Advertisment

EXCLUSIVE : மாணவி ஸ்ரீமதியின் மரண மர்மங்களை உடைக்கும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!

srimathi

ள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் பற்றிய விவாதம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளி நிர்வாகமோ மாணவியின் மரணம் தற்கொலைதான் என்று சொல்லி, அதற்குக் காரணம் காதல் விவகாரம் என்று கொச்சைப் படுத்துகிறது. நிர்வாகத்திற்கு சாதகமான போலீஸ் அதிகாரிகளும் இதே செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மாணவியின் மரணத்தில் பல சந்தேகங்களை எழுப்பக் கூடிய ஒரு ஆவணம் நக்கீரனுக்குக் கிடைத்திருக்கிறது.

Advertisment

srimathi

சின்னசேலம் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியான டி.எஸ்.பி., மற்றும் காவலர் கனிமொழிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையின் டியூட்டர் என்கிற பதவியில் இருக்கும் டாக்டர் ஆர்.செந்தில்குமார் மற்றும் அவருக்குக் கீழே உதவி பேராசிரியராக பணியாற் றும் டாக்டர், ஆர்.நித்யா என்கிற பெண் மருத்துவர் 15-07-2022 அன்று அளித்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை நக்கீரனுக்க

ள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் பற்றிய விவாதம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பள்ளி நிர்வாகமோ மாணவியின் மரணம் தற்கொலைதான் என்று சொல்லி, அதற்குக் காரணம் காதல் விவகாரம் என்று கொச்சைப் படுத்துகிறது. நிர்வாகத்திற்கு சாதகமான போலீஸ் அதிகாரிகளும் இதே செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மாணவியின் மரணத்தில் பல சந்தேகங்களை எழுப்பக் கூடிய ஒரு ஆவணம் நக்கீரனுக்குக் கிடைத்திருக்கிறது.

Advertisment

srimathi

சின்னசேலம் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியான டி.எஸ்.பி., மற்றும் காவலர் கனிமொழிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையின் டியூட்டர் என்கிற பதவியில் இருக்கும் டாக்டர் ஆர்.செந்தில்குமார் மற்றும் அவருக்குக் கீழே உதவி பேராசிரியராக பணியாற் றும் டாக்டர், ஆர்.நித்யா என்கிற பெண் மருத்துவர் 15-07-2022 அன்று அளித்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை நக்கீரனுக்கு கிடைத்தது.

மாணவி ஸ்ரீமதி, இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட 15-ம் தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது உடலில் காணப் படும் காயங்கள் எல்லாம் அவரது மரணத்திற்கு முன்பே ஏற்பட்ட அந்தக் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் கறுப்பு, சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

Advertisment

மரணமடைந்த ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட காயங்கள் திடீரென ஏற்பட்டன. அது பெரிய அதிர்ச்சியை மூளையில் ஏற்படுத்தியது. அடித்ததனால் ஏற்பட்ட காயங்கள் உருவாக்கிய ரத்தப்போக்கிலும் அதிர்ச்சியிலும்தான் மரணம் நடந்துள் ளது என்றாலும், அவரது உடலுறுப்புகள் ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டிருக்கிறது.

srimathi

ஸ்ரீமதியின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை வேதியியல் பரிசோதனைதான் இறுதி முடிவு செய்யும். அவரது உடல் முழுதும் இருந்தும் பல பகுதிகளைப் பரிசோதனைக்காக எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த உடற்கூராய்வு முழுவதும் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது எனச் சொல்லும் இந்த அறிக்கை, இதயம் நன்றாக உள்ளதாகச் சொல்கிறது. ஸ்ரீமதியின் வலதுபக்க விலா எலும்புகள் முழுவதுமாக உடைந்துவிட்டது. அந்த எலும்புகள் ஒரே நேர்கோட்டில் உடைந்து, விலா எலும்பைச் சுற்றியுள்ள தசைகளில் இரத்தம் வெளியேறிவிட்டது. மூக்குப் பகுதி உடைந்துள்ளது. மூக்கின் தண்டுப்பகுதியில் 1 செ.மீ.க்கு காயம் ஏற்பட்டுள்ளது. வலதுபக்க தோள்பட்டையில் காயம் காணப்படுகிறது. வலதுகையின் வெளிப்புறப் பகுதியில் 22 செ.மீ. அளவிற்கு பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. வலது முழங்கையிலும் காயம் காணப்படுகிறது. அவரது வலதுகையும் பாதிக்கப் பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மிக முக்கியமான தடயத்தை அந்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை குறிப்பிடுகிறது. 1.5 செ.மீ. நீளமும் 0.5 செ.மீ. ஆழமும் கொண்ட மூன்று காயங்கள் ஸ்ரீமதியின் வலதுபக்க மார்பகத்தில் காணப்படுகிறது. இது தவிர மண்டையில் காயம் ஏற்பட்டுள்ளது என காயங்களைப் பற்றி போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்லிக்கொண்டே போகிறது.

srimathi

இதில் இதயப் பகுதியில் எந்த எலும்பும் உடையவில்லை. அவரது மார்புக்குக் கீழே உள்ள விலா எலும்புகள்தான் உடைந்திருக்கிறது. அதுபோல இதயத்துக்கு மேல்புறத்தில் மார்பகப் பகுதியில் ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று காயங்கள் காணப்படுகின்றன. இவை பாலியல் வன்முறையின் போது பெண்ணுக்கு ஏற்படும் காயங்கள். இதை கர்ஸ்ங் க்ஷஹ்ற்ங் என குறிப்பிடுவார்கள். இதுபோன்ற காயங்கள், காமவெறியர்கள் ஏற்படுத்தும் காயங்கள் என்கிறார்கள் தடய அறிவியல் துறையின் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள். ஸ்ரீமதிக்கு எத்தகைய கொடூரம் இழைக்கப்பட்டது என்பதை அவரது முழு உடல் பாகங்கள் தொடர்பான கூராய்வு மூலம்தான் தெரியவரும். அவை தனியான வேதியல் ஆய்வுகள். அதன் முடிவு இதுவரை வெளிவர வில்லை.

"14-ந் தேதி அதிகாலை 3:30 மணிக்கு ஸ்ரீமதியின் சடலத்தை டாக்டர்கள் பார்த்தனர் என போஸ்ட்மார்ட்டம் அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த உடலில் கருநீல ஓவர்கோட் அடங்கிய பள்ளிச் சீருடையில் ரத்தக்கறையுடன் காணப் பட்டது. அதேபோல நீலநிற மேல் கோட் ரத்தக்கறையுடன் இருந்தது. ஸ்ரீமதி அணிந்திருந்த கருநீலநிற பேன்ட்டிலும் ரத்தக்கறை காணப்பட்டது. அவர் அணிந்திருந்த உள்ளாடைகளிலும் முழுவதும் ரத்தம் காணப்பட்டது. அதையெல்லாம் குறித்துக்கொண்டு ஸ்ரீமதியின் அங்க அடையாளங்களுடன் போஸ்ட்மார்ட்டம் நடந்தது' என மருத்துவர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிடுகிறார்கள்.

"இந்த உடலை போஸ்ட்மார்ட்டம் நடத்துவதற்கு முன்பு பள்ளி வளாகத்தில் எந்த அரசு மருத்துவரும் பார்க்கவில்லை' என மருத்துவ அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஸ்ரீமதியின் மரணத்தில் உள்ள மர்மங்களை தெளிவாகக் குறிப்பிடும் இந்த அறிக்கைதான் பெரிய விவாதத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் தடய அறிவியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள்.

nkn270722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe