கனியாமூர் சக்தி பள்ளி வளாகத் தில் மரணமடைந்த ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை அல்ல கொலை என, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான ஹாஸ்டல் வார்டன் கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் என்பவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் அளித்த சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயராஜ் என்பவர் தாக்கல் செய்த சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் "நான் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்தவன். எனது மகள் கிருத்திகா, கனியாமூர் சக்தி பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். எனக்கு இந்த வழக்கின் உண்மைகள் அனைத்தும் தெரியும். இந்த வழக்கில் எனது மகள் கிருத்திகா கைது செய்யப் பட்டு முதல் குற்றவாளி யாக இருக்கிறார். ஸ்ரீமதி இறந்த அன்று அதி காலை 5:15 மணி அள வில் ஸ்ரீமதி இறந்து கிடப்பதாக வாட்ச்மேன் சத்தம் எழுப்பினார். அதைக்கேட்டு விடுதியில் இருந்த எனது மகளும் மற்றொரு ஆசிரியையும் ஸ்ரீமதியின் உடல் தரையில் கிடப் பதைக் கண்டனர். மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் உடலைக் கொண்டு சென்றபோது, அவர் முன்பே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த மரணத்திற்குக் காரணம் என எனது மகள் கிருத்திகாவையும் மற்றொரு ஆசிரியையான ஹரிப்பிரியாவையும் குற்றம்சாட்டுகிறார்கள்.
கிருத்திகாவும் ஹரிப்பிரியாவும், மதிப்பெண் குறைவாகப் பெற்றதாக ஸ்ரீமதியைத் திட்டியதால், ஸ்ரீமதி மனமுடைந்து மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக
கனியாமூர் சக்தி பள்ளி வளாகத் தில் மரணமடைந்த ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை அல்ல கொலை என, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளியான ஹாஸ்டல் வார்டன் கிருத்திகாவின் தந்தை ஜெயராஜ் என்பவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் அளித்த சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயராஜ் என்பவர் தாக்கல் செய்த சத்தியப்பிரமாண வாக்குமூலத்தில் "நான் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்தவன். எனது மகள் கிருத்திகா, கனியாமூர் சக்தி பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். எனக்கு இந்த வழக்கின் உண்மைகள் அனைத்தும் தெரியும். இந்த வழக்கில் எனது மகள் கிருத்திகா கைது செய்யப் பட்டு முதல் குற்றவாளி யாக இருக்கிறார். ஸ்ரீமதி இறந்த அன்று அதி காலை 5:15 மணி அள வில் ஸ்ரீமதி இறந்து கிடப்பதாக வாட்ச்மேன் சத்தம் எழுப்பினார். அதைக்கேட்டு விடுதியில் இருந்த எனது மகளும் மற்றொரு ஆசிரியையும் ஸ்ரீமதியின் உடல் தரையில் கிடப் பதைக் கண்டனர். மருத்துவமனைக்கு ஸ்ரீமதியின் உடலைக் கொண்டு சென்றபோது, அவர் முன்பே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இந்த மரணத்திற்குக் காரணம் என எனது மகள் கிருத்திகாவையும் மற்றொரு ஆசிரியையான ஹரிப்பிரியாவையும் குற்றம்சாட்டுகிறார்கள்.
கிருத்திகாவும் ஹரிப்பிரியாவும், மதிப்பெண் குறைவாகப் பெற்றதாக ஸ்ரீமதியைத் திட்டியதால், ஸ்ரீமதி மனமுடைந்து மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் ஒரு கதையை ஜோடித்துவிட்டனர். இதுவே முதல் தகவல் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டு, புலன் விசாரணை நடந்துவருகிறது. நான் கடந்த 8-ஆம் தேதி எனது மகளை சிறையில் சந்தித்துப் பேசினேன். அப்போது பல உண்மைகள் எனக்குத் தெரியவந்தன.
ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை அல்ல... கொலைதான் எனப் பல தடயங்கள் கிடைத்துள்ளன. ஸ்ரீமதி நன்றாகப் படிக்கக்கூடிய மாணவி. அவளை சரியாகப் படிக்கவில்லை எனத் திட்டுவதற்கான தேவை எதுவும் எனது மகளுக்கு எழவில்லை. எனது மகளும் ஹரிப்பிரியாவும் மாணவர்களிடம் அன்பாகவும், அக்கறையோடும் நடந்துவந்துள்ளனர். ஸ்ரீமதி கடந்த தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அவரை ஆசிரியைகள் திட்டவோ, கோபித்துக்கொள்ளவேண்டிய அவசியமோ இல்லை. அதனால் "ஆசிரியைகள் திட்டியதால் ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார்' எனப் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, எனது மகளையும் ஹரிப்பிரியாவையும் சிறையில் அடைத்துள்ளனர்.
9-8-2022 அன்று கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள நக்கீரன் இதழில், "ஸ்ரீமதிக்கு முன் பிரகாஷ்! பள்ளி நிர்வாகியின் லீலையை நேரில் பார்த்த மாணவர் மர்ம மரணம்!' என 2022, ஆக.10-12 தேதியிட்ட நக்கீரன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரகாஷ் என்ற மாணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்ததாகவும், அம்மாணவன் ஒரு கிணற்றில் பிணமாகக் கிடந்ததாகவும் படங்களோடு விவரமான செய்தி சொல்லப் பட்டுள்ளது.
இப்படி சில மாணவர்கள் தொடர்ந்து சில ஆண்டுகளில் இறந்துள் ளார்கள் என்பது தெரிய வருகிறது. எனவே எனது மகள் தொடர்ந்து ரவிக் குமாருடனும், சாந்தியுடனும் சேர்ந்து சேலம் சிறை யில் இருப்பது ஆபத்தானது என எனது குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை கொள்கிறார்கள். என் மகள் மீது பொய்யான குற்றச் சாட்டு ஜோடிக்கப்பட் டுள்ளது. எனது மகளும் சக ஆசிரியையான ஹரிப் பிரியாவும் எவ்விதக் குற்றச் சாட்டுகளுக்கும் உள்ளாகாத வர்கள்.
எனவே வழக்கில் அவர்களுக்குப் பிணை கிடைக்கும்வரை அவர் களை திருச்சி சிறைக்கு மாற்றும்படி கோரிக்கை வைக்கிறோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயராஜின் இந்த சத்தியப்பிரமாண வாக்கு மூலத்தை பிரபல வழக்கறிஞ ரும் அம்பேத்கர் சட்டப் பணிகள் சங்கத்தின் நிறுவனருமான கண்ணகி -முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்து பிரபலமானவருமான பொ.ரத்தினம் தாக்கல் செய்திருக்கிறார்.
இதுபற்றி ஸ்ரீமதியின் வழக்கறிஞரான காசி விஸ்வநாதனிடமும், ஸ்ரீமதியின் தாயார் செல்வியிடமும் பேசினோம்.
"இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக வரவேண்டியது பள்ளி உரிமையாளர் ரவிக்குமார். ஆனால் போலீசார் தவறாக கிருத்திகாவை முதல் குற்றவாளி என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படிப் பார்த்தால், வழக்கின் முதல் குற்றவாளியான கிருத்திகாவே "ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை அல்ல கொலை' என அவரது தந்தை மூலம் கோர்ட்டில் தெரிவித்துள்ளார். ஸ்ரீமதியின் தற்கொலைக் கடிதம் என குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தில், கிருத்திகாவும், வேதியியல் ஆசிரியையுமான ஹரிப்பிரியாவும் சிக்கினார்கள். எனக்கு வேதியியல் சமன்பாடுகள் புரியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பொழுது கிருத்திகா வின் தந்தை மூலமாக, "ஸ்ரீமதி நன்றாகப் படிப்பவள், அவளை நாங்கள் ஏன் திட்ட வேண்டும்' என கோர்ட்டில் பதில் சொல்லியிருக் கிறார்கள்.
ஸ்ரீமதியின் தற்கொலைக் கடிதம் போலி என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை அல்ல, கொலை என கிருத்திகாவின் தந்தை குறிப்பிடுகிறார். அவர் கிருத்திகாவை சேலம் சிறையில் சந்தித்து விட்டு வந்துதான் இந்த சத்தியப் பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்திருக்கிறார். எனவே இதில் உண்மை இருக்கிறது என கோர்ட்டும் போலீசாரும் புரிந்துகொள்ளுவார் கள்'' என்றார்.
ஸ்ரீமதியின் அம்மா செல்வியோ, "இந்த கிருத்திகாதான் ஸ்ரீமதி இறந்த ஹாஸ்டலின் வார்டனாக இருந்தவர். இவருக்கு எல்லா உண்மைகளும் தெரியும். ஸ்ரீமதியின் உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது கிருத்திகாவும் உடன் சென்றார்.
ஸ்ரீமதியின் மரணத்திற்கு கிருத்திகா காரணம் இல்லை என அவரது தந்தை தெரிவிக்கிறார். ஸ்ரீமதியின் மரணம் ஒரு கொலை என கிருத்திகாவின் தந்தை சொல்வது, கிருத்தி காவே சொல்வது போல் இருக்கிறது. ஸ்ரீமதியின் கடிதத் தில் தற்கொலைக்குக் காரணம் ஆசிரி யைகள் திட்டியது தான் என பள்ளி நிர்வாகமே ஸ்ரீமதி எழுதியது போல் ஒரு கடிதத்தை தயாரித்திருக்கிறது என்பது இந்த சத்தியப்பிரமாண வாக்குமூலத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது'' என்றார்.
இதற்கிடையே... பிரச்சினைக்குரிய கனியாமூர் சக்தி பள்ளி மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. எரிக்கப்பட்ட சக்தி பள்ளியிலிருந்து ஆறரைக் கிலோமீட்டர் தொலைவில் அம்மையாவரம் என்கிற பகுதியில் இயங்கும் பாலாஜி கல்வியியல் கல்லூரி என்ற இயங்காத ஒரு கல்லூரியை ரவிக்குமார் தரப்பு விலைக்கு வாங்கி, அங்கே சக்தி பள்ளியின் 9, 10, 11, 12-ஆம் வகுப்புகளை நடத்திவருகிறது.
நாம் அந்த இடத்திற்கு நேரடியாகச் சென்று ரவிக்குமாரின் தாயார் பார்வதி அம்மாளையும், ரவிக்குமாரின் தம்பி அருள்சுபாஷையும் சந்தித்தோம்.
நம்மிடம் பேசிய பார்வதி அம்மா "ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டாள். அதை சாந்தியும் ரவிக்குமாரும் சரியாகக் கையாளவில்லை'' என்றார்.
அருள்சுபாஷ், "மீண்டும் மீண்டும் நக்கீரன் எங்களைப் பற்றி எழுதுகிறது. மீண்டும் இந்தப் பகுதிக்கு வந்தால் நடப்பதே வேறு'' என மிரட்டினார். இதை வீடியோவாக எடுத்து ஸ்ரீமதியின் அம்மா செல்வியிடம் காட்டினோம்.
அந்த வீடியோவையும், பாலாஜி கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தி பள்ளியில் நடந்துவரும் காட்சிகளையும் பார்த்து கண்ணீர்விட்டு அழுதார்.
இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரியான விஜயலட்சுமியிடம் கேட்டோம்.
அவர், "மாவட்ட கலெக்டர்தான் சக்தி பள்ளி மீண்டும் இயங்க அனுமதி தந்தார்'' என்றார்.
படங்கள் : அஜித், விவேக்