"வருகின்ற ஜூன் 21-ஆம் தேதி யன்று உலக யோகா தினம்! உடல்ரீதியிலான பிரச் சினைக்கு மருந்துகள் பல இருக்கின்றன. ஆனால், மனரீதியிலான பிரச்சினைக்கு ஒரே தீர்வு யோகாதான். இது இந்தியாவின் பழமையான கலைகளில் ஒன்று. உடல் மற்றும் மன ஆரோக் கியத்தை மேம்படுத்துவதால், இன்றைக்கு 120 நாடுகளில் யோகா பயிற்றுவிக்கப்படு கிறது. உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் சக்தி நிலையை எப்படி வைத்துக் கொள்வது என்று உங்களுக் குத் தெரியவில்லை. எனவே தான் உங்களுக்கு மனஅழுத் தம் வருகிறது. ஒருவர் தனக்குள் ஒரு தெளிவான தன்மையில் இருக்கும்போது, மன அழுத்தம் என்பதே வராது. நீங்கள் உங்களை எப்போதும் தளர்வுநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தியானம் மிகவும் உதவிசெய்யும். தியானம் மன அழுத்தத்துக்கு மட்டும் தீர்வாக இல்லாமல், அடுத்த பரிமாணத்துக்கு நீங்கள் நகரவும் உதவிசெய்யும். ஆகவே யோகா செய்யுங்கள். உங்களுக்கு உதவியாக நான் இருக்கின்றேன்'' என அழைப்பு விடுத்துள்ளார் ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ். "ஜக்கி செய்வது யோகாவே இல்லை. அடிமையாக இருப்பது யோகாவின் வழி அல்ல.. ஜக்கி செய் வது ஹிப்னாடிசம். அதன் மூலம் நம்மை அடி மைப்படுத்தி தன்னுடைய தேவைகளை தீர்த் துக்கொள்கின்றான். இந்தியாவைப் பொறுத்த வரை தனி நபர் ஹிப்னாடிசம் செய்வது தண்டனைக்குரியது'' என காவல்துறையையும், நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர் ஜக்கியால் பாதிக்கப்பட்டோர்.

isha

என்னுடைய மகள்கள் இருவரையும் ஈஷாவிலிருந்து மீட்டுத் தாருங்கள். அவர்கள் இருவரும் ஜக்கியின் ஹிப்னாடிசத்தால் ஈஷா வில் அடிமையாக இருக்கின்றார்கள் என வேளாண் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரி யர் தம்பதியினர் உச்சநீதிமன்ற அபிடவிட்டில் குறிப்பிட்டுள்ளனர். இதுபோலவே தூத்துக்குடி எட்டையபுரம் சாலையிலுள்ள மாரியப்பனும், "எனது மகன் ரமேஷ்பாலகுரு ஹிப்னாடிசத் தால் பாதிக்கப்பட்டு ஈஷாவில் இருக்கின்றான். அவனை மீட்டுத்தாருங்கள்'' என கோவை மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்து ஏமாற்றத் துடன் காத்திருக்கின்றார்.

கோவை மாவட்டத்திலுள்ள ஈஷா யோக மையத்தின் நிறுவனரான சத்குரு என்று தனக்கு, தானே பெயர் சூட்டிக் கொண்ட ஜக்கி @ ஜெக தீஷ் வாசுதேவ், ஜக்கியால் விபூதி சீடர் என பட்டப் பெயர் வைக்கப்பட்டு ஜக்கி உடனிருந்து அனைத்து பொறுப்பு களையும் கவனித்துவந்த பாரதி வரதராஜ், ஈஷா ஹோம் ஸ்கூல் & ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியின் நிர்வாகியாக இருக்கும் மா பிரத்யுதா மற்றும் தற்போதைய ஈஷா நிர்வாகி தினேஷ்ராஜா ஆகியோர் ஈஷாவினை நிர்வகித்துவருகின்றனர். ஈஷா யோக மையத்தில் குழந்தைகளுக்கான இரண்டு விதமான திறன்மிக்க பள்ளிகள் இருப்பதாகவும், பெரியவர்களுக்கு பலவிதமான யோக தியான வகுப்புகள் சொல்லிக் கொடுப்ப தாகவும் முக்கியமாக இந்த சாம்பவி மகாமுத்ரா (Inner engineering), பாவஸ்பந்தனா (BSP), ஷம்யமா(Silence). தியான வகுப்புகளை கற்றுக் கொண்டால் நீங்கள் நல்ல ஆரோக்கியமான உடல், மனநிலையை அடையலாம் என இந்து சைவ மத கருத்துக்களையும், நம்பிக்கை வார்த்தைகளையும் மோசடியாகக் கூறி பல இடங்களில் விளம்பரப்படுத்தி பணம் பார்த்து வருகிறார்.

Advertisment

isha

"எனது மூத்த மகன் ரமேஷ் பாலகுரு அடுத்தடுத்து ஈஷாவின் தியான வகுப்புகளில் கலந்துகொண்டு அடிக்கடி கோவையிலிருக்கும் ஈஷா யோக மையத்திற்கு போய் வந்துகொண்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டிற்கு வந்து தான் அங்கேயே மொட்டையடித்து துறவறம் பூண்டு வாழப்போகிறேன் என்றதால் அதிர்ச்சியடைந் தோம். அப்போது ஈஷா யோக மையத்திற்கு சென்றவர் தற்போதுவரை வீடு திரும்ப வில்லை. இருமுறை நேரில்சென்றும் பலமுறை தொலைபேசியில் அழைத்தும் வீட்டிற்கு வர மறுத்துவிட்டார்.

அவர் யோகா எனும் பெயரில் ஜக்கியால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஹிப்னாடிசத் தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டோம். பின்னர் தற்போது விசாரித்துத் தெரிந்துகொண்டதில் இந்தியாவில் ஹிப்னா டிசம் சம்பந்தமாக தனியாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றும், இதை நன்கு அறிந்து கொண்ட சத்குரு என்ற ஜக்கி அ ஜெகதீஷ் வாசுதேவ் தியான வகுப்புகளுக்கு வரும் நபர்களின் ஆன்மீக நம்பிக்கையை பயன்படுத்தி தியானம், தீட்சை என கூறி அவர்கள் அனுமதி யில்லாமல் தவறான நோக்கத்துடன் ஹிப்னா டிசம் செய்கிறார் என்பது தெரியவந்தது. என் மகனைப்போல் பலரும் ஜக்கியின் ஹிப்னாடிசத் தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே எனது மகனை மீட்க வேண்டுகிறேன்'' என கோவை மாவட்ட எஸ்.பி.க்கும், ஆலாந்துறை இன்ஸ் பெக்டருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்கள் தூத்துக்குடி மாரியப்பன் -தமிழ்ச்செல்வி தம்பதியினர்.

Advertisment

தமிழ்நாட்டில் செயல்படும் ஈஷா யோகா மையத்தில் மன அமைதிக்காக சென்றவர்களில் கடந்த 15 வருடங்களில் மட்டும் சிலர் காணா மல் போயிருக்கிறார்கள், சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். இதுதொடர்பாக சமீபத்தில் பேராசிரியர் காமராஜ் ஈஷா யோகா மையத்தில் சிக்கியுள்ள தனது இரண்டு மகள்களை மீட்க தொடர்ந்த வழக்கில் தமிழக காவல்துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் ஒரு பகுதியோ, "ஏழு மரண வழக்குகள், ஆறு பேர் காணாமல் போயுள்ள வழக்குகள் கடந்த பதினைந்து வருடங்களில் மட்டும் பதிவுசெய்யப் பட்டுள்ளது. இதில் காணாமல் போனவர்களில் திரும்பக் கிடைத்ததாக ஐந்து வழக்குகள் மூடப்பட்டு, ஒரு வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. ஏழு சந்தேக மரண வழக்குகளில் ஐந்து மரண வழக்குகள் தற்கொலை என முடித்துவைக்கப்பட்டுள்ளது.

isha

2022-ல் நடந்த இரண்டு சந்தேக மரண வழக்குகளில் தற்கொலை கடிதம் (suicide note) மற்றும் மரண ஆய்வு (forensic report)க்காக நிலுவையில் உள்ளது. (ஈழ்.சர்.191/2022) சுபஸ்ரீ என்ற பெண்ணின் சந்தேக மரண வழக்கு ஈஷா வில் சம்யமா (silence) என்ற தியான வகுப்பில் கலந்துகொண்டிருக்கும்போது திடீரென வெளியேறி காணாமல்போய், பின்னர் கிணற்றில் சடலமாக கிடைத்த சம்பவம், அதைத் தொடர்ந்து சி.சி.டி.வி. ஆதாரங்களை ஆய்வு செய்யும் பணிகள் என பல்வேறு சந்தேகங்களு டன் காவல்துறை விசாரணை இன்னும் நிலுவை யில் உள்ளது. மேலும் இந்த அறிக்கையில் மனநல மருத்துவர்களின் குழுவும் ஆய்வு மேற் கொண்டுள்ளது. அவர்கள் அங்கே உள்ளவர்கள் சிலரின் மனநிலையில் வேறுபாடு (moodswings) காணப்படுகிறது, ஆனால் இதை உறுதியாக முடிவு செய்ய நேரமின்மை காரணமாக எந்த மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட வில்லை. இதை உறுதிப்படுத்த பரிசோதனைகள் தேவை என்று தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் காமராஜ் உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் (affidavit) ஏற்கனவே ஈஷாவில் தியான பயிற்சி முடித்த முன்னாள் தலைமைக் காவலர், அங்கு ஹிப்னாடிசம் நடப்பதாக பேராசிரியர் காமராஜ் சார்பில் தனியாக வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளதாக வும், அதில் ஈஷாவில் தியானப் பயிற்சி எடுத்து அதன்பின்னர் சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவ ஹிப்னோதெரபிஸ்ட் மூலமாக உண் மையை உணர்ந்து ஈஷாவில் நடைபெறும் பயிற்சி கள் யோகா, தியானம் மட்டுமல்ல, ஹிப்னா டிசமும் கலந்தே நடத்தப்படுகிறது. பயிற்சியில் உள்ளவர்கள் தியானம் என்ற பெயரில் ஹிப்னாடிசம் செய்து மாறுபட்ட மனநிலையில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த தீவிரமான பயிற்சிகளால் கடுமையான மனநிலை பாதிப்புகள் ஏற்படலாம். இது குறித்த அரசாங்க விசாரணை தேவை'' என்கின்றது.

isha

ஹிப்னாடிசம் செய்வதற்கு பல நாடுகளில் சட்ட விதிமுறைகள் உள்ளன என்றும், உதா ரணமாக இங்கிலாந்து நாட்டில் Hypnotism act 1952 என்ற சட்டமும், மற்றும் இஸ்ரேல் நாட்டில் Hypnosis Act 1984 சட்டமும் அதில் முக்கியமாக அரசு அனுமதியில்லாமல் ஹிப்னா டிசம் செய்தால் ஒரு வருடம் சிறைத் தண்டனை என்கிறது. இந்தியாவில் ஹிப்னாடிசம் சம்பந்த மாக தனிச்சட்டம் இல்லை. இருப்பினும் இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மருத் துவத் துறையில் ஹிப்னோதெரபி மருத்துவத் திற்கு 2003-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியுள் ளது. அதன்படி மனநல சிகிச்சைக்கு வரும் மன நோயாளிகளுக்கு அவர்களின் அனுமதியுடன் மருத்துவர்கள் மட்டுமே ஹிப்னாடிசம் செய்து மனநிலையை சரிசெய்ய அனுமதியுள்ளது. இப்படி தியானம், தீட்சை எனக்கூறி ஏமாற்றி ஒருவரின் அனுமதியில்லாமல் ஹிப்னாடிசம் செய்வது தனிமனித உரிமை மீறலாகும். பேராசிரியர் காமராஜ் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக கோவை மாவட்ட எஸ்.பி. கொடுத்த ஆய்வு அறிக்கையில் உள வியல் மருத்துவர்களான மருத்துவர் ஹெலனா செவக்கொடி மற்றும் மருத்துவர் கிருத்திகாவின் பரிசோதனை தான் ஜக்கியின் செயல்பாட்டிற்கு எதிரான கேள்வியை எழுப்பியுள்ளது. அதில், "ஈஷா யோகா மையத்தில் நாங்கள் ஆய்வுசெய்த தன்னார்வலர்கள் மற்றும் துறவிகள் பலர் தன்னிலை மறந்து பேசுகின்றனர். அவர் களாகவே பேசித் திரிகின்றனர். ஏதோ ஒருவகையில் அவர்களின் மனநலன் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உறுதித்தன்மை தெரியவேண்டுமெனில் அவர்களது சிறுநீர், இரத்தம் இவைகளை பரிசோதனை செய்தால் உறுதியான நிலை தெரியும்'' என்றிருக்கின்றனர் இரு மருத்துவர்களும். உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட இந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதுதான் வேடிக்கையே.

ஹிப்னாடிசத்தால் பாதிக்கப் பட்டோருக்கு பல்வேறு சிக்கல் களை உருவாக்க முடியும், குறிப்பாக ஒடுக்கமான மனநிலையோ அல்லது கட்டாய மனநிலையோ உருவாக்கப்பட்டால், இதனால் Loss of Autonomy, Dependence on Others, (Dependence on Others, False Memories, Psychological Aftereffects மற்றும் Post #Traumatic Stress Disorder உள்ளிட்ட மன நிலைப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்கின்றது மருத்துவம். ஹிப்னா டிசம் செய்து அடிமையாக்கினால் ஜக்கிக்கு என்ன லாபம்..? "தன்னை மிக கருணை உள்ளவராகவும், நானே உங்கள் குரு எனவும் எனது மகனின் ஆழ்மனதில் நிரந்தரமாக பதிவுசெய்து நிரந்தர மன பாதிப்பை ஏற்படுத்தி தன்வயப்படுத்தி அவரது கட்டுப்பாட்டில் வைத்து அந்த தியான (ஹிப்னாடிச) பயிற்சிகளை தினமும் செய்யவைத்து ஜக்கியை குருவாக நினைத்து ஒருநாள் விடாமல் தினமும் வணங்கச் செய்து அவரது அடிமையாக ஈஷா யோக மையத்தில் எந்த ஊதியமும் இல்லாமல் கடுமையாக வேலை வாங்கிவருகிறார். தியான தீட்சை (ஹிப்னாடிச) வகுப்புகளை தயார்செய்யும் அடிமை நிலையில் இருக்கும் நபர்கள் ஜக்கிக்காக எதனை வேண்டுமானாலும் செய்வார்கள்.''

isha

"ஹிப்னாடிசம் செய்வதற்கு பல நாடுகளில் சட்ட விதிமுறைகள் உள்ளன இந்தியாவில் இதற்காக தனியாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை இருப்பினும் இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மருத்துவ துறையில் ஹிப்னோதெரபி மருத்துவத்திற்கு 2003-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது. அதன் படி மன நல சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு அவர்களின் அனுமதியுடன் மருத்துவர்கள் மட்டுமே ஹிப்னாடிசம் செய்து மனநிலையை சரிசெய்ய அனுமதி உள்ளது. ஆனால் மருத்துவர் அல்லாத சத்குரு என்ற ஜக்கி அலைஸ் ஜெகதீஷ் வாசுதேவ் ஆன்மீகம், யோகா மற்றும் தியானம் என விளம்பரம் செய்து தியான வகுப்புகளுக்கு வரும் நபரை அவர்கள் அனுமதியில்லாமல் தியான வகுப்பு என கூறி தவறான நோக்கத்துடன் ஹிப்னாடிசம் செய்வது சட்டத்திற்கு எதிரான ஒன்று. ஆகவே சத்குரு என்ற ஜக்கி அ ஜெகதீஷ் வாசுதேவ், பாரதி வரதராஜ், மா பிரத்யுதா மற்றும் தற்போதைய நிர்வாகி தினேஷ்ராஜா உள்ளிட்டோர் மீது மதத்தை தவறாகப் பயன்படுத்துதல் IPC 295ஆ, நம்பிக்கை துரோகம் IPC 409, மோசடி IPC 420, மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஹிப்னாடிசத்தை தவறான நோக்கத்துடன் செய்து நிரந்தர மனநல பாதிப்பை ஏற்படுத்துதல் IPC 328, ஹிப்னாடிசம் மூலம் ஒரு நபரை தன்வயப்படுத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்தல் IPC 342, எந்த ஊதியமும் இல்லாமல் அடிமையாக வேலைசெய்ய வைத்தல் IPC 370 & IPC 374, மனநல பாதுகாப்பு சட்டம் 2017 மற்றும் Drugs and magic remedies act 1954 போன்ற சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுத்து ஹிப்னாடிசத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்கவேண்டுமென்பது என்னைப் போன்ற சாமானியனின் கோரிக்கை'' என்கின்றார் ஜக்கியின் தியானம் எனும் ஹிப்னாடிசத்தால் பாதிக்கப்பட்ட முன்னாள் தனிப்படை காவலர் ஒருவர்.

isha

மருத்துவர்களின் அறிக்கை, ஹிப்னாடிசம் குறித்த தெளிவான பார்வையோடு ஈஷாவில் விசாரணை நடத்தவேண்டியது அரசின் கடமை. ஈஷாவில் அடிமைகளாக தங்க வைக்கப்பட்டிருக்கும் அடிமைகள் மீட்கப்படுவார்களா? என்பது அனைவரின் கேள்வி.