தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கொலை களுக்காக 2019 டிசம்பர் 31 அன்று 27 நபர்களையும், 2020, செப்டம்பர் 21 அன்று 44 நபர்களையும், காவல்துறை அல்லாத 71 பொதுமக்கள் மீதும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சி.பி.ஐ., சுட்டவர்களை அடையாளம் காட்டவில்லை. இதுகுறித்து மார்ச் 31 - ஏப்.02 இதழில் "நக்கீரன்' குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், தாமிர உருக்காலையின் நெருக்கடியால், ஆலைக்கு உதவிய போலீஸாரை காப்பாற்றும் பொருட்டு ஒட்டுமொத்த துப்பாக்கிச் சூடு கொலைகளுக்கும் இவர்தான் காரணமென ஒருவரை மட்டுமே அடையாளம் காட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சி.பி.ஐ. என்கின்ற தகவலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் பொதுமக்கள்.

tt

தனி துணை வட்டாட்சியரான சேகரோ, "கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த பிரச்சனையில், நான்தான் தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் திருமலையிடம் கூட்டத்தினை கலைக்க உத்தரவிட்டேன். அவர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுமாறு அங்கிருந்த எஸ்.ஐ.யிடம் கூற, முதலில் 2 கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அது பயனளிக்காததால் அதன் பிறகு அதே எஸ்.ஐ. மூலம் ஏஹள் ஏன்ய்-ஐ பிரயோக்கிக்க கூற... அதுவும் பிரயோஜனமில்லை என்பதால், அங்கிருந்த டி.ஐ.ஜி. கபில் சாரட்காரிடம், துப்பாக்கி பிரயோகம் செய்து கொள்ள உத்தரவிட்டேன். அவரோ, முதலில் இன்ஸ்ரீந் நட்ர்ற் தோட்டாக்களை பிரயோகிக்க உத்தரவிட்டார். அதன்பின் தனது அதிரடிப்படையிலிருந்து ஒரு காவலரைக் கூப்பிட்டு சுடச் சொன்னார். அதுவும் எடுபடவில்லை. இவ்வேளையில், இன்ஸ்பெக்டர் திருமலை தட்டப்பாறை எஸ்.ஐ. ரென்னீஸைக் கூப்பிட்டு சுட உத்தரவிட்டார். கலெக்டர் அலுவலக போர்டிகோவிலிருந்த எஸ்.ஐ. ரென்னீஸ் தனது கைத்துப்பாக்கியால் ஒன்றன்பின் ஒன்றாக பிரயோகம் செய்தார்...'' என்றிருக்கின்றார், தன்னுடைய வாக்குமூலத்தில்.

அதுபோல், "கலெக்டர் வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டினால் தோட்டாக்கள் காலியான தால் தோட்டாக்களையும், துப்பாக்கிகளையும் ஆயுதப்படையிலிருந்து கொண்டு வர உத்தரவிட் டேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தூத்துக்குடி நெல்லை நெடுஞ்சாலைக்கு வாகனம் மூலம் கொண்டுவந்தனர் காவலர்களான ராஜாவும் முருகனும். அந்த நேரத்தில் எதிர்ப்புறத்திலிருந்து கற்கள் விழுந்ததால் அவர்களை நோக்கிச் சுடுமாறு நான்தான் உத்திர விட்டேன். அதற்கிணங்க இருவரும் வாகனத்தின் மேற்கூரையில் ஏறி சுட்டனர்'' என தன்னுடைய வாக்கு மூலத்தில் பதிவு செய் துள்ளார் அப்போதைய சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்ட ரான ஹரிஹரன். இதற்குப் போட்டி யாக, "கலெக்டர் அலுவலகம் தாக்கப் படும்பொழுது, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப்படைக் காவலர் சுடலைக்கண்ணுவைக் (3200) கூப்பிட்டு, அவரை சுட உத்தர விட்டேன். அதன் பின், அங்கு வந்த ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ் தனது போலீஸ் பார்ட்டியில் இருந்த எஸ்.ஐ. சொர்ணமணி யைக் கூப்பிட்டு சுட உத்தரவிட்டார். இதனால் பலருக்கு குண்டடிக் காயங்கள் பட்டது. காயத்தால் அவதிப்பட்டவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸை கலவரக்காரர்கள் கைப்பற்றி வைத்துக்கொள்ள... அதனை மீட்க ஐ.ஜி. போலீஸ் பார்ட்டியிலிருந்த சதீஷ்குமார் என்ற காவலரை 410 வகை துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டு மீட்டோம்" என ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கின்றார் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. லிங்கதிருமாறன்.

Advertisment

tt

ஒட்டுமொத்த போலீஸ் படையும் கலெக்டர் வளாகத்தில் குவிக்கப்பட்டதன் விளைவாக... கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் மட்டும் உசிலம்பட்டி ஜெயராமன், தாளமுத்து நகர் கிளாட்ஸன், ஆண்டனி செல்வராஜ், லயன்ஸ் ஸ்டோன் ஸ்னோலின், தாமோதரன் நகர் மணிராஜ், குறுக்குச்சாலை தமிழரசன், மில்லர்புரம் கந்தையா, மாசிலாமணிபுரம் சண்முகம் மற்றும் சிப்காட்டைச் சேர்ந்த ரஞ்சித்குமார் உள்ளிட்ட 9 நபர்கள் அங்கேயே சுடப்பட்டு கொல்லப்பட்டனர். அதன்பிறகும் வெறி தணியாத போலீஸ், திரேஸ்புரத்தில் ஜான்சியையும், எப்.சி.ஐ. ரவுண்டானாவில் கார்த்தியையும், அண்ணா நகரில் காளியப்பனையும், மூன்றாவது மைலில் செல்வசேகரையும் வேட்டையாடியது. பின் கையில் கிடைத்தவர்களையெல்லாம் அடித்து துவைத்தது தனிக்கதை.

ttஇது இப்படியிருக்க, ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குமூலத்தில் அவர் கூறினார், இவர் கூறினார் என நாசூக்காக விலகிக்கொண்ட நிலையில்... "டி.ஐ.ஜி. கபில்சரத்கார் உத்தரவின் பேரில் முதலில் எஸ்.ஐ. பூமிபாலனும், அதிரடிப்படைக் ttகாவலர் ராஜா (1160) இன்ஸ்ரீந் நட்ர்ற்களை உபயோகித்தனர். இதில், டி.ஐ.ஜி.யின் காவலர் தாண்டவமூர்த்தி (1158) 303 வகை துப்பாக்கியினையும், மற்றொரு காவலரான அதிரடிப்படைக் காவலர் ராஜா (1160) 410 வகை துப்பாக்கியினையும் பிரயோகித்தனர். இருப்பினும் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே "நான்தான் தட்டப்பாறை எஸ்.ஐ. ரென்னீஸிற்கு கைத் துப்பாக்கியால் சுட உத்தரவிட்டேன். அதன்பிறகு தாண்டவமூர்த்தியும் (1158), சுடலைக்கண்ணுவும் (3200) மாவட்ட ஆட்சியர் வளாக ஆர்ச்சின் மேற்கு பக்கம் 303 வகை துப்பாக்கிகளைப் பிரயோகித்தனர். இதன் பலனாக வன்முறைக் கும்பல் நாலாபுறமும் சிதறி வெளியேறியது. அதன்பின் குண்டடிபட்டு 9 நபர்கள் இறந்துவிட்டனர்'' என வாக்குமூலம் தந்திருக்கின்றார், அப்போதைய தூத்துக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், இன்றைய ராமநாதபுர மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யுமான திருமலை. இது சி.பி.ஐ.-க்கு தெரியவர... ஒட்டுமொத்த படுகொலைகளுக்கு இவர் மட்டுமே குற்றவாளியாக்கப்படவுள்ளார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் தருணமென தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளுக்கு, எவ்விதத்திலும் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற் காக டி.எஸ்.பி. திருமலையையே குற்றவாளியாக்க துணிந்து, அதற்கான காய்களை நகர்த்தி வருகின்றது தாமிர உருக்காலை நிர்வாகம்.

Advertisment

"அன்றைய நாளில் பணியிலிருந்த டி.எஸ்.பி.க்களான தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., விளாத்திக்குளம் டி.எஸ்.பி., ஸ்ரீவைகுண் டம் டி.எஸ்.பி, மணியாச்சி டி.எஸ்.பி., மதுவிலக்கு டி.எஸ்.பி. உள்ளிட்டோரை சேர்த்து மொத்தமாக 8 இன்ஸ்பெக்டர் கள், 13 சப் இன்ஸ்பெக்டர்கள், 22 குறிபார்த்துச் சுடும் சிறப்பு படையினர் என மக்களை சுட்டுக் கொன்ற போலீஸ் கொலையாளிகள் மட்டும் 57 நபர்கள் என்கின்றது தேசிய மனித உரிமை ஆணை யம். ஆனால், ஒரே ஒரு டி.எஸ்.பி.யை எப்படி பொறுப்பேற்க வைக்கமுடியும்..?'' என்கின்ற கேள்விக்கு விடையில்லை.

இது குறித்து கருத்தறிய டி.எஸ்.பி. திருமலையை தொடர்புகொண்டோம். "இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என விலகிக்கொண்டார் அவர். சுட்டவர்கள் குறித்து எப்பொழுது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யும்..? என்பது மில்லியன் டாலர் கேள்வி.