Advertisment

அம்பலமாகும் மோசடிகள்!  ரத்தாகும் தேர்வுகள்! ஒழிக்கப்படுமா நீட்?

Expose of scams! Cancellation of exams! Will NEET be abolished?

Expose of scams! Cancellation of exams! Will NEET be abolished?

"என்னங்கடா இவிங்க... எதுக்கெடுத்தாலும் நீட் ஒழிப்பு! நீட் ஒழிப்புன்னு சொல்லி போகாத ஊருக்கு வழி சொல்றாய்ங்க!"" என, தி.மு.க.வின் நீட் எதிர்ப்புப் பிரச்சாரம் குறித்து நம்பிக்கையில்லாமல் பேசியவர்கள் கூட தற்போது, ""இம்புட்டு மோசடியான நீட் தேர்வு வேண்டவே வேண்டாம்!"" என்று சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்! 2015ஆம் ஆண்டில், மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் கல்வித்துறையில், வியாபம் ஊழல் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஊழலுக்கு நிகராகத் தற்போது நீட், நெட் தேர்வுகளில் பல்வேறு ஊழல்கள் அம்பலப்பட்டு நாடு முழுக்கப் பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

Advertisment

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் கேள்வித்தாள் கசியவிடப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. ஒரு வினாத்தாள் 40 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இடைத்தரகர்கள், மாணவர்கள் உட்பட 19 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் எல்லையை ஒட்டியுள்ள ஜார்க்கண்டின் ஹசாரிபாத்திலுள்ள ஓயாசிஸ் பள்ளியிலிருந்து தான் வினாத்தாள் கசிந்ததாகத் தெரியவந்துள்ளது. இப்பள்ளிக்கு வந்த வினாத்தாள் பெட்டி சேதப்படுத்தப்பட்டு வினாத்தாள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஜார்க்கண்டை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் குஜராத்தின் கோத்ராவிலுள்ள ஜெய் ஜலராம் பள்ளியில் நீட் தேர்வெழுதியவர்களில் 6 மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே விடையளித்திருக்கிற

Expose of scams! Cancellation of exams! Will NEET be abolished?

"என்னங்கடா இவிங்க... எதுக்கெடுத்தாலும் நீட் ஒழிப்பு! நீட் ஒழிப்புன்னு சொல்லி போகாத ஊருக்கு வழி சொல்றாய்ங்க!"" என, தி.மு.க.வின் நீட் எதிர்ப்புப் பிரச்சாரம் குறித்து நம்பிக்கையில்லாமல் பேசியவர்கள் கூட தற்போது, ""இம்புட்டு மோசடியான நீட் தேர்வு வேண்டவே வேண்டாம்!"" என்று சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்! 2015ஆம் ஆண்டில், மத்திய பிரதேசத்தை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசின் கல்வித்துறையில், வியாபம் ஊழல் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஊழலுக்கு நிகராகத் தற்போது நீட், நெட் தேர்வுகளில் பல்வேறு ஊழல்கள் அம்பலப்பட்டு நாடு முழுக்கப் பலரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

Advertisment

இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடப்பதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் கேள்வித்தாள் கசியவிடப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. ஒரு வினாத்தாள் 40 லட்ச ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக இடைத்தரகர்கள், மாணவர்கள் உட்பட 19 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரின் எல்லையை ஒட்டியுள்ள ஜார்க்கண்டின் ஹசாரிபாத்திலுள்ள ஓயாசிஸ் பள்ளியிலிருந்து தான் வினாத்தாள் கசிந்ததாகத் தெரியவந்துள்ளது. இப்பள்ளிக்கு வந்த வினாத்தாள் பெட்டி சேதப்படுத்தப்பட்டு வினாத்தாள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ஜார்க்கண்டை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் குஜராத்தின் கோத்ராவிலுள்ள ஜெய் ஜலராம் பள்ளியில் நீட் தேர்வெழுதியவர்களில் 6 மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே விடையளித்திருக்கிறார்கள். மிச்ச கேள்விகளுக்கு தேர்வு மைய துணை கண்காணிப்பாளர் துஷார் பட் என்பவர் பதிலளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடமும் 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றிருக்கிறார். மகாராஷ்டிராவின் லத்தூர், சோலாப்பூர் பகுதிகளைச் சேர்ந்த சஞ்சய் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான் ஆகிய 2 ஆசிரியர்கள், வினாத்தாள் கசிவுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

நேர இழப்பு காரணமாக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஹரியாணாவிலுள்ள ஜாஜர் நகரிலுள்ள ஹர்தயாள் பள்ளியில் எழுதிய 504 பேருக்கு நேர இழப்பு இல்லாதபோதும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து மோசடிகள் வெளியான நிலையில், நாடுமுழுக்க மாணவர்கள், இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையைக் கோரி போராட்டத்தில் இறங்கினர். பா.ஜ.க. ஆதரவு மாணவர்கள் அமைப்பான ஏ.பி.வி.பி.யும் நீட்டுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள நீட் தேர்வு முறைகேடு வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் நீக்கப்பட்டு கட்டாயக் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோலா என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு என்ற பெயரில் நடக்கும் மோசடிகளை ஏற்க மறுத்த ஒன்றிய அரசே தற்போது வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறது. தனியொருவனாக தி.மு.க. மட்டுமே நீட் தேர்வுக்கெதிராக முழுக்கமெழுப்பிக் கொண்டிருந்த சூழல் மாறி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியே நீட் தேர்விலும், நெட் தேர்விலும் கேள்வித்தாள்கள் கசிவு குறித்து, ""ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய கல்வி முறையைக் கைப்பற்றியதால் தான் கேள்வித்தாள்கள் கசிகின்றன! பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பலரும் தகுதி அடிப்படையில் நியமிக்கப்படாமல், ஆர்.எஸ்.எஸ்.காரர்களாக இருப்பதால் தான் கல்வித்துறை இப்படி சீரழிந்துள்ளது!"" என்று வெளிப்படையாகத் தாக்கினார்!

இன்னொரு பக்கம், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நீட் தேர்வை ஒழித்தே ஆகவேண்டுமென்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில், 'ப்ளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட போது எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. உலக அளவில் தலைசிறந்த மருத்துவர்களும் இந்தியாவிலிருந்து உருவாகினர். ஆனால், தகுதிவாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதாக கூறி நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது முதலாக, சர்ச்சைகளும், பிரச்சினைகளும் தொடர் கதையாக மாறிவிட்டன.

அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் அரங்கேறியுள்ள மோசடிகள் மனதை நடுங்கச் செய்கின்றன. நீட்தேர்வு எளிய மக்களுக்கு எதிரானது என ஆரம்பம் முதலே தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. நீட் தேர்வு, வசதி படைத்த மாணவர்கள் பயனடையும் வகையில் மட்டுமேயுள்ளது. 2017க்கு முன்பு இருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சுமூகமானதாக இருந்தது. இந்த முறையை மாற்றி, தன்னிச்சையாக நீட் தேர்வை கொண்டு வந்தது கூட்டாட்சிக்கு எதிரானது. ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு ரூ.50 லட்சம் செலவு செய்வதால், மாநிலங்களே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்,"" என்று தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு ஆதரவாகக் குரலெழுப்பியிருப்பது இந்தியா முழுக்க கவனிக்கப்படுகிறது.

ஏற்கெனவே வெளியான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு முறைகேடுகள் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், தேசிய தேர்வு முகமையால், ஜூன் 18ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டு ஷிப்டுகளில் நடத்தப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்திருப்பதாகக்கூறி, மறுநாளே அத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்தது. தேர்வெழுதிய 9 லட்சம் மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதோடு விட்டுவிடுவோமா என்ன? அடுத்ததாக, ஜூன் 23, ஞாயிறன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நீட் முதுகலை நுழைவுத்தேர்வையும், தேர்வுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கு ரத்து செய்து மருத்துவர்களுக்கு அதிர்ச்சியளித்தது! நீட் தேர்வெழுதுவதற்காக நூறு கிலோமீட்டருக்கும் மேலாக பயணித்து தேர்வு மையம் நோக்கி வந்தவர்கள், ரத்து அறிவிப்பால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். ஒரு தேர்வைக்கூட உருப்படியாக நடத்த முடியாத ஒன்றிய அரசை நினைத்து புலம்பியபடி திரும்பச்சென்றனர்.

தன் அண்ணன் மகனுக்காக மதுரையிலுள்ள பி.டி.ஆர். கல்லூரிக்கு வந்திருந்த செல்வம், ""என் அண்ணன் மகன் இத்தேர்வுக்காக வெளியூரிலிருந்து மதுரையிலுள்ள எங்கள் வீட்டுக்கு வந்திருந்தான். இரவெல்லாம் கண்விழித்துப் படித்தவன், நம்பிக்கையோடு தேர்வெழுத மறுநாள் காலையில் தேர்வு மையத்துக்கு சென்றால், தேர்வு ரத்தென்று அறிவிக்கிறார்கள். மூன்றாவது முறையாகவும் தேர்வு ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு, பெரும் மனச்சோர்வையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படி மருத்துவர்களை அலைக்கழித்து, வீண் போக்குவரத்துச் செலவு. நேர விரையம் ஏற்படச்செய்யுள்ளது ஒன்றிய அரசு"" என்று வேதனைப்பட்டார்.

இதேபோல், நெட் தேர்வெழுதியபின், அது ரத்து செய்யப்பட்டதால் வருந்தப்பட்ட மாணவி ஒருவரோ, “இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. என் எதிர்காலக் கல்வித் திட்டங்கள் இதை நம்பியே இருந்தன. இந்தத் தேர்வை முடித்த பிறகு ஆராய்ச்சிப் படிப்புக்கு (பிஎச்.டி) விண்ணப்பிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றால் கல்வி உதவித்தொகை கிடைக்கும். என் ஆய்வுக்கு பயனுள்ளதாக இருக்குமென நம்பினேன். என் நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது"என்றார்.

இதுகுறித்து மதுரை காமராசர் பல்கலைகழக பேராசிரியர் மோகன் நம்மிடம், ""தேசிய தேர்வு முகமை நடத்திய இளநிலை நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் பூதாகரமாகியுள்ள நிலையில், இதனால் நெட் தேர்வு ரத்து தொடர்பான காரணத்தை வெளிப்படையாக கூறாமல் மத்திய கல்வி அமைச்சகம் மறைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நெட் தேர்வின்போது ஆள்மாறாட்டமோ, தேர்வுத்தாள் கசிவோ நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன்காரணமாக யு.ஜி.சி. நெட் 2024 தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 2 கோடி இளைஞர்களின் வாழ்க்கை, வினாத் தாள் கசிவு காரணமாக சீரழிந்துள்ளது."" என்றார். இனியும் ஒன்றிய அரசு வீம்பு பிடிக்காமல், நீட் தேர்வை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

nkn290624
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe