EXCLUSIVE : பெண்களை வசியப்படுத்த PAID கேங்! துணை சபா மகன் கூட்டாளிகள்!

paid

திர்ச்சி விலகாத பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் ஒரு பெரிய ட்விஸ்ட், ஹரீஷ்!

"பொள்ளாச்சி ஜெயராமனின் மகனான பிரவீனின் வலதுகரமே ஹரீஷ்தான்' என நம்முடன் பேச ஆரம்பிக்கிறார் ஹரீஷை நன்கு அறிந்த இளைஞன் கோகுல். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

""இந்த பொள்ளாச்சி சம்பவம் சம்பந்தமா பேப்பர் நியூஸ், போராட்டம் எல்லாமே ஷாக்கா இருந்தது. "நக்கீரன்'ல வீடியோவை வெளியிட்டு... அந்த பசங்க கூட்டத்துல யார், யார் இருக்கறாங்கன்னு தெரிஞ்ச போது நான் பதறிட்டேன்.

சார், என் ஒரிஜினல் பெயர் வெளியே வரக்கூடாது. எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன். பொள்ளாச்சி ஜெயராமன் பையன் பிரவீனும் இந்த ஹரீஷும் பொண்ணுகளை கூப் பிட்டு சுத்தாத இடமே இல்லை.

இந்த ஹரீஷும் ரிஸ்வந் தும் சேர்ந்துதான் 'PAID'-ங்கிற சொல்லை உருவாக்குனாங்க.

paid

"PAID அப்படீன்னா PEOPLE AGAINST ILLEGTIMATE DEBT. காதல் வலையில மாட்டுற பொண்ணு களை எங்ககிட்ட கூட்டிட்டு வாங்க. யாருக்கும் தெரியாம சந்திக்க ரெடியா இருக்கிற பொண்ணுகளை கவர்பண்ணுங்க. அவங்களை வச்சுத்தான் நாம வளர்ச்சி அடையப்போறோம்'னு அவங்க நண்பர்கள்கிட்ட சொன்னாங்க. அதுல ஹரீஷ், "அதிக பொண்ணுகளை கூட்டிட்டு வர்றவங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு கொடுப்போம். அது நம்ம நண்பன் பிரவீன் கைகளால் கொடுக்கப்படும்'னு அறிவிச்சான்.

நீங்க நெனைக்கிற மாதிரி 20 பேர் கொண்ட கும்பல் அல்ல... 100-க்கும் மேற்பட்ட பொள்ளாச்சி பசங்க இதுல சம்பந்தப்பட்டிருக்காங்க. அதுக்கப் புறம்தான் இந்த கேங் ப

திர்ச்சி விலகாத பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் ஒரு பெரிய ட்விஸ்ட், ஹரீஷ்!

"பொள்ளாச்சி ஜெயராமனின் மகனான பிரவீனின் வலதுகரமே ஹரீஷ்தான்' என நம்முடன் பேச ஆரம்பிக்கிறார் ஹரீஷை நன்கு அறிந்த இளைஞன் கோகுல். (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

""இந்த பொள்ளாச்சி சம்பவம் சம்பந்தமா பேப்பர் நியூஸ், போராட்டம் எல்லாமே ஷாக்கா இருந்தது. "நக்கீரன்'ல வீடியோவை வெளியிட்டு... அந்த பசங்க கூட்டத்துல யார், யார் இருக்கறாங்கன்னு தெரிஞ்ச போது நான் பதறிட்டேன்.

சார், என் ஒரிஜினல் பெயர் வெளியே வரக்கூடாது. எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன். பொள்ளாச்சி ஜெயராமன் பையன் பிரவீனும் இந்த ஹரீஷும் பொண்ணுகளை கூப் பிட்டு சுத்தாத இடமே இல்லை.

இந்த ஹரீஷும் ரிஸ்வந் தும் சேர்ந்துதான் 'PAID'-ங்கிற சொல்லை உருவாக்குனாங்க.

paid

"PAID அப்படீன்னா PEOPLE AGAINST ILLEGTIMATE DEBT. காதல் வலையில மாட்டுற பொண்ணு களை எங்ககிட்ட கூட்டிட்டு வாங்க. யாருக்கும் தெரியாம சந்திக்க ரெடியா இருக்கிற பொண்ணுகளை கவர்பண்ணுங்க. அவங்களை வச்சுத்தான் நாம வளர்ச்சி அடையப்போறோம்'னு அவங்க நண்பர்கள்கிட்ட சொன்னாங்க. அதுல ஹரீஷ், "அதிக பொண்ணுகளை கூட்டிட்டு வர்றவங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு கொடுப்போம். அது நம்ம நண்பன் பிரவீன் கைகளால் கொடுக்கப்படும்'னு அறிவிச்சான்.

நீங்க நெனைக்கிற மாதிரி 20 பேர் கொண்ட கும்பல் அல்ல... 100-க்கும் மேற்பட்ட பொள்ளாச்சி பசங்க இதுல சம்பந்தப்பட்டிருக்காங்க. அதுக்கப் புறம்தான் இந்த கேங் பசங்க அத்தனைபேரும் தங்களுடைய பைக்குகளில் 'PAID'-னு எழுதி பொள்ளாச்சி முழுக்க இருக்கிற கல்லூரி, ஸ்கூல் வாசல்களில் சுத்த ஆரம்பிச்சாங்க. அப்படி எதுக்கு எழுதுனாங்கன்னா... எதிர்ல வர்ற பைக்கு பசங்களுக்கு "நாம எல்லோரும் ஒரே டீம்'னு அவங்களுக்குள்ள ரகசியமா பேசிக்கிறதுக்காக அந்த வார்த்தையை பயன்படுத்தினாங்க. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துல பொண்ணுகளை கரெக்ட் பண்றதுதான் இவங்க வேலையே. அப்படி ஒரு நெட்வொர்க்கை இவங்களுக்குள்ள உருவாக்கு னதாலதான் 1100 வீடியோக்கள் இந்தக் கும்பலால படம் பிடிக்கப்பட்டுச்சு. ஒவ்வொருத்தனும் பல பெண்களோடு செல்பி எடுக்க ஆரம்பிச்சான். அப்பப்ப எடுக்கப்படுற வீடியோக்களை பிரவீனுக்கு இந்த ஹரீஷ், ரிஸ்வந்த் காட்டுவாங்க. அதைப் பார்த்துதான் புள்ளைகளை பிரவீன் தேர்ந்தெடுப் பான். டாப் சிலிப்பில் உள்ள தங்கும் விடுதிக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அதுக்கப்புறம் அந்த பொண்ணை கூட்டிட்டு வந்த பையனுக்கும், ஹரீஷுக்கும், ரிஸ்வந்துக்கும் பணத்தை அள்ளி வீசுவான் இந்த பிரவீன்.

திருநாவுக்கரசும் ரிஸ்வந்தும் பிடிபட்டதால மொத்த கும்பலும் மாட்டிக்கும்னு தெரிஞ்சு இந்தக் கும்பல் நடவடிக்கை பிடிக்காம நான் அவுங்ககிட்டயிருந்து விலகிட்டேன்.

ஆடியோ ஆதாரம்!

பொள்ளாச்சி பெண்கள் பிரச்சனையில் உலகம் அதிர்ந்து கொண்டிருக்கிற நிலையில் ஹரீஷுடன் பழகிய ஒரு இளைஞரும் ஹரீஷுக்கு போன் செய்து, ""பிரவீனோடு சேர்ந்து பொண்ணுகளை தப்பா யூஸ் பண்ற உன்னையெல்லாம் பொள்ளாச்சியில் தலைகீழா கட்டித் தொங்கவிட்டு பிரி பிரின்னு பிரிக்கணும்டா..'' எனப் பொங்குகிறான் அந்த இளைஞன் .

அந்த இளைஞனிடம்.. ஹரீஷ், ""நீ யோக்கி யமா..?'' எனக் கேட்க, ""டேய்... உன்னை மாதிரி சோசியல் மீடியாவுல போஸ்ட் பண்றதுக்கு உன்ன மாதிரி எச்சக்கலை..ன்னு நெனச்சுட்டீயா ..?'' எனக் கெட்ட வார்த்தைகளால் வறுத்தெடுக்கிற.. அந்த இளைஞன்... ""இந்த மே 23-ந் தேதியோட உங்க ஆட்சி முடியப் போகுதுடா..'' எனச் சொல்ல ""டேய்... எங்க ஏ.டி.எம்.கே. தாண்டா ஜெயிக்கும்..'' என்கிறான் ஹரீஷ்.

பிரவீனைப் பற்றி இளைஞர் பேசும் போது ஹரீஷ்... ""டேய்.. அவன் என் பிரண்டுங்கறதுக்கு மேல அவன் என் கட்சிக்காரன்டா.. அவனுக்காக நான் பாடுபடுவேண்டா..'' என கட் ஆகிறது அந்த ஆடியோ.

பதறும் ஹரீஷ்

ஹரீஷ் தலைமுறைவு ஆகி விட்டதா.. போலீஸ் தரப்பே சொல் லிய நிலையில்.. அவரது தற்போதைய நம்பரைப் பிடித்து பேசினோம்... "இந்த உலகமே உன்னைய எதிர்த் தாலும் ..நெவர்' என அஜித் பேசுகிற காலர் ட்யூன் ஒரு முறை கட் ஆகி விட்டது. மீண்டும் கூப்பிட்டோம்... போனை எடுத்த ஹரீஷிடம்.. நாம் யார் எனச் சொல்லியதும்.. "இந்த நம்பர் யாருக்கும் தெரியாதே..? உங்க ளுக்கு எப்படி கெடச்சது..? என பதற் றத்துடன் கேட்டார். ""பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உங்களுக்கு சம்பந்தம் இருப்பதாக சொல்லப்படு கிறது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனுடன் உங்களுக்கு நெருக்கம் இருப்பதாக சொல்லப்படு கிறதே..?'' என கேட்டோம்.

""எனக்கு யாருடனும் பழக்கமே இல்லை..'' எனச் சொல்லிய ஹரீஷ்.. ""நான் சபரி கூட கிரிக்கெட் ஆடி பழக்கம் இருக்கு. அவன் இந்த கேஸ்ல இருக்கறதால என் னைய நீங்க எப்படி சம்பந்தப்படுத்தலாம்..?'' என பதறியபடி ""அஞ்சு நிமிசத்துல உங்க லைன்ல வர்றேன்..'' என போனை மீண்டும் கட் செய்தார்.

சிறிதுநேரத்தில் லைனில் வந்த ஹரீஷ்... PAID-னு வண்டியில எழுதிட்டு சுத்தினது உண்மைதான். நான் சாதாரண ஆள். யார் கூடயும் தொடர்புல கிடை யவே கிடையாது..'' என போனை கட் செய்து விட்டார்.

மாக்கினாம்பட்டியில உள்ள திரு நாவுக்கரசு வீட்டு தெருவுலதான் ரிஸ்வந்த் என்கிற சபரிராஜன், "பார்'நாகராஜ், கெரோன் வீடுகள் இருக்கு. ஹரீஷ் இப்போ தலைமறைவாயிட்டான். அவனைப் புடிச்சாலே பல விஷயங்கள் வெளியே வரும்'' என பதற்றத்துடன் முடித்தான் இளைஞன்.

-அருள்குமார்

___________

"பார்' கனெக்ஷன்!

p""அந்த வீடியோக்கள் கிழக்கு நகர எஸ்.ஐ. ராஜேந்திர பிரசாத் மூலம் இன்ஸ்பெக்டர் நடேசனுக்கு வந்தபோது... "பார்' நாகராஜ் பெண்களுடன் இருக்கிற கொடூரமான வீடியோக்களை அவர் எடுத்துகிட்டாரு. அதுல, அவன் பெல்ட்டால பொண்ணுகளை அடிக்கிற வீடியோ இருந்துச்சு. அதுக்குப் பின்னால அவர் எதையோ தேடித்தேடி அழிச்சுட்டு இருந்தாரு.

அது ஏன்னா... இந்த இன்ஸ்பெக்டர் நடேசன் மதுவிலக்குப் பிரிவுல ரெண்டு வருசத்துக்கு முன்னால இன்ஸ்பெக்டரா இருந்தப்ப நாகராஜோட பார்களில் விடிய விடிய மதுபானம் விற்கிறதை கண்டுக்காம விட்டாரு. குஞ்சிபாளையத்துல இருக்கிற பாரை இன்ஸ்பெக்டர் நடேசன் எடுத்து நடத்துனாரு. பார்ட்னர் "பார்' நாகராஜ்.

பொண்ணுகளோட கதறல் வீடியோ காட்சி களைப் பார்த்து கலங்கிப்போன நாங்க எல்லோரும் நாகராஜ்மேல பாலியல் கேஸ் போடணும்னு இன்ஸ்பெக்டர் நடேசன்கிட்ட சொன்னோம். ஆனா அவர் ஒத்துக்கவேயில்லை. எஸ்.பி.கிட்டேயும் மறைச்சிட்டாரு. பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவே வழக்குப் பதிவு செய்தார் நடேசன். அந்த தைரியத்துனாலதான் "பார்' நாகராஜால் கலெக்டர் ஆபீசுக்கு நேரில் வர முடிந்தது'' என்கிறார் பொள்ளாச்சி காவல்துறையின் நேர்மையான அதிகாரி.

___________

கடலோரம் தலைமறைவு!

pபொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை பாதுகாக்கும் தனியார் பள்ளிக் கல்லூரி உரிமையாளர் லட்சுமணசிங். கோவை பொள்ளாச்சி மெயின் ரோட்டில் கிணத்துக்கடவில் இருக்கிறது கிட்ஸ் பார்க் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல். இதன் உரிமையாளர் லட்சுமணசிங். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து 20 வருசத்துக்கு முன்னால் வந்த லட்சுமண சிங்... டியூஷன் எடுப்பதாகக் கூறி ஒரு பெண்ணிடம் வம்பு செய்து பின்னர் அவரையே கல்யாணமும் செய்தவர்.

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் அக்னீஸ் முகுந்தன் கல்யாண ரிஷப்சன் கோயமுத்தூர் ரோட்டுல இருக்கற கந்த மஹால்ல நடந்தபோது அதன் பொறுப்புகளை கவனித்து நடந்தினார், இந்த லட்சுமண சிங். இப்போ பாலியல் விவகாரத்தில் துணை சபா மகன்கள் முகுந்தனும், பிரவீணும் சிக்கிக்கிட்டதால அவர்களை பத்திரமா கன்னியாகுமரி கடல் பக்கம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள் அ.தி.மு.க. தரப்பினர்.

nkn260319
இதையும் படியுங்கள்
Subscribe