EXCLUSIVE தங்க நகை-பணம் திருட்டு! ஹையாத் மோசடிக்கு துணையான மாநகராட்சி!-தோண்டத் தோண்ட மர்மம்!

ss

வெளிநாட்டிலிருந்து திரும்பிய தமிழரான சுந்தரவேலு மர்மமான முறையில் இறந்து போன ஹையாத் ஓட்டல் மீது ஏற்கனவே புகார்களுக்குப் பஞ்சமில்லை. அந்த ஹோட்டல் ஏகப்பட்ட வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.

s

ஒவ்வொரு நட்சத்திர ஓட்டல்களுக்கும் அதில் உள்ள அறைகளின் வசதிகளுக்கு ஏற்ப சென்னை மாநகராட்சி வரி போடும். அந்த வரி மிக மிக குறைவாக விதிக்கப்படுகிறது என புகார்கள் உண்டு. 1500 ரூபாய் வரி விதிக்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 150 ரூபாய் வரி விதிப்பார்கள். இது பெரிய இடத்து அட்ஜஸ்ட்மெண்ட். அப்படி குறைவாக விதிக்கப்படும் வரியிலேயே சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் வரி ஹையாத் ஓட்டல் சென்னை மாநகராட்சிக்கு பாக்கி வைத்துள்ளது. இப்படி பாக்கி வைத்திருந்தால் அந்த ஓட்டலை மூடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அதனைச் செய்யாமல்-வரிபாக்கியையும் வசூலிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள், அந்த ஓட்டல் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவார்கள்.

அப்படித்தான் synargy என்கிற சிங்கப்பூர் நிறுவனம் சுந்தரவேல் உள்பட 44 பேர்களை பிஸினஸ் கிளாஸ் பிரிவில் சென்னைக்கு அழைத்து வந்தது. அந்த 44 பேரையும் தனிமைப்படுத்த ஒரே இடத்திற்கு அனுப்பாமல், சுந்தரவேலிடம் புறப்படும்போதே பெற்ற 14 ஆயிரம் ரூபாயை ஹையாத்துக்கு கொடுத்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து வந்தவர்களில் 36 பேரை ஹாலிடே என்கிற ஓட்டலுக்கும், எட்டு பேரை ஹையாத்துக்கும் அனுப்பி வைத்தனர்.

மாநகராட்சி சார்பில் சுகா தாரத்துறை அலுவலர் மார்ட்டீன், செயற்பொறியாளர் இனியன், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் சுந்தரவ

வெளிநாட்டிலிருந்து திரும்பிய தமிழரான சுந்தரவேலு மர்மமான முறையில் இறந்து போன ஹையாத் ஓட்டல் மீது ஏற்கனவே புகார்களுக்குப் பஞ்சமில்லை. அந்த ஹோட்டல் ஏகப்பட்ட வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது என்கிறார்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.

s

ஒவ்வொரு நட்சத்திர ஓட்டல்களுக்கும் அதில் உள்ள அறைகளின் வசதிகளுக்கு ஏற்ப சென்னை மாநகராட்சி வரி போடும். அந்த வரி மிக மிக குறைவாக விதிக்கப்படுகிறது என புகார்கள் உண்டு. 1500 ரூபாய் வரி விதிக்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 150 ரூபாய் வரி விதிப்பார்கள். இது பெரிய இடத்து அட்ஜஸ்ட்மெண்ட். அப்படி குறைவாக விதிக்கப்படும் வரியிலேயே சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் வரி ஹையாத் ஓட்டல் சென்னை மாநகராட்சிக்கு பாக்கி வைத்துள்ளது. இப்படி பாக்கி வைத்திருந்தால் அந்த ஓட்டலை மூடுவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அதனைச் செய்யாமல்-வரிபாக்கியையும் வசூலிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள், அந்த ஓட்டல் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவார்கள்.

அப்படித்தான் synargy என்கிற சிங்கப்பூர் நிறுவனம் சுந்தரவேல் உள்பட 44 பேர்களை பிஸினஸ் கிளாஸ் பிரிவில் சென்னைக்கு அழைத்து வந்தது. அந்த 44 பேரையும் தனிமைப்படுத்த ஒரே இடத்திற்கு அனுப்பாமல், சுந்தரவேலிடம் புறப்படும்போதே பெற்ற 14 ஆயிரம் ரூபாயை ஹையாத்துக்கு கொடுத்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து வந்தவர்களில் 36 பேரை ஹாலிடே என்கிற ஓட்டலுக்கும், எட்டு பேரை ஹையாத்துக்கும் அனுப்பி வைத்தனர்.

மாநகராட்சி சார்பில் சுகா தாரத்துறை அலுவலர் மார்ட்டீன், செயற்பொறியாளர் இனியன், உதவி பொறியாளர் குமார் ஆகியோர் சுந்தரவேலு, ஹையாத்தில் தங்கி தனிமைப்படுத்திக்கொள் வதை மேற்பார்வையிட வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள். இந்த மூவரையும் நாம் தொடர்பு கொண்டு, சுந்தரவேலுவுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரைப் போய் பார்த்தீர்களா என கேட் டோம். மூவருமே அவரை சென்று பார்க்கவில்லை. ஆனால் முகேஷ் என்கிற மருத்துவர் மட்டும் பார்த்திருக்கிறார். வயிற்று வலியால் துடித்துக்கொண்டிருந்தார் என ஓட்டல் நிர்வாகம் அழைத்து வந்து சுந்தரவேலுவுக்கு மருந்துகொடுத் துள்ளார் டாக்டர் முகேஷ்.

இந்த சம்பவத்திற்கு பிறகு யாரும் சுந்தரவேலுவை பார்க்கவில்லை. தனிமைப் படுத்திக்கொண்ட ஒருவரை அவரது தனிமைக்காலம் முடியும் வரை யாரும் சென்று பார்க்க மாட்டார்கள் என ஓட்டல் நிர்வாகம் சொல்கிறது என்கிறார் இந்த வழக்கை கையாண்ட தேனாம்பேட்டை ஆய்வாளர் ரமேஷ். ஆனால் இறந்து போன சுந்தரவேலின் அறையில் ஜூன் 29ஆம் தேதி வைக்கப்பட்ட சாப்பாடு சாப்பிடப்படாமல் இருந்துள்ளது. 29ஆம் தேதி சுந்தரவேலு இறந்துவிட்டார் என காவல்துறை உள்ளே சென்று பார்க்கிறது. அவர் 27ஆம் தேதியே இறந்துவிட்டார் என போஸ்ட் மார்ட்டம் அறிக்கைகள் குறிப்பிடுகிறது.

27ஆம் தேதி இறந்து போன ஒருவர் அறையில் எப்படி 29ந் தேதி வைத்த சாப்பிடாத உணவுகள் இருக்கும்? அப்படியென்றால் இறந்ததை மறைக்கும் வகையில் ஓட்டல் நிர்வாகம் செயல்பட்டதா? அல்லது உணவுத் தட்டுகளை அறை வாசலிலேயே வைத்துவிட்டு போன ஓட்டல் ஊழியர்கள், அதை உள்ளே இருந்த சுந்தரவேலு எடுத்து சாப்பிட்டாரா இல்லையா என்பதைக்கூட உறுதிப்படுத்தாமல் இருந்தார்களா? எந்தளவுக்கு ஓட்டல் நிர்வாகம் அலட்சியமாக இருந்தது என்பதை சம்பந்தப் பட்ட காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே ஒரத்தநாடு காவல் நிலையத்துடனான உரையாடலில் தெரிவித்திருப்பதன் ஆடியோ ஆதாரத்தை நாம் பதிவு செய் துள்ளோம்.

சுந்தரவேலின் பெட்டியில் அவர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்த நகைகள் மற்றும் பணம் காணாமல் போயிருந்தது. நகை பற்றி நாம் ஆய்வாளர் ரமேஷிடம் கேட்டபோது, ""நகை வாங்கியதற்கான அடையாளங்களை நக்கீரனின் வீடியோவைப் பார்த்துதான் எனக்கு தெரிந்தது. இது உண்மையா என சுந்தரவேலு வின் அறைக்கு சென்று அவரது பொருட்களை கைப்பற்றிய உதவி ஆய்வாளரிடம் விசாரித்து வருகிறோம்'' என்கிறார். சிங்கப்பூரில் உள்ள மினோரா ஜூவல்ஸ் என்ற நகைக்கடையில் தங்கநகை வாங்கிக் கொண்டு ஊருக்கு வருவது சுந்தரவேலின் வழக்கம். அந்த நகைகள் ஓட்டல் ஹையாத்தில் களவாடப்பட்டு, டேக் மட்டுமே இருந்ததை நக்கீரன் ஆசிரியர் தனது காணொலியில் ஆதாரத்துடன் வெளியிட்டுப் பேசிய பிறகு, போலீசின் பார்வை இந்தத் திருட்டு நோக்கித் திரும்பியுள்ளது.

இதற்கிடையே சுந்தரவேலுவுக்கு 26ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இந்த கொரோனா பரிசோதனையை யார் செய்தார்கள் என மாநகராட்சி அதிகாரிகளை கேட்டதற்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை. வரி ஏய்ப்பு, அலட்சியம் ஆகியவற்றால் ஒரு உயிர் அநியாயமாக பறிபோனது. அத்துடன் இறந்தவரின் பெட்டியில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருக்கிறது. அவர் இறந்ததாக சொல்லப்படும் தேதியிலும் அவருக்கான உணவுத்தட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதையெல் லாம் யார் செய்தார்கள் என்பது சுந்தரவேலுவின் மரணத்தில் உள்ள மிகப் பெரிய மர்மம் என்கிறார்கள் இந்த விவகாரங்களை விசாரிக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரிகள். அதைவிட மர்மமானது ஹையாத் போன்ற நட்சத்திர ஓட்டல்களுக்கும் மாநகராட்சி மற்றும் ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவு.

- தாமோதரன் பிரகாஷ்

__________________

அலட்சிய நிர்வாகம்! ஆடியோ ஆதாரம்!

ssசிங்கப்பூரில் இருந்து வந்ததில் இருந்து சுந்தரவேலைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்பதால், ஹயாத் ஹோட்ட லுக்கே தொலைபேசியில் அழைத்து விவரம் கேட்டிருக்கிறார் சுந்தரவேலின் சகோதரர். அது தொடர்பான இரண்டு ஆடியோ நமக்கு கிடைத்தது. முதல் ஆடியோவில் பதிலளிக்கும் ஹோட்டல் ஊழியர், ""சுந்தரவேல் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. இன்றுதான் ஹோட்டலில் இரண்டாவது டெஸ்ட் நடந்தது. இதுதொடர்பாக சுந்தரவேலை அழைத்தபோது அவரிடமிருந்து பதிலில்லை. ரூமில் அவர் இல்லை. நாங்கள் விசாரித்துவிட்டு சொல்கிறோம்'' என்று, தொடர்பு எண்களை கேட்டு வாங்கிக் கொள்கிறார். இரண்டாவது ஆடியோவில், சுந்தரவேல் கதி பற்றி விவரமளிப்பதற்காக, அவரது சகோதரரை அழைத்துப்பேசிய அதே ஊழியர், ""சுந்தரவேலின் ரூமைத் தட்டியபோது திறக்கவில்லை. செக்யூரிட்டியுடன் போய் கதவைத் திறந்து பார்த்தபோது, சேரில் உட்கார்ந்திருந்தார். அழைத்தால் பதிலில்லை. உடனடியாக டாக்டருக்கும், போலீஸுக்கும் தகவல் சொன்னோம். வந்து பார்த்த டாக்டர், சுந்தரவேல் தவறிவிட்டதாக சொன்னார்'' என்கிறார்.

""என்ன சார் இவ்வளவு அசால்டாக சொல்றீங்க?'' என்று சுந்தரவேலின் சகோதரர் பதற்றத்துடன் கேட்க, ""இப்படித்தான் டாக்டர் சொன்னார்'' என்கிறார் ஹோட்டல் ஊழியர். சகோதரரோ, ""எந்தப் பிரச்சனையும் இல்லாமல்தானே வந்தார். இவ்வளவு பெரிய ஹோட்டல் நிர்வாகமே இப்படிச் சொன்னால் எப்படி சார்?’'' என்றபோது, ""ஹோட்டலுக்கும் இதற்கும் என்ன சார் சம்மந்தம்?'' என அந்த ஊழியர் அலட்சியமாகப் பதிலளிக்கிறார்.

சேரில் உட்கார்ந்தபடியே இறந்து விட்டார் என ஹோட்டல் ஊழியர் சொன்னது பொய் என்பதையும் உண்மை நிலை என்ன என்பதையும் அடுத்த ஆடியோ ஒன்று அம்பலப்படுத்தியது.

-அரவிந்த்

________________

நிர்வாணமாக... அழுகிய நிலையில்

சுந்தரவேலின் மரணம் உறுதியான நிலையில், ஒரத்தநாடு காவல்நிலையத்தில் இருந்து சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து, காவலர்கள் விவரம் கேட்கும் ஆடியோவும் நக்கீரனுக்குக் கிடைத்திருக்கிறது.

ss

அதில் “ஹயாத் ஹோட்டலில் குவாரண்டைனில் இருப்பவர் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது சுந்தரவேல் பாத்ரூமில் நிர்வாண நிலையில், உட்கார்ந்தபடி இறந்துகிடந்திருக்கிறார். உட்கார்ந்த நிலையில் பாத்ரூம் போயிருக்கிறார். இறந்து அதிகபட்சமாக ஒன்றரை நாட்கள் ஆகியிருக்கும். அதனால், பாடி டீகம்போஸ் ஆயிடிச்சி. முழுசா டீகம்போஸ் ஆகலை. உடல் கொஞ்சம் அழுகியிருந்தது.

ஹோட்டல்களில் தனிமைப் படுத்துகிறவர்களுக்கு, ஹோட்டல் ஊழியர்களே சாப்பாடு கொடுப்பார்கள். அப்படிக் கொடுக்கும் சாப்பாட்டினை அங்கு தங்கியிருப்பவர் சாப்பிடுகிறாரா? என்ன செய்கிறார்? என்பதைப் பற்றி எந்தவித கவலையும் படுவதில்லை. இந்த கேஸிலும் சுந்தரவேலுக்குக் கொடுத்த உணவுகள், அறையின் வாசலிலேயே பூசணம் பிடித்துப்போய் கிடந்தன. உடலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி இருக்கிறோம்'' என சுந்தரவேல் இறந்த செய்தியறிந்து, ஹயாத் ஹோட்டலுக்கு பாடியை அட்டெண்ட் செய்யப் போயிருந்த தேனாம்பேட்டை காவலர் விவரிக்கிறார்.

-அரவிந்த்

nkn220720
இதையும் படியுங்கள்
Subscribe