சிவசங்கர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக யாரிடமும் சிக்காமல் தன் மீது சீரியஸாக எந்தப் புகாரும் வராமல் எப்படி தப்பித்தார் என்பதை ஆராய, அவரது சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ள கிருஷ்ணா நகர், வண்டலூர் சாலை, கேளம் பாக்கம் சாலை பகுதியில் களமிறங்கினோம்.
அந்தப் பள்ளி வளாகம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் அதிக சத்தம் எழுப்பாதீர் கள் என்கிற வாசகத்துடன் அமைந்துள்ள பள்ளி முழுக்க, கேளம்பாக்கம் ஏரியையும் திருப்போரூர் வனப்பகுதியையும் ஆக்கிரமித் துள்ளது. அந்தப் பள்ளியைச் சுற்றி வந்தபோது அதன் பரப்பளவு நான்கு கிலோமீட்டர் அளவுக்கு இருந்தது. கேளம்பாக்கம் ஏரியின் பாதியை பள்ளி முழுங்கியிருந்தது. ஏரியின் வழியே நடந்தபோது ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் பொதுப்பணித்துறையின் கலங்கல் பகுதி, பள்ளியை ஒட்டி சிவசங்கர் அமைத் திருந்த சவுக்குத் தோப்பில் அமைந்திருந்தது.
சிவசங்கர் பள்ளியின் பரப்பளவு 70 ஏக்கர் என்று கேளம்பாக்கத்தில் சொல்லப்பட்டது. சென்னைக்குப் பக்கத்தில் ஒரு கிரவுண்ட் (5 சென்ட் நிலம்) கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில்... நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்துள்ள சிவசங்கரனின் சொத்து மதிப்பு ஆயிரக்கணக்கான கோடி களைத் தொடும் என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 25 வருடங்களாக சிவசங்கரைப் பற்றி எந்தப் புகாரும் பெரிதாக வெடிக் காததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. தற்பொழுது மூடப்பட்டுள்ள அந்தப் பள்ளிக்குள் இதுவரை பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பள்ளியை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இரவும் பகலும் ஷிப்ட் முறையில் கண்காணித்துக் கொள்கிறார்கள். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இதுவரை ஐந்து முறைதான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் ஐந்து கடவுள்கள் சங்கமிக் கும் இடம் என அழைக்கப்படும் அந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட உயர்சாதி இந்துக்கள்தான் குடியிருக்கிறார்கள். பெரும்பாலும் மைலாப்பூரை, மாம்பலத்தைச் சேர்ந்த அவர்கள் கிருஷ்ணர், விநாயகர
சிவசங்கர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக யாரிடமும் சிக்காமல் தன் மீது சீரியஸாக எந்தப் புகாரும் வராமல் எப்படி தப்பித்தார் என்பதை ஆராய, அவரது சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ள கிருஷ்ணா நகர், வண்டலூர் சாலை, கேளம் பாக்கம் சாலை பகுதியில் களமிறங்கினோம்.
அந்தப் பள்ளி வளாகம் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் அதிக சத்தம் எழுப்பாதீர் கள் என்கிற வாசகத்துடன் அமைந்துள்ள பள்ளி முழுக்க, கேளம்பாக்கம் ஏரியையும் திருப்போரூர் வனப்பகுதியையும் ஆக்கிரமித் துள்ளது. அந்தப் பள்ளியைச் சுற்றி வந்தபோது அதன் பரப்பளவு நான்கு கிலோமீட்டர் அளவுக்கு இருந்தது. கேளம்பாக்கம் ஏரியின் பாதியை பள்ளி முழுங்கியிருந்தது. ஏரியின் வழியே நடந்தபோது ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் பொதுப்பணித்துறையின் கலங்கல் பகுதி, பள்ளியை ஒட்டி சிவசங்கர் அமைத் திருந்த சவுக்குத் தோப்பில் அமைந்திருந்தது.
சிவசங்கர் பள்ளியின் பரப்பளவு 70 ஏக்கர் என்று கேளம்பாக்கத்தில் சொல்லப்பட்டது. சென்னைக்குப் பக்கத்தில் ஒரு கிரவுண்ட் (5 சென்ட் நிலம்) கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில்... நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்துள்ள சிவசங்கரனின் சொத்து மதிப்பு ஆயிரக்கணக்கான கோடி களைத் தொடும் என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 25 வருடங்களாக சிவசங்கரைப் பற்றி எந்தப் புகாரும் பெரிதாக வெடிக் காததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. தற்பொழுது மூடப்பட்டுள்ள அந்தப் பள்ளிக்குள் இதுவரை பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பள்ளியை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இரவும் பகலும் ஷிப்ட் முறையில் கண்காணித்துக் கொள்கிறார்கள். காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இதுவரை ஐந்து முறைதான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்தில் ஐந்து கடவுள்கள் சங்கமிக் கும் இடம் என அழைக்கப்படும் அந்தப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட உயர்சாதி இந்துக்கள்தான் குடியிருக்கிறார்கள். பெரும்பாலும் மைலாப்பூரை, மாம்பலத்தைச் சேர்ந்த அவர்கள் கிருஷ்ணர், விநாயகர், பார்வதி, வெங்கடேச பெருமாள், முருகன் ஆகிய ஐந்து கடவுளும் சங்கமிக்கும் இடமாக பாபாவின் ஆசிரமத்தைக் கருதுகிறார்கள். திருப்பதி போன்ற புண்ணிய பூமியாக அந்த நகரைப் பார்க்கிறார்கள். நீ தேடிக்கொண்டே இரு, கடைசியில் நான்தான் கடவுள் என்பதை உணர்வாய் என்கிற சிவசங்கரின் அருள் வாக்குடன், இந்தியாவிலேயே சி.பி.எஸ்.இ. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி என வழியெங்கும் காணப்படும் விளம்பரங் களுடன் பஞ்சபூத ஸ்தலம் என்கிற வாக்கியத்துடன் அனைத்தும் ஆன்மிக மாகவே இருந்தது.
கேளம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து பள்ளியைக் கட்டியுள்ள சிவசங்கர், அந்த ஏரிப்பகுதி என்றாவது அரசாங்கத்தால் மீட்கப்பட்டுவிடும் எனத் திட்டமிட்டு அங்கு கான்கிரீட் சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. ஏரியின் கரையில்தான் பள்ளியின் ஒரு வாசல் அமைந்துள்ளது. அந்த முதல் வாசலில் கரூர் வைஸ்யா வங்கிக் கிளையும் அதில் 24 மணி நேரம் இயங்கும் ஏ.டி.எம். எந்திரமும் இருந்தது. அதற்கடுத்தபடியாக சிவசங்கரின் புகைப்படங்களுடன் கூடிய தோரணவாயில் இருந்தது. ஏரியும் அதன் கலங்கல் பகுதி அமைந்துள்ள மாந்தோப்பும் சந்திக்கும் இடத்தில் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஒரு தொழிற்சாலையையும் சிவசங்கர் அமைத் திருந்தார். ஏரி வழியாக மாந்தோப்பில் இறங்கி அவற்றை புகைப்படமெடுத்தபோது பாதை சுந்தர் நகர் வழியாக திரும்பியது. அங்கு சாதாரண கட்டிடம் என்ற பெயரில் கம்ப்யூட்டர், ஃபேக்ஸ் மற்றும் அனைத்து மளிகைப் பொருட்களும் கிடைக்கக்கூடிய கடைகளை அமைத்திருந்தார் சிவசங்கர்.
அந்த சாதாரண கட்டிடத்தில் ஏராளமான வீடுகள், அபார்ட்மெண்ட்டுகள் பாணியில் இரண்டு கட்டிடங்களாக அமைக்கப்பட்டிருந்தன. அதன் முகப்பில் பாபாவின் படம் காணப்பட்டது. ஆனால் அந்த வீடுகளின் கதவுகளில் திருவண்ணாமலை விசிறி சாமியார், சாய்பாபா படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. சில கதவுகளில் சிவசங்கரின் கைகள் அருள்பாலிப்பது போல் படம் இருந்தது. ஆனால் அவர் உருவம் காணப்படவில்லை.
ஏன் அது என அங்கிருந்தவர்களிடம் கேட்டால், அங்கு வயதானவர்களும் பெண்களும் மட்டுமே இருந்தார்கள். அங்குதான் சிவசங்கரோடு கைது செய்யப்பட்ட சுஷ்மிதா இருந்தார் என அங்கு வந்த தபால்காரர் சொன்னார். சுஷ்மிதா கணக்கு வைத்துள்ள கனரா வங்கி கேளம்பாக்கம் கிளையிலிருந்து செக் புத்தகத்தை ஆள் இல்லாத தால் எடுத்துச் சென்றதாக கூறிய அவரிடம், ""இங்கு யார் குடியிருக்கிறார்கள்?'' என கேட்டோம்.
""இது சுஷில் ஹரி பள்ளியின் இரண்டாவது நுழைவாயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள கட்டிடம். ஏரிக்கரையில் அமைந்துள்ள பிரதான நுழைவாயிலை விட இங்குதான் மக்கள் அதிகம் புழங்குவார்கள். இங்குள்ளவர்களின் வசதிக்காகத் தான் சிவசங்கர் அனைத்து வசதிகளையும் இங்கு செய்துள்ளார். இந்தக் கட்டிடத்தில் தங்குபவர்கள் வித்தியாசமானவர்கள், அனைவரும் பெண்கள். அதிலும் கணவனை பிரிந்தவர்கள். அத்துடன் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை கட்டாயம் இருக்கவேண்டும் என்பதுதான் சிவசங்கரின் வித்தியாசமான கண்டிஷன்.
இந்த கட்டிடத்திற்கு உறவுக்கார ஆண்கள் வந்து போகலாம். இங்கு தங்கியிருக்கும் உயர் சாதி யைச் சேர்ந்த பெண்கள், சிவசங்கரின் பள்ளியின் வாசல் வழியாக உள்ளே சென்று அங்கிருக்கும் ஐந்து கோயில்களில் சிவசங்கருடன் சேர்ந்து பூஜை செய்வார்கள். அவர்களது பெண் பிள்ளைகளை அவருடன் நெருக்கமாக பழகவிடுவார்கள்.
அப்படித்தான் சுஷ்மிதாவின் அம்மா தனது மகள் சுஷ்மிதாவுடன் வந்தார். இந்த பள்ளியில் படித்த சுஷ்மிதாவை சிவசங்கருக்குப் பிடித்துப் போக, அவரை பள்ளியின் டான்ஸ் மாஸ்டராக்கி னார் பாபா. அந்த சுஷ்மிதாதான் பாபாவின் காமக் களியாட்டங்களுக்கு குழந்தைகளைப் பலியாக்கி னார். அது தொடர்பான வாக்குமூலங்களுடன், காவல்துறை சுஷ்மிதாவைக் கைது செய்தது'' என தெளிவாக விளக்கினார் தபால்காரர்.
நாம் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினோம். அங்கு ஒரு வீட்டில் மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் இருந்தார். தனியாக காணப்பட்ட அவரிடம் சிவசங்கர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ""உங்களுக்குத் தனியாக இருக்க பயமில்லையா?'' என கேட்டோம்.
""பாபா மேல் பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார் கள். நாங்கள் வாடகைக்குத்தான் குடியிருக்கிறோம். இங்குதான் சுஷ்மிதா இருந்தார். சுஷ்மிதா மீதும் சிவசங்கர்மீதும் போடப்பட்ட பழிகளை துடைத்து விட்டு அவர்கள் வெளியே வருவார்கள்'' என்றார்.
நாங்கள் இந்த புண்ணிய பூமியில் தெய்வ சங்கல்பத்திற்காக குடியிருக்கிறோம் என்றவரிடம், ""வாடகையை யாரிடம் கொடுப்பீர்கள்?'' என கேட்டோம்.
""சிவசங்கர் தன் ஒட்டுமொத்த சொத்தையும் "ராம ராஜ்யம்' என்கிற அறக்கட்டனை மூலம் நிர்வகித்து வருகிறார். அந்த அறக்கட்டளைக்கு தந்துவிடுவோம்'' என்றார். அறக்கட்டளைக்கு "ராம ராஜ்யம்' என பெயர் வைத்தது சிவசங்கருடன் நெருக்கமாக இருந்த பா.ஜ.க. தலைவர் இல.கணே சன் என கூடுதல் தகவலையும் சொன்னார்.
நாம் அந்தப் பகுதியைச் சுற்றிவந்தோம். சிவசங்கரின் படத்தோடு ஏராளமான பங்களா வீடுகள் இருந்தன. அதையெல்லாம் படம் எடுத்துவிட்டு அந்த வழியாக பயணித்தோம். சிவசங்கர், பட்டா நிலங்களில் கட்டிய கட்டிடங்கள் தென் பட்டன. அவற்றை யெல்லாம் பக்காவாக கான்கிரீட் காம்பவுண்ட் அமைத்து அதன்மேல் கண்ணாடித் துண்டுகளை பொருத்தியிருந்தார். ஒரு பாழடைந்த கோயில் ஒன்று அந்த காம்பவுண்டில் தென்பட்டது. உருக் குலைந்த அந்த கோயிலையும் ஆக்கிரமித்துள்ளார் சிவசங்கர். அத்துடன் பல புதிய கோயில்களை அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டியிருக்கிறார்.
புட்பால் மைதானம், சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா, பள்ளிக் கட்டிடம் என ஏக்கர் கணக்கில் ஒரு பெரிய கல்லூரியைப் போல் அதிநவீனமாக கட்டியிருந்த சிவசங்கர், தனது காம லீலைகளை அரங்கேற்றிய லவுன்ச் என்கிற தனி அறை அமைந்த கட்டிடத்தையும் படமெடுத் தோம். அந்த கட்டிடத்திற்கு நடந்து வருவதற் கென்றே தனி அறை அமைக்கப்பட்டிருந்தது. அமெரிக்க அதிபர் தங்கும் வெள்ளை மாளிகையின் கோபுர வடிவில் மிக பிரம்மாண்டமாக அமைந் திருந்த அந்த கட்டிடம் முழுவதுமாக குளிரூட்டி களால் நிரப்பப்பட்டிருந்தது.
திருப்போரூர், கேளம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ரிசர்வ் வனப்பகுதி மத்தியில் ஒரு ஏரியை ஆக்கிரமித்து இவ்வளவு பிரம்மாண்ட கட்டிடமா என வியப்பு மேலிட பார்த்தபோது... ""ஒரு பெரிய கல்லூரி போல் கட்டிட வடிவமைப்புகளைக் கொண்டு சிவசங்கர் கட்டியிருக்கிறார். இது மட்டுமில்லை சார், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் பண்ணை வீட்டுக்கு எதிரே நூற்றுக்கணக்கான ஏக்கர் வாங்கிப்போட்டிருக்கிறார் சிவசங்கர்'' என நம்மை ஆச்சரியப்படுத்தினார் ஒரு விவசாயி. அங்கே ஒரு மருத்துவக் கல்லூரி துவங்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் சிவசங்கரை கைது செய்துவிட்டார்கள் என்றார் அவர்.
இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகளிடம், நாம் கண்டுபிடித்த விவரங்களைப் பகிர்ந்தபோது, அவர்களும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.
சிவசங்கரின் "ராம ராஜ்யம் டிரஸ்ட்' இப்பொழுதும் இயங்குகிறது. வெளிநாட்டிலிருந்து டாலர் கணக்கில் பணம் வருகிறது. அதை ஜானகி என்பவர் நிர்வகித்து வருகிறார். சிவசங்கருக்கு குழந்தைகளை அனுப்பி அவரது காமக் களியாட் டங்களுக்கு துணையாக இருந்த சுஷ்மிதாவைப் போல தீபாவும் தலைமறைவாகிவிட்டார். பாரதி வெளிநாட்டில் இருக்கிறார். தீபா முன்ஜாமீன் மனு போட்டிருக்கிறார். அதை நாங்கள் சட்டரீதியாக சந்திக்கவும் அவரை கைது செய்யவும் முயற்சிக் கிறோம்.... தீபா கைதானால் சிவசங்கரின் பல ஆண்டுகால லீலைகள் வெளிவரும் என்கிறார்கள். ஆடம்பரமான பள்ளி வளாகத் துக்குள் ஆபாசங் களை அரங்கேற்றி அத்தனை யையும் வெளியே தெரியாதபடி அமானுஷ்யமாக வைத்திருந்திருக்கிறார்.
சிவசங்கர் வெறும் பாலியல் குற்றவாளி மட்டுமல்ல... பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் போலவே ஏரி, வனம்- தொல்லியல் துறைக்குச் சொந்தமான பழமையான கோயில் என அனைத்தையும் சுருட்டி கிலோமீட்டர் கணக்கில் சொத்து வைத்திருக்கும் ஒரு நிலம் திருடி திமிங்கலம். அவர் மத்திய பா.ஜ.க.வையும் மாநில அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், சமூகப் பிரபலங்கள் என அனைவரையும் கைக்குள் போட்டு லீலைகளை நடத்தியவர். அவரையும் அவரது சொத்துக்களையும் பாதுகாக்க பா.ஜ.க. முயல்கிறது என்பதே கேளம்பாக்கம் ஸ்பாட் விசிட்டில் நாம் கண்ட உண்மை.