Advertisment

EXCLUSIVE.. EXPLOSIVE! எந்நேரமும் வெடிக்கும்? ஆபத்து விளிம்பில் சென்னை! மோசடி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை + சி.பி.ஐ.!

fraud

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் 157 உயிர்களை பலிகொண்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டு மணலி கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருள் "அப்பகுதி மக்களின் உயிருக்கே ஆபத்து'’என மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், "அருகில் வீடுகளே இல்லை'’என்று சுங்கத்துறையும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில்…இதன் பின்னணியில் மாபெரும் மோசடி மூடி மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை நக்கீரனிடம் கூறி அதிர வைக்கிறார்கள் நேர்மையான சுங்கத்துறை அதிகாரிகள்.

Advertisment

இதுகுறித்து, நாம் மேலும் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் சுங்கத்துறை அதிகாரிகளின் மோசடிகளில் ஆரம்பித்து சி.பி.ஐ வரை நீள்கிறது.

ff

வெடிமருந்தா? விவசாய உரமா?

கடந்த, 2015 செப்டம்பர் மாதம் கரூரைச் சேர்ந்த ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இறக்குமதியாளர், கொரியாவிலுள்ள ஹுண்டாய் கார்ப்பரேஷன் என்கிற கம்பெனியிடமிருந்து 740 டன் அதாவது 7 லட்சத்து 40 ஆயிரம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் டை 37 கன்டெய்னர்களிலிருந்து இறக்குமதி செய்கிறோம். விவசாயத்துக்காக பயன்படுத்தும் இந்த உரத்தின் மதிப்பு சுமார் 1 கோடியே 80 லட்ச ரூபாய்’ என்றும் கூறி சென்னை துறைமுகத்தில் இறக்குமதிக்கான தொகையை செலுத்தி, க்ளியர் பண்ணச் சொல்லிக் கேட்கிறார். அதற்காக, 8.83 சதவீதம் சுங்கவரியை செலுத்தவும் முயற்சிக்கிறார்.

Advertisment

அப்போது, சுங்கத்துறையின் எஸ்.பி.பி.ஐக்கு(Special Intelligence and Investigation Branch) "ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்த அம்மோனியம் நைட்ரேட் என்பது விவசாய உரத்துக்கானது அல்ல. இது, வெடிமருந்துகளாக பயன்படுத்தக் கூடியது' என்ற அதிர்ச் சித் தகவல் வருகிறது. உடனடியாக, சுங்கத்துறையின் புல னாய்வுத்துறை விசாரணையில் இறங்கியபோது, "ஸ்ரீ அம் மன் கெமிக்கல்ஸ் வெப்சைட்டிலேயே வெடிபொருட்களைத் தான் டீல் செய்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிந்துகொள்கிறார்கள். வெடிபொருள் என்றால் 26.42 சதவீதம் சுங்க வரி கட்டவேண்டும். அதாவது விவசாயப் ப

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் 157 உயிர்களை பலிகொண்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்டு மணலி கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருள் "அப்பகுதி மக்களின் உயிருக்கே ஆபத்து'’என மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், "அருகில் வீடுகளே இல்லை'’என்று சுங்கத்துறையும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில்…இதன் பின்னணியில் மாபெரும் மோசடி மூடி மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை நக்கீரனிடம் கூறி அதிர வைக்கிறார்கள் நேர்மையான சுங்கத்துறை அதிகாரிகள்.

Advertisment

இதுகுறித்து, நாம் மேலும் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் சுங்கத்துறை அதிகாரிகளின் மோசடிகளில் ஆரம்பித்து சி.பி.ஐ வரை நீள்கிறது.

ff

வெடிமருந்தா? விவசாய உரமா?

கடந்த, 2015 செப்டம்பர் மாதம் கரூரைச் சேர்ந்த ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இறக்குமதியாளர், கொரியாவிலுள்ள ஹுண்டாய் கார்ப்பரேஷன் என்கிற கம்பெனியிடமிருந்து 740 டன் அதாவது 7 லட்சத்து 40 ஆயிரம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் டை 37 கன்டெய்னர்களிலிருந்து இறக்குமதி செய்கிறோம். விவசாயத்துக்காக பயன்படுத்தும் இந்த உரத்தின் மதிப்பு சுமார் 1 கோடியே 80 லட்ச ரூபாய்’ என்றும் கூறி சென்னை துறைமுகத்தில் இறக்குமதிக்கான தொகையை செலுத்தி, க்ளியர் பண்ணச் சொல்லிக் கேட்கிறார். அதற்காக, 8.83 சதவீதம் சுங்கவரியை செலுத்தவும் முயற்சிக்கிறார்.

Advertisment

அப்போது, சுங்கத்துறையின் எஸ்.பி.பி.ஐக்கு(Special Intelligence and Investigation Branch) "ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்த அம்மோனியம் நைட்ரேட் என்பது விவசாய உரத்துக்கானது அல்ல. இது, வெடிமருந்துகளாக பயன்படுத்தக் கூடியது' என்ற அதிர்ச் சித் தகவல் வருகிறது. உடனடியாக, சுங்கத்துறையின் புல னாய்வுத்துறை விசாரணையில் இறங்கியபோது, "ஸ்ரீ அம் மன் கெமிக்கல்ஸ் வெப்சைட்டிலேயே வெடிபொருட்களைத் தான் டீல் செய்கிறோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிந்துகொள்கிறார்கள். வெடிபொருள் என்றால் 26.42 சதவீதம் சுங்க வரி கட்டவேண்டும். அதாவது விவசாயப் பயன்பாட்டைவிட 32 லட்ச ரூபாய் கூடுதல் வரி. வெடி பொருள் சட்டம் 1884படிதான் அம்மோனியம் நைட்ரேட் இறக்குமதி செய்யவேண்டும். அதற்கான பி-5 என்கிற லைசென்ஸ் ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸிடம் கிடையாது.

இதனால், 2015 நவம்பர் மாதம் 37 கண்டெய்னர்களில் வந்த 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை சுங்க இலக்காத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இதைத்தான், மணலியிலுள்ள சத்துவா ஹைடெக் சி.எஃப். எஸ் (SATTVA HI- TECH AND CONWARE PRIVATE LIMITED CONTAINER FREIGHT STATION)) என்கிற சரக்கு பெட்டகத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் வைத்தார்கள் என்ற விவரம் நமக்கு கிடைக்கவே, கூடுதல் விசாரணையில் இறங்கினோம்.

fraud

அலட்சியம் காட்டிய அதிகாரிகள்

தென் கொரியாவிலுள்ள ஹுண்டாய் கார்ப்பரேஷன் நிறுவனமானது, அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருளை ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸுக்கு ஹ்யூகெம்ஸ் ஃபைன் கெமிக்கல்(Huchems Fine Chemical Corp) கார்ப்பரேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி விற்றதாக கூறுகிறது. ஆனால், சுங்கத்துறையோ சி.பி.ஐ.யோ அதற்கு மேல் விசாரணையைத் தீவிரப்படுத்தவில்லை.

ஏற்கனவே, சென்னை துறைமுகம் வழியாக 696 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை விவசாயத்துக்கு பயன்படுத்தும் உரம் என்று பொய்சொல்லி இறக்குமதி செய்து க்ளியரே பண்ணியிருக்கிறது இதே ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம். மேலும், 500 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை விசாகப்பட்டினம் துறைமுகத்தின் மூலம் மோசடியாக இறக்குமதி செய்து க்ளியரன்ஸ் வாங்கியிருக்கிறது இந்நிறுவனம். அது குறித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸ் அலுவல கத்தை ரெய்டு நடத்தியபோது, அங்கிருந்த விற்பனை ரசீதுகளில் உரம் என்று இறக்குமதி செய்த அம்மோனியம் நைட் ரேட் வெடிபொருளை பல வெடிமருந்து டீலர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அதில், ஒரு பத்து பதினைந்து பேரை பிடித்து விசாரித்தபோது நாங்கள் குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்குத்தான் இந்த வெடிபொருளை பயன்படுத்துகிறோம் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால், சட்டத்துக்குப்புறம்பாக வாங்கிய வெடிமருந்துகளிடமிருந்து எங்கெங்கே பாறைகள் உடைக்கப்பட்டிருக்கிறது என்ற விசாரணையை செய்யவில்லை.

fraud

அரசு நிறுவனத்துக்கு வெடிபொருள் விற்பனை?

92 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்ப ரேஷன் லிமிட்டெட் (TANCEM)க்கு விற்றதாக ஸ்ரீ அம்மன் கெமிக்கல் வைத்திருந்த ரசீதை வைத்து, விசாரணை செய்தபோது, ""அப்படி நாங்கள் எதுவும் வாங்கவே இல்லை. இது, போலியான ரசீது'' என்று தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிட்டெட் கூறிவிட்டது. அப்படியென்றால், அந்த 92 டன் வெடிபொருள் யாருக்கு விற்கப்பட்டது என்ற கேள்விக்கு இன்னும் விடை கண்டுபிடிக்கப்படவில்லை.

269 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை பெங்களூரிலுள்ள ஸ்ரீ விகாயன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாக ரசீது வைத்திருக்கிறார்கள். அந்த நிறுவனமோ நாங்கள் கெமிக்கல்ஸ் மட்டும்தான் வாங்கி விற்கிறோம். வெடிபொருள் வாங்குவதில்லை என்று சொல்லிவிட்டார்கள். எனவே அந்த வெடிபொருள் எதற்கு பயன்படுத்தப்பட்டது என்ற கேள்விக்கும் விடையில்லை.

2016 ஜூன் மாதம் ஸ்ரீ அம்மன் கெமிக்கல்ஸுக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி ஏற்கனவே, மோசடியாக க்ளியர் செய்த வெடிபொருட்களுக்கான சுங்கக்கட்ட ணம் 18 லட்ச ரூபாயை ஏன் உங்களிடமிருந்து வசூலிக் கக்கூடாது? 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஏன் அரசாங்கமே எடுத்துக்கொள்ளக் கூடாது? என விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், இவ்வளவு பெரிய வெடிமருந்து வழக்கில் ஏன் இதுவரை ஒருவரைக்கூட கைது செய்யவில்லை என்பதற்கு அரசாங்கத்திடம் விளக்கம் இல்லை.

அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை க்ளியர் செய்துகொடுத்த கஸ்டம்ஸ் ஏஜண்ட்களின் லைசென்சும் கேன்சல் செய்யப்படவில்லை. அவர்களுக்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து விசாரிக்க வேண்டிய சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கப்பட்டும், அரசியல் அழுத்தங்களின் காரணமாக அந்த ஃபைலையே க்ளோஸ் பண்ணிவிட்டார்கள் என்கிற நேர்மையான அதிகாரிகள், இந்த வெடிமருந்து தீவிரவாத செயல்களுக்குப் பயன்பட்டதா? சட்டவிரோத குவாரிகளில் பாறைகளை உடைத்ததா? என்றெல்லாம் ஆராயவேண்டிய சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கஸ்டம்ஸின் விஜிலென்ஸ் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அவர்களும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

fraud

எச்சரித்த தலைமை நிறுவனம்

சுங்கச்சட்டத்தில் 110 (1ஏ)வின்படி அபாயகரமான பொருட்களை உடனே அகற்றவேண்டும் என்று உள்ளது. ஐந்து வருடங்களாக அகற்றாமல் இருந்தது ஏன்?

மத்திய அரசின் சீஃப் கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸ்ப்ளோஸிவ் பெட்ரோலியம் அண்ட் சேஃப்டி ஆர்கனைசேஷன், 2016 பிப்ரவரி மாதமே சுங்கத்துறை கமிஷனருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மணலியில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் 740 மெட்ரிக் டன் என்பது மிக அதிகளவிலான வெடிபொருளாக உள்ளது. அதிக காலம் இதை ஸ்டோர் பண்ணிவைத்திருந்தால் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும். யாரேனும் எடுத்துச்சென்று வேறு ஆபத்தான செயல்களிலும் ஈடுபடலாம் என்று எச்சரித்துள்ளார் என்கிறார்கள் விளக்கமாக.

அப்படியிருக்க, ஏதோ மழைவந்தது அதனால், கண்டெய்னருக்குள் தண்ணீர் புகுந்து 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டில் 43 மெட்ரிக் டன் கரைந்துவிட்டது என்று தற்போது அலட்சியமாக பதில் சொல்கிறார்கள். தண்ணீரில் பட்டால் கல்லுமாதிரி ஆகிவிடும். லேசாக வேறு ஏதாவது பொருள் உரசினாலே தீப்பிடித்துவிடும் ஆபத்து இதில் உண்டு. சுங்கத்துறை சீஃப் கமிஷனர் ஜி.வி. கிருஷ்ணா ராவ் மற்றும் முதன்மை சுங்கத் துறை கமிஷனர் பார்த்திபன் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? மணலி பெட்ரோல் பங்கும் அருகிலேயேதான் உள்ளது. சின்ன அசம்பாவிதம் ஏற்பட்டாலும் சென்னையும் பெய்ரூட் நகரமாகி விடும் ஆபத்து உள்ளது. பெய்ரூட்டில் பல உயிர்கள் பலியானபிறகே, இந்தியா முழுவதும் உள்ள துறை முகங்கள் மற்றும் பண்டகசாலைகளில் தீங்குவிளை விக்கும், வெடிக்கும் தன்மையுடைய பொருட்கள் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டன. வருமான வரித்துறையின் உயர்ந்த அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியமும் (சிபிடிடி) மற்றும் சுங்க இலாக்கா துறை(Customs Department)யும். இந்நிலையில், மணலியிலுள்ள அம்மோனியம் நைட் ஆபத்தானாதா என்று சோதனை செய்த வெடிபொருள் துறை துணை கட்டுப்பாட்டாளர் சுந்தரேசன் கூறுகையில், ""கோர்ட்டில் வழக்கு இருந்ததால் அதனை அப்புறப்படுத்த முடியாமல் போனது. கடந்த நவம்பர் மாதம் வழக்கு முடிந்தது. அதன்பின்னர், கொரோனா தொற்று காரணமாக இடைவெளி ஏற்பட்டது'' என்று சமாளிக்கிறார்.

சுங்கத்துறையோ, அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்கள், ஏறக்குறைய நகர்பகுதிகளில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும், அது அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவில் எந்த ஒரு குடியிருப்பும் காணப்படவில்லை. அமோனியம் நைட்ரேட் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் விரைவில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும்’என்று கூறியுள்ளது.

fraud

வெடிக்கும் ஆபத்து

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உயரதிகாரிகளோ, ""சரக்கு கன்டெய்னர் முனையம் அருகில் 700 மீட்டர் தூரத்தில் மணலி புதுநகர் வடக்கு பகுதி அமைந்து இருக்கிறது. அங்கு, 7000 பேர் வசித்துவருகின்றனர். அதேபோல், கிழக்குப்பகுதி யில் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் சடையான் குப்பம் உள்ளது. அங்கு 5,000 மக்கள் வசிக்கின்றனர். அதனால், சுற்றுச்சூழல்(பாதுகாப்பு) சட்டம் 1986-ம் ஆண்டின் திருத்தச்சட்டத்தின் 5-வது பிரிவின்படி சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று பரிந் துரைக்கிறோம். அதன்படி, சுங்கத்துறையின் கை வசத்தில் உள்ள அந்த அமோனியம் நைட்ரேட் பொருளை உடனடியாக அப்புறப்படுத்த சுங்கத் துறை கமிஷனர் நடவடிக்கை எடுக்கவேண்டும். உற்பத்திபொருட்கள் மற்றும் வேதிக்கழிவுகள் சட்டத்தின்படி, தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அந்த சரக்கு கன்டெய்னர் முனையத்தை சோதனையிடவேண்டும். அந்த பொருட்கள், அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் வரை சத்துவா சரக்கு கண்டெய்னர் முனையத்தின் உரிமையாளர் அந்தபகுதியில் பாதுகாப்பு நபர்களை நியமிக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

சென்னை பெரும் ஆபத்தின் நடுவில் இருக்கும் நிலையில், சுங்கத்துறை கமிஷனர் பார்த்திபனை தொடர்புகொண்டோம். பதில் இல்லை. அவரது கருத்துகளை வெளியிட நக்கீரன் தயாராக இருக்கிறது. கொரோனா ஆபத்தை குறித்த முன்னெச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தியதன் விளைவை தமிழகம் அனுபவிக்கிறது. இன்னொரு ஆபத்தை நினைத்தாலே குலை நடுங்குகிறது.

-மனோசௌந்தர்

nkn120820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe