Advertisment

EXCLUSIVE போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்! ஒடிக்கப்பட்ட விரல்கள்... சிதைக்கப்பட்ட பின்புறம்... உடலெங்கும் ரத்தக்கட்டு! -சாத்தான்குளம் கொடூரம்!

tuty

ப்பா ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் சித்ரவதையால் மரணத்திற்கு தள்ளிய சாத்தான்குளம் போலீசின் கொடூர செயலை முதல்வர் தொடங்கி மொத்த அரசு இயந்திரமும் மறைக்க முயற்சித்த போது, கோவில்பட்டி கிளைச்சிறை மருத்துவர் எழுதிய மருத்துவக் குறிப்பை சான்றாவணமாக வெளியிட்டு உண்மையை அம்பலப்படுத் தியது "நக்கீரன்'.

Advertisment

tuty

எப்படியாவது இதனை மறைத்து விடலாம், மக்களும் மறந்துவிடுவார்கள் என ஆட்சியாளர்கள் நினைத்தாலும் நக்கீரனின் புலனாய்வு தொடர்கிறது. தலைமைக்காவலர் ரேவதியின் வாக்குமூலம், ப்ரண்ட்ஸ் ஆப் போலீசார் என்ற பெயரில் காவல்துறை நடத்தும் அராஜகம், பிரேதப்பரிசோதனை வீடியோ என அனைத்தையும் ஊலஈகமநஒயஊ ஆக வெளியிட்ட நக்கீரன், சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையையும் மற்ற ஊடகங்கள் வெளியிடுவதற்கு முன்பே வெளிக்கொண்டு வந்தது.

Advertisment

மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்ற சி.பி.ஐ. சிறப்பு வழக்கு மன்றத்தில் நீதிபதி வடிவேலு முன்பு நவம்பர் 11 அன்று வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், முதன்மைக் குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தொடங்கி காவலர்கள் வரை சி.பி.ஐ.யால் குற்றம் சுமத்தப்பெற்ற 9 போலீசாரும் நீதிமன்றத் தில் ஆஜராகினர். அவர்களுக்கு சி.பி.ஐ.-யினர் சமர்ப்பித்த 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. அதனை அனைவரும் பெற்றுக் கொண்ட நிலையில், வழக்கின் விசாரணை வருகின்ற 18ம் தேதி தொடருமென அறிவிக்கப்பட்டது.

போலீஸ் சித்ரவதையால் கொலையுண்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை மருத்துவக்கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் ஆணையினால், சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரியர் செல்வமுருகன், உதவி பேராசிரியர் பிரசன்னா மற்றும் மருத்துவத்துறையின் பட்டமேற்படிப்பிற்கான விரிவுரையாளர் சுதன் ஆகிய

ப்பா ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் சித்ரவதையால் மரணத்திற்கு தள்ளிய சாத்தான்குளம் போலீசின் கொடூர செயலை முதல்வர் தொடங்கி மொத்த அரசு இயந்திரமும் மறைக்க முயற்சித்த போது, கோவில்பட்டி கிளைச்சிறை மருத்துவர் எழுதிய மருத்துவக் குறிப்பை சான்றாவணமாக வெளியிட்டு உண்மையை அம்பலப்படுத் தியது "நக்கீரன்'.

Advertisment

tuty

எப்படியாவது இதனை மறைத்து விடலாம், மக்களும் மறந்துவிடுவார்கள் என ஆட்சியாளர்கள் நினைத்தாலும் நக்கீரனின் புலனாய்வு தொடர்கிறது. தலைமைக்காவலர் ரேவதியின் வாக்குமூலம், ப்ரண்ட்ஸ் ஆப் போலீசார் என்ற பெயரில் காவல்துறை நடத்தும் அராஜகம், பிரேதப்பரிசோதனை வீடியோ என அனைத்தையும் ஊலஈகமநஒயஊ ஆக வெளியிட்ட நக்கீரன், சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையையும் மற்ற ஊடகங்கள் வெளியிடுவதற்கு முன்பே வெளிக்கொண்டு வந்தது.

Advertisment

மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்ற சி.பி.ஐ. சிறப்பு வழக்கு மன்றத்தில் நீதிபதி வடிவேலு முன்பு நவம்பர் 11 அன்று வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், முதன்மைக் குற்றவாளி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தொடங்கி காவலர்கள் வரை சி.பி.ஐ.யால் குற்றம் சுமத்தப்பெற்ற 9 போலீசாரும் நீதிமன்றத் தில் ஆஜராகினர். அவர்களுக்கு சி.பி.ஐ.-யினர் சமர்ப்பித்த 2027 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. அதனை அனைவரும் பெற்றுக் கொண்ட நிலையில், வழக்கின் விசாரணை வருகின்ற 18ம் தேதி தொடருமென அறிவிக்கப்பட்டது.

போலீஸ் சித்ரவதையால் கொலையுண்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை மருத்துவக்கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையின் ஆணையினால், சட்டம் சார்ந்த மருத்துவத் துறை பேராசிரியர் செல்வமுருகன், உதவி பேராசிரியர் பிரசன்னா மற்றும் மருத்துவத்துறையின் பட்டமேற்படிப்பிற்கான விரிவுரையாளர் சுதன் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினை நியமித்தார் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற எண் 649/2020 மற்றும் குற்ற எண் 650/2020 ஆகிய இரு வழக்குகளின் படி 24/06/2020 அன்று மாலை வேளையில் முறையே பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் உடல்களை பெற்று பிரேதப் பரிசோதனையை தொடங்கியுள்ளது மருத்துவர்கள் குழு. முத்திரையிடப்பட்ட கவரில் இருவரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையும் நீதிமன்றத்திற்கு அனுப்பப் பட்டுள்ளது. இதில், ""ஜெயராஜிற்கு 17 காயங்களும், பென்னிக்ஸிற்கு 13 காயங்களும் இருந்தன என்றும், கொடூரமாக மழுங்கலான பொருட்களைக் கொண்டு அடித்ததால் உடலெங்கும் ரத்தக்காயங்கள் ஏற்பட்டு ரத்தக்கட்டுக்களாக கருமையாகக் காட்சியளித்தன. காயத்தின் அளவும் ஆழமாய் உள்ளது என்றும், அது போல் பின்புறப் பகுதிகளும், மலத்துவாரப் பகுதியிலிருந்து சிறுநீர் விதைப்பகுதி வரைக்கும் தோல் கிழிந்து, நீர்பிடித்த காயங்களும், கைவிரல்கள் உடைக்கப்பட்டு காயங்களோடு இருந்தது'' என்கிறது அந்த அறிக்கை.

tuty

அதில் குறிப்பிடப்பட்டுள்ள காயங்கள்:

1. வலது முன்னங்கை வெளிப்புறத்தின் நடுவே 1.5 x 1 செ.மீ அளவிலான காயம் காணப்பட்ட நிலையில், அதனை அறுத்துப் பார்த்ததில் அதன் கீழுள்ள சதைகளில் அடர்ந்த கருமை நிற ரத்தக்கட்டு காணப்பட்டது.

2. வலது ஆள்காட்டி விரலின் கீழ் 1x0.2 செ.மீ அளவில் ஒரு காயம்.

3. இடது மேல்கையின் உட்பகுதி யிலோ 8x5 செ.மீ அளவில் ஒரு காயம். அதனை அறுத்துப் பார்த்ததில் அதனிலும் அடர்ந்த கருமை நிற ரத்தக்கட்டு காணப்பட்டது.

4. இடது முழங்கையின் பின்புறம் 2x0.5 செ.மீ அளவில் ஒரு காயம்.

5. இடது முழங்காலின் முன்புறத்தில் 0.5x0.5 செ.மீ அளவில் ஒரு காயம்

6. இடது காலின் முன்புறம் 2x0.5 செ.மீ அளவில் ஒரு காயம்.

7. வலது பிட்டப்பகுதியில் 8 முதல் 30 செ.மீ, 8 முதல் 17 செ.மீ அளவில் இறப்பிற்கு முன்பு ஏற்பட்ட தோல் உரிதலும், அதனை அறுத்துப் பார்த்ததில் அதனின் கீழ்ச்சதைகளில் அடர்ந்த கருமை நிற ரத்தக்கட்டு காணப்பட்டது.

8 இடது பிட்டப்பகுதியில் 7 முதல் 17 செ.மீ, 6 முதல் 14 செ.மீ அளவில் இறப்பிற்கு முன்பு ஏற்பட்ட தோல் உரிதலும், அதனை அறுத்துப் பார்த்ததில் அதன் கீழ்ச்சதைகளில் அடர்ந்த கருமை நிற ரத்தக்கட்டு காணப்பட்டது.

9. இடது கால்பாதத்தில் 6x6 செ.மீ அளவில் காயம்.

10. வலது மேல்கையின் கீழ்புறத்தில் 5x4 செ.மீ அளவில் காயம்.

11. வலது முழங்கையின் உட்புறம் 19x.5 செமீ அளவில் கருமை நிற ரத்தக்கட்டு.

12. இடது உள்ளங்கையில் 7x6 செமீ அளவில் கருமை நிற ரத்தக்கட்டு

13. ஆசனவாய் பகுதியில் 7x5 செ.மீ அளவில் இறப்பிற்கு முன் ஏற்பட்ட தோல் உரிதல் உள்ளிட்ட 13 காயங்கள் உள்ளன என்றும், மேற்பட்ட காயங்கள் மரணம் ஏற்படுவதற்கு 1 முதல் மூன்று நாட்களுக்குள் ஏற்பட்டிருக்க வேண்டுமெனவும் கூறுகின்றது.

இதன் தொடர்ச்சியாக உள்ளுறுப்புக்கள் பரிசோதனையில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் நல்ல நிலையில் இருந்தாலும், இருதயத்தின் இடது வென்ட்ரிகிள் பகுதியில் 3ஷ்2 செ.மீ அளவில் இடம் சிவந்தும், வலது மற்றும் இடது வென்ட்ரிகிள் பகுதியில் சிவப்பு நிற மாறுதலும் ஏற்பட்டுள்ளது. இதே வேளையில் கொரோனா தொற்று இல்லை எனவும், நுண்ணோக்கிப் பரிசோதனை அறிக்கையில் மூளையில் எவ்வித மாறுதல்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் மரணத்திற்கான காரணியாக உடலில் காணப்பட்ட காயங்களின் பின்விளைவுகளின் அடிப்படையிலே மரணம் சம்பவித்திருக்கும் எனவும், காயங்களின் தன்மையை கூர்ந்து நோக்கும் போது மழுங்கலான பொருட்கள் கொண்டு தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

tuty

கூடுதலாக விரல்கள் உடைக்கப்பட்டும், விரல் பகுதிகளில் சிராய்ப்பு உள்ளிட்டவைகளோடு 17 காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

தந்தை-மகன் சித்ரவதை கொலையில் போலீசார் பயன்படுத்திய, மழுங்கலான ஆயுதங்களான 121 செ.மீ நீளமுள்ள மூங்கில் லத்தி, 91 செ.மீ நீளமுள்ள லத்தி, 136 செ.மீ நீளமுள்ள மூங்கில் லத்தி, 110 செ.மீ. நீளமுள்ள மூங்கில் லத்தி, 119 செ.மீ நீளமுள்ள மூங்கில் லத்தி, 83 செ.மீ. நீளமுள்ள சிவப்பு நிற லத்தி, 73 நீளமுள்ள பிவிசி பைப், 73 செ.மீ நீளமுள்ள மூங்கில் லத்தி (அதன்tuty மத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளது) ஆகியன போலீசார்கள் மாதாராஜ், செல்லத்துரை, அழகுமாரி செல்வம், வினோத்குமார், ஜேசுராஜ், சாமத்துரை (மாஜிஸ்திரேட் விசாரணையின் போது தப்பி ஓடியவர்) வெயிலுமுத்து ஆகியோரின் குடியிருப்புப் பகுதிகளிலும் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் அறையிலும் கைப்பற்றப்பட்டு ஆவணமாக்கப்பட்டுள்ளன.

காவல் நிலையத்தின் வாசல் கதவு அருகிலும், ஹாலிலும், மாடிப்படி மற்றும் கைதிகள் அறையிலும் வைத்து தந்தையும் மகனும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். இதற்கான சாட்சியங்களின் வாக்குமூல அடிப்படையில் மாதிரி வரைபடமாக முன்பே பதிவு செய்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார். (காண்க: வரைபடம்)

கஞ்சாவிற்கு அடிமையானாரா இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்?

சித்ரவதை கொலை வழக்கில் சி.பி.ஐ.யால் எட்டாவது குற்றவாளியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள தாமஸ் பிரான்சிஸ், தட்டார்மட காவல்நிலைய எண்ணிக்கையில் உள்ளவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்பி தனிப்பிரிவு காவலராக சாத்தான்குளத்தில் பணியாற்றிய நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் காவல் நிலையத்திலேயே கஞ்சா போதையில் மிதக்கின்றார் என தனது மேலதிகாரிக்கு குறிப்பு எழுதியதால், திடீரென தனிப்பிரிவிலிருந்து சி.சி.டி.என்.எஸ்.ஸிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

tutyஅவருக்குப் பதிலாக சந்தானக்குமார் எனும் காவலர் நியமிக்கப்பட்ட நிலையில் எதற்காக இந்த பணிமாற்றம் எனத் தெரியாமல் இருந்த நிலையில், ""என்னைய போட்டுக் கொடுக்கின்ற அளவிற்கு நீ பெரிய ஆளாயிட்டே.! நீ இங்கேயே கிட..! தினசரி நான் வரும் போது 30 சல்யூட் அடிக்கனும்'' என இன்ஸ் கட்டளையிட, சித்ரவதை சம்பவம் நடக்கும் வரை தினசரி அந்த வேலையினை செவ்வனே செய்து வந்திருக்கின்றார் தாமஸ் பிரான்சிஸ்.

என்ன ஆனது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்..?

சென்னை மதுரைக்கிளையில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர்களான எபினேசர் மற்றும் மணிவேல் பாண்டியனோ, ""நீதிபதி பாரதிதாசன் முன்பும், தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 3 நீதிபதி கதிர்வேலு முன்பும் முறையே 28/06 மற்றும் 03/07 ஆகிய தேதிகளில் ஆஜராகி தலைமைக் காவலர் ரேவதி அளித்த ஒப்புதல் வாக்குமூலம், பல்வேறு புரிதல்களை உருவாக்கியுள்ளது. சி.பி.ஐ. தரப்பு வேண்டுமென்றே பலரை தப்பவிட்டுள்ளது தெளிவாக புலனாகிறது.

அதில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீதான வழக்குக் குறித்து எஸ்.எஸ்.ஐ ஒருவர் குறித்துக் கொடுக்க, அந்த புகாரை டைப் செய்தவரும், கம்ப்ளைண்ட் கொடுத்தவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அதனை ஆரம்பித்த எஸ்.எஸ்.ஐ. ரவிச்சந்திரன் என்ன ஆனார்..?

அது போக சி.பி.சி.ஐ.டி. விசாரணையில், அதாவது சி.பி.ஐ.யிடம் வழக்கு போகும் முன், தனது பேட்டியில், ""ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸை நெருங்கிவிட்டோம். இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்றது சி.பி.சி.ஐ.டி. தரப்பு. ஏன் அவர்களை சேர்க்கவில்லை? இயக்கவாதிகள் சிலர் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கடந்த கால வரலாறு. அவர்கள் தலையீட்டால் அவர்களை தப்பிக்க விடுகிறதா சி.பி.ஐ. என்ற எண்ணமும் எங்களுக்கு உண்டு. இதனை சரி செய்ய வேண்டியது சி.பி.ஐ.யின் கடமை'' என்கின்றனர் அவர்கள்.

- நாகேந்திரன்

படங்கள்: விவேக்

nkn181120
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe