கொரோனா பரவலைத் தடுக்க, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களை, தீவிரமாகக் கண் காணிப்பதாக சொல்கிறது சுகாதாரத்துறை. ஆனால், வைரஸ் பரவல் தொடங்கிய சமயத்தில் சென்னைக்குள் சட்டவிரோத கருமுட்டை விற்பனைக்காக வந்து தங்கியிருக்கும் வெளிமாநில இளம்பெண்களை எப்போது கண்காணிக்கப் போகிறீர்கள் என்று அச்சத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.

சென்னை, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் இருக்கிறது அந்தத் தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.

cc

அவர்களிடம் விந்தணுக்களையும், கருமுட்டைகளையும் விற்கவும், வாங்கவும் ஏராளமான இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறவர்கள், குழந்தை இல்லை என்று சொன்னால் போதும். அடுத்த சில நிமிடத்திலேயே, அவர்களின் விபரங்கள் இடைத்தரகரிடம் சென்றுவிடும். உடனடியாக அவர்களை அழைத்துப் பேசும் இடைத்தரகர்கள், ஏதோ பொம்மை வியாபாரம் போல, உங்களுக்கு எந்த மாதிரியான குழந்தை வேண்டும்? கறுப்போ சிவப்போ உங்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஆரம்பிப்பார்கள்.

Advertisment

குழந்தை பிறப்பதற்கு பிரத்யேகமான விந்தணுக்கள், கருமுட்டைகள் இருக்கின்றன. சிறந்த விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களின் விந்தணுக்கள், கருமுட்டைகள் கூட நம்மிடம் கிடைக்கும். அதன்மூலம் உங்க ளுக்குப் பிறக்கும் குழந்தையும், அவர்களைப் போலவே சாதித்துக் காட்டுவார்கள் என்றெல்லாம் மூளைச்சலவை செய்வார்கள்.

நாளை பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டாமா என்று ஏங்குகிறவர்கள், இடைத்தரகர்களின் இந்த வார்த்தை களால் ஏமாந்துதான் போவார்கள். அவர்களிடம் லட்சக்கணக்கில் கறந்துவிட்டு காணாமல்போன இடைத்தரகர்களும் ஏராளம். மேலும், கருமுட்டைகளை விற்பதற்காக வெளிமாநிலங்களில் இருந்து இளம்பெண்களும், சிறார்களும் அழைத்து வரப்படுவார்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வரும் அவர்கள், அமைந்தகரை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குவார்கள். இப்போது, அவர்களால் வேறு ஒரு பிரச்சனை வந்திருக்கிறது என்று தகவல் வெளியானது.

cc

Advertisment

கொரோனா பீதி சமூகத்தைப் பீடித்திருக்கும் இந்த சமயத்தில், ஊரடங்கிற்கு முன்னால் சென்னைக்கு கருமுட்டை விற்பனைக்காக வந்த 500க்கும் மேற்பட்ட இளம்பெண்களும், சிறுமிகளும் அமைந்தகரை பகுதியில் தங்கி இருக்கிறார்கள். அமைந்தகரை ரயில்வே காலனி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வெளிமாநிலப் பெண்களால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் வாழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த கருமுட்டை வியாபாரத்திற்காக, வெளிமாநிலங்களில் இருந்து இளம்பெண்களை அழைத்துவரும், கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் இடைத்தரகர் ஒருவரிடம் இது தொடர்பாக கேட்டோம். “கிராமத்துப் பின்னணியைக் கொண்ட பெண்களைக் குறிவைத்து அழைத்துவந்து கருமுட்டைகளை எடுப்பார்கள். அதிலும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் என்றால், அவர்களின் கருமுட்டைகள் வலுவானதாகவும், சத்தானதாகவும் இருக்கும் என்பதால், 50 ஆயிரம் வரை விலைபோகும். அதில் எங்களைப் போன்ற இடைத்தரகர்களுக்கு 5 முதல் 10 ஆயிரம் வரை கிடைக்கும். மீதமுள்ள பணத்தை அந்தப் பெண்களுக்கு கொடுத்து விடுவார்கள். ஆனால், இவ்வளவு சொற்பமான தொகைக்கு வாங்கிய கருமுட்டையை 9 லட்சம் ரூபாய் வரை விற்று விடுகிறார்கள் தனியார் மருத்துவத் துறையினர்.

இதற்காக வங்காளதேசம், கொல்கத்தா, புனே, பீகார் போன்ற பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால், வாடிக்கையாளர்கள் இல்லை. அதனால் வருமானமும் கிடைப்பதில்லை. இந்த மருத்துவமனைக்குப் பின்பகுதியில் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்தவர், தன்னைப் போலவே தனது கணவரும் கேரளாவில் இதே தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

இதுதொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சௌந்தர் என்பவர் கூறும்பொழுது, “""கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தப் பகுதியில் இது தொடர்ந்து நடந்து வருகிறது. சட்ட விரோதமான இந்த விற்பனையைத் தடுக்க யாராலும் முடியவில்லை. தற் போது, இதற்காக வெளிமாநிலங் களில் இருந்து வந்தப் பெண்கள், இதே ஏரியாவில் அலைந்து திரிவ தால் கொரோனா தொற்றுக்கான அபாயம் இருப்பதாக அஞ்சு கிறோம்'' என்று பீதியான முகத் தோடு சொன்னவர், ""ஏற்கனவே தொழில்போட்டி காரணமாக பெண் மருத்துவர் ஒருவரைக் கூலிப்படையை ஏவி கொலை செய்த பிரச்சினையும் இந்த விவகாரத்தில் உள்ளது'' என்றார் நம்மிடம்.

அந்த தனியார் மருத்துவ மனையின் உரிமையாளரான முனியாண்டி என்கிற தாமஸிடம் இதுபற்றிக் கேட்டோம்; பேச மறுத்துவிட்டார். சட்டவிரோதக் கருமுட்டை விவகாரத்தில் ஆரம் பத்திலேயே கவனம் செலுத்தத் தவறிய அரசு நிர்வாகம், தற்போது இதற்காக அழைத்து வரப்பட்ட இளம்பெண்களால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அப்பகுதி மக்களின் அச்சத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

-அ.அருண்பாண்டியன்