிறதுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கு''’என்றார்.