மூன்று கிராமங்களிலுள்ள 138 விவசாயி களின் நிலத்தை அழித்து, தனி மனிதர் ஒருவ ருக்காக புறவழிச்சாலையை கொண்டு வர ஆணை பிறப்பித்தது கடந்தகால அ.தி.மு.க. அரசு. புறவழிச்சாலை வேலைகள் தற்போது மளமளவென வேகமெடுத்த நிலையில், அந்த தனிமனிதர், அரசியலில் "மிஸ்டர் பணிவு' என்ற ழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் தான் என்பது தெரியவர, செய்வதறியாமல் விக்கித்து நிற் கின்றனர் போடி சட்டமன்றத் தொகுதி மக்கள்.

Advertisment

15.07.2019ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, '30 உயர் வழித்தட பாலம் மற்றும் 8 புறவழிச்சாலை அமைக்க விருக்கின்றோம்' எனச் சட்டசபையில்    அறிவிக்க, அதன்பின் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, மேற்படி பணிக்கு மொத்தம் 587.66 கோடி தேவை என நிதி கோரப்பட்ட நிலையில், 20.12.2019ல் அரசாணை இயற்றப்பட்டது. அதில் தேனி மாவட்டத்தில் அணைக்கரைப்பட்டி விலக்கு முதல் போடி தர்மத்துப்பட்டி வரை புறவழிச்சாலையானது ரூ.36 கோடி செலவினம் எனவும், புறவழிச்சாலைக்காக போடி கிராமத்தில் 56 விவசாயிகள், மீனாட்சிபுரம் கிராமத்தில் 19 விவசாயிகள் மற்றும் மேலச்சொக்காநாதபுரம் வருவாய் கிராமத்தில் 53 விவசாயிகளின் இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது எனவும் அறிவித்தது மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டப் பிரிவு.

ops1

 "அணைக்கரைப்பட்டி முதல் போடி தர்மத்துப்பட்டி வரை போடப்படும் இந்த புறவழிச்சாலையானது, சுருளி அருவி, வீரபாண்டி, குச்சனூர் கோவில்களுக்கு செல்லவும், அரசு பாலிடெக்னிக் செல்வதற்கும் உகந்தது என்கிறார்கள். மூணாறு செல்ல தேனி, போடி ரோட்டின் வடக்கு பக்கமாக செல்வது தான் எளிது. அதை விடுத்து ரோட்டின் தென்புறம் வந்து பின், மேற்குபுறம் திரும்பி,    பின் வடக்கு பக்கம் திரும்புவது போல் இச்சாலை உள்ளது. அப்படியானால், வீரபாண்டி கோவிலுக்கும், குச்சனூர் கோவிலுக்கும், அரசு பாலிடெக்னிக் செல்வதற்கும் இந்த சாலையானது எப்படி பயன்படும்? சுருளி அருவிக்கு செல்ல இந்த சாலை எப்படி பயன்படும்?  சுருளி அருவியானது தேனியிலிருந்து 55 கி.மீ. தென்புறம் செல்ல வேண்டும். வீரபாண்டி கோவிலுக்கும், குச்சனூர் கோவிலுக்கும், தேனியிலிருந்து தென்புறம் தான் செல்ல வேண்டும். போடியிலிருந்து வீரபாண்டி, குச்சனூர், சுருளி அருவிக்கு செல்ல பல வழித்தடங்கள் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன. தேவாரம் பகுதி மக்கள் ஏற்கெனவே நாகலாபுரம் பகுதியிலுள்ள புறவழிச்சாலையைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். போடி பகுதியிலுள்ள மக்களுக்கு இந்த புறவழிச்சாலையானது எவ்விதத்திலும் பயன்படாது. இந்த புறவழிச்சாலையின் அருகிலேயே மீனாட்சிபுரம் செல்வதற்கு ஒரு தனிச்சாலையும் உள்ளது. இந்த சாலையானது, போடி - தர்மத்துப்பட்டி சாலையில் தான் போய் இணைந்துள்ளது. இந்த சாலைக்கு அருகிலேயே இணையாக புதியதாக இந்த புறவழிச்சாலை யாருக்காக போடப்படுகிறது? இதற்கு ஏன் நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது நெடுஞ்சாலைத்துறை'' என்கிறார் போடியை சேர்ந்த விவசாயி ஒருவர்.

Advertisment

போடிநாயக்கனூர் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க அரசு விதிகளை பின்பற்றாமலும், உச்சநீதிமன்ற வழிகாட்டு தல்களை மதிக்காமலும், நில உரிமை யாளர்களின் கோரிக்கைக்கு எவ்விதமான பதிலும் வழங்காமலும், நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகை எவ்வளவு வழங்கப்           படும் என்ற விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்காமலும் செயல்படுகிறது மாவட்ட நிர்வாகம். கிட்டத்தட்ட 120 நில உரிமையாளர்களிடமிருந்து மொத்தம் 99.515 சதுர கிலோமீட்டர் நிலம் முழுமையாக கையகப்படுத்தப்படவுள்ள நிலையில் வெறும் ஆறு நில உரிமையாளர்கள் மட்டும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ops2

"2023ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலம் கையகப்படுத்துதலுக்காக எனக்கும் மற்றும் சில நில உரிமையாளர்களுக்கும் டி.ஆர்.ஓ. அழைப்பு வந்தது. குறிப்பிட்ட நாளில் சென்றால் அந்த அதிகாரி வரவில்லை. இழப்பீடு குறித்து     எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும்,  மாநில நெடுஞ்சாலைத் துறை அணைக் கரைப்பட்டி விளக்கில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு திட்டப் பணிகளை முடித்தது. மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பின்னர் எனது விவசாய நிலத்           திற்கு வந்து, எல்லைக் கற்களை அகற்ற, நானும் சில கிராமவாசி களும் சேர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் தற்காலிகமாக பணியை நிறுத்திவிட்டார்கள். பின்னர் நான் டி.ஆர்.ஓ.வை நேரில் சந்தித்து, எனது அனுமதியின்றி எனது நிலத்தை எவ்வாறு கையகப்படுத்த முடியும் என்று கேட்டபோது, நிலம் கையகப்படுத்துதல் குறித்த தகவல் செய்தித்தாளில் வெளியிடப்பட்டவுடன், நிலத்தை கையகப்படுத்த தங்கள் துறைக்கு உரிமை உண்டு என்று கூறினார். நில உரிமை யாளர்களின் அனுமதி அல்லது தீர்வு இல்லாமல், எந்தவொரு மேம்பாட்டுப் பணிகளுக்கும் நிலத்தை கையகப்படுத்த அரசாங்கத்திற்கு கூட உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை கூறினேன். ஒவ்வொரு சதுர மீட்டருக்கும் நில உரிமையாளர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது, தீர்வுத் தொகை எவ்வளவு போன்ற விவரங்களை இன்றுவரை அதிகாரிகள் தெரிவிக்க வில்லை. 

Advertisment

இதுகுறித்து தகவலறியும் உரிமைச்சட்டத்தில் கேட்ட நிலையில், மேற்படி புறவழிச் சாலையானது தனிநபருக்காகத்    தான் அமைக்கப்பட்டு வருகின்றது  முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தொடர்புடையது என்பதால் என்னால் தகவல் தரமுடியாது. எங்கு முறை யிட்டாலும் கிடைக்காது என நேரடியாகவே கூறினார். தனி ஒரு நபருக்காக இத்தனை கோடியில் புறவழிச்சாலையா?" என்கிறார் தகவலறியும் உரிமை சட்டத்தில் கண்டறிந்த மேலசொக்கநாதபுரம் ராமகிருஷ்ணன்.

நில எடுப்பில் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் ஒருவரோ, "எங்கள் இடத்தை பொறியியல் கல்லூரிக்காக நாங்கள் வழங்கினோம். அப்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் எங்களை ஏமாற்றி கையொப்பம் வாங்கிவிட்டார். இன்றுவரை அதற்கு உண்டான இழப்பீட்டை நாங்கள் போராடித்தான் வாங்கினோம். அதுபோல் இந்த புறவழிச் சாலை எடுப்பதிலும் நிகழ்ந்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது'' என்றார்.

ops3

"முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சுமார் 500 சென்ட் நிலம் அங்குள்ளது. பட்டா எண்  33181ல் புல எண் 1669/6ல் 11.57ஏர், பட்டா எண் 33460ல் புல எண் 1672/5இல் 04.82ஏர், பட்டா எண் 33461ல் புல எண்கள் 1670/4ல் 24.50ஏர், 1672/2ஆல் 25.ஏர், 1672/2 இல் 24.50 ஏர், பட்டா எண் 33494ல் புல எண் 1672/ 5ஆல் 10.18 ஏர், பட்டா எண் 33629ல் புல எண்கள் 1668/6 22.00 ஏர், 1668/60 21.50 ஏர், 1673/1 27.15 ஏர், 1673/18ல் 33.35 ஏர் ஆகிய புல எண்களை கொண்டவை அவை. முதலில் பினாமி வசமிருந்த இந்த சொத்து, தற்பொழுது 2023-லிருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனை 2024 ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்புமனுத்தாக்கலின்போது குறிப்பிட்டிருந்தார். அந்த நிலத்தில் பிரமாண்ட பங்களாவை கட்டிவரும் அவருக்காக புறவழிச்சாலையிலிருந்து இணைப்புச்சாலை போடப்பட்டு வருகின்றது. இந்த சாலை ஓ.பன்னீர் செல்வத்திற்கும், சிலமலை பெட்டிபுரத்திலுள்ள மணலை கடத்துவதற்கும் மட்டுமே பயன்படும். இதற்காகவா எங்களின் விளைநிலங்களை அழிக்கவேண்டும்? பன்னீர்செல்வம் இவ்வளவு வில்லங்கத்தனம் மிக்கவரா? அரசு பணம் அவருடைய பங்களாவிற்கா?'' எனக் கேள்வி எழுப்புகின்றனர் உள்ளூர் மக்கள்.

மிஸ்டர் பணிவு இதற்கு என்ன பதிலை கூறப்போகின்றார்?

-நா.ஆதித்யா