"அடுத்தகட்ட வேலை செய்யணும்னா எனக்கு சேரவேண்டியதைக் கொடுத்துடுங்க... நானும் தீர்மானத்தை பாஸ் செய்யுறேன்'' என மேயர் மிரட்டிய நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் பணம் கொடுத்து வேலையை துவக்கிவிட்டது. எனினும், மேயர் லஞ்சம் பெற்ற வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் மாநகர அதிகாரி ஒருவர் மூலமாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் வாசலைத் தட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி, பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட காய்கறிக் கடை, மளிகைக் கடை, ஜவுளிக் கடை, பழக்கடை, பூக்கடை களுடனான 80 ஆண்டு பழமைவாய்ந்த காந்தி மார்க்கெட்டில், சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பிலான 540 கடைகள் கொண்ட நவீன அடுக்குமாடிக் கட்டடம் கட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 2019-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப் பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை எடுத்தது ஜி.வி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் எனும் நிறுவனம். 2019-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் ஆட்சி மாறியும் பூர்த்தியடை யாமல் இருந்தது. இதேவேளையில், நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயராக தி.மு.க. சார்பில் சரவணன் தேர்ந்தெடுக்கப் பட்டார். இதிலிருந்துதான் பிரச்சனையே துவக்க மாகியுள்ளது.

ss

"மேயராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பணம் மட்டும்தான் அவருக்குக் குறி. எந்த வேலையாக இருந்தாலும் 20 சதவிகிதம் கமிசன் கொடுத்தால் மட்டும் பில்லை பாஸ் செய்வார். இப்பகூட 40-க்கும் மேலான வேலைமுடிந்த பைல்கள் அவரிடமுள்ளது. கணேஷ் அன்ட் கோ என்கிற பெயரில் ப்ளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடர் உள்ளிட்டவைகளை ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சிக்கு சப்ளை செய்தேன். இப்பொழுது வரை பில்லை பாஸ் செய்யமாட்டேன் என்கிறார். 20 சதவிகிதம் கமிஷன் கொடுத்தால் மட்டுமே தருவேன் என்கிறார். ரூ.7 லட்சத்தில் 20 சதவிகிதம் கொடுத்தால் கை நட்டம்தான் ஆகும். 40 வருஷ கட்சிக்காரன் எனக்கே இந்த நிலை? இதுநாள்வரை இந்த மாதிரி எந்த மேயரும் இப்படி நேரடியாக பணம் கேட்டதில்லை. எனக்கான பில்லை பாஸ் செய்யாவிட்டால் மாநகராட்சி முன்பு தீக்குளிப்பேன். இது நிச்சயம்'' என்கிறார் தெய்வேந்திரன் எனும் ஒப்பந்ததாரர்.

Advertisment

பெயர், புகைப்படம் தவிர்த்த கவுன்சிலர் ஒருவரோ, "கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.33 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான ஒப்பந்தந்தை ராம் அண்ட் கோ எனும் நிறுவனம் எடுத்திருந்தது. 33 கவுன்சிலர்கள் இணைந்து அந்த தீர்மானத்தை ஆதரித்திருந்தோம். கமிஷன் வரவில்லை யென அதனை பாஸ் செய்யவில்லை மேயர் சரவணன். எனினும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நேரடியாக அதனை பாஸ்செய்து கொடுத்தது. எங்களுக்கு அது அசிங்கமில்லையா..? இதுதான் இப்படியென்றால் எம்.பி. நிதி ரூ.30 லட்சம் மற்றும் மாநகராட்சி நிதி என ரூ.81,25,000 மதிப்பீட்டில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்ட திட்டம் தயாரானது. ஜார்ஜ்முருகன் கன்ஸ்ட்ரக்சன்ஸ் எனும் நிறுவனம் இதனை காண்ட்ராக்ட் எடுத்தது. இதற்கான அடிக்கல்லும் நாட்டப் பட்டது.

இப்பொழுது இதில் 20 சதவிகிதம் கொடுத்தால் வொர்க் ஆர்டர் பாஸ் செய்கிறேன் என்கிறார் மேயர். அவ்வளவு கொடுத்துவிட்டு இந்த வேலை பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம் என்கின்றது ஒப்பந்த நிறுவனம். இவரோட கமிஷனால் அரசுக்குத் தான் கெட்ட பெயர்'' என்கிறார் அவர்.

இதேபோல் மேயர் சரவணன் மேல் கமிஷன் குற்றச்சாட்டு எழுந்த, இவ்வேளையில் லஞ்ச ஆடியோ, வீடியோ மற்றும் புகைப்படங்கள் 'நக்கீரனுக்கு' கிடைத்தது. அதிலிருந்து ஆரியா கிராண்ட் இன் ஹோட்டல் பின்பகுதியிலுள்ள பார்க்கிங் இடத்தில் மேயர் சரவணனின் வாகனமான பச 76 ஆஎ 6669 எனும் கிரிஸ்டா வாகனம் ஏற்கனவே அங்கு நிற்கின்றது. அப்பொழுது அங்கு மற்றொரு வாகனத்திலிருந்து இறங்கும் ஜி.வி கன்ஸ்ட்ரக்சன்ஸ் நபர் ஒருவர் கையில் பார்சலுடன் மேயரின் காருக்குள் நுழைகின்றார். பின்பு பார்சல் இல்லாமல் வெளியேறுகின்றார். இந்தக் காட்சிகள் தூரத்திலுள்ள டூவீலர் பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மூலம் வீடியோவாக பதிவு செய்யப் படுகின்றது.

Advertisment

ff

இந்நிலையில் நமக்கு கிடைத்திருக்கும் 8.04 நிமிடங்கள் நீள ஆடியோவில் காரின் உள்ளே பார்சலுடன் நுழைந்த ஜி.வி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் நபருக்கும், மேயர் சரவணனுக்குமான பேச்சுக்கள் இடம்பெறுகின்றது. அதிலிருந்து,

ஏய கன்ஸ்ட்ரக்சன்ஸ்: "15 இருக்கு, ஒரு அஞ்சு மட்டும் லேட்டா தர்றேன். எப்பவும் ஒரு மளிகைக்கடையில்தான் கொடுத்துவைத்து வாங்குவோம். இப்ப அவரு இல்லை. அதனால் கொஞ்சம் டைம் கொடுங்க.. இந்த வீக் வரை டைம் கொடுங்களேன்.

மேயர் சரவணன்: ம்ம்ம்ம்ம்.. நீங்க வந்துட் டுப் போனப்புறம் டிஸ்கஸ் பண்ணிட்டோம். கூட்டத்தை வெள்ளிக்கிழமை வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதனால் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் கொடுத்திடுங்க.

ஏய கன்ஸ்ட்ரக்சன்ஸ்: இல்லண்ணே... வெள்ளிக்கிழமைதான் ஊரிலிருந்து வர்றேன். ஆக்சுவலா பில் எழுதி டிரஸரிக்கு கொடுத்தாச்சு. அதனால்தான் வீக் எண்ட்னு சொன்னேன்.

மேயர் சரவணன்: ம்ம்ம் சரி.. வெள்ளிக் கிழமை கொடுத்திடுங்க மாற்றம் இல்லைல்ல.. கரெக்டா சொல்லிடுங்க..

ஏய கன்ஸ்ட்ரக்சன்ஸ்: புதன்கிழமை சொல்லிடுறேன். மேக்ஸிமம் வெள்ளி இல்ல சனி..

மேயர் சரவணன்: சரி... சனிக்கிழமை கொடுத்திடுங்க..

மேயர் சரவணன்: லோட்டஸ் யாரு சொந்தக் காரங்களா..? நாச்சிமார் எவ்வளவு கொடுக்கிறார்..?

ஏய கன்ஸ்ட்ரக்சன்ஸ்: அது தெரியலை.. இது எனக்கு புதுசு..

ss

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலைசெய் யும் ஏனைய ஒப்பந்ததாரர் குறித்து பல கேள்விகள் கேட்ட வண்ணமிருக்கின்றார் மேயர் சரவணன்.

இடையில் மேயர் சரவணன்: வஹாப்புக்கு எவ்வளவு கொடுத்தீங்க.? ஏதோ ரூ.3 கோடி கொடுத்ததா சொன்னாக..

ஏய கன்ஸ்ட்ரக்சன்ஸ்: அப்படியெல்லாம் இல்ல சார்.. யாரோ தப்பா உங்க கிட்ட தகவலை சொல்லியிருக்காங்க. அது மாதிரி இல்ல...’-இப்படி நீள மாய் ஆடியோ முடிகின்றது.

எதற்காக இவ்வளவு பணம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும்? மாநகராட்சிக்குட் பட்ட இந்த ஒப்பந்தத்தில் மாநகர மன்றத்தில் தீர்மானம் வைத்து வொர்க் ஆர்டர் பெற்றால் மட்டுமே அடுத்த பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் துவக்க முடியும். வொர்க் ஆர்டர் வேண்டுமானால் ரூ.20 லட்சம் கேட்டிருக்கின்றார் மேயர் சரவணன். அதன்படி இந்த பணம் கைமாறியது. மன்றத் திலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு வொர்க் ஆர்டர் வழங்கப்பட்டது. எப்படியும் மீண்டும் மேயரால் பிரச்சனை வரும் என்பதால் ஜி.வி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் தரப்பு இதனை வீடியோ எடுத்து பத்திரப்படுத்தி மாநகர கமிஷனருக்கும், நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கும் அனுப்பியுள்ளது. அதுதான் உங்களிடம் உள்ளது என்கிறார் மாநகர அதிகாரி ஒருவர்.

இதுகுறித்துக் கருத்தறிய ஜி.வி. கன்ஸ்ட்ரக் சன்ஸ் நிறுவனத்தாரை தொடர்புகொண்டோம். "சார், இது அரசியலுக்காக நடக்கின்றது'' என்றவர் ஆடியோ, வீடியோ புகைப்பட ஆதாரங்களை மறுக்கவில்லை. மாநகர் மேயர் சரவணனோ, "என்னுடைய டேபிளில் எந்த பைலும் இல்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். யாரிடமும் கமிஷன் கேட்கவில்லை. அதுபோல் அந்த ஜி.வி. கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்த பணத்தையும் நான் வாங்கவில்லை. அது அத்தனையும் போலியானது. அரசியல் சூழ்ச்சி இது'' என ஒட்டுமொத்தமாக மறுத்தார்.

நெருப்பில்லாமல் புகையுமா..? என்கின்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது. இதுகுறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை தீர விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது மக்களின் விருப்பம்.